அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

Offerwall மெசேஜ்கள் குறித்த அறிமுகம் (பீட்டா)

இந்தத் தகவல்கள் Offerwall பீட்டா திட்டத்தில் பங்கேற்கும் வெளியீட்டாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்

Offerwall (பீட்டா)  மெசேஜ்கள் உங்கள் வலைதளங்களில் உள்ள வருமானம் ஈட்டுதல் வாய்ப்புகளைப் பல்வகைப்படுத்துவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் வலைதளத்தை ஆதரிக்கவும், உங்கள் உள்ளடக்கத்திற்கான அணுகலை வழங்கவும் ரிவார்டு விளம்பரத்தைப் பார்க்கும்படி உங்கள் வலைதளப் பார்வையாளர்களுக்கு Offerwall மெசேஜ் காட்டப்படும்.

தனியுரிமை & மெசேஜிங் பிரிவில் Offerwall மெசேஜை உருவாக்கலாம். அதோடு எந்தப் பக்கங்களில் அது தோன்ற வேண்டும் என்பதையும் வலைதளத்திற்குத் திரும்ப வரும் பார்வையாளர்களுக்கு அடிக்கடி எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதையும் வரையறுக்கலாம்.

தானியங்கு விளம்பரங்களில் இருந்து தனியுரிமை & மெசேஜிங் பிரிவிற்கு Offerwall கட்டுப்பாடுகள் நகர்த்தப்பட்டுள்ளன. Offerwall பீட்டாவின் பகுதியாக நீங்கள் முன்பு இருந்திருந்தால், தனியுரிமை & மெசேஜிங் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள உங்கள் Offerwall மெசேஜ்களை இப்போது பார்ப்பீர்கள். அங்கே அவற்றைப் பிரத்தியேகமாக்கலாம், வெளியிடலாம், வெளியிடுவதை நிறுத்தலாம்.

மெசேஜின் கட்டமைப்பு

உங்கள் மெசேஜைப் பார்க்கும்போது பயனர்களுக்குப் பல திரைகளைக் கொண்டு Offerwall மெசேஜ் காட்டப்படும். தனியுரிமை & மெசேஜிங் பிரிவில் மெசேஜ் உருவாக்கும் கருவியில் அவற்றின் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம் மற்றும் அவற்றை உள்ளமைக்கலாம்:

  • Offerwall: உங்கள் Offerwall மெசேஜின் முதன்மைத் திரை. மெசேஜ் உருவாக்கும் கருவியில் நீங்கள் இயக்கியுள்ள பயனர் தேர்வுகளின் அறிமுகத்தைக் காட்டுகிறது. மேலும் உங்கள் வலைதளத்தின் உள்ளடக்கத்தைத் தொடர்ந்து அணுகுவதற்கு அவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யும்படி வலைதளப் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.
    • லோகோ: உங்கள் வலைதளத்தின் லோகோ. லோகோவை இங்கே காட்ட வேண்டுமெனில் உங்கள் வலைதளத்தில் லோகோவைச் சேர்க்கவும்.
    • பயனர் தேர்வு விருப்பங்கள்: பயனர்களுக்கு உங்கள் Offerwall காட்டும் பயனர் தேர்வுகளின் பட்டியல். உங்கள் வலைதளத்தில் உள்ள உள்ளடக்கத்தை அணுகும் விதத்தை வலைதளப் பார்வையாளர்கள் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது.
      கவனத்திற்கு: AdSense Offerwallகளுக்கு "விளம்பரத்தைக் காட்டு" என்பது மட்டுமே பயனர் தேர்வு விருப்பமாகத் தற்போது காட்டப்படுகிறது.
  • பயனர் தேர்வுத் திரைகள்: Offerwallலில் உள்ள பயனர் தேர்வு விருப்பத்தைக் கிளிக் செய்துவிட்டு பயனர் தேர்வை நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்கும்போது வலைதளப் பார்வையாளர்களுக்குக் காட்டப்படும் திரைகளாகும் (உதாரணமாக, ரிவார்டு விளம்பரத்தைப் பார்ப்பதன் மூலம்). நீங்கள் இயக்கியுள்ள பயனர் தேர்வு விருப்பங்களின் அடிப்படையில் மெசேஜ் உருவாக்கும் கருவியின் மாதிரிக்காட்சியில் கிடைக்கக்கூடிய பயனர் தேர்வுத் திரைகள் காட்டப்படும்.
  • நன்றி: பயனர் தேர்வு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை நிறைவுசெய்த வலைதளப் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் உறுதிப்படுத்தல் மெசேஜ்.

ஆதரிக்கப்படும் மொழிகள்

நீங்கள் பல மொழிகளில் மெசேஜ்களை உருவாக்கலாம். எந்த மொழியில் உங்கள் மெசேஜ்கள் காட்டப்படும் என்பது அவற்றைக் காட்டும்போது பயனரின் சாதனத்திலுள்ள அமைப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

Offerwall மெசேஜ்களை ஆதரிக்கும் மொழிகள்

அரபிக்
பெங்காலி
பல்கேரியன்
சீனம் (சீனா)
குரோஷியன்
செக்
டேனிஷ்
டச்சு
ஆங்கிலம் (யூகே)
ஆங்கிலம் (யூஎஸ்)
எஸ்தோனியன்
ஃபிலிப்பினோ
ஃபின்னிஷ்
ஃபிரெஞ்சு
ஜெர்மன்
ஜெர்மன் (சுவிட்சர்லாந்து)
கிரேக்கம்
ஹீப்ரு
இந்தி
ஹங்கேரியன்
ஐஸ்லாண்டிக்
இந்தோனேஷியன்
இத்தாலியன்
ஜாப்பனீஸ்
கொரியன்
லாட்வியன்
லிதுவேனியன்
மராத்தி
நார்வேஜியன்
பெர்சியன்
போலிஷ்
போர்ச்சுகீஸ் (பிரேசில்)
போர்ச்சுகீஸ் (போர்ச்சுகல்)
ரோமானியன்
ரஷ்யன்
சிங்களம்
ஸ்லோவாக்
ஸ்லோவேனியன்
ஸ்பானிஷ்
ஸ்பானிஷ் (லத்தீன் அமெரிக்கா)
ஸ்வீடிஷ்
தமிழ்
தெலுங்கு
தாய்
டர்கிஷ்
உக்ரைனியன்
உருது
வியட்னாமீஸ்

பயனர் மெசேஜ்களைக் காட்ட AdSense குறியீட்டுடன் உங்கள் வலைதளத்தைக் குறியிடுதல்

Offerwall மெசேஜ்கள் உட்பட பயனர் மெசேஜ்களைக் காட்ட உங்கள் வலைதளத்திற்கு AdSense குறியீடு தேவை. பயனர்களுக்கு மெசேஜ்களைக் காட்ட உங்கள் வலைதளத்தில் AdSense குறியீட்டை பொருத்தி இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10692211074570079306
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false