அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடலுக்கான விளம்பரங்கள்

தேடல் விளம்பரங்கள் பற்றிய அறிமுகம்

தேடல் விளம்பரங்கள் என்பது உங்கள் வலைதளத்தின் தேடல் முடிவுப் பக்கங்கள் மூலம் வருமானம் ஈட்ட அனுமதிக்கும் தேடலுக்கான AdSense (AFS - AdSense for Search) அம்சமாகும். உங்கள் வலைதளத்தின் தேடல் பெட்டியில் பயனர்கள் தேடல் வினவல்களை உள்ளிட்டவுடன் அவர்களின் தேடல் வினவலுக்கு இலக்கிடப்பட்ட விளம்பரங்களை Google உங்கள் தேடல் முடிவுப் பக்கங்களில் காட்டும். இந்த விளம்பரங்களில் ஒன்றைப் பயனர் கிளிக் செய்த பிறகு தேடல் விளம்பரங்களுக்கான வருவாயை நீங்கள் பெறுவீர்கள்.

கவனத்திற்கு: உங்கள் வலைதளத்தில் ஏற்கெனவே தேடல் இன்ஜினைச் சேர்க்காமல் இருந்து, அதன் மூலம் உங்கள் வலைதளம் பலன் பெறலாம் என நீங்கள் நினைத்தால் Google வழங்கும் தேடல் இன்ஜினைச் சேர்ப்பது குறித்துப் பரிசீலனை செய்யுங்கள். இதன் மூலம் தேடல் அனுபவத்தையும் தேடல் விளம்பரங்கள் மூலம் வருவாயையும் பெறலாம்.

பலன்கள்

  • தேடல் விளம்பரங்கள் மூலமான வருவாயை அதிகரித்தல்: உங்கள் வலைதளத்தின் தேடல் முடிவுப் பக்கங்கள் மூலம் வருமானம் ஈட்ட உதவும் விதமாக, அதிகளவில் இலக்கிடப்பட்ட மற்றும் தொடர்புடைய விளம்பரங்களை வழங்கிட தேடல் வினவலைத் தேடல் விளம்பரங்கள் பயன்படுத்துகின்றன. உங்கள் பயனர்கள் இந்த விளம்பரங்களில் கிளிக் செய்யும்போது, தேடல் விளம்பரங்களுக்கான வருவாயை நீங்கள் பெறுவீர்கள்.
  • Google Search நெட்வொர்க்கிற்கான அணுகல்: தேடலுக்கான AdSense மூலம், Google Search நெட்வொர்க்கில் சேர்ந்துள்ள விளம்பரதாரரின் விளம்பரங்கள் மூலம் அனைத்துத் தேடல் விளம்பர பட்ஜெட்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள். Google Display Network மூலம் மட்டும் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க இது உங்களுக்கு உதவும்.
  • தனியுரிமைப் பாதுகாப்பு: உங்கள் தேடல் முடிவுப் பக்கங்களில் உள்ள விளம்பரங்கள் பயனர் உள்ளிட்ட தேடல் வினவலை இலக்கிடும். அசல் பயனர் தரவை அவை இலக்கிடாது.
  • தடையற்ற ஒருங்கிணைப்பிற்காகத் தோற்றத்தையும் காட்டப்படும் விதத்தையும் பிரத்தியேகமாக்குதல்: உங்கள் வலைதளத்தின் தோற்றத்திற்கும் அது காட்டப்படும் விதத்திற்கும் பொருந்தும் விதமாகத் தேடல் விளம்பரங்களின் தோற்றத்தைப் பிரத்தியேகமாக்கலாம். விளம்பர அளவு, வைக்குமிடம், வண்ணம், எழுத்து வடிவம் ஆகிய அனைத்தையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

தேடல் விளம்பரங்கள் எப்படிச் செயல்படுகின்றன?

உங்கள் வலைதளத்தில் தேடல் விளம்பரங்களைப் பயன்படுத்த உங்கள் AdSense கணக்கில் தேடல் தோற்றங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். சிறந்த செயல்திறன் மற்றும் பயனர் அனுபவத்திற்காக, உங்கள் தேடல் முடிவுப் பக்கங்களின் தோற்றத்துடனும் அவை காட்டப்படும் விதத்துடனும் பொருந்தும் விதமாக உங்கள் தேடல் விளம்பரங்களின் தோற்றத்தை அமைக்க தேடல் தோற்றங்கள் விருப்பத்தேர்வு உங்களை அனுமதிக்கிறது.

தேடல் தோற்றங்களைப் பயன்படுத்தத் தொடங்குதல்

நீங்கள் தேர்வுசெய்வதற்கான பல்வேறு தேடல் தோற்றத் தீம்களையும் பிரத்தியேகப்படுத்துவதற்கான பல்வேறு அமைப்புகளையும் AdSense கொண்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான தோற்றத்தையும் வடிவமைப்பையும் பயனர்களுக்கு நீங்கள் வழங்கலாம்.

தேடல் தோற்றங்களைப் பயன்படுத்தத் தொடங்க:

  1. ஒரு தேடல் தோற்றத்தை உருவாக்கவும்.
  2. உங்கள் தேடல் தோற்றத்திற்கான குறியீட்டைப் பெற்று உங்கள் வலைதளத்தில் தேடல் தோற்றத்தைப் பயன்படுத்தவும்.

    உங்கள் பக்கத்தின் பல்வேறு இடங்களில் உள்ள விளம்பரம் வைக்கும் பெட்டிகளில் பல்வேறு தேடல் விளம்பரங்களை வைக்கலாம். உதாரணமாக, பக்கத்தின் தேடல் முடிவுகளுக்கு மேற்புறத்திலும், வலது பக்கத்திலும், மத்தியிலும் அல்லது பக்கத்தின் இறுதிப் பகுதியிலும் தேடல் விளம்பரங்களை வைக்கலாம். உங்கள் தேடல் விளம்பரங்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வுசெய்துகொள்ளலாம். தேடல் விளம்பர அழைப்புகள் Googleளிடம் ஒரேயொரு செயல்திறன்மிக்க கோரிக்கையை வைத்து, உங்கள் பக்கத்தில் உள்ள விளம்பரம் வைக்கும் பெட்டிகள் அனைத்திற்குமான விளம்பரங்களைப் பெறும்.

கவனத்திற்கு: தேடல் விளம்பரங்களைக் காட்டும்போது பிரத்தியேகத் தேடல் விளம்பரங்கள் தொடர்பான கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்துகொள்ளவும்.
கவனத்திற்கு: மொபைல் ஆப்ஸில் தேடலுக்கான AdSenseஸை (AFS) பயன்படுத்த முடியாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3928415872323561396
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false