அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

விளம்பர யூனிட்கள்

ஃபீடில் வரும் விளம்பர யூனிட்டை உருவாக்குதல்

ஃபீடில் வரும் விளம்பர யூனிட்டை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன. உங்கள் பக்கத்தை ஸ்கேன் செய்து உங்களுக்கான விளம்பரத்தைத் தானாக உருவாக்குவது Googleளுக்கு மிகவும் விரைவான, எளிதான வழி. இதற்கு மாற்றாக ஃபீடில் வரும் விளம்பரத்தை நீங்களே சொந்தமாக உருவாக்கலாம்.

குறிப்பு: உங்கள் ஊட்டம் (Feed) முழுவதும் உரை மட்டுமே என்றால் ஃபீடில் வரும் விளம்பரத்தை நீங்களே உருவாக்கும் முறையைப் பயன்படுத்தவும்.
  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. விளம்பரங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விளம்பர யூனிட் அடிப்படையில் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஃபீடில் வரும் விளம்பரங்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  5. உங்கள் ஃபீடில் வரும் விளம்பரத்தை உருவாக்க விரும்பும் முறையைத் தேர்வுசெய்யவும்:

    விளம்பரத் தோற்றத்தை உருவாக்க Googleளை அனுமதித்தல் (பரிந்துரைக்கப்படுகிறது)

    1. உங்கள் ஊட்டம் இருக்கும் பக்கத்தின் URLலை உள்ளிடவும்.
    2. உங்கள் வலைதளத்தின் "மொபைல்" அல்லது "டெஸ்க்டாப்" பதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

      உங்களின் ஃபீடின் அடிப்படையில் ஃபீடில் வரும் விளம்பரத்தின் தோற்றத்தை உருவாக்குவோம். உங்கள் ஃபீடிற்கு மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகள் இருந்தால் ஒவ்வொரு பதிப்பிற்கும் தனித்தனியாக ஃபீடில் வரும் விளம்பரத்தை உருவாக்க வேண்டியிருக்கும்.

    3. பக்கத்தை ஸ்கேன் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
    4. இப்போது விளம்பரத்தின் மாதிரிக்காட்சி காட்டப்படும். இதில் உங்கள் வலைதளத்தின் ஸ்கிரீன்ஷாட்டுடன் அதில் தனிப்படுத்திக் காட்டப்பட்டுள்ள ஊட்டங்களையும் ஃபீடில் வரும் விளம்பரத்திற்கான மாதிரிக்காட்சியையும் பார்க்கலாம்.

      தொடங்குவதற்கு வசதியாக உங்கள் வலைதளத்தில் நாங்கள் கண்டறிந்த முதல் ஃபீடில் இருக்கும் இரண்டாவது ஃபீடின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஃபீடில் வரும் விளம்பரத்தை உருவாக்குவோம். உங்கள் பக்கத்தில் வேறொரு ஃபீடின் உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதன் தளவமைப்பு மற்றும் தோற்றத்துடன் பொருந்தக்கூடிய புதிய ஃபீடில் வரும் விளம்பரத்தைத் தானாக உருவாக்குவோம்.

      ஊட்டங்களுடன் இருக்கும் வேறொரு பக்கத்தை ஸ்கேன் செய்ய விரும்பினால்: அந்த URLலை உள்ளிடவும். "மொபைல்" அல்லது "டெஸ்க்டாப்" என்பதைத் தேர்ந்தெடுத்து மீண்டும் ஸ்கேன் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
    5. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    6. (விருப்பத்தேர்வு) உங்கள் ஃபீடுடன் பொருந்தும் வகையில் ஃபீடில் வரும் விளம்பரத்தை மேலும் பிரத்தியேகமாக்குவதற்கான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தவும். ஃபீடில் வரும் விளம்பர அமைப்புகள் பற்றி மேலும் அறிக.
    7. உங்கள் ஃபீடில் வரும் விளம்பர யூனிட்டுக்கு ஏற்கனவே பெயரிடவில்லையெனில் இப்போது பெயரிடவும்.
      அவற்றின் பெயர்களுடன் "சொந்த" அல்லது அதுபோன்ற வார்த்தையைச் சேர்க்குமாறுப் பரிந்துரைக்கிறோம், இதன் மூலம் இவற்றின் செயல்திறனைக் கண்காணிப்பது எளிதாக இருக்கும்.
    8. சேமித்து, குறியீட்டைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.

    நீங்களே சொந்தமாக விளம்பரத் தோற்றத்தை உருவாக்குதல்

    1. உங்கள் ஃபீடின் தோற்றத்திற்கும் உணர்வுக்கும் பொருத்தமான தளவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
    2. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. உங்கள் ஃபீடில் வரும் விளம்பர யூனிட்டுக்குப் பெயரிடவும்.
      அவற்றின் பெயர்களுடன் "சொந்த" அல்லது அதுபோன்ற வார்த்தையைச் சேர்க்குமாறுப் பரிந்துரைக்கிறோம், இதன் மூலம் இவற்றின் செயல்திறனைக் கண்காணிப்பது எளிதாக இருக்கும்.
    4. உங்கள் ஃபீடுடன் பொருந்தும்படி விளம்பரத் தோற்றத்தை அமையுங்கள். ஃபீடில் வரும் விளம்பர அமைப்புகள் பற்றியும் விளம்பரங்களுக்கான தோற்றத்தை அமைப்பது பற்றியும் மேலும் அறிய ஃபீடில் வரும் விளம்பரத்தைப் பிரத்தியேகமாக்குதல் என்பதைப் பார்க்கவும்.
      உங்கள் விளம்பரத்தில் பார்வையாளர்களைக் கிளிக் செய்ய வைப்பதற்குத் தந்திரம் எதையும் செய்யக்கூடாது. பயனர்களின் அனுபவத்தைப் பாதிக்காத வகையிலும் பயனரின் ஆர்வத்தைத் தடுக்காத விதத்திலும் விளம்பரத்தை உருவாக்குவதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.
    5. மாதிரிக்காட்சிப் பகுதியில் ஃபீடிர்கான பெட்டியின் அகலத்தை மாற்றுவதன் மூலம் வெவ்வேறு திரை அளவுகளில் விளம்பரம் எப்படித் தோன்றும் என்பதைச் சோதித்துப் பார்க்கவும். அகலத்தை மாற்ற இழுக்கும் ஹேண்டிலைப் பயன்படுத்தவும்.
      கவனத்திற்கு: ஃபீடில் வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் தானாகப் பொருந்தும் தன்மையுள்ளவை. அதாவது பார்க்கப்படும் சாதனத்திற்கேற்ப அளவைத் தானாகவே மாற்றிக்கொள்ளும். ஃபீடில் வரும் தானாகப் பொருந்தும் தன்மையுள்ள விளம்பரத்தின் அளவு பற்றி மேலும் அறிக.
    6. சேமித்து, குறியீட்டைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. ஃபீடில் வரும் விளம்பரக் குறியீட்டை நகலெடுத்து, வலைதளத்தில் உங்கள் ஃபீடின் HTML குறியீட்டின் உள்ளே ஒட்டவும். ஃபீடில் வரும் விளம்பரக் குறியீட்டை வைப்பது எப்படி என்பதைப் பற்றி அறிக.

    பக்கத்தில் விளம்பரங்கள் காட்டப்படுவதற்கு வழக்கமாக சில நிமிடங்கள் ஆகும், ஆனால் சில சமயங்களில் ஒரு மணி நேரம் வரை ஆகலாம்.

கவனத்திற்கு: உங்கள் ஃபீடில் வரும் விளம்பரத்தின் சில கூறுகள் (எ.கா., "விளம்பர" லேபிள்) மாதிரிக்காட்சிப் பகுதியில் தோன்றியதை விட வலைதளத்தில் சற்று வித்தியாசமாகத் தோன்றக்கூடும். உதாரணமாக உங்கள் ஃபீடில் வரும் விளம்பரத்திற்கான இடம், விளம்பரத்தை விடச் சிறியதாக இருப்பது. இந்தச் சூழ்நிலையில் உங்கள் பக்கத்தில் மறுசீராக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் பயனர் அனுபவத்தைப் பாதுகாக்கவும் விளம்பரத்தின் விரிவாகக்கூடிய பதிப்பு ஒன்றைக் காட்டுவோம்.

ஃபீடில் வரும் விளம்பர யூனிட்களின் செயல்திறனைக் கண்காணித்தல்

உங்கள் விளம்பர யூனிட்களுக்கான அறிக்கையைப் பார்ப்பதன் மூலம் ஃபீடில் வரும் விளம்பர யூனிட்களின் செயல்திறனைக் கண்காணிக்கலாம்:

  1. உங்கள் அறிக்கைகள் பக்கத்திற்கு செல்லவும்.
  2. விளம்பர யூனிட்கள் அறிக்கையைத் திறக்கவும்.
  3. ஃபீடில் வரும் விளம்பர யூனிட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. வடிகட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

    இப்போது, ஃபீடில் வரும் விளம்பர யூனிட்களின் செயல்திறன் தரவைப் பார்க்க முடியும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4285850123950473791
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false