அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தானியங்கு விளம்பரங்கள்

வினவல் அளவுருக்கள் எப்படித் தானியங்கு விளம்பரங்களுக்கான தொடர்புடைய தேடலைப் பாதிக்கின்றன?

உங்கள் உள்ளடக்கப் பக்க URLலில் பல்வேறு அளவுருக்களையோ டைனமிக் அளவுருக்களையோ சேர்த்தால், உங்கள் பக்கங்களில் தானியங்கு விளம்பரங்களுக்கான தொடர்புடைய தேடல் காட்டப்படுவது பாதிக்கப்படலாம். உங்கள் பக்கங்களில் தானியங்கு விளம்பரங்களுக்கான தொடர்புடைய தேடல் காட்டப்படாததற்கு இதுவே காரணமாக இருக்கக்கூடும் என நீங்கள் நினைத்தால், கீழுள்ள வழிகாட்டலைப் பின்பற்றுங்கள்.

தொடர்புடைய தேடல் வார்த்தைகள் உங்கள் வலைதளத்தில் காட்டப்படுவதற்கு முன்பு, சூழலுக்குத் தொடர்புடைய வகையிலான வார்த்தைப் பரிந்துரைகளை உருவாக்க முதலில் உங்கள் வலைதளப் பக்கங்களை Google கிரால் செய்ய வேண்டும். ஒரு வலைதளப் பக்கம் கிரால் செய்யப்படும் வரை, தொடர்புடைய தேடல் வார்த்தைகளை அந்தப் பக்கத்தில் எங்களால் காட்ட முடியாது.

டிராக்கிங் வேரியபிள்கள், பயனர் ஐடிகள், அமர்வு ஐடிகள் போன்ற வினவல் அளவுருக்களையோ பிற டைனமிக் அடையாளங்காட்டிகளையோ கொண்ட URLகள், பக்கத்தின் முக்கிய உள்ளடக்கத்தை மதிப்பிடுவதற்கான கிராலரின் திறனில் குறுக்கிடக்கூடும். இதனால் தொடர்புடைய தேடல் வார்த்தைகள் துல்லியமற்றவையாகவோ தொடர்பற்றவையாகவோ இருக்கக்கூடும்.

குறிப்பாக டைனமிக் அடையாளங்காட்டிகள், ஒரு பக்கம் கிரால் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை Google தீர்மானிப்பதைக் கடினமாக்கக்கூடும் அல்லது கண்டறியவே முடியாதபடி செய்யக்கூடும். அப்படி எங்களால் தீர்மானிக்க முடியாதபோது, தொடர்புடைய தேடல் வார்த்தைகளைக் காட்ட முடியாது. அதாவது, தானியங்கு விளம்பரங்களுக்கான தொடர்புடைய தேடல் மூலம் உங்கள் தளத்தில் பயனர்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதற்கும் வருமானம் ஈட்டுவதற்குமான வாய்ப்பை நீங்கள் இழக்கிறீர்கள்.

உங்கள் பக்கங்களில் தானியங்கு விளம்பரங்களுக்கான தொடர்புடைய தேடலின் பலன்களை அதிகரிக்க, பக்கத்தின் உள்ளடக்கம், தோற்றம் அல்லது செயல்பாட்டைக் கணிசமாகக் குறைக்காத டைனமிக் அளவுருக்களையோ மிகுதியான URL அளவுருக்களையோ பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு உங்களுக்கு வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு வருகையின்போதும் நிலையான URLலைக் கொண்டிருக்கும் உள்ளடக்கப் பக்கத்தில்தான் தானியங்கு விளம்பரங்களுக்கான தொடர்புடைய தேடல் சிறப்பாகச் செயல்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16727350972936487613
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false