அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

விளம்பரம் காட்சிப்படுத்துமிடத்திற்கான சிறந்த நடைமுறைகள்

உங்கள் வலைதளத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும்போது பயனர் அனுபவத்தையும் AdSense திட்டக் கொள்கைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கான சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்களின் பயனர்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்

உங்கள் தளத்தின் உள்ளடக்கத்தை ஒழுங்கமைத்து உங்கள் தளத்திற்குச் செல்வதை எளிதாக்குங்கள். உங்கள் விளம்பரங்களை எங்கே காட்சிப்படுத்துவது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது உங்களிடமே நீங்கள் கேட்க வேண்டிய சில கேள்விகள்:

  • எனது வலைதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பயனர் என்ன செய்ய முயற்சிக்கிறார்?
  • ஒரு குறிப்பிட்ட பக்கத்தைப் பார்க்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்?
  • அவர்கள் தங்கள் கவனத்தை எங்கே மையப்படுத்துவதாகத் தோன்றுகிறது?
  • பயனரின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் இந்தப் பகுதியில் நான் எப்படி விளம்பரங்களை ஒருங்கிணைக்க முடியும்?
  • எனது பக்கத்தைச் சுத்தமாகவும், குழப்பமில்லாததாகவும், படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகவும் நான் எவ்வாறு வைத்திருக்க முடியும்?

நீங்களே ஒரு பயனரைப் போல யோசியுங்கள், அப்போது உங்கள் பக்கத்தையும் (மற்றும் உங்கள் விளம்பரத்தைக் காட்டும் இடத்தையும்) ஒரு புத்தம் புதிய கோணத்தில் உங்களால் காண முடியும். பயனர்கள் தாங்கள் தேடுவதை உங்கள் தளத்தில் எளிதில் கண்டுபிடிக்க முடியுமானால் உங்கள் தளத்திற்கே அவர்கள் மீண்டும் வருவார்கள்.

உங்கள் சார்பாக விளம்பரங்களைக் காட்சிப்படுத்த Googleளை அனுமதியுங்கள்

உங்கள் வலைதளத்தில் தானியங்கு விளம்பரங்களை இயக்கலாம். தானியங்கு விளம்பரங்கள் உங்கள் விளம்பரங்களைத் தானாகவே சரியான இடத்தில் பொருத்திக் காட்டி மேம்படுத்துவதால் உங்கள் நேரம் மிச்சமாகிறது. தானியங்கு விளம்பரங்கள் குறித்து மேலும் அறிக.

உங்களின் சொந்த விளம்பரங்களைக் காட்சிப்படுத்துகிறீர்கள் எனில்

பயனர்களை ஈர்க்கும்படியான உள்ளடக்கத்தைக் காட்டுங்கள்

உங்கள் விளம்பரங்களைப் பயனர்கள் விரும்பும் உள்ளடக்கத்திற்கு அருகில் காட்சிப்படுத்தவும். தளத்தில் அவர்கள் தேடும் விஷயங்களை எளிதாகக் கண்டறிவதை உறுதிசெய்துகொள்ளவும். உதாரணமாக, உங்கள் தளம் பதிவிறக்கங்களை வழங்குகிறதெனில், பதிவிறக்க இணைப்புகள் பக்கத்தின் மேல் பகுதியில் எளிதாகத் தோன்றும்படி இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் சமமாக நிர்வகிப்பது எப்படி என்பது குறித்த கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு, எங்கள் 'Inside AdSense' வலைப்பதிவில் Content is king என்ற இடுகையைப் பாருங்கள். 

விளம்பரங்களை விளம்பரங்களாகவே காட்டுதல்

உங்கள் விளம்பரங்களுடன் படங்களைச் சீரமைப்பதையும் விளம்பரங்களின் அருகிலுள்ள உள்ளடக்கத்திற்கு அவ்விளம்பர வடிவமைப்பை வழங்குவதையும் தவிர்க்கவும். இது போன்ற முறைகளில் விளம்பரங்களைக் காண்பிப்பதை எங்கள் திட்டக் கொள்கைகள் அனுமதிப்பதில்லை.

விளம்பரங்களை விளம்பரங்களாகவே குறிப்பிடுதல்

பயனர்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய லேபிள்களையும் தலைப்புகளையும் தவிர்ப்பதில் கவனமாக இருக்கவும். "விளம்பரங்கள்" அல்லது "விளம்பரதாரர் இணைப்புகள்" என்று மட்டுமே விளம்பர யூனிட்களுக்கு லேபிளிட வேண்டும். மேலும் மெனு, வழிசெலுத்தல் அல்லது பதிவிறக்க இணைப்புகளுடன் பயனர்கள் குழப்பிக் கொள்ளக்கூடிய இடங்களில் விளம்பரங்களைக் காட்டுவதைத் தவிர்க்கவும்.

விளம்பர அளவுகளை மேம்படுத்துதல்

மொபைலில் உங்கள் விளம்பரங்களின் அளவை Googleளால் தானாகவே மேம்படுத்த முடியும். விளம்பர யூனிட் அளவுகள் உங்களின் பக்கங்களில் உள்ள விளம்பரக் குறியீட்டை மாற்றாமலே தகுதியான மொபைல் டிராஃபிக்கில் சிறப்பாகச் செயல்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. "விளம்பர அளவுகள்" மேம்படுத்துதல் அமைப்புகள் குறித்து மேலும் அறிக.

குறைவான விளம்பரங்களைக் காட்டுவதே சிறந்த பயனர் அனுபவத்தை அளிக்கும்

உங்கள் பக்கங்களின் உள்ளடக்கத்தைவிட அதிகமான விளம்பரங்களை வைக்காத பட்சத்தில், உங்கள் வலைதளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் விளம்பர யூனிட்கள், இணைப்பு யூனிட்கள் மற்றும்/அல்லது தேடல் பெட்டிகளின் கலவையை வைத்துக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு எங்கள் விளம்பர இருப்பின் மதிப்பு தொடர்பான கொள்கையைப் பார்க்கவும். எனினும் உங்கள் வலைதளப் பக்கத்தில் அதிகப்படியான விளம்பரங்களை வைப்பது அந்தப் பக்கத்தைக் குழப்பமானதாகக் காட்டக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தாங்கள் தேடியது கிடைக்கவில்லை எனில் பயனர்கள் வேறு தளத்திற்கு எளிதில் மாறிவிடுவார்கள்.

உங்கள் வலைதளத்தை மதிப்பாய்வு செய்யுங்கள்

உங்களின் தளத்தை ஆய்வுசெய்து முதல் முறையாக உங்களின் தளத்திற்கு வரும் பயனர்கள் எவ்வாறு உணர்வார்கள் என்பதை உணர்ந்து செயல்படவும். டெம்ப்ளேட் பில்டரைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் "Google வழங்கும் விளம்பரங்கள்" அல்லது "AdChoices" லேபிள் உள்ளிட்ட விளம்பரங்கள் சரியாகத் தோன்றுகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்.

இந்த இரண்டு கேள்விகளை உங்களிடமே கேளுங்கள்:

  • எனது வலைதளத்தின் உள்ளடக்கத்தை எளிதாகக் கண்டுபிடிக்க முடியுமா?
  • எனது உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் எளிதாக வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?

இந்த இரு கேள்விகளுக்குமான பதில் 'ஆம்' எனில் நீங்கள் விளம்பரங்களைச் சரியாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தம்

 

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
46477958209835087
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false