அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பதிவுசெய்தலும் இயக்குதலும்

ஒன்றுக்கு மேற்பட்ட AdSense கணக்கு வேண்டுமென்றால்

AdSense கொள்கைகள் ஒரு வெளியீட்டாளருக்கு ஒரு கணக்கை மட்டுமே அனுமதிக்கின்றன. இருப்பினும், நீங்கள் பல விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்பினால், அதற்கான சில வழிகாட்டுதல்களைக் கீழே கொடுத்துள்ளோம்.

எனது Google கணக்கிற்கான உள்நுழைவுத் தகவலை மாற்ற வேண்டும்

இதைச் செய்ய, இரண்டு வழிகள் உள்ளன:

  • வேறொரு Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைதல்
    நிர்வாகிக்கான அணுகல் உங்களுக்கு இருந்தால், புதிய நிர்வாகியை அழைக்கலாம். புதிய நிர்வாகியாக உள்நுழைந்து, உங்கள் அசல் Google கணக்கின் உள்நுழைவை அகற்றலாம். கணக்கிற்கான அணுகலை நிர்வகித்தல் பற்றி மேலும் அறிக.
  • Google கணக்கின் தகவலில் திருத்தம் செய்தல்
    AdSenseஸை அணுக நீங்கள் பயன்படுத்தும் Google கணக்கில் திருத்தம் செய்வதன் மூலம் மின்னஞ்சல் முகவரி/உள்நுழைவுத் தகவலை மாற்றலாம்.
    கவனத்திற்கு: இது Gmail அல்லாத மின்னஞ்சல் முகவரிகளுக்கு மட்டுமே சாத்தியம். இந்த மாற்றமானது உங்கள் Google கணக்குடன் இணைக்கப்பட்ட எல்லாத் தயாரிப்புகளிலும் பிரதிபலிக்கும்.

எனது தற்போதைய கணக்கை அணுக முடியவில்லை

எங்களின் உள்நுழைவுப் பிழைதிருத்தி AdSense கணக்கில் உள்நுழையும்போது ஏற்படக்கூடிய பொதுவான சிக்கல்களைத் தீர்க்க உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படியிலும் நீங்கள் சந்திக்கும் பிரச்சனையைச் சரியாகக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளையோ கூடுதல் கேள்விகளையோ வழங்குவோம். வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவது, சரியான தீர்வு கிடைக்க உதவும்.

நான் கூடுதல் வலைதளங்களைச் சேர்க்க வேண்டும்

கூடுதல் வலைதளங்களைச் சேர்ப்பதற்கு உங்களின் தற்போதைய கணக்கையே பயன்படுத்தலாம். புதிய வலைதளத்தில் விளம்பரங்களைக் காட்டுவது எப்படி என அறிக.

எனது வணிகத்திற்கு தனியாக ஒரு கணக்கு வேண்டும்

உங்களிடம் ஒரு தனிப்பட்ட கணக்கு இருந்து நீங்கள் தனியாக ஒரு பிசினஸையும் நடத்தி வந்தால், அந்த பிசினஸிற்கு நீங்கள் வேறொரு கணக்கைத் திறக்கலாம். கணக்கின் வகை (தனிப்பட்டது அல்லது பிசினஸ்) சரியாகக் குறிக்கப்பட்டுள்ளதையும் கணக்கில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் (வரி, பணம் பெறுபவர் குறித்த தகவல்கள் உட்பட) பதிவுசெய்யப்பட்ட பிசினஸுக்கானது என்பதையும் உறுதிசெய்துகொள்ளுங்கள்.

அறிக்கையளிக்கும் சேனல்கள் கூடுதலாகத் தேவை

அதிகபட்சமாக, ஒரு தயாரிப்புக்கு 500 தனிப்பயன் சேனல்களையும், 500 URL சேனல்களையும் வழங்குகிறோம். URL சேனல்கள், உள்ளடக்கத்திற்கான AdSenseஸிற்கு மட்டுமே கிடைக்கின்றன.

ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?

சமூகத்திடம் கேளுங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4719152558993892660
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false