அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

உங்கள் வலைதளங்களை நிர்வகித்தல்

AdSenseஸில் வலைதளத்தை நிர்வகித்தல்

நீங்கள் பயன்படுத்த விரும்பும் உங்கள் வலைதளங்களின் பட்டியலை AdSenseஸின் 'வலைதளங்கள்' பக்கத்தில் உருவாக்கலாம். இந்தக் கட்டுரை மூலம் AdSense வலைதள நிர்வாகம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.

இது செயல்படும் விதம்

புதிய வலைதளத்தில் விளம்பரங்களைக் காட்ட விரும்பினாலோ வலைதள அளவில் தடைசெய்யும் விதிகளை அமைக்க விரும்பினாலோ அந்த வலைதளத்தை முதலில் உங்கள் வலைதளப் பட்டியலில் சேர்க்க வேண்டும். AdSenseஸில் நீங்கள் சேர்க்கும் எந்தவொரு வலைதளமும் AdSense திட்டக் கொள்கைகளுடன் இணங்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு புதிய வலைதளத்தைச் சேர்க்கும்போது உங்கள் விளம்பரக் குறியீடு, ads.txt ஃபைல் ஆகியவை மூலமோ உங்கள் தளத்திலுள்ள மேலதிகத் தகவல் மூலமோ வலைதளத்தின் உரிமையாளர் நீங்கள்தானா என்பதை நாங்கள் சரிபார்ப்போம். நீங்கள்தான் உரிமையாளர் என்பதை நாங்கள் உறுதிசெய்த பிறகு, உங்கள் வலைதளம் எங்கள் கொள்கைகளுடன் இணங்குகிறதா என்பதைச் சரிபார்க்க நாங்கள் அதை மதிப்பாய்வு செய்வோம். எங்கள் மதிப்பாய்வில் வலைதளத்தின் இணக்கத்தன்மை உறுதிசெய்யப்பட்டு AdSenseஸில் அதற்கு "தயார்" நிலை வழங்கப்பட்ட பிறகே நீங்கள் அதில் விளம்பரங்களைக் காட்ட முடியும். அதாவது, வேறு வலைதளங்களில் உங்கள் விளம்பரக் குறியீட்டை மற்ற வெளியீட்டாளர்கள் யாரும் தீங்கிழைக்கும் நோக்கத்தில் பயன்படுத்த முடியாது.

உதவிக்குறிப்பு: உங்களுக்குச் சொந்தமில்லாத கணக்குகளில் உள்ள விளம்பரதாரர்களிடம் உங்கள் வலைதளம் விற்கப்படுவதைத் தவிர்க்க நீங்கள் ads.txt ஃபைலை வெளியிடுமாறும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். கூடுதல் தகவல்களுக்கு ads.txt ஃபைலுக்கான வழிகாட்டியைப் பாருங்கள்.

உங்கள் வலைதளப் பட்டியலை அணுகுவதற்கான வழிமுறை

உங்கள் வலைதளப் பட்டியலை அணுக:

தொடர்புடைய தகவல் மூலங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18242096769869738706
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false