Business Profile மூன்றாம் தரப்பினருக்கான கொள்கைகள்

Googleளில் தங்கள் Business Profileலை நிர்வகிக்க மூன்றாம் தரப்புகளை பிசினஸ்கள் பயன்படுத்தும்போது சிறந்த அனுபவங்களைத் தொடர்ந்து பெற உதவும் வகையில் மூன்றாம் தரப்பினருக்கான கொள்கைகளை வகுத்துள்ளோம். Googleளின் மூன்றாம் தரப்புக் கொள்கைகளை நீங்கள் பரிச்சயமாக்கிக்கொள்வதும் உடனுக்குடன் தெரிந்துகொள்வதும் முக்கியமாகும். எங்கள் கொள்கைகளை நீங்கள் மீறுவதாக நம்பினால் விரிவான மதிப்பாய்வை மேற்கொள்ள நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, சரிசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளக்கூடும். தொடர்ச்சியான அல்லது தீவிரமான கொள்கை மீறல்கள் கண்டறியப்பட்டால் Business Profileலை நீங்கள் நிர்வகிப்பதை நாங்கள் நிறுத்தக்கூடும். இதை உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க அவர்களை நாங்கள் தொடர்புகொள்ளக்கூடும்.

Google Business Profile கொள்கைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

வரையறைகள்

மூன்றாம் தரப்பு (3P)” என்பது தங்களுக்குச் சொந்தமில்லாத பிசினஸிற்கான தகவல்களை Business Profileலில் நிர்வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி ஆகும். சில உதாரணங்கள்:

  • டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி.
  • மூன்றாம் தரப்பு SEO/SEM நிறுவனம்.
  • ஆன்லைன் ஆர்டர், திட்டமிடல் அல்லது முன்பதிவுச் சேவை வழங்குநர்.
  • இணை நிறுவன நெட்வொர்க் வழங்குநர்.

"பலனைப் பெறும் வாடிக்கையாளர்கள்"/"கிளையண்ட்டுகள்" என்பவர்கள் Google Business Profileலில் தங்களது பிசினஸ் தகவலை நிர்வகிப்பதற்கு மூன்றாம் தரப்புடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிசினஸ்கள் ஆகும்.

வெளிப்படைத்தன்மைத் தேவைகள்

Googleளில் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் இருப்பதால் என்னென்ன பலன்கள் உள்ளன என்பதை பிசினஸ் உரிமையாளர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், தெளிவான, சரியான முடிவுகளை எடுக்கத் தேவையான சரியான தகவல்கள் அவர்களிடம் இருக்க வேண்டும். எனவே, இந்த முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் தகவல்களில் மூன்றாம் தரப்பினர் மற்றும்/அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்குமாறு வலியுறுத்துகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவைகளை மூன்றாம் தரப்பினர் பூர்த்திசெய்வதுடன் தொடர்புடைய தகவல்களைப் பலனைப் பெறும் வாடிக்கையாளர்கள் கேட்கும்போது அவற்றை வழங்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

எல்லா மாற்றங்களையும் தெரிவித்தல்

பலனைப் பெறும் வாடிக்கையாளர்களின் சுயவிவரங்களில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் அனைத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துவதை உறுதிசெய்துகொள்ளவும். பிசினஸ் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் சுயவிவர அம்சங்களில் மாற்றம் செய்வது அல்லது முடக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. Google Business Profile என்றால் என்ன மற்றும் தங்கள் Business Profile தரவு எங்கே பயன்படுத்தப்படுகிறது என்பதை பலனைப் பெறும் வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்வதையும் மூன்றாம் தரப்பு உறுதிசெய்ய வேண்டும்.

உரிமைக்கான கோரிக்கைகளைப் பூர்த்திசெய்யுங்கள்

பிசினஸ்களுக்கு அவற்றின் உரிமை மற்றும் நிர்வாக விருப்பங்கள் குறித்து மூன்றாம் தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். பார்ட்னருக்கு இணை உரிமையாளர்/நிர்வாகி அணுகல் இருக்க வேண்டுமா அல்லது எந்தவித அணுகலும் இருக்கக்கூடாதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பிசினஸ்களுக்கு உள்ளது. மேலும், பலனைப் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் தங்கள் Business Profileலின் உரிமையோ இணை உரிமையோ எப்போதும் இருக்க வேண்டும்.

பலனைப் பெறும் வாடிக்கையாளருடனான தொடர்பை முடித்தல்

உங்கள் சேவையை நிறுத்துவதற்கு விரைவான, எளிய வழியை உங்களிடம் பலனைப் பெறும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். பலனைப் பெறும் வாடிக்கையாளரிடமிருந்து அறிவிப்பு கிடைத்த 7 வணிக நாட்களுக்குள் உங்கள் சேவைகளில் இருந்து அவர்களுடைய Business Profileலை நிர்வகிக்கப் பயன்படுத்திய Google கணக்கை நீக்கி, அதன் பிரத்தியேகக் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கான உரிமையை அந்தக் கிளையண்ட்டுக்கு வழங்க வேண்டும். பலனைப் பெறும் வாடிக்கையாளரின் கணக்கை நிர்வகிக்கவோ பிற வழிகளில் மாற்றவோ உங்களுக்கு அனுமதி இருந்தால் அந்த அனுமதிகளையும் துறந்து, அகற்ற வேண்டும். உரிமையை மாற்றுவது குறித்து மேலும் அறிக.

நிர்வாகக் கட்டணங்கள்

மூன்றாம் தரப்பினர் தாங்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்குப் பெரும்பாலும் நிர்வாகக் கட்டணத்தை விதிக்கின்றனர். பலனைப் பெறும் வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்தக் கட்டணங்கள் பெறப்படும் எனில் அதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நிர்வாகக் கட்டணம் விதிக்கிறீர்கள் எனில், பலனைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு Business Profile என்பது எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும் சேவை என்பதைத் தெரிவிக்க வேண்டும். குறைந்தபட்சம், புதிய வாடிக்கையாளர்களிடம் அவர்களது பிசினஸ் சுயவிவரத்தை நிர்வகிப்பதற்கு முன் இதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்தக் கட்டணம் இருப்பதைப் பற்றி வாடிக்கையாளருக்கான இன்வாய்ஸ்களில் வெளியிட வேண்டும். திடீரெனவோ பெரிய அளவிலோ கட்டணங்களை மாற்றுவதைத் தவிர்க்கவும்.

வெளியீட்டு அறிக்கையைப் பகிர்தல்

குறிப்பாக, பெரிய பிசினஸ்களைப் போல வசதியோ நிபுணத்துவமோ இல்லாத சிறிய & நடுத்தர அளவு பிசினஸ்கள் ஒரு மூன்றாம் தரப்புப் பார்ட்னருடன் பணிபுரியும்போது அவர்களிடம் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். எனவே, சிறிய & நடுத்தர அளவு பிசினஸ்களுக்கு முதன்மையாகச் சேவை வழங்கும் எல்லா மூன்றாம் தரப்பினரும் "மூன்றாம் தரப்பினருடன் பணிபுரிதல்" வெளியீட்டு அறிக்கையை வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் பகிர வேண்டும்.

உங்கள் இணையதளத்தில் வெளியீட்டு அறிக்கைக்கான இணைப்பு எளிதில் தெரியக்கூடிய இடத்தில் இடம்பெற வேண்டும். பொருத்தமான இடங்களுக்கான எடுத்துக்காட்டுகள்: முகப்புப்பக்கத்தின் அடிக்குறிப்பு, அறிக்கையிடல் டாஷ்போர்டு, தளத்தின் தயாரிப்புகள்/சேவைகள் பிரிவு. அதோடு, புதிய பிசினஸை நிர்வகிக்கும்போதோ ஏற்கெனவே இருக்கும் பிசினஸ் தொடர்பைப் புதுப்பிக்கும்போதோ இந்த வெளியீட்டு அறிக்கை உங்கள் இணையதளத்தில் இருப்பதை மின்னஞ்சல் மூலமோ அஞ்சல் அனுப்பியோ வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கவும்.

புள்ளிவிவரங்கள்

பலனைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு Google Business Profile பற்றிய துல்லியமான தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும். Business Profile தரவையும் பிற பிளாட்ஃபார்ம்களில் இருந்து கிடைக்கும் தரவையும் பிரித்துப் பார்க்கக்கூடிய திறன் இதில் அடங்கும். உங்கள் சேவை மற்ற பிசினஸ் சுயவிவர நிர்வாகப் பிளாட்ஃபார்ம்களில் இருந்து அறிக்கையிடல் தரவை வழங்கினால் நீங்கள் Business Profile தரவையும் Business Profile அல்லாத தரவையும் தனித்தனியாக அறிக்கையளிக்க வேண்டும். எளிதில் அணுகக்கூடிய விதத்தில் Business Profile சார்ந்த தரவும் வழங்கப்பட்டால் Business Profile தரவுடன் Business Profile அல்லாத தரவையும் இணைத்து ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திறன் தரவை நீங்கள் அறிக்கையளிக்கலாம். ஒரு வாடிக்கையாளரின் Business Profile சார்ந்த தரவைப் பிற வாடிக்கையாளர்களின் தரவுடன் ஒப்பிடவோ அவர்களுடன் பகிரவோ கூடாது.

Yelp, Yahoo, Bing போன்ற பல பிளாட்ஃபார்ம்களில் இருந்து தொகுக்கப்பட்ட இருப்பிடம் சார்ந்த செயல்திறன் தரவை உங்கள் கருவி வழங்கினால் அதில் Google Business Profile இருப்பிடச் செயல்திறன் அறிக்கையையும் அதற்குத் தேவையான புலங்களையும் தனியாக வழங்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் உங்கள் Business Profile நிர்வாகச் செலவு & செயல்திறன் அறிக்கைகளை மின்னஞ்சல் மூலமாகவோ இணையதளம் மூலமாகவோ எளிதாக அணுகும் வகையில் அவற்றைப் பகிர வேண்டும். வேறொரு வகையில் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய, உங்கள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய செயல்திறன் தரவை நேரடியாக அணுக, அவர்களது Business Profileலை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் Google கணக்கில் உள்நுழைய அனுமதிக்கவும்.

கண்காணிப்பு அல்லது தணிக்கையில் தலையிடக் கூடாது

பொருந்தக்கூடிய எல்லாக் கொள்கைகளுடனும் விதிமுறைகளுடனும் இணங்குவதை உறுதிசெய்ய எந்தவொரு Business Profile செயல்பாட்டையும் Google கண்காணிக்கலாம் தணிக்கை செய்யலாம். இதுபோன்று கண்காணிப்பதிலோ தணிக்கை செய்வதிலோ தலையிட உங்களுக்கு அனுமதியில்லை. மேலும் உங்கள் Business Profile செயல்பாட்டை Googleளிடமிருந்து மறைக்கக் கூடாது. எந்தவொரு தலையீடும் இந்தக் கொள்கைகளை மீறுவதாகவே கருதப்படும்.

தடைசெய்யப்பட்ட நடைமுறைகள்

ஒப்புதலின்றி ஒரு பிசினஸுக்கு உரிமைகோரக் கூடாது

பொருந்தக்கூடிய சட்டத்தின்படி பிசினஸ் உரிமையாளரின் வெளிப்படையான ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே நீங்கள் ஒரு Business Profileலுக்கு உரிமைகோரி நிர்வகிக்க முடியும். ஒப்புதலானது எழுத்துப்பூர்வமாகவோ படிவத்தில் பெட்டியைத் தேர்வுசெய்வது போன்று ஒப்புதலளிப்பதைத் தெரிவிக்கும் செயலாகவோ இருக்கலாம். பலனைப் பெறும் வாடிக்கையாளரின் சார்பாகக் கருத்துகளுக்குப் பதிலளிக்க உங்களிடம் வெளிப்படையான அனுமதி இருக்க வேண்டும். வாய்மொழி ஒப்புதல் போதுமானதல்ல. மூன்றாம் தரப்பினருக்கும் வணிகருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டால் உங்களுக்குக் கிடைத்த ஒப்புதலை எழுத்துப்பூர்வமாகவோ டிஜிட்டல் முறையிலோ நீங்கள் வழங்க வேண்டும். வாடிக்கையாளர் ஆவதற்காக ஒரு பிசினஸை ஊக்குவிக்கவோ இணங்கச் செய்யவோ கட்டாயப்படுத்தவோ முன்கூட்டியே அந்த பிசினஸ் சுயவிவரத்துக்கு உரிமைகோரக் கூடாது. நேரடியான மற்றும் எழுத்துப்பூர்வ அங்கீகாரம் இல்லாத Business Profileலைத் தவறாக வழிநடத்துவது, ஆள்மாறாட்டம் செய்வது, அதன் அணுகலைப் பெறுவது ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. தவறான பயன்பாடு, ஸ்பேம் அல்லது எந்தவொரு முறைகேடான செயல்பாடும் கண்டறியப்பட்டால் உங்கள் கணக்கு இடைநிறுத்தப்படலாம்.

தவறான, தவறாக வழிநடத்தும் அல்லது நடைமுறைக்குப் புறம்பான வாக்குறுதிகள்

தகவல்களை முழுமையாகப் பெற்ற பிறகு மூன்றாம் தரப்பினருடன் பணிபுரிவது குறித்து பிசினஸ்கள் முடிவெடுக்க வேண்டுமென விரும்புகிறோம். அதற்காக உங்கள் நிறுவனம், சேவைகள், அவற்றுடன் தொடர்புடைய செலவுகள், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய பலன்கள் ஆகியவற்றை நீங்கள் விவரிக்கும்போது வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். தவறான, தவறாக வழிநடத்தும், நடைமுறைக்குப் புறம்பான வாக்குறுதிகளைக் கொடுக்கக் கூடாது.

எடுத்துக்காட்டுகள்:

  • ரோபோகால்கள் (ரெக்கார்டு செய்யப்பட்ட குரல் மூலம் அழைப்பது) அல்லது பிற தொழில்நுட்பங்கள் மூலம் Google என்று தவறாகப் பிரதிநிதித்துவம் செய்வது.
  • Googleளில் முன்னிலைப்படுத்துவதாக உறுதியளிப்பது.
  • Google Search, Google Maps ஆகியவற்றில் பிசினஸ் சுயவிவரங்கள் எப்போதும் காட்டப்படும் என்று தெரிவிப்பது.
  • கட்டணமில்லா Google தயாரிப்புகளைப் பணம் செலுத்திச் சேர்க்கும் தயாரிப்புகளாகப் பிரதிநிதித்துவம் செய்வது.
  • தவறாக வழிநடத்தக்கூடிய நிறுவனக் கணக்குப் பெயர்களின் மூலம் Google என்றோ Googleளுடன் நேரடியாகத் தொடர்புடைய தரப்பு என்றோ தவறாகப் பிரதிநிதித்துவம் செய்வது. Googleளையோ அதனுடன் தொடர்புடைய "Google", "Google Cloud", "Alphabet", "Google சான்றளித்தது", "Google உதவிக் குழு" போன்றவற்றையோ குறிக்கும் கணக்குப் பெயர்களைப் பயன்படுத்துவதும், இன்னும் பலவும் இதில் அடங்கும்.

Business Profileலில் நீங்கள் செய்யும் எந்தவொரு மாற்றமோ திருத்தமோ சரியாகவும் அனைத்து உள்ளடக்கக் கொள்கைகளையும் பின்பற்றுவதாகவும் இருக்க வேண்டும்.

உபத்திரவம் தரக்கூடிய, தவறான அல்லது நம்பிக்கையைக் குலைக்கும் நடத்தை

பிசினஸ்கள் Googleளுடன் நேரடியாகப் பணிபுரியும்போது பெறும் சிறந்த சேவையை மூன்றாம் தரப்புப் பார்ட்னருடன் பணிபுரியும்போதும் பெற வேண்டும். எனவே, வாடிக்கையாளராகக் கூடியவர்கள் அல்லது ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களிடம் தொல்லை தரக்கூடிய, தவறான அல்லது நம்பிக்கையைக் குலைக்கும் நடத்தையில் ஈடுபடக்கூடாது.

எடுத்துக்காட்டுகள்:

  • 'அழைக்க வேண்டாம்' பட்டியல்களுக்கு மதிப்பளிக்காமல் அதிகப்படியான மார்க்கெட்டிங் அழைப்புகளை மேற்கொள்வது.
  • ஏஜென்சியில் பதிவுசெய்யவோ தொடரவோ வாடிக்கையாளருக்கு அளவுக்கதிகமாக அழுத்தம் கொடுப்பது.
  • ஏஜென்சியில் பதிவுசெய்யாத கிளையண்ட்டுகள் தங்களுடைய பிசினஸ் சுயவிவரத்தை இழப்பார்கள் என்று மிரட்டுவது.
  • பணத்திற்காக பிசினஸ் சுயவிவரத்தைப் பணயமாக வைத்திருப்பது.
  • ஃபிஷிங்கில் ஈடுபடுவது.

Google புதுப்பிப்புகளையும் பரிந்துரைத்த திருத்தங்களையும் தானாக மாற்றியமைத்தல்

வணிகர்களுக்கும் பயனர்களுக்கும் மிகத் துல்லியமான தகவல்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, பயனர் உருவாக்கிய உள்ளடக்கம், பிற மூன்றாம் தரப்புத் தரவு போன்ற பல ஆதாரங்களிலிருந்து பெறும் தரவை Google பயன்படுத்துகிறது. பரிந்துரைத்த மாற்றங்களை நிராகரிக்க வணிகருடன் கலந்தாலோசிக்காமல் தானாக நடவடிக்கைகளை மேற்கொள்வது எங்கள் விதிமுறைகளை மீறும் செயலாகும். தரவு இன்னமும் துல்லியமாக இருப்பதைச் சரிபார்க்க வணிகருடன் மூன்றாம் தரப்பினர் கலந்தாலோசிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்குத் தவறினால் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். இதில் API ஒதுக்கீடு குறைப்பு நடவடிக்கையும் அடங்கக்கூடும்.

கணக்கை அமைத்தல்

ஒரு நிறுவனத்தின் உரிமையாளராகவோ உறுப்பினராகவோ இருப்பது அதிகாரமிக்க பொறுப்பாகும். உங்களின் மிகவும் நம்பத்தகுந்த பணியாளர்கள் சிலருக்கு மட்டும் அதை வழங்கவும். நிறுவனங்கள் & பயனர் குழுக்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

பலனைப் பெறும் உங்கள் வாடிக்கையாளர்களின் கணக்கு அனுமதிச் சான்றுகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். பிசினஸ் சுயவிவரம், கணக்கு, கடவுச்சொல் நிர்வாகம் ஆகியவை தொடர்பான சில சிறந்த நடைமுறைகள் இதோ:

  • கிளையண்ட்டுக்காக பிசினஸ் சுயவிவரம் உருவாக்கப்பட்ட பின்னர் பிசினஸ் உரிமையாளரை அதன் உரிமையாளராக்கி உங்களை அதன் நிர்வாகியாக்கிக் கொள்ளவும்.
  • கிளையண்ட்டிடம் ஏற்கெனவே Business Profile இருந்தால் உங்களை உரிமையாளராக இல்லாமல் நிர்வாகியாக அழைக்குமாறு கோரிக்கை விடுக்கவும்.
  • உங்கள் கிளையண்ட்டுகளுடன் கடவுச்சொற்களைப் பகிரக்கூடாது.
  • ஒரு பிசினஸ் சுயவிவரத்தை நீங்கள் நிர்வகிக்கவில்லை என்றால் உங்கள் கணக்கில் இருந்து அதை அகற்றவும்.

கொள்கை மீறில்களின் விளைவுகள்

இணக்கத்தன்மை மதிப்பாய்வு: உங்கள் பிசினஸ் மூன்றாம் தரப்புக் கொள்கைக்கு இணக்கமாக உள்ளதா என எந்த நேரத்திலும் நாங்கள் மதிப்பாய்வு செய்யக்கூடும். இணக்கத்தன்மை குறித்த தகவல்களைப் பெற நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டால் உரிய நேரத்தில் பதிலளிக்க வேண்டும். எங்கள் கொள்கைகளைப் பின்பற்றுவதற்குத் தேவையான சரிசெய்தல் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இணக்கத்தன்மையைச் சரிபார்க்க உங்கள் வாடிக்கையாளர்களையும் நாங்கள் தொடர்புகொள்ளக்கூடும்.

இணக்கமின்மை குறித்த அறிவிப்பு: மூன்றாம் தரப்பினருக்கான கொள்கைகளை நீங்கள் மீறுவதாகத் தோன்றினால் அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்க உங்களைத் தொடர்புகொள்வோம். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் அதை அமலாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். தீவிரமான அல்லது தொடர்ச்சியான கொள்கை மீறல்களின்போது நாங்கள் உடனடியாகவும் அறிவிப்பின்றியும் நடவடிக்கை எடுக்கலாம்.

மூன்றாம் தரப்புத் திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்படுதல்: Google பார்ட்னர்கள்/பிரீமியர் SMB பார்ட்னர்கள் போன்ற பிற Google மூன்றாம் தரப்புத் திட்டங்களில் உங்களின் பங்கேற்பு இந்த மூன்றாம் தரப்புக் கொள்கையுடன் இணங்குவதைப் பொறுத்து செயலில் இருக்கும். நீங்கள் எங்களுடைய கொள்கைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டாலோ இணக்கத்தன்மைக்காக உங்கள் பிசினஸை மதிப்பாய்வு செய்வதற்கான எங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தாலோ உங்கள் பங்கேற்பு கட்டுப்படுத்தப்படலாம் அல்லது இடைநீக்கப்படலாம்.

கணக்கு இடைநீக்கம்: தீவிரமான கொள்கை மீறலைச் செய்தால் Business Profile மற்றும்/அல்லது Business Profileலை நிர்வகிக்கப் பயன்படுத்தும் Google கணக்கு இடைநீக்கப்படக்கூடும். தொடர்ச்சியான அல்லது தீவிரமான கொள்கை மீறல்களைச் செய்தால் அதன் பின்னர் உங்களால் Business Profileலை நிர்வகிக்க முடியாமல் போகலாம். மேலும் இதை உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதற்கு அவர்களை நாங்கள் தொடர்புகொள்ளலாம்.

மூன்றாம் தரப்புக் கொள்கை மீறலைப் பற்றிப் புகாரளித்தல்

இந்தக் கொள்கையை ஒரு மூன்றாம் தரப்பு மீறுவதாகக் கருதுகிறீர்களா? எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: மூன்றாம் தரப்புக் கொள்கை மீறல் குறித்துப் புகாரளித்தல்.

மூன்றாம் தரப்பு குறித்து நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளும்போது தனிப்பட்ட முறையில் உங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம் என்றாலும் உங்கள் கருத்துகளை விசாரித்து, தேவைப்பட்டால் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்வோம்.

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15372254322117977387
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false