அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

உங்கள் அறிக்கைக்கான அளவீடுகளைத் தேர்வுசெய்தல்

உங்கள் அறிக்கைகளில் என்ன தரவு காட்டப்படுகிறது என்பதை வடிப்பான்கள் & பிரிவுகள் மட்டுமல்லாமல் அளவீடுகளும் தீர்மானிக்கும். அளவீடுகள் நீங்கள் அளவிடும் மதிப்புகளைக் குறிக்கும். உதாரணமாக, உங்கள் வருவாய், கிளிக்குகளின் எண்ணிக்கை, பக்கப்பார்வைகளின் எண்ணிக்கை மற்றும் பலவற்றை மதிப்பாய்வு செய்து உங்கள் கணக்கின் செயல்திறனை அளவிட முடியும்.

அளவீடுகள் என்ன செய்யும்?

அளவீடுகள் அறிக்கையிலுள்ள தரவு அல்லது மதிப்புகளின் வகைகளைக் குறிக்கும். அவை வழக்கமாக நெடுவரிசைகளில் அமைக்கப்பட்டிருக்கும், எண்களையோ சதவீதங்களையோ கொண்டிருக்கும்.

நீங்கள் பிரிவுகளைச் சேர்க்கும்போது அந்தப் பிரிவுகள் உருவாக்கும் புதிய வரிசை அல்லது குழுக்களின் அடிப்படையில் அளவீட்டு மதிப்புகள் மீண்டும் கணக்கிடப்படுகின்றன. அளவீடுகளைச் சேர்ப்பது அல்லது நீக்குவதன் மூலம் உங்கள் அறிக்கையில் தகவல்களின் நெடுவரிசை ஒன்று சேர்க்கப்படும் அல்லது நீக்கப்படும்.

தனிப்பட்ட அளவீட்டு மதிப்புகளை அளவீடு ஒன்றின் சராசரி மதிப்புடன் ஒப்பிடுவதன் மூலம் உங்கள் கணக்கின் செயல்திறனிலுள்ள ஏற்ற இறக்கங்களை அடையாளம் காணுவதற்கும் அளவீடுகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

அறிக்கையில் அளவீடுகள் எங்கே உள்ளன?

ஏற்கெனவே இருக்கும் அளவீடுகளைப் பார்க்க, விளக்கப்படப் பகுதிக்கு மேலேயுள்ள 'மாற்று' திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

அறிக்கையில் உள்ள அளவீடுகளுக்கான உதாரணம்.

அறிக்கையில் ஏற்கெனவே உபயோகத்திலிருக்கும் அளவீடுகள் அறிக்கை டேபிளில் நெடுவரிசைத் தலைப்புகளாகத் தோன்றும்.

காட்டப்படும் அளவீடுகளை மாற்றுதல்

ஏற்கெனவே இருக்கும் அளவீடுகளில் சில இயல்பாகக் காட்டப்படாது. உங்கள் அறிக்கைகளில் காட்டப்படுவதற்கு வெவ்வேறான அளவீடுகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது 'மாற்று' திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. "அளவீடுகளைத் தேர்ந்தெடுங்கள்" சாளரத்தில் உங்கள் அறிக்கையிலிருந்து சேர்க்கவோ அகற்றவோ விரும்பும் அளவீடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
    உதவிக்குறிப்பு: பட்டியலிலுள்ள அளவீடுகளைக் கண்டறிய தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.
  3. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அளவீடுகளும் தரவும் உங்கள் அறிக்கையில் தானாகவே காட்டப்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9113951504371531972
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false