பிரத்தியேக அறிக்கை என்பது உங்களால் உருவாக்கப்படும் அறிக்கை ஆகும். பிரத்தியேக அறிக்கையில் என்ன தரவு சேர்க்கப்பட வேண்டும், அது எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள்தான் தேர்வுசெய்வீர்கள்.
- உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
- அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- புதிய அறிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் அறிக்கையைப் பிரத்தியேகமாக்குதல்:
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் அறிக்கைக்கான பெயரை உள்ளிடவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரத்தியேக அறிக்கையைத் திட்டமிடுங்கள்
பிரத்தியேக அறிக்கையை நீங்கள் உருவாக்கிய பிறகு வழக்கமான அடிப்படையில் அது உருவாக்கப்படுமாறும் உங்களுக்கும் பிற பெறுநர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படுமாறும் அமைத்துக்கொள்ளலாம்.
- உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
- அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் திட்டமிட விரும்பும் பிரத்தியேக அறிக்கையைக் கண்டறியவும்.
உதவிக்குறிப்பு: பட்டியலிலுள்ள அறிக்கைகளைக் கண்டறிய தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.
- சேமிஎன்பதற்கு அடுத்துள்ள, திட்டமிடல்என்பதைக் கிளிக் செய்யவும்.
- அறிக்கையைத் தானாகவே உருவாக்கு எனும் செக்பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்
- கீழ் தோன்றல்களில் இருந்து உருவாக்கு மற்றும் கால அளவு தொடர்பான உங்களின் விருப்பங்களைத் தேர்வு செய்யவும். உதாரணமாக, ”வாரந்தோறும்” மற்றும் ”கடந்த 7 நாட்கள்” என்பவற்றைத் தேர்ந்தெடுப்பது கடந்த 7 நாட்களுக்கான தரவு அறிக்கையை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று உருவாக்குகிறது.
- அறிக்கை உருவாக்கப்பட்ட பிறகு அது அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளை "இவற்றுடன் பகிர்" பிரிவில் உள்ளிடவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரத்தியேக அறிக்கையை நகலெடுத்தல்
- உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
- அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நகலெடுக்க விரும்பும் பிரத்தியேக அறிக்கையைக் கண்டறியவும்.
உதவிக்குறிப்பு: பட்டியலிலுள்ள அறிக்கைகளைக் கண்டறிய தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.
- சேமிஎன்பதற்கு அடுத்துள்ள, நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் அறிக்கைக்கான பெயரை உள்ளிடவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரத்தியேக அறிக்கையை நீக்குதல்
- உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
- அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் நீக்க விரும்பும் பிரத்தியேக அறிக்கையைக் கண்டறியவும்.
உதவிக்குறிப்பு: பட்டியலிலுள்ள அறிக்கைகளைக் கண்டறிய தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.
- உறுதிப்படுத்த நீக்குஎன்பதைக் கிளிக் செய்யவும்.