கணக்கு மீட்டெடுப்பு வழிமுறைகளை நிறைவுசெய்வதற்கான உதவிக்குறிப்புகள்

உங்கள் Google கணக்கில் உள்நுழைய முடியவில்லை என்றால் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி மீண்டும் உள்நுழையவும்:

  1. கணக்கு மீட்டெடுப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. வழிமுறைகளை நிறைவுசெய்யும்போது, கீழே உள்ளவற்றில் உங்களால் முடிந்தளவு அதிக உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

உதவிக்குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில கேள்விகள் காட்டப்படாமல் இருக்கலாம்.

நீங்கள் ஏற்கெனவே உங்கள் கணக்கை மீட்டெடுக்க முயன்று, “இந்தக் கணக்கு உங்களுடையதுதான் என்பதை Googleளால் சரிபார்க்க முடியவில்லை” என்ற மெசேஜைப் பெற்றிருந்தாலும் மீண்டும் முயலலாம்.

முடிந்தளவு அதிகமான கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்

கேள்விகளைத் தவிர்க்காதிருக்க முயற்சித்திடுங்கள். ஒரு கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால் அதை விடுத்து அடுத்த கேள்விக்குச் செல்லாமல் முடிந்தவரை சிந்தித்து சரியானதாக இருக்க வாய்ப்புள்ள பதிலை வழங்கவும். தவறான பதில்களால் கணக்கு மீட்டெடுப்புச் செயலாக்கத்தில் இருந்து வெளியேற்றப்படமாட்டீர்கள்.

பரிச்சயமான சாதனத்தையும் இருப்பிடத்தையும் பயன்படுத்துங்கள்

முடிந்தால்:

  • உள்நுழைய நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கம்ப்யூட்டரையோ மொபைலையோ டேப்லெட்டையோ பயன்படுத்தவும்
  • நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் அதே உலாவியை (Chrome, Safari போன்றவை) பயன்படுத்தவும்
  • வீடு, அலுவலகம் போன்று வழக்கமாக உள்நுழையும் இடங்களில் இருந்து உள்நுழையவும்

கடவுச்சொற்களைத் துல்லியமாக வழங்குங்கள்

துல்லியம்தான் முக்கியம். எனவே கடவுச்சொற்களை டைப் செய்யும்போது பிழை இல்லாமலும் பெரிய, சிறிய எழுத்துகள் சரியாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவும்.

கடவுச்சொற்கள்

கடைசியாக நீங்கள் பயன்படுத்திய, உங்கள் நினைவில் உள்ள கடவுச்சொல்லை வழங்கும்படி கேட்டால் உங்கள் நினைவில் இருக்கும் மிகச் சமீபத்திய கடவுச்சொல்லை வழங்கவும்.

  • நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய கடவுச்சொல் நினைவில் இல்லையென்றால்: நினைவில் இருக்கும் முந்தைய கடவுச்சொல்லை உள்ளிடவும். எவ்வளவு சமீபத்தியதாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது.
  • நினைவிலுள்ள முந்தைய கடவுச்சொற்கள் எதையும் சரியானது என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்றால்: முடிந்தவரை சிந்தித்து சரியாக இருக்க வாய்ப்புள்ள கடவுச்சொல்லை வழங்கவும்.

உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை வழங்குங்கள்

உங்களால் தற்போது அணுக முடிகின்ற ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்குமாறு கேட்கப்பட்டால், உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள ஒரு மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும். சில உதாரணங்கள்:

  • நீங்கள் மீண்டும் உள்நுழைய உதவும் மீட்பு மின்னஞ்சல் முகவரி. பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பப்படுகின்றன.
  • மாற்று மின்னஞ்சல் முகவரி. இது நீங்கள் உள்நுழையப் பயன்படுத்தக்கூடிய மற்றொரு மின்னஞ்சல் முகவரி ஆகும்.
  • தொடர்பு மின்னஞ்சல் முகவரி. இது நீங்கள் பயன்படுத்தும் பெரும்பாலான Google சேவைகளைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கானது.

உங்கள் ஸ்பேம் ஃபோல்டரில் மெசேஜ் எதுவும் உள்ளதா என்று பார்த்தல்

கவனத்திற்கு: மின்னஞ்சல், ஃபோன் அழைப்பு, மெசேஜ் போன்றவற்றின் மூலம் உங்கள் கடவுச்சொல்லையோ சரிபார்ப்புக் குறியீடுகளையோ Google ஒருபோதும் கேட்காது. உங்கள் கடவுச்சொல்லையோ சரிபார்ப்புக் குறியீடுகளையோ accounts.google.com தளத்தில் மட்டும் உள்ளிடவும்.

எங்கள் குழுவினரிடம் இருந்து வரவேண்டிய மின்னஞ்சலைக் கண்டறிய முடியவில்லை என்றால், "Google உதவி மையத்திடம் நீங்கள் கோரியது தொடர்பாக" என்ற தலைப்பை உடைய மின்னஞ்சல் உங்கள் ஸ்பேம் அல்லது தேவையற்றவை ஃபோல்டரில் உள்ளதா என்று பார்க்கவும். 

இப்போதும் உங்களால் உள்நுழைய முடியவில்லையா? மாற்று Google கணக்கை உருவாக்குவது பற்றிப் பரிசீலிக்கவும். அப்படி உருவாக்கும்போது, உங்கள் Google கணக்கில் உள்நுழைய முடியாமல் போவதைத் தவிர்க்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2600092420658530939
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false