Google Calendarரில் நீங்கள் கலந்துகொள்ளும் நேரத்தை நிர்வகிக்கவும் உங்கள் முன்பதிவுப் பக்கத்தின் மூலம் பிறர் அப்பாயிண்ட்மெண்ட்டுகளை முன்பதிவு செய்யவும் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகளைப் பயன்படுத்தலாம்.
இந்தக் கட்டுரையில் இவற்றைச் செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்:
- உங்கள் அப்பாயிண்ட்மெண்ட்டுகளையும் முன்பதிவுப் பக்கத்தையும் அமைத்தல்
- அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையைத் திருத்துதல்
- உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையைக் காட்டுதல் அல்லது மறைத்தல்
- நீங்கள் கலந்துகொள்ளும் நேரத்தை அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையில் சேர்த்தல்
- அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை மாற்றங்கள் மற்றும் தெரிவுநிலை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
தொடங்கலாமா?
உங்கள் அப்பாயிண்ட்மெண்ட்டுகளையும் முன்பதிவுப் பக்கத்தையும் அமைத்தல்
முக்கியம்: கம்ப்யூட்டரில் இருந்து மட்டுமே அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையை உருவாக்க முடியும்.
புதிய அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையை உருவாக்கும்போது நீங்கள்:
- அப்பாயிண்ட்மெண்ட்டின் கால அளவையும் நீங்கள் கலந்துகொள்ளும் நேரத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பிறரை எப்படிச் சந்திக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பிரத்தியேகமாக்க வேண்டும்.
தனிப்பட்ட Google கணக்கு அல்லது Workspace Business Starter திட்டத்தின் மூலம், உங்கள் கேலெண்டரில் பிறர் அப்பாயிண்ட்மெண்ட்டுகளைத் திட்டமிட ஒற்றை முன்பதிவுப் பக்கத்தை நீங்கள் உருவாக்கலாம். இருப்பினும், தகுதியுள்ள சந்தா இருந்தால் மட்டுமே சில அம்சங்களைப் பயன்படுத்த முடியும். தகுதியுள்ள சந்தா மூலம் நீங்கள்:
- ஒன்றுக்கு மேற்பட்ட அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகளை உருவாக்கலாம்.
- இரண்டாம் நிலைக் கேலெண்டரில் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையைச் சேர்க்கலாம்.
- பல கேலெண்டர்களில், கலந்துகொள்ளும் நேரம் குறித்த தகவலைப் பார்க்கலாம்.
- 20 பேர் வரை இணை-ஹோஸ்ட்டுகளாகச் சேர்க்கலாம்.
- அப்பாயிண்ட்மெண்ட்டுகளுக்கு மின்னஞ்சல் சரிபார்ப்பைக் கட்டாயமாக்கலாம்.
- ஒவ்வொரு அப்பாயிண்ட்மெண்ட்டிற்கு முன்பும் அதிகபட்சம் 5 தானியங்கு மின்னஞ்சல் நினைவூட்டல்களை அனுப்பலாம்.
- அப்பாயிண்ட்மெண்ட்டுகளுக்கான பேமெண்ட்டை Stripe மூலம் பெறலாம்.
பிரீமியம் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை அம்சங்களைப் பயன்படுத்தத் தேவையானவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்
படி 1: அப்பாயிண்ட்மெண்ட்டுகளை அமைத்தல்
- கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இடதுபுறத்தில் உள்ள “முன்பதிவு செய்யக்கூடிய அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை” பேனலில், அப்பாயிண்ட்மெண்ட் அமைப்புகளை அமைக்கவும்.
- அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
அப்பாயிண்ட்மெண்ட் அமைப்பு |
விளக்கம் |
---|---|
தலைப்பைச் சேருங்கள் |
அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைக்கான தலைப்பைச் சேர்க்கலாம்.
|
அப்பாயிண்ட்மெண்ட்டின் கால அளவு |
|
வழக்கமான இருக்கும் நிலை |
அப்பாயிண்ட்மெண்ட்டுகளின் தேதி, நேரம், நேர மண்டலம் ஆகியவற்றை அமைக்கலாம். வாராவாரம் நிகழும் அப்பாயிண்ட்மெண்ட்டுகளுக்கு, அப்பாயிண்ட்மெண்ட் நேரத்திற்கு அருகில் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
|
திட்டமிட அனுமதிக்கப்படும் நேரம் |
உங்கள் கேலெண்டரில் பிறர் அப்பாயிண்ட்மெண்ட்டுகளைத் திட்டமிடுவதற்கான கால அவகாசத்தை வரம்பிடலாம். இதில் இவை அடங்கும்:
|
கலந்துகொள்ளும் நேரத்தை மாற்றுதல் |
விடுமுறை நாட்கள் போன்ற குறிப்பிட்ட தேதிகளில் நீங்கள் கலந்துகொள்ளும் நேரத்தை மாற்றலாம். |
முன்பதிவு செய்யப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட்டுகளுக்கான அமைப்புகள் |
உங்கள் கேலெண்டரில் காட்டப்படும் அப்பாயிண்ட்மெண்ட்டுகளை நிர்வகிக்கலாம்.
|
கேலெண்டர்கள் |
|
இணை-ஹோஸ்ட்டுகள் |
ஹோஸ்ட்டுகளின் பெயர்களையோ மின்னஞ்சல் முகவரிகளையோ டைப் செய்யலாம். நீங்கள் நேரடியாக Google Groupsஸையும் சேர்க்கலாம். |
படி 2: உங்கள் முன்பதிவுப் பக்கத்தை அமைத்தல்
- இடதுபுறத்தில் உள்ள “முன்பதிவு செய்யக்கூடிய அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை” பேனலில், முன்பதிவுப் பக்க அமைப்புகளை அமைக்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
முன்பதிவுப் பக்க அமைப்பு |
விளக்கம் |
---|---|
முன்பதிவுப் பக்கத்தில் உள்ள படமும் பெயரும் |
முன்பதிவுப் பக்கத்தில் உங்கள் அடையாளம் எப்படிக் காட்டப்படுகிறது என்பதைப் பார்க்கலாம். இரண்டாம் நிலைக் கேலெண்டர்களில், அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகளுக்கு முன்பதிவுப் பக்கங்களில் படம் காட்டப்படாது. முன்பதிவுப் பக்கத்தில் சுயவிவரப் படத்தையோ கணக்கின் பெயரையோ மாற்ற, உங்கள் தனிப்பட்ட தகவலை மாற்றவும். |
இருப்பிடம் மற்றும் கான்ஃபிரன்ஸிங் |
உங்களுடன் அப்பாயிண்ட்மெண்ட்டுகளை முன்பதிவு செய்பவர்களை எப்படி எங்கே சந்திக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க:
உதவிக்குறிப்பு: மூன்றாம் தரப்புக் கான்ஃபிரன்ஸ் சேவையைப் பயன்படுத்த, ஏதுமில்லை/பின்னர் குறிப்பிடுவேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.ஒருவர் அப்பாயிண்ட்மெண்ட்டை முன்பதிவு செய்யும்போது, நிகழ்வில் மாற்றம் செய்து உங்களுக்கு விருப்பமான கான்ஃபிரன்ஸிங் சேவையின் இணைப்பைச் சேர்க்கவும். Calendar செருகு நிரல்களை நிறுவுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். |
விளக்கம் |
உங்கள் சேவை குறித்து விவரிக்கும் விளக்கத்தைச் சேர்க்கலாம். விளக்கம் இங்கெல்லாம் காட்டப்படும்:
|
முன்பதிவுப் படிவம் |
பங்கேற்பாளர்கள் நிரப்புவதற்கான புலங்களைச் சேர்க்கலாம். இந்த அவசியமான புலங்கள் இதில் அடங்கும்:
மேலும் புலங்களைச் சேர்க்க, விவரத்தைச் சேர்த்தல் என்பதைக் கிளிக் செய்யவும். Google கணக்கில் உள்நுழையாதவர்கள் அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும்போது அவர்களுக்குச் சரிபார்ப்புக் குறியீட்டை அனுப்ப, “மின்னஞ்சல் சரிபார்ப்பு தேவை” என்பதற்கு அருகில் உள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும். |
பேமெண்ட்டுகள் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை |
Calendarரில் Stripe கணக்கை இணைத்தபிறகு, அப்பாயிண்ட்மெண்ட்டுக்களுக்கான பேமெண்ட்டுகளை நீங்கள் கேட்கலாம். அப்பாயிண்ட்மெண்ட்டுகளுக்குப் பேமெண்டுகளைக் கேட்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். |
முன்பதிவு உறுதிப்படுத்தல்கள் மற்றும் நினைவூட்டல்கள் |
உங்கள் அப்பாயிண்ட்மெண்ட்டுகளுக்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களையும் நினைவூட்டல்களையும் அமைக்கலாம்.
|
உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையைக் காட்டுதல் அல்லது மறைத்தல்
- கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் மெனு ஐகானுக்கு
அருகில் உள்ள, காட்சியை மாற்றுவதற்கான மெனுவைக் கிளிக் செய்யவும்.
- அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்புகள்:
- உங்கள் திட்ட அட்டவணையை இன்னும் கண்டறிய முடியவில்லை என்றால், காட்சியை மாற்றுவதற்கான மெனுவில் நாள், வாரம் அல்லது மாதம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Calendar ஆப்ஸில் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகள் எப்போதும் காட்டப்படும்.
- உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை மறைக்கப்பட்டிருந்தால், நீங்கள்:
- உங்கள் கேலெண்டரில் முன்பதிவு செய்யப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட்டுகளைப் பார்க்கலாம்.
- புதிய திட்ட அட்டவணையை உருவாக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள ஒன்றில் நேரத்தைச் சேர்க்கலாம்.
அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையைத் திருத்துதல்
- கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
- உங்கள் Calendar கட்டத்தில், அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை
என்பதைக் கிளிக் செய்யவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள, அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையைத் திருத்துவதற்கான
ஐகானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையில் மாற்றங்களைச் செய்யவும்.
நீங்கள் கலந்துகொள்ளும் நேரத்தை அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையில் சேர்த்தல்
- கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
- கேலெண்டரில் ஏதேனும் ஒரு முன்பதிவு செய்யப்படாத நேரத்தைக் கிளிக் செய்யவும்.
- அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை என்பதைக் கிளிக் செய்யவும்.
- தேதியையும் நேரத்தையும் சேர்க்கவும்.
- ஏற்கெனவே உள்ள நேர அட்டவணையில் ‘கலந்துகொள்ளக்கூடிய நேரத்தைச்’ சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் கலந்துகொள்ளும் நேரத்தை எந்தத் திட்ட அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஏற்கெனவே உள்ள திட்ட அட்டவணையில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை மாற்றங்கள் மற்றும் தெரிவுநிலை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
கேலெண்டருடன் உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை எப்படி ஒத்திசைக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்- அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையும் முன்பதிவு செய்யப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட்டுகளும் கேலெண்டரில் தானாகவே காட்டப்படும்.
- "கலந்துகொள்ளும் நேரத்தை அறிய கேலெண்டர்களைப் பார்" என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், திட்ட அட்டவணைகள் முரண்படுவதை Google Calendar தவிர்க்கும்.
- Google Calendarரில் ஒரு நிகழ்வுக்கு “ஆம்” அல்லது “கலந்துகொள்ளக்கூடும்” எனப் பதிலளித்தால் அந்தக் குறிப்பிட்ட நேரம் முன்பதிவு செய்வதற்கு ஏற்றதாக உங்கள் முன்பதிவுப் பக்கத்தில் காட்டப்படாது.
- பிற நிகழ்வுகளுடன் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் உங்களின் கலந்துகொள்ளும் நேரம் தொடர்பான தகவல் தானாகவே முன்பதிவுப் பக்கத்தில் புதுப்பிக்கப்படும்.
- திருத்தும் அனுமதி உள்ள எல்லோரும் உங்கள் கேலெண்டரில் திட்ட அட்டவணையைத் திருத்தலாம், புதிய முன்பதிவுகளைப் பார்க்கலாம்.
- உங்களது அப்பாயிண்ட்மெண்ட் எப்போது கிடைக்கும் என்பதை முன்பதிவுப் பக்கத்தின் இணைப்பை வைத்துள்ள எல்லோரும் பார்க்கலாம்.
- கேலெண்டரைத் தவிர்த்து முன்பதிவுப் பக்கத்தை மட்டும் பகிர்ந்தால் உங்கள் கேலெண்டரில் உள்ள நிகழ்வுகளைப் பிறர் பார்க்க முடியாது.
- உங்கள் முன்பதிவுப் பக்கங்களில் “கலந்துகொள்ளும் நேரத்தை அறிய கேலெண்டர்களைப் பார்” என்பதை முடக்கினால், எல்லா அப்பாயிண்ட்மெண்ட் நேரப் பிரிவுகளும் காட்டப்படும். இருப்பினும், முன்பதிவுப் பக்கம் மூலம் ஏற்கப்பட்ட முந்தைய அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவுகளும் முன்பதிவு செய்யாத நிகழ்வுகளும் அப்படியே இருக்கும்.
- உதவிக்குறிப்பு: அம்சம் முடக்கப்பட்டிருந்தாலும், முன்பதிவுப் பக்கத்தில் ஒவ்வொரு அப்பாயிண்ட்மெண்ட் நேரத்தையும் பிறர் ஒருமுறை மட்டும் முன்பதிவு செய்ய முடியும்.