உங்கள் படங்களை Google அல்லாத சேவைக்கு நகலெடுத்தல்

காப்புப் பிரதி எடுப்பதற்காகவோ வேறொரு சேவையில் பயன்படுத்துவதற்காகவோ, உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள படங்கள், ஆல்பங்கள், விளக்கங்கள் ஆகியவற்றின் நகலை நீங்கள் நகர்த்தலாம்.

முக்கியம்: படங்களை நீங்கள் நகர்த்தியபிறகு உங்கள் Google கணக்கில் இருந்து அவை நீக்கப்படாது. உங்கள் படங்களை நீக்குதல், உங்கள் கணக்கில் இருந்து ஒரு Google சேவையை நீக்குதல், உங்கள் Google கணக்கை நீக்குதல் போன்றவற்றை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆதரிக்கப்படும் பட ஃபைல் வகைகள்

இந்த ஃபைல் வகைகளை நகர்த்தலாம்:

  • JPG
  • PNG

ஆதரிக்கப்படாத பட ஃபைல்களும் வீடியோ ஃபைல்களும் நகர்த்தப்படாது.

படி 1: Google Photosஸைத் தேர்ந்தெடுத்தல்

Google Takeoutடில் Photos முகப்பை நகர்த்து என்பதற்குச் செல்லவும் அல்லது இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

  1. Google கணக்கு டாஷ்போர்டிற்குச் செல்லவும்.
  2. “உங்கள் Google சேவைகள்” என்பதற்குக் கீழ் உள்ள Photos அதன் பிறகு மூன்று புள்ளி மெனு மேலும் அதன் பிறகு தரவை நகர்த்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2: உங்கள் படங்களின் நகலை எங்கு நகர்த்த விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்தல்

  1. "டெலிவரி முறை" என்பதற்குக் கீழுள்ள, கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow தேர்ந்தெடுக்கவும்.
  2. படங்களின் நகலை எங்கு நகர்த்த விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதன் பிறகு கணக்குகளை இணைத்து ஏற்றத்தை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. படிகளைப் பின்பற்றி உங்கள் கணக்கை இணைத்தபிறகு படங்களை நகர்த்தவும். இவற்றில் நீங்கள் உள்நுழைய வேண்டும்:
    • உங்கள் Google கணக்கு
      உதவிக்குறிப்பு:  உங்கள் படங்களில் உள்ள இருப்பிடத் தகவல்களையும் நகர்த்த விரும்பினால் "Google Photos லைப்ரரியில் உள்ள படங்களும் வீடியோக்களும் எடுக்கப்பட்ட இடத்தைக் காட்டு” என்ற செக்பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்கள் படங்கள் நகர்த்தப்படும் நிறுவனத்துடனான உங்கள் கணக்கு

உங்கள் படங்கள் நகலெடுக்கப்பட்டதும்:

  • புதிய சேவையில் உள்ள படங்களுக்கான இணைப்பை மின்னஞ்சலில் பெறுவீர்கள்.
  • உங்கள் படங்களை நீங்கள் எந்தச் சேவைக்கு நகர்த்தினீர்களோ அதை உங்கள் Google கணக்கு இனி அணுக முடியாது. இருப்பினும், சேவையின் அமைப்புகளில் அது தொடர்ந்து காட்டப்படலாம். உங்கள் Microsoft அல்லது Flickr கணக்கில் காட்டாத வகையில் உங்கள் Google கணக்கை நீங்கள் அகற்றலாம்.
  • படங்களை நீங்கள் எந்தச் சேவைக்கு நகர்த்தினீர்களோ அதில் படங்கள் தனிப்பட்டவையாக அமைக்கப்படும். உங்கள் படங்களின் தெரிவுநிலையை அந்தச் சேவையில் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
  • உங்கள் படங்களை நீங்கள் மீண்டும் நகர்த்தினால், படங்களின் புதிய நகல் உருவாக்கப்படும். நீங்கள் முதலில் நகர்த்தியவற்றின் நகல்கள் அதில் இருக்கலாம்.

சில படங்கள் ஏன் நகர்த்தப்படவில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள்

இந்தக் காரணங்களால் உங்கள் படங்கள் அனைத்தும் நகர்த்தப்படாமல் இருக்கலாம்:

  • சில படங்கள் ஆதரிக்கப்படாத ஃபைல் வகைகளைக் கொண்டிருக்கலாம்.
  • படங்களை எந்தக் கணக்கிற்கு நகர்த்தினீர்களோ அதில் போதிய இடமில்லாமல் இருக்கலாம்.
  • படங்கள் முழுமையாக நகர்த்தப்படுவதற்கு முன்பே செயல்பாடு ரத்துசெய்யப்பட்டிருக்கலாம்.

படங்கள் நகர்த்தப்படுவதை ஆதரிக்காத கணக்கு வகைகள்

இந்தச் சேவையைத் தற்போது இவற்றுடன் பயன்படுத்த முடியாது:

நகர்த்தப்படாத படத் தரவு

படத்தில் சேர்க்கப்பட்ட கருத்துகள், நேரடியாகத் திருத்தப்பட்ட இருப்பிடத் தகவல்கள் போன்ற தரவுத்தகவல்களைத் தற்போது நகர்த்த முடியாது.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5521051051091273460
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false