அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

கொள்கைகள்

Google வெளியீட்டாளர் கொள்கைகளையும் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளையும் புரிந்துகொள்ளுதல்

வெளியிடும் உள்ளடக்கத்தின் மூலம் வெளியீட்டாளர்கள் வருமானம் ஈட்டுவதற்கும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள மற்றும் பொருத்தமான தயாரிப்புகளையும் சேவைகளையும் விளம்பரதாரர்கள் வழங்குவதற்கும், அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான இலவச இணையச் சேவை கிடைக்க Google உதவுகிறது. விளம்பரச் சூழலமைப்பில் பயனர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு வருமானம் ஈட்டும் உள்ளடக்கத்திற்கான வரம்புகளை அமைக்க வேண்டியது அவசியம்.

அனைத்து வெளியீட்டாளர்களும் எங்கள் கொள்கைகளுக்கு இணங்க வேண்டுமென்பதால் அவற்றைக் கவனமாகப் படிக்கவும். இந்தக் கொள்கைகளுக்கு இணங்காமல் இருக்கும்பட்சத்தில் எந்த நேரத்திலும் உங்கள் வலைதளத்திற்கான விளம்பரச் சேவையை நிறுத்தவோ உங்கள் கணக்கை முடக்கவோ எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. கணக்கு முடக்கப்படும் பட்சத்தில் AdSense திட்டத்தில் தொடர்ந்து பங்கேற்கும் தகுதியை இழப்பீர்கள்.

எங்களின் ஆன்லைன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி இங்கே வெளியிடப்படும் கொள்கைகளை இன்றைய தேதி வரை தெரிந்து வைத்திருப்பதும் அவற்றுக்கு இணங்குவதும் உங்களின் பொறுப்பாகும்.

Google Publisher Policies and Restrictions Explained

இந்தக் கட்டுரையில்:

Google வெளியீட்டாளர் கொள்கைகள் என்றால் என்ன?

Google விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் உள்ளடக்கம் மூலம் வருமானம் ஈட்டுகிறீர்கள் எனில் Google வெளியீட்டாளர் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும். இங்கே உள்ளடக்கம் என்பது உங்கள் பக்கத்திலோ ஆப்ஸிலோ இருக்கும் அனைத்தையுமே குறிக்கிறது, இவற்றில் கருத்துப் பிரிவுகள், பிற வலைதளங்கள் அல்லது ஆப்ஸுக்கான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் போன்ற பயனர் உருவாக்கிய உள்ளடக்கமும் அடங்கும். கொள்கை மீறல் தொடர்பான உள்ளடக்கத்தைக் கொண்டு லாபம் பெற முயல்வதாலும் இந்தக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவதாலும் உங்கள் உள்ளடக்கத்தில் காட்டப்படும் விளம்பரங்களை Google தடுக்கவோ உங்கள் கணக்கை இடைநிறுத்தவோ முழுமையாக நிறுத்திவிடவோ வாய்ப்புள்ளது.

உங்களின் Google வெளியீட்டாளர் தயாரிப்புகளின் உபயோகத்தை நிர்வகிக்கும் பிற கொள்கைகளுடன் சேர்த்து கூடுதலாக இந்தக் கொள்கைகளும் பொருந்தும்.

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் என்றால் என்ன?

குறிப்பிட்ட விளம்பரதாரர்களிடம் இருந்து வரும் விளம்பரங்களைப் பெறுவதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ள உள்ளடக்கத்தை Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் கண்டறியும். இங்கே உள்ளடக்கம் என்பது உங்கள் பக்கத்திலோ ஆப்ஸிலோ இருக்கும் அனைத்தையுமே குறிக்கிறது. இவற்றில் பிற வலைதளங்கள் அல்லது ஆப்ஸுக்கான விளம்பரங்களும் இணைப்புகளும் அடங்கும்.

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளின் கீழ் வரும் உள்ளடக்கத்தின் மூலம் வருமானம் ஈட்டுவது கொள்கை மீறலாகக் கருதப்படாது. அதற்குப் பதிலாக ஒவ்வொரு விளம்பரத் தயாரிப்பு அல்லது விளம்பரதாரர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அதில் காட்டப்படும் விளம்பரங்களைப் பொருத்தமான விதத்தில் கட்டுப்படுத்துவோம். இதன் விளைவாகச் சில சமயங்களில் எந்த விளம்பரதாரர்களும் உங்கள் இருப்பில் உள்ளவற்றை ஏலம் எடுக்காமலும் இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் காட்டப்படாமலும் போகலாம்.

Google Ads, அங்கீகரிக்கப்பட்ட வாங்குநர்கள், DV360, ஒதுக்கீடுகள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு மூலங்களிலிருந்து நாங்கள் விளம்பர வாங்குநர்களைக் கொண்டுள்ளோம். எனவே இத்தகைய பிற விளம்பரதாரர்கள் சிலரிடமிருந்து குறைவான விளம்பரங்களையே நீங்கள் பெறக்கூடும், ஆனால் Google Ads (முன்னதாக AdWords) இந்தக் கட்டுப்பாடுகள் லேபிளிடப்பட்டுள்ள உள்ளடக்கத்தில் விளம்பரங்களைக் காட்டாது.

எனவே Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட உள்ளடக்கத்தை வருமானம் ஈட்டுவதற்காகத் தேர்வுசெய்யும்போது, பிற கட்டுப்படுத்தப்படாத உள்ளடக்கத்திற்குப் பெறும் விளம்பரங்களை விட இதில் குறைவான விளம்பரங்களையே பெறுவீர்கள்.

உங்களின் Google வெளியீட்டாளர் தயாரிப்புகள் உபயோகத்தை நிர்வகிக்கும் பிற கொள்கைகளுடன் சேர்த்து கூடுதலாக இந்தக் கட்டுப்பாடுகளும் பொருந்தும்.

Google வெளியீட்டாளர் கொள்கைகளுக்கும் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?

Google வெளியீட்டாளர் கொள்கைகள் எந்தவிதமான வெளியீட்டாளர் தயாரிப்புகளின் மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியாத உள்ளடக்க வகைகளைக் குறிப்பிடுகின்றன. சட்டவிரோத உள்ளடக்கம், ஆபத்தான அல்லது இழிவுபடுத்தக்கூடிய உள்ளடக்கம், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் போன்ற பலவற்றுக்கு எதிரான கொள்கைகளும் இதில் அடங்கும். இத்தகைய உள்ளடக்கத்தில் விளம்பரங்களைக் காட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இதற்கு மாறாக Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் புகையிலை, போதை மருந்துகள் போன்ற உள்ளடக்க வகைகளைக் குறிப்பிடுகின்றன. இவை கொள்கையை மீறாவிட்டாலும் சில விளம்பரதாரர்களுக்குப் பிடிக்காத வகையில் இருக்கக்கூடும். இதனால் கொள்கை மீறல்களை வெளியீட்டாளர்கள் பெற மாட்டார்கள், எனினும் உள்ளடக்கம் இருப்புக் கட்டுப்பாடாக லேபிளிடப்படும். தேவையை விளம்பரதாரர்களே தீர்மானிப்பதால் குறைவான விளம்பரங்களே கிடைக்கக்கூடும் அல்லது சில சமயங்களில் விளம்பரங்களே கிடைக்காது.

விளம்பரச் சேவையைப் பாதிக்கக்கூடிய சிக்கல்களை நான் எங்கே பார்க்கலாம்?

உங்கள் வலைதளங்களில் தற்போதுள்ள அனைத்து அமலாக்கங்களையும் கொள்கை மையம் காட்டுகிறது. அமலாக்கங்களால் அனைத்து விளம்பரங்களையும் தடுக்கவோ (உதாரணமாக, “விளம்பரச் சேவையை முடக்குதல்”) விளம்பரதாரர்கள் இருப்பில் உள்ளவற்றை ஏலம் கோருவதை (உதாரணமாக, தடைசெய்யப்பட்ட கோரிக்கை) கட்டுப்படுத்தவோ முடியும்.

உள்ளடக்கத்தில் உள்ள பல்வேறு சிக்கல்களின் காரணமாக நீங்கள் அமலாக்கங்களைப் பெறக்கூடும்:

  • Google வெளியீட்டாளர் கொள்கை மீறல்கள் சரிசெய்யப்பட வேண்டும். "விளம்பரச் சேவையை முடக்குதல்" அல்லது "தடைசெய்யப்பட்ட கோரிக்கை" மூலம் கொள்கை மீறல்களைத் தீர்க்கும் நடவடிக்கைகள் அமலாக்கப்படுகின்றன.
  • Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் கொள்கை மீறல்கள் அல்ல, எனவே உங்கள் உள்ளடக்கத்தையோ விளம்பரக் கோரிக்கைகளையோ மாற்றத் தேவையில்லை. எனினும் வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளைக் கொண்ட உள்ளடக்கம் "கட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கையை" பெறும்.
உதவிக்குறிப்பு: அமலாக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதைத் தெரிந்துகொள்ள, கொள்கை மையத்தில் "கட்டாயம் சரிசெய்ய வேண்டும்" என்ற நெடுவரிசையைப் பார்க்கவும். கொள்கை மீறல் காரணமாக அமலாக்கம் ஏற்பட்டிருந்தால் "ஆம்" என்றும், வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டிருந்தால் "இல்லை" என்றும் நெடுவரிசையில் இருக்கும்.

Google வெளியீட்டாளர் கொள்கை மீறலை எவ்வாறு சரிசெய்யலாம்?

  1. கொள்கை மையத்தை அணுகவும். உங்கள் வலைதளங்கள், வலைதளப் பிரிவுகள், பக்கங்கள் அல்லது ஆப்ஸில் விளம்பரங்கள் தோன்றுவதைத் தடுக்கும் சிக்கல்கள் குறித்த விரிவான தகவல்களையும் விளம்பரச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான படிநிலைகளையும் தேவையான மாற்றங்களைச் செய்தபிறகு மதிப்பாய்வுகளுக்குக் கோரிக்கை வைப்பதற்கான வழிமுறைகளையும் இங்குப் பெறலாம். பாதிப்புக்குள்ளான உங்கள் வலைதளங்கள் குறித்த மேலோட்டப்பார்வையைக் கொள்கை மையத்தின் பிரதானப் பக்கம் வழங்குகிறது.
  2. "கட்டாயம் சரிசெய்ய வேண்டும்" என்ற நெடுவரிசை "ஆம்" என இருந்தால் உங்களுடைய வலைதளங்களில் ஒன்றோ, வலைதளப் பிரிவுகள் அல்லது பக்கங்களில் ஒன்றோ திட்டக் கொள்கைகளுடனும் Google வெளியீட்டாளர் கொள்கைகளுடனும் இணங்கவில்லை என்பதால் அமலாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால் அந்தப் பக்கம் கொள்கையை மீறுகிறது என்று அர்த்தம். வலைதளத்தின் மீதோ வலைதளப் பிரிவின் மீதோ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால் அதில் உள்ள பல்வேறு பக்கங்கள் கொள்கையை மீறுகின்றன என்று அர்த்தம். அவ்வாறு நடக்கும்போது முழு வலைதளத்தையோ வலைதளப் பிரிவையோ சரிபார்த்து எங்கள் கொள்கைகளுடன் இணங்குவதற்கான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
  3. உங்கள் வலைதளத்திலோ வலைதளப் பிரிவிலோ பக்கங்களிலோ உள்ள கொள்கை மீறல்களைச் சரிசெய்த பிறகு மதிப்பாய்வைக் கோரலாம்.

    மாறாக, கொள்கை மீறல் உள்ள வலைதளங்களிலோ வலைதளப் பிரிவுகளிலோ பக்கங்களிலோ விளம்பரங்கள் வழங்குவதை நிறுத்த விரும்பினால் அவற்றிலிருந்து AdSense விளம்பரக் குறியீட்டை அகற்றலாம். கொள்கை மீறல்கள் கொள்கை மையத்திலிருந்து 7-10 நாட்களுக்குள் தானாகவே அகற்றப்படும்.

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளை எவ்வாறு சரிசெய்யலாம்?

  1. கொள்கை மையத்தை அணுகவும். உங்கள் வலைதளங்கள், வலைதளப் பிரிவுகள் அல்லது பக்கங்களில் விளம்பரங்கள் தோன்றுவதைத் தடுக்கும் சிக்கல்கள் குறித்த விரிவான தகவல்களையும் விளம்பரச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான படிநிலைகளையும் தேவையான மாற்றங்களைச் செய்தபிறகு மதிப்பாய்வுகளுக்குக் கோரிக்கை வைப்பதற்கான வழிமுறைகளையும் இங்குப் பெறலாம்.
  2. "கட்டாயம் சரிசெய்ய வேண்டும்" என்ற நெடுவரிசையில் "இல்லை" என இருந்தால் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளின் வரம்பிற்குள் வரும் உள்ளடக்கம் உங்கள் வலைதளத்தில் உள்ளது என்று அர்த்தம். இந்த வகை உள்ளடக்கத்தை வருமானம் ஈட்டத் தேர்வுசெய்யலாம் என்றபோதிலும் அனைத்து விளம்பரதாரர்களும் ஏலத்தில் பங்கேற்க முடியாது என்பதால் உங்களுக்குக் குறைவான விளம்பரங்களே கிடைக்கக்கூடும்.
  3. உங்கள் வலைதளத்திலோ வலைதளப் பிரிவிலோ பக்கங்களிலோ ஏதேனும் வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளை நீங்கள் சரிசெய்தால் மதிப்பாய்வுக்குக் கோரலாம். மாறாக, உங்கள் பக்கங்களில் விளம்பரச் சேவையை நிறுத்த விரும்பினால் AdSense விளம்பரக் குறியீட்டை அவற்றிலிருந்து அகற்றலாம். அவை 7-10 நாட்களுக்குள் கொள்கை மையத்திலிருந்து தானாகவே அகற்றப்படும்.

Google வெளியீட்டாளர் கொள்கைகள் மற்றும் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் தொடர்பான பொதுவான கேள்விகள்

Google வெளியீட்டாளர் கொள்கைகள் மற்றும் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகள் தொடர்பான சில பொதுவான கேள்விகள் இங்கே:

கொள்கை தொடர்பான கட்டுப்பாடுகளைப் பெற்றுள்ளேன், எனினும் கொள்கை மையத்தில் "கட்டாயம் சரிசெய்ய வேண்டும்" எனும் சிக்கலாக இது காட்டப்படவில்லை, இதற்கு என்ன அர்த்தம்?

"கட்டாயம் சரிசெய்ய வேண்டும்" என்ற நெடுவரிசையில் "இல்லை" என இருந்தால் Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளின் வரம்பிற்குள் வரும் உள்ளடக்கம் உங்கள் வலைதளத்தில் உள்ளது என்று அர்த்தம். Google விளம்பரங்கள், Authorized Buyers, DV360, ஒதுக்கீடுகள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு விளம்பரதாரர்களில் இருந்தும் வாங்குபவர்களை நாங்கள் கொண்டுள்ளோம். எனவே இந்த வகை உள்ளடக்கம் மூலம் வருமானம் ஈட்டுவதை நீங்கள் தேர்வுசெய்யும்போது பிற விளம்பரதாரர்களிடமிருந்து சிலவற்றிலிருந்து குறைவான விளம்பரங்களையே நீங்கள் பெறக்கூடும், ஆனால் Google Ads (முன்னதாக AdWords) இந்தக் கட்டுப்பாடுகள் லேபிளிடப்பட்டுள்ள உள்ளடக்கத்தில் விளம்பரங்களைக் காட்டாது.

கட்டுப்படுத்தப்பட்ட பக்கத்தில் தொடர்ந்து விளம்பரங்களைக் காட்ட விரும்பினால் (எ.கா, Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளின் கீழ்) எனது கணக்கு இடைநிறுத்தப்படவோ நீக்கப்படவோ வாய்ப்பு உள்ளதா?

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளின் கீழ் வரும் உள்ளடக்கத்தின் மூலம் வருமானம் ஈட்டுவது கொள்கை மீறலாகக் கருதப்படாது, அதற்குப் பதிலாக மேலே குறிப்பிட்டுள்ளபடி அந்த உள்ளடக்கத்தில் விளம்பரப்படுத்துதலை நாங்கள் கட்டுப்படுத்துவோம். எனவே Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட உள்ளடக்கத்தை வருமானம் ஈட்டுவதற்குத் தேர்வுசெய்ய முடியும் என்றாலும் முழுவதும் இணங்கிய பிற உள்ளடக்கத்திற்குக் கிடைப்பதை விடக் குறைவான விளம்பர வருவாயே கிடைக்கக்கூடும்.

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளை மீறும் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ள எனது பக்கத்தில் விளம்பரப்படுத்துதலை விளம்பரதாரர்கள் ஏன் தேர்வுசெய்ய மாட்டார்கள்?

Google வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள உள்ளடக்க வகைகள் விளம்பரதாரர்கள் மறுபரிசீலனை செய்யமுடியாமலோ அவர்களின் பிராண்டோடு நல்ல வகையில் தொடர்புப்படுத்த முடியாத வகையிலோ இருக்கலாம், இதன் காரணமாக நாங்கள் அவர்களையே முடிவுசெய்ய அனுமதிக்கிறோம். எங்கள் விளம்பரதாரர்கள் தேர்வுசெய்வதற்காகப் பல்வேறு வகைகள் உள்ளன, எனினும் சிலரே உணர்வுப்பூர்வ வகைகளைத் தேர்வுசெய்வார்கள். இதனால் கிடைக்கும் முடிவு என்னவெனில் கட்டுப்பாடுடையது என லேபிளிடப்பட்ட உள்ளடக்கம் மூலம் குறைவான வருமானமே ஈட்ட முடியும் அல்லது வருமானம் ஈட்ட முடியாது, எனினும் இது கொள்கை மீறல் அல்ல.

பக்க நிலை அமலாக்கத்தைப் பெற்ற பிறகு என்னுடைய உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு மதிப்பாய்வைக் கோரியுள்ளேன். தற்போது புதிதாக "உள்ளடக்கம் இல்லை" என்ற கொள்கை மீறலைப் பெற்றுள்ளேன். இந்த மீறல்களைச் சரிசெய்யப் பரிந்துரைக்கப்படும் செயல்கள் யாவை?

நாங்கள் செய்யும் அனைத்தும் எங்கள் வெளியீட்டாளர்களையும் பயனர்களையும் விளம்பரதாரர்களையும் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை ஆகும். கொள்கை இணக்கமற்ற உள்ளடக்கத்தைப் பக்கங்களிலிருந்து நீக்க நீங்கள் முடிவு செய்தால் தொடர்புடைய விளம்பரக் குறியீட்டையும் அந்தப் பக்கத்திலிருந்து அகற்ற வேண்டும், விளம்பரங்கள் வெற்றிடத்திற்கு அடுத்ததாக வழங்கப்படாமல் இருக்க இது உதவும்.

உங்கள் வலைதளத்தில் உள்ள பக்கங்களில் ஏதேனும் கொள்கை மீறல்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய முடியாமல் போகலாம் என்பது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் எங்கள் விளம்பரதாரர்களுக்கும் பயனர்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருப்பதால் அவர்களை இந்தச் சூழலமைப்பில் நம்பிக்கையுடன் வைத்திருக்க நாங்கள் எங்கள் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

மிகத் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் தணிக்கை செய்வதற்காக வெளியீட்டாளர்களின் தளங்களிலுள்ள உள்ளடக்கம் எதையும் நாங்கள் நீக்குவதில்லை. கொள்கை இணக்கமற்ற பக்கங்களிலுள்ள எங்களின் விளம்பரக் குறியீட்டை மட்டுமே அகற்றக் கோருகிறோம்.

நான் சரிசெய்ய விரும்பாத கட்டுப்பாடுகளை என்னால் மறைக்க/அகற்ற முடியுமா? குறிப்பிட்ட பக்கங்களில் பழைய கட்டுப்பாடுகளையோ புதிய கட்டுப்பாடுகளையோ நான் தொடர்ந்து பார்க்க விரும்பவில்லை.

கொள்கை மீறல்களையும் வெளியீட்டாளர் கட்டுப்பாடுகளையும் கண்டறிந்து நிர்வகிக்க, கொள்கை மையத்தில் உள்ள வடிப்பானையும் பதிவிறக்க விருப்பங்களையும் பயன்படுத்த முடியும்:

  • குறிப்பிட்ட வலைதளங்களையோ வலைதள நிலையையோ அமலாக்கத் தேதிகளை மட்டுமோ பார்க்க வடிப்பானை கிளிக் செய்யவும்.
  • மீறல்கள் உள்ள அனைத்துப் பக்கங்களுக்கான அல்லது பிரிவுகளுக்கான CSV ஃபைலை அனைத்து வலைதளங்களுக்கும் சேர்த்தோ தனித்தனியாகவோ பதிவிறக்க ‘பதிவிறக்கு’ Download என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3327299058179658646
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false