அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பேமெண்ட்டுகள்

பேமெண்ட் வரம்புகள்

YouTube Studio மொபைல் ஆப்ஸின் 'வருமானம் ஈட்டுதல்' பிரிவில் பேமெண்ட் விவரங்களைக் காட்டும் புதிய பீட்டா அம்சத்தை அறிமுகப்படுத்துகிறோம். தகுதிபெறும் கிரியேட்டர்கள் தங்கள் நிகர வருமானம் பேமெண்ட்டாக எப்படி வழங்கப்படுகிறது என்பதை இந்த பீட்டா அம்சத்தின் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். இந்த பீட்டா அம்சம் மூலம், இவற்றைப் பார்க்கலாம்:
  • அடுத்த பேமெண்ட்டை நோக்கிய உங்களின் செயல்நிலை
  • பேமெண்ட் செலுத்திய தேதிகள், செலுத்திய தொகை, பேமெண்ட் பிரிவுகள் உட்பட கடந்த 12 மாதங்களுக்கான உங்கள் பேமெண்ட் விவரங்கள்
எங்கள் மன்ற இடுகையில் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் AdSense நிகர வருமானத்தைப் பெறுவதற்கு நீங்கள் தகுதிபெறுகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க பல்வேறு வருவாய் வரம்புகள் உள்ளன. உங்கள் கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாணயத்தைப் பொறுத்து தொடக்க வரம்புகள் மாறுபடுகின்றன. தொடக்க வரம்பை அடைந்தவுடன் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கலாம். தொடக்க வரம்புகள் குறித்த கூடுதல் தகவலுக்குக் கீழேயுள்ள விளக்கத்தையும் டேபிளையும் பார்க்கவும்.

ஐந்து படிகளைக் கொண்ட வருவாய் வரம்புகளுக்கான உதாரணம்.

1. வரி விவரத்திற்கான தொடக்க வரம்பு

உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, குறிப்பிட்ட சில தகவல்களை வரி நோக்கங்களுக்காக நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம். வரி விவரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருந்தால் கணக்கில் முதன்முறை உள்நுழையும்போதே அவற்றைச் சமர்ப்பிக்க முடியும். Googleளுக்கு உங்கள் வரி விவரத்தைச் சமர்ப்பிப்பது எப்படி என அறிக.

2. சரிபார்ப்பு வரம்பு

உங்கள் வருமானம் சரிபார்ப்பு வரம்பை அடையும்போது பின்வருபவற்றை நீங்கள் செய்ய வேண்டும்:

கவனத்திற்கு: உங்களிடம் AdSense மற்றும் YouTubeக்குத் தனித்தனி பேமெண்ட் கணக்குகள் இருந்தால் அந்தக் கணக்குகளில் ஏதேனும் ஒன்று பேமெண்ட் சரிபார்ப்பு வரம்பை அடையும்போது உங்கள் தகவல்களைச் சரிபார்க்கவும். ஒருமுறை மட்டுமே தகவல்களைச் சரிபார்க்க வேண்டியிருக்கும்.

3. பேமெண்ட் முறை தேர்வு வரம்பு

எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் பேமெண்ட்டுக்குத் தகுதிபெற, செயலிலுள்ள கணக்குகள் பேமெண்ட் வரம்பை எட்டியிருக்க வேண்டும். இந்த வரம்பிற்குக் குறைவாக உள்ள பேமெண்ட்டுகளை ஒருபோதும் வழங்க மாட்டோம் என்பதால் வெளியீட்டாளர்களின் தற்போதைய பேலன்ஸ் பேமெண்ட் முறை வரம்பை அடையும் வரை பேமெண்ட் வகையைத் தேர்ந்தெடுக்க நாங்கள் அனுமதிப்பதில்லை. கூடுதல் தகவல்களுக்கு பேமெண்ட் வழிகாட்டியைப் பாருங்கள்.

கவனத்திற்கு: உங்களிடம் AdSense மற்றும் YouTubeக்குத் தனித்தனி பேமெண்ட் கணக்குகள் இருந்தால் பேமெண்ட் வரம்பை அவை அடையும்போது ஒவ்வொரு பேமெண்ட் கணக்கிற்கும் பேமெண்ட் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. பேமெண்ட் வரம்பு

நிலுவையிலுள்ள உங்கள் நிகர வருமானம் பேமெண்ட் வரம்பை எட்டியதும், உங்கள் கணக்கில் நிறுத்திவைப்புகள் எதுவும் இல்லாத பட்சத்தில் எங்கள் திட்டக் கொள்கைகளுடன் இணக்கமாக இருந்தால் பேமெண்ட்டைப் பெறுவீர்கள். வருவாய் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு பேமெண்ட் கால அளவுகளைப் பாருங்கள்.

கவனத்திற்கு: உங்களிடம் AdSense மற்றும் YouTubeக்குத் தனித்தனி பேமெண்ட் கணக்குகள் இருந்தால் ஒவ்வொரு பேமெண்ட் கணக்கும் பேமெண்ட் வரம்பை அடைந்தால்தான் உங்களுக்கான பேமெண்ட் வழங்கப்படும்.

5. ரத்துசெய்தலுக்கான தொடக்க வரம்பு

உங்கள் AdSense கணக்கை ரத்துசெய்ய முடிவுசெய்திருந்து, ரத்துசெய்தலுக்கான வரம்பை விட அதிக பேலன்ஸ் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்தால் பேமெண்ட்டைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துப் படிகளையும் நீங்கள் நிறைவுசெய்திருக்கும் பட்சத்தில் மாதத்தின் இறுதியிலிருந்து தோராயமாக 90 நாட்களுக்குள் உங்களுக்குச் சேர வேண்டிய மொத்தத் தொகையும் வழங்கப்படும்.

ஒவ்வொரு நாணய வகைக்கும் பேமெண்ட் கணக்கிற்குமான வரம்புகள்

உங்கள் AdSense கணக்கிலுள்ள ஒவ்வொரு பேமெண்ட் கணக்கும் (எ.கா. YouTube பேமெண்ட் கணக்கு) அதற்கென சொந்தமாகப் பேமெண்ட் வரம்பைக் கொண்டுள்ளது. கீழுள்ள வரம்பு மதிப்புகள் உங்கள் அனைத்துப் பேமெண்ட் கணக்குகளுக்கும் தனித்தனியே பொருந்தும்.

வரம்புகள் வரி விவரங்கள் சரிபார்ப்பு பேமெண்ட் முறை பேமெண்ட் ரத்துசெய்தல்
அமெரிக்க டாலர் (USD) $0 $10 $10 $100 $10
ஆஸ்திரேலிய டாலர் (AUD) இல்லை $10க்கு நிகரான தொகை A$15 A$100 A$15
கனடியன் டாலர் (CAD) C$0 $10க்கு நிகரான தொகை C$10 C$100 C$10
சிலியன் பெசோ (CLP) இல்லை $10க்கு நிகரான தொகை CLP$6000 CLP$60000 CLP$6000
செக் கொருனா (CZK) இல்லை $10க்கு நிகரான தொகை Kč200 Kč2000 Kč200
டேனிஷ் க்ரோன் (DKK) இல்லை $10க்கு நிகரான தொகை kr60 kr600 kr60
யூரோ (EUR) இல்லை $10க்கு நிகரான தொகை €10 €70 €10
கிரேட் பிரிட்டிஷ் பவுண்டு (GBP) இல்லை $10க்கு நிகரான தொகை £10 £60 £10
ஹாங்காங் டாலர் (HKD) இல்லை $10க்கு நிகரான தொகை HK$100 HK$800 HK$100
ஹங்கேரியன் ஃபாரின்ட் (HUF) இல்லை $10க்கு நிகரான தொகை Ft2,000 Ft20,000 Ft2,000
இந்தோனேஷியன் ருபியா (IDR) இல்லை $10க்கு நிகரான தொகை Rp130000 Rp1300000 Rp130000
இஸ்ரேலிய ஷெகல் (ILS) இல்லை $10க்கு நிகரான தொகை ₪40 ₪400 ₪40
ஜப்பானிய யென் (JPY) இல்லை $10க்கு நிகரான தொகை ¥1000 ¥8000 ¥1000
ஜோர்டானியன் தினார் (JOD) இல்லை $10க்கு நிகரான தொகை دينار‎;7 دينار‎;70 دينار‎;7
மெக்சிகன் பெசோ (MXN) Mex$0 $10க்கு நிகரான தொகை Mex$120 Mex$1,200 Mex$120
மொராக்கன் திர்ஹம் (MAD) இல்லை $10க்கு நிகரான தொகை .د.م80 .د.م800 .د.م80
நியூசிலாந்து டாலர் (NZD) இல்லை $10க்கு நிகரான தொகை $15 $130 $15
நார்வேஜியன் க்ரோன் (NOK) இல்லை $10க்கு நிகரான தொகை kr60 kr600 kr60
பெருவியன் சோல் (PEN) இல்லை $10க்கு நிகரான தொகை S/30 S/300 S/30
போலிஷ் ஸ்லோட்டி (PLN) இல்லை $10க்கு நிகரான தொகை zł30 zł300 zł30
சிங்கப்பூர் டாலர் (SGD) இல்லை $10க்கு நிகரான தொகை S$15 S$150 S$15
தென் ஆப்பிரிக்க ரேண்ட் (ZAR) இல்லை $10க்கு நிகரான தொகை R100 R1000 R100
ஸ்வீடிஷ் க்ரோனா (SEK) இல்லை $10க்கு நிகரான தொகை kr70 kr700 kr70
சுவிஸ் ஃப்ராங்க் (CHF) இல்லை $10க்கு நிகரான தொகை Fr10 Fr100 Fr10
துனிஷியன் தினார் (TND) இல்லை $10க்கு நிகரான தொகை د.ت,20 د.ت,200 د.ت,20
டர்கிஷ் லிரா (TRY) இல்லை $10க்கு நிகரான தொகை ₺20 ₺200 ₺20
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹம் (AED) இல்லை $10க்கு நிகரான தொகை د.إ35 د.إ350 د.إ35
உருகுவேயன் பெசோ (UYU) இல்லை $10க்கு நிகரான தொகை $U240 $U2400 $U240

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18170273101061753688
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false