அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

IABயின் உலகளாவிய தனியுரிமைப் பிளாட்ஃபார்மை ஆதரித்தல்

நிலையான ஒரு கட்டமைப்பு மூலம் அமெரிக்காவின் தனியுரிமைச் சட்டங்களுடன் இணங்க வெளியீட்டாளர்களுக்கு உதவுதல்
கவனத்திற்கு: 2024க்குப் பிறகு, GPP அமெரிக்க நேஷனல் ஸ்ட்ரிங்கை Google AdSense ஆதரிக்கும். 

Googleளுடன் பணியாற்றுவதற்கு வெளியீட்டாளர்களை IAB பல மாநிலத் தனியுரிமை ஒப்பந்தத்தில் (MSPA - Multi-State Privacy Agreement) கையொப்பமிடும்படி Google கூறாது. Ad Manager IAB தனியுரிமையின் பல மாநிலத் தனியுரிமை ஒப்பந்தத்தின் (MSPA - Multi-State Privacy Agreement) சான்றளிக்கப்பட்ட கூட்டாளர் திட்டத்தின் (CPP - Certified Partner Program) கீழ் சான்றளிக்கப்பட்டுள்ளது. MSPA சான்றளிக்கப்பட்ட கூட்டாளர்கள் MSPAவில் கையொப்பமிடாமல் MSPAக்கு உட்பட்ட பணப் பரிமாற்றங்களைச் செயல்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

GPP பயன்பாட்டை Google கேட்காது. மேலும் அமெரிக்க மாநிலத்தின் தனியுரிமைச் சட்டங்களுக்குத் தாங்கள் இணங்குவதை ஆதரிக்க வெளியீட்டாளர்கள் பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

IABயின் Tech Lab நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உலகளாவிய தனியுரிமைப் பிளாட்ஃபார்ம் (GPP - Global Privacy Platform) என்பது பயனர் தனியுரிமை ஒப்புதல் விருப்பத்தேர்வுகளைச் சேமித்து அனுப்புவதற்கான நிலையான கட்டமைப்பாகும். 

அமெரிக்கத் தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்குவதற்காக, கட்டமைப்பைப் பயன்படுத்த விரும்பும் வெளியீட்டாளர்களுக்கும் ஒப்புதல் மேலாண்மைப் பிளாட்ஃபார்ம்களுக்கும் (CMPs - Consent Management Platforms) GPPயை AdSense ஆதரிக்கிறது. பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டங்களைக் கொண்ட அமெரிக்க மாநிலங்களுக்கு, GPP அல்லது ஒப்புதல் மேலாண்மைப் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியிலோ யுனைடெட் கிங்டமிலோ இருக்கும் பயனர்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களுக்கு, சான்றளிக்கப்பட்ட ஒப்புதல் மேலாண்மை பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதன் மூலம் IAB ஐரோப்பா TCFஐ AdSense தொடர்ந்து பயன்படுத்தும். GPP மூலம் அனுப்பப்படும் TCF ஸ்ட்ரிங்குகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

GPPயைப் பயன்படுத்துவதற்காக ஜனவரி 2024ல் அமெரிக்கத் தனியுரிமை ஸ்ட்ரிங்கை IAB நிறுத்தியிருந்தாலும், இணையக் கூட்டாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு அமெரிக்கத் தனியுரிமை ஸ்ட்ரிங்கை AdSense தொடர்ந்து பயன்படுத்தும். அமெரிக்க மாநிலத்தின் தனியுரிமைச் சட்டத்திற்கு இணங்க, IAB கட்டமைப்பைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தால், வெளியீட்டாளர்களும் CMPகளும் அமெரிக்கத் தனியுரிமை ஸ்ட்ரிங்குக்குப் பதிலாக GPP ஸ்ட்ரிங்குகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

உலகளாவிய தனியுரிமைப் பிளாட்ஃபார்ம் விவரக்குறிப்புகள்

GPPயில் பின்வரும் அமெரிக்க மாநிலங்களின் ஸ்ட்ரிங்குகளை மட்டுமே AdSense ஏற்கும்: கலிஃபோர்னியா, விர்ஜினியா, கொலராடோ, கனெக்டிகட்

GPP ஆதரவின் ஒரு பகுதியாக அமெரிக்க நேஷனல், IAB கனடா TCF, அமெரிக்கத் தனியுரிமை ஸ்ட்ரிங், அமெரிக்க மாநிலங்கள் யூட்டா, IAB ஐரோப்பிய ஒன்றிய TCF பதிப்பு 2.2 ஆகியவற்றை AdSense ஏற்காது. 

IAB ஐரோப்பிய ஒன்றிய TCF பதிப்பு 2.0 விவரக்குறிப்புகளின் அடிப்படையில் IAB ஐரோப்பிய ஒன்றிய TC ஸ்ட்ரிங்குகள் உருவாக்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய, வெளியீட்டாளர்கள் தங்கள் CMP கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கலிஃபோர்னியா

பின்வரும் நிபந்தனைகள் ஏதேனும் பூர்த்திசெய்யப்பட்டால், கட்டுப்படுத்தப்பட்ட தரவுச் செயலாக்கத்தை (RDP - restricted data processing) Google தொடங்கும்:

  • நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்கள் விற்பனையிலிருந்து பயனர் விலகியுள்ளார்.
  • நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்கள் பகிர்தலிலிருந்து பயனர் விலகியுள்ளார்.

கலிஃபோர்னியாவிற்கான அமெரிக்க மாநிலங்களின் ஸ்ட்ரிங்கில் மேலிருக்கும் புலங்களை மட்டுமே Google படிக்கும்.

விர்ஜினியா, கனெக்டிகட், கொலராடோ

பின்வரும் நிபந்தனைகள் ஏதேனும் பூர்த்திசெய்யப்பட்டால், கட்டுப்படுத்தப்பட்ட தரவுச் செயலாக்கத்தை (RDP) Google தொடங்கும்:

  • நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்கள் விற்பனையிலிருந்து பயனர் விலகியுள்ளார்.
  • இலக்கிடப்பட்ட விளம்பரத்திற்காக நுகர்வோரின் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதிலிருந்து பயனர் விலகியுள்ளார்.

விர்ஜினியா, கனெக்டிகட், கொலராடோ ஆகியவற்றுக்கான அமெரிக்க மாநிலங்களின் ஸ்ட்ரிங்கில் மேலிருக்கும் புலங்களை மட்டுமே Google படிக்கும்.

உலகளாவிய தனியுரிமைப் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தும் வயது வராதோர்களுக்கான ஒப்புதல் விவரங்கள்

வயது வராதோர் மற்றும்/அல்லது சிறுவர்களை மையப்படுத்தும் விளம்பரங்களுக்கான கூடுதல் பரிசீலனைகள் தேவைப்படும் அமெரிக்க மாநிலத் தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்கும் வகையில் தொடர்புடைய ஒப்புதல் விவரங்களை அனுப்பும் திறனை உங்களுக்கு/உங்கள் CMPக்கு IABயின் உலகளாவிய தனியுரிமைப் பிளாட்ஃபார்ம் வழங்குகிறது. COPPA மற்றும் பிற தொடர்புடைய ஒழுங்குமுறைகளுடன் இணங்குவதை எளிதாக்க, வலைதளங்கள், ஆப்ஸ் மற்றும் சிறுவர்களை மையப்படுத்தும் உள்ளடக்கக் கோரிக்கைகளைக் குறியிடுவதற்கான எங்கள் கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்த வெளியீட்டாளர்களைப் பரிந்துரைக்கிறோம் (AdSense, AdMob மற்றும் Ad Manager).

கலிஃபோர்னியா

பின்வரும் நிபந்தனைகள் ஏதேனும் பூர்த்திசெய்யப்பட்டால் சிறுவர்களை மையப்படுத்தும் உள்ளடக்கத்திற்கான (TFCD) கோரிக்கைகள் குறியிடப்படும்:

  • 16 வயதிற்குட்பட்ட நுகர்வோர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்க ஒப்புதல் அல்லது ஒப்புதல் இல்லை
  • 16 வயதிற்குட்பட்ட நுகர்வோர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர ஒப்புதல் அல்லது ஒப்புதல் இல்லை

விர்ஜினியா, கொலராடோ

பின்வரும் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால் சிறுவர்களை மையப்படுத்தும் உள்ளடக்கத்திற்கான (TFCD) கோரிக்கைகள் குறியிடப்படும்:

  • சிறுவர் எனத் தெரிந்தவரிடம் பெறப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய தனிப்பட்ட தரவைச் செயலாக்க ஒப்புதல் அல்லது ஒப்புதல் இல்லை

கனெக்டிகட்

பின்வரும் நிபந்தனைகள் ஏதேனும் பூர்த்திசெய்யப்பட்டால் சிறுவர்களை மையப்படுத்தும் உள்ளடக்கத்திற்கான (TFCD) கோரிக்கைகள் குறியிடப்படும்:

  • சிறுவர் எனத் தெரிந்தவரிடம் பெறப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய தனிப்பட்ட தரவைச் செயலாக்க அனுமதிக்க ஒப்புதல் அல்லது ஒப்புதல் இல்லை
  • பின்வரும் நிபந்தனைகள் ஏதேனும் பூர்த்திசெய்யப்பட்டால், கட்டுப்படுத்தப்பட்ட தரவுச் செயலாக்கத்தை (RDP) கோரிக்கைகள் தொடங்கும்:
  • குறைந்தபட்சம் 13 வயது நிரம்பிய, ஆனால் 16 வயதுக்குட்பட்ட நுகர்வோர்களின் தனிப்பட்ட தரவை விற்க ஒப்புதல் இல்லை
  • இலக்கிடப்பட்ட விளம்பர நோக்கங்களுக்காகக் குறைந்தபட்சம் 13 வயது நிரம்பிய, ஆனால் 16 வயதுக்குட்பட்ட நுகர்வோர்களின் தனிப்பட்ட தரவைச் செயலாக்க ஒப்புதல் இல்லை.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2717521093930804282
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false