மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் Googleளின் மிக வலிமையான கணக்குப் பாதுகாப்பைப் பெறுதல்

Googleளின் வலிமையான கணக்குப் பாதுகாப்பைப் பெற மேம்பட்ட பாதுகாப்புத் திட்டத்தில் பதிவுசெய்யலாம்.

ஆன்லைனில் குறி வைத்துத் தாக்கப்படும் அளவுக்கு ஆபத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் பரிந்துரைக்கப்படுகிறது. பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் பிரச்சாரப் பணியாளர்கள், பிசினஸ் முன்னோடிகள், IT நிர்வாகிகள், முக்கியமான ஃபைல்கள் அல்லது பாதுகாக்கவேண்டிய தகவல்கள் உள்ள Google கணக்கைப் பயன்படுத்துபவர்கள் இதில் அடங்குவர்.

மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் எப்படிச் செயல்படுகிறது?

ஆன்லைனில் குறி வைத்துத் தாக்கப்படுவதில் இருந்து மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் பாதுகாக்கிறது.

உங்கள் கணக்கை அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து காக்கிறது

மின்னஞ்சல்கள், ஆவணங்கள், தொடர்புகள், மற்ற தனிப்பட்ட Google தரவு போன்ற உங்களின் Google தரவைப் பாதுகாக்க, உள்நுழையும்போது மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்திற்குப் பாதுகாப்பு விசைகள் தேவைப்படுகின்றன. ஹேக்கரிடம் உங்கள் பயனர்பெயரும் கடவுச்சொல்லும் இருந்தாலும்கூட பாதுகாப்பு விசை இல்லாமல் அவர்களால் உள்நுழைய முடியாது.

உதவிக்குறிப்பு: கம்ப்யூட்டர், உலாவி, சாதனம் ஆகியவற்றில் முதன்முறையாக உள்நுழைய உங்களுக்குப் பாதுகாப்பு விசை தேவை. நீங்கள் உள்நுழைந்தபடியே இருந்தால் அடுத்த முறை உள்நுழையும்போது பாதுகாப்பு விசையைப் பயன்படுத்தும்படி கேட்கப்படாமல் இருக்கலாம்.

தீங்கிழைக்கும் பதிவிறக்கங்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது

பதிவிறக்கங்களில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் கூடுதல் சரிபார்ப்புகளைச் செயல்படுத்துகிறது. தீங்கிழைக்கக்கூடிய ஃபைலைப் பதிவிறக்கும்போது அதுகுறித்து உங்களுக்குத் தெரியப்படுத்தும் அல்லது பதிவிறக்கத்தைத் தடைசெய்யும். சரிபார்க்கப்பட்ட ஸ்டோர்களில் உள்ள ஆப்ஸை மட்டுமே உங்கள் Android ஃபோனில் பயன்படுத்த முடியும்.

உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது

அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க Google ஆப்ஸையும் சரிபார்க்கப்பட்ட மூன்றாம் தரப்பு ஆப்ஸையும் மட்டுமே உங்கள் அனுமதியுடன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் அனுமதிக்கும்.

உங்கள் கணக்கை அணுக உங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஹேக்கர்களையும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் தடுக்கிறது: யாரேனும் உங்கள் கணக்கை மீட்டெடுக்க முயன்றால் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க கூடுதல் நடவடிக்கைகளை மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் மேற்கொள்கிறது.

மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தை இயக்குதல்

தகுதியான ஃபோனில் இருக்கும் உள்ளமைந்த பாதுகாப்பு விசையைப் பயன்படுத்தி மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தை உடனடியாக இயக்கலாம். உங்களிடம் தகுதியான ஃபோன் இல்லையெனில் முதலில் பாதுகாப்பு விசைகளை வாங்கி அதன்பிறகு மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தில் பதிவுசெய்யலாம்.

நீங்கள் வாங்கிய 2 பாதுகாப்பு விசைகள் மூலம்

பாதுகாப்பு விசைகள் உங்களுக்குக் கிடைத்ததும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தில் நீங்கள் பதிவுசெய்யலாம். ஒரு முதன்மைக் குறியீடு, பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க ஒரு காப்புப் பிரதி குறியீடு என 2 விசைகளை வாங்குவது நல்லது.

  1. நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களுடன் இணங்கும் பாதுகாப்பு விசைகளை வாங்கவும்.
  2. ஏற்கெனவே இதைச் செய்யவில்லையெனில், இருபடிச் சரிபார்ப்பை இயக்கவும்.
  3. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றி மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தை இயக்கவும்.
உதவிக்குறிப்பு: iPhone, iPad ஆகியவற்றில் பாதுகாப்பு விசைகளைப் பயன்படுத்தி உங்கள் Google கணக்கில் உள்நுழைய அந்தச் சாதனங்களில் Google Smart Lock ஆப்ஸைப் பதிவிறக்க வேண்டும்.

பொதுவான கேள்விகளுக்குப் பதில்களைப் பெறுதல்

மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் குறித்து மேலும் அறிக. இதில் இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது, சிக்கல்களைச் சரிசெய்வது எப்படி என்பது போன்ற விவரங்களும் உள்ளன.

மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் உங்களுக்கு ஏற்றதா எனத் தீர்மானித்தல்

மேம்பட்ட பாதுகாப்பு என்பது Googleளின் வலுவான பாதுகாப்பு அம்சமாகும். இதன் மூலம் உங்கள் கணக்கிற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது:

  • எந்தவொரு புதிய சாதனத்தில் உள்நுழையவும் உங்களிடம் பாதுகாப்பு விசை இருக்க வேண்டும்.
  • மின்னஞ்சலைப் படிக்க நீங்கள் Gmailலைப் பயன்படுத்தலாம். உங்கள் Google கணக்கின் மூலம் iOS Mail ஆப்ஸைப் பயன்படுத்த குறியீட்டையும் உருவாக்கலாம்.
  • உங்கள் மின்னஞ்சல்கள், Google Drive ஆகியவற்றில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய தரவிற்கான அணுகல் தேவைப்படும் சில ஆப்ஸிலும் சேவைகளிலும் Google கணக்கை உங்களால் பயன்படுத்த முடியாது. இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட Google தரவிற்கான அணுகல் ஹேக்கர்களுக்குக் கிடைக்காது. iOS, Mozilla Thunderbird போன்றவற்றில் உள்ள உங்கள் Gmail, பிற Google கணக்குத் தரவு ஆகியவற்றை Appleளின் Mail, Contacts, Calendar ஆகியவை மூலம் அணுக தற்காலிகக் குறியீட்டை நீங்கள் உருவாக்கலாம்.
  • உங்கள் கணக்கிற்கான அணுகலை நீங்கள் இழந்துவிட்டால் கணக்கை மீட்டெடுப்பதற்குக் கூடுதல் படிகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் இல்லாமல் உங்கள் கணக்கைப் பாதுகாத்தல்

மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் உங்களுக்கு ஏற்றதாக இல்லை என்றாலோ பாதுகாப்பு விசைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலோ கூட உங்கள் கணக்கை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற நீங்கள் நடவடிக்கைகளை எடுக்கலாம்.
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6640254268745679810
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false