அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

உங்கள் வலைதளத்தையும் விளம்பரங்களையும் மேம்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்

மேம்படுத்துதல் என்பது உங்கள் வலைதளத்தின் தரத்தையும் டிராஃபிக்கையும் AdSense விளம்பரங்களின் செயல்திறனையும் மேம்படுத்துவதற்காகச் செய்யப்படும் மாற்றங்களைக் குறிக்கும். மேம்படுத்துவது தொடர்பான உங்கள் குறிக்கோள்களைப் பொறுத்து, உங்கள் தளத்தையோ விளம்பரச் செயலாக்கத்தையோ மாற்றியமைப்பதை இது குறிப்பிடக்கூடும். மேம்படுத்துவதால் உங்கள் AdSense வருவாயை அதிகரிக்கலாம், அதிக டிராஃபிக்கைப் பெறலாம், பயனர்கள் உங்கள் தளத்தை இன்னும் எளிதாகப் பயன்படுத்தலாம்.

உங்கள் விளம்பரச் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சிறந்த வலைதளங்களை உருவாக்குவதற்குமான உதவிக்குறிப்புகளைக் கீழே கண்டறியலாம்.

விளம்பரச் செயலாக்கத்திற்கான உதவிக்குறிப்புகள்

  • தானியங்கு விளம்பரங்களைப் பயன்படுத்திப் பாருங்கள்: தானியங்கு விளம்பரங்கள் மூலம் உங்கள் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தி பிசினஸை வளர்க்கலாம். இவற்றை எளிதாக அமைக்கலாம். விளம்பர எண்ணிக்கை (இந்த அம்சம் மூலம் உங்கள் பக்கங்களில் காட்டப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கையை நீங்களே கட்டுப்படுத்தலாம்) போன்ற மேம்பட்ட பிரத்தியேகமாக்கல் அம்சங்களை இவை வழங்கும். தானியங்கு விளம்பரங்கள் வெவ்வேறு விளம்பர வடிவங்களையும் வழங்குவதால் உங்கள் தளத்தில் விளம்பர அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கலாம்:
    • உங்கள் பக்கத்தில் விளம்பர ஸ்லாட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால் பக்கத்திற்கேற்ற வடிவத்தைப் பயன்படுத்துங்கள்.
    • உங்கள் வலைதளத்தில் பிற உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்க விரும்பினால் அதில் மல்டிபிளெக்ஸ் விளம்பரங்களை இயக்குங்கள்.
    • மொபைலிலும் டெஸ்க்டாப்பிலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய வின்யேட் விளம்பரங்கள், திரை ஓரத்தில் தோன்றும் விளம்பரங்கள் போன்ற வடிவங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். இவை உங்கள் விளம்பரங்களின் பார்வைத்தன்மையை அதிகரிக்க உதவும்.
  • AdSense கணக்கு அமைப்புகளைப் பரிசோதித்துப் பாருங்கள்: உங்கள் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய பிரத்தியேகப் பரிந்துரைகளைக் கண்டறிய, உங்கள் கணக்கிலுள்ள மேம்படுத்துதல் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
  • உங்கள் விளம்பர அமைப்புகளை மேம்படுத்த பரிசோதனைகளை இயக்குங்கள். பரிசோதனைகள் மூலம் உங்கள் விளம்பர அமைப்புகளில் ஒன்றை அதன் மாறுபட்ட அமைப்புடன் ஒப்பிட்டு எது சிறப்பாகச் செயல்படுகிறது என்று பார்க்கலாம். விளம்பர அமைப்புகளை உள்ளமைப்பது குறித்த தெளிவான முடிவுகளை எடுக்கவும் உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் பரிசோதனைகள் உதவும். உங்கள் விளம்பர வடிவங்களுக்கான அமைப்புகளில் பரிசோதனைகளை இயக்கி அதன் மூலம் வருவாயிலோ பயனர் அனுபவத்திலோ தானாகவே மேம்பாடுகளைச் செய்ய Googleளை அனுமதிக்கலாம்.
  • பார்வைத்தன்மை மூலம் உங்கள் விளம்பரங்களை மேலும் பலருக்குக் காட்டலாம். உங்கள் தளத்தில் பார்க்கக்கூடிய விளம்பர இம்ப்ரெஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். இதன் மூலம் அதிகமான கிளிக்குகளையும் கூடுதல் வருவாயையும் பெற முடியும். சிறப்பாகச் செயல்படும் உங்கள் விளம்பர யூனிட்கள் 70 சதவீதத்துக்கும் அதிகமான பார்வைத்தன்மை விகிதத்தை அடைய, பார்வைத்தன்மைக்கான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்: பக்கத்தின் நீளத்தைக் குறையுங்கள், பக்கத்தின் மேல் பகுதியில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துங்கள், செங்குத்து விளம்பர அளவுகளைப் பயன்படுத்துங்கள் (குறிப்பாக டெஸ்க்டாப்பில்), வரவேற்பைப் பெறும் உள்ளடக்கத்தைத் தொடர்ந்து உருவாக்குங்கள், பக்கத்தின் வேகத்தை அதிகரியுங்கள்.
  • நிலையான அளவுள்ள உங்கள் விளம்பர யூனிட்களின் விளம்பரக் குறியீட்டை மாற்றுவதன் மூலம் அவற்றைத் தானாகப் பொருந்தும் தன்மையுள்ள விளம்பர யூனிட்களாக மாற்றுங்கள். உங்கள் விளம்பரக் குறியீட்டை மாற்ற முடியவில்லையெனில் விளம்பர அளவுகளை மேம்படுத்துவதற்கான அமைப்பை இயக்குங்கள்.
  • தடுக்க வேண்டிய அவசியமில்லாத விளம்பரங்கள் எதையும் நீங்கள் தடுக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். விளம்பரதாரர் URLகள், விளம்பர நெட்வொர்க்குகள், பொதுவான அல்லது உணர்வுப்பூர்வ வகைகள் ஆகியவற்றை அதிகளவில் தடுத்தால் விளம்பரச் செயல்திறன் குறையலாம். ஏனெனில், குறைவான விளம்பரதாரர்களே உங்கள் விளம்பர இருப்பை ஏலமெடுப்பார்கள். விளம்பரங்களை அனுமதிப்பதற்கும் தடுப்பதற்குமான வழிகாட்டியில் மேலும் அறிக.
  • உங்கள் வலைதளத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும்போது பயனர் அனுபவத்தையும் AdSense திட்டக் கொள்கைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். விளம்பரம் காட்சிப்படுத்துமிடத்திற்கான சிறந்த நடைமுறைகளைப் பாருங்கள். சிறந்த விளம்பரத் தரநிலைகளையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். தங்கள் விளம்பர அனுபவ அறிக்கையைப் பார்க்குமாறும் அதில் சிக்கல்கள் எதுவும் கண்டறியப்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்யுமாறும் AdSense வெளியீட்டாளர்களுக்கு மிகவும் வலியுறுத்துகிறோம்.

வலைதளத்தை மேம்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்

  • உங்கள் வலைதளத்தின் மொபைல் பதிப்பை மேம்படுத்துங்கள். அதிகரிக்கும் ஸ்மார்ட்ஃபோன் உபயோகத்தால், நிலையான இணைய இணைப்பு மூலம் வெளியீட்டாளர்கள் தங்கள் பயனர்களுடன் இணைவதற்கான பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 'பல திரை' அடிப்படையிலான அணுகுமுறை மூலம், அதிகளவிலான பார்வையாளர்களை அடையவும் அதன் மூலம் நீண்ட காலத்திற்கு அதிக வருவாயைப் பெறவும் இந்த வாய்ப்புகள் வழிவகுக்கலாம். கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு மொபைல் வலைக்கான மேம்படுத்துதல்களைப் பார்க்கவும்.
  • AMP தளத்தை உருவாக்குங்கள்: AMPயை முதன்மையாகக் கொண்ட வலைதளத்தை உருவாக்குவதன் மூலம் பக்கம் விரைவாக ஏற்றப்படுவது, மொபைலில் சிறந்த பயனர் அனுபவம், அதிக ஒட்டுமொத்த டிராஃபிக் போன்ற அதிகச் செயல்திறன்களைப் பெறலாம்.
  • உங்கள் வலைதளப் பக்கத்தின் வேகத்தை அறிந்திடுங்கள்: உங்கள் பக்கத்தின் வேகத்தைப் பார்க்க, பக்கத்தின் வேகம் பற்றிய புள்ளிவிவரங்களுக்கான Googleளின் கருவியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.
  • டிராஃபிக் உத்தியை உருவாக்குங்கள்: உங்கள் வலைதள டிராஃபிக்கை எவ்வாறு அதிகரித்து மேம்படுத்துவது என்பது குறித்த டிராஃபிக் தொடர்பான உதவிக்குறிப்புகளைப் பாருங்கள்.
  • உங்கள் தளத்திற்கான 'தேடலில் மேம்படுத்துதல்' செயலாக்கத்தைப் பற்றி அறிவது பயனளிக்கும். எங்கள் SEO ஆரம்பநிலை வழிகாட்டியைப் பாருங்கள்.
  • பயனர் அனுபவத்தின் தரத்தை மேம்படுத்துவதே இணையத்திலுள்ள எந்தவொரு தளத்தின் நீண்ட கால வெற்றிக்கும் முக்கியக் காரணமாகும். நீங்கள் வணிக உரிமையாளராகவோ மார்க்கெட்டிங் நிபுணராகவோ டெவெலப்பராகவோ இருந்தால், உங்கள் வலைதள அனுபவத்தை அளவிடவும் அதை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் வலைதளத்தின் முக்கியமான விவரங்கள் உதவும். உங்கள் தற்போதைய பகுப்பாய்வுக் கருவியின் மூலம் வலைதளத்தின் முக்கியமான விவரங்களை எப்படி அளவிடுவது என்பதை அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17892202962304747722
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false