அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

உங்கள் வலைதளத்தில் விளம்பரங்களை அமைத்தல்

உங்களுக்காக விளம்பரங்களை அமைக்க Googleளை அனுமதிக்கலாம் அல்லது நீங்களே நேரடியாக விளம்பர யூனிட்களை அமைக்கலாம். #autoads #adunits

உங்கள் AdSense கணக்கு செயல்படுத்தப்பட்ட பிறகு, உங்கள் வலைதளத்தில் விளம்பரங்களை அமைக்கலாம். இதை இரண்டு வழிகளில் செய்யலாம்: தானியங்கு விளம்பரங்கள் அல்லது விளம்பர யூனிட்கள்.

தானியங்கு விளம்பரங்கள்

தானியங்கு விளம்பரங்கள் என்பவை AdSense வெளியீட்டாளர்கள் தங்கள் விளம்பரங்களை இயக்குவதற்கு உதவும் விரைவான மற்றும் எளிதான ஒரு வழியாகும்.

பின்வருபவை உங்களுக்கு வேண்டுமெனில் தானியங்கு விளம்பரங்களைத் தேர்வுசெய்யவும்:

  • ஆட்டோமேஷன்: எந்தெந்த விளம்பரங்களைக் காட்ட வேண்டும், அவற்றை எந்த இடத்தில் காட்ட வேண்டும் என்பதை Google கண்டறிந்து சொல்லும். இதனால் உங்கள் கவனம் முழுவதையும் உள்ளடக்கத்தை உருவாக்குவதிலேயே செலுத்தலாம்.
  • எளிமை: ஸ்விட்ச்சை ஆன் செய்வது மூலம் அனைத்து விளம்பரங்களையும் கட்டுப்படுத்தலாம்.
  • வசதி: மொபைல், டேப்லெட், டெஸ்க்டாப் ஆகியவற்றில் தானியங்கு விளம்பரங்கள் செயல்படுவதோடு உங்கள் பக்கங்களில் சிறந்த விளம்பரக் கவரேஜையும் வழங்கும்.

தானியங்கு விளம்பரங்களை அமைப்பது எப்படி என அறிக.

தானியங்கு விளம்பரங்களைப் பொருத்தவரையில் பின்வருபவை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்:

  • தானியங்கு விளம்பரங்கள் என்பவை தானாகவே செயல்படக்கூடியவை. எனவே உங்கள் விளம்பரங்களுக்கு மிகச் சிறந்த விளம்பரக் காட்சிப்படுத்துமிடங்களை Google தேர்ந்தெடுக்கும்.
  • தானியங்கு விளம்பரங்கள் சிறப்பாகச் செயல்பட்டு, சிறந்த பயனர் அனுபவத்தைக் கொடுக்க வாய்ப்புள்ளபோது மட்டுமே Google அவற்றைக் காட்டும்.

விளம்பர யூனிட்கள்

விளம்பர யூனிட்கள் என்பவை தங்கள் விளம்பரங்கள் எங்குக் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்பதில் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற விரும்பும் AdSense வெளியீட்டாளர்களுக்கானவை.

பின்வருவது உங்களுக்கு வேண்டுமெனில் விளம்பர யூனிட்களைத் தேர்வுசெய்யவும்:

  • கட்டுப்பாடு: வெவ்வேறான விளம்பர வகைகள், விளம்பர அளவுகளிலிருந்து தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கங்களில் அவற்றைக் காட்சிப்படுத்த விரும்பும் இடத்தில் கச்சிதமாக நிலைபடுத்தவும்.

விளம்பர யூனிட்டை உருவாக்குவது எப்படி என அறிக.

விளம்பர யூனிட்களைப் பொருத்தவரையில் பின்வருபவை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்:

  • விளம்பர யூனிட்கள் நேரடியாக அமைக்க வேண்டியவை, எனவே விளம்பரங்களைக் காட்ட விரும்பும் அனைத்துப் பக்கங்களிலும் அவற்றை அமைக்க மறக்காதீர்கள்.
  • விளம்பர யூனிட்களை எங்கு அமைக்கலாம் என்பதற்கு விதிகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் விளம்பரங்கள் AdSense திட்டக் கொள்கைகளுடன் இணங்குவதை உறுதிப்படுத்துவது உங்கள் பொறுப்பாகும்.
  • திரை ஓரத்தில் தோன்றும் விளம்பரங்கள், வின்யேட் விளம்பரங்கள் போன்ற சில விளம்பர வடிவங்கள் விளம்பர யூனிட்களுக்குக் கிடைக்காது.
உதவிக்குறிப்பு: நீங்கள் WordPress பயனரா? AdSense குறியீட்டைச் சேர்ப்பது தொடர்பான உதவியைப் பெறுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2058017142383602094
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false