தேவையில்லாமல் தொடர்புகொள்வதைத் தவிர்க்க Google Chat, Photos போன்ற Google தயாரிப்புகளில் பிற பயனர்களை நீங்கள் தடுக்கலாம். இப்படிச் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட Google கணக்கைத் தடுக்கிறீர்கள்.
வேறொருவரின் கணக்கைத் தடுக்க, இந்தத் தயாரிப்புகள் ஏதேனும் ஒன்றில் உள்ள "தடு" எனும் செயலைப் பயன்படுத்தவும்.
கணக்கைத் தடுக்க Google Chat பயன்படுத்துதல்Google Chatடில் (chat.google.com) ஒருவரின் கணக்கைத் தடுத்தால் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளிலும் அவரின் கணக்கு தடுக்கப்படும்.
Google Photosஸில் ஒருவரின் கணக்கைத் தடுத்தால் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளிலும் அவரின் கணக்கு தடுக்கப்படும்.
பயனர் சுயவிவரத்தைத் தடுத்தல்
Mapsஸில் உங்கள் சுயவிவரத்தைக் கண்டறிய முடியாத வகையில் மொபைல் சாதனம் மூலம் ஒருவரைத் தடுக்கலாம். ஒருவரைத் தடுத்துள்ளீர்கள் என்பதை Google Maps ஒருபோதும் அவருக்குத் தெரிவிக்காது. Google Mapsஸில் ஒருவரின் சுயவிவரத்தைத் தடுத்தால் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளிலும் அவரின் கணக்கு தடுக்கப்படும்.
முக்கியம்: நீங்கள் தடுத்த பயனர்கள் உங்களின் பங்களிப்புகளை Google Mapsஸில் தொடர்ந்து பார்க்க முடியும், ஆனால் அவர்களால் உங்கள் சுயவிவரத்தில் அவற்றைப் பார்க்க முடியாது. நீங்கள் தடுத்துள்ள கணக்கில் அந்தப் பயனர் உள்நுழைந்திருக்கவில்லை என்றாலும் உங்களின் பங்களிப்புகளைப் பார்க்க முடியும்.
- Google Maps ஆப்ஸை திறக்கவும்.
- நீங்கள் தடுக்க விரும்பும் பயனரின் சுயவிவரத்திற்குச் செல்லவும். பயனரின் சுயவிவரங்களை இங்கே பார்க்கலாம்:
- அந்தப் பயனரின் இடுகை அல்லது கருத்திற்கு மேலே.
- அவரைப் பின்தொடர்கிறீர்கள் எனில் "நீங்கள் பின்தொடர்பவர்கள்" பிரிவில்.
- அவர் உங்களைப் பின்தொடர்கிறார் எனில் "உங்களைப் பின்தொடர்பவர்கள்" பிரிவில்.
- "உங்களுக்கானவை" பிரிவில், அவரின் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- அவரின் பெயருக்கு அடுத்துள்ள மேலும் பயனரைத் தடு என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: நீங்கள் பின்தொடர்பவரின் உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை எனில் தடுப்பதற்குப் பதிலாக அவரைப் பின்தொடர்வதை நிறுத்தலாம்.
இருப்பிடக் கோரிக்கையைத் தடுத்தல்
Google Mapsஸில் ஒருவரின் இருப்பிடக் கோரிக்கையைத் தடுத்தால் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளிலும் அவரின் கணக்கு தடுக்கப்படும்.
Google Mapsஸில் இருப்பிடத் தரவைப் பகிர்வது, இருப்பிடக் கோரிக்கைகளைத் தடுப்பது பாேன்றவை எப்படி என அறிக.
YouTubeல் ஒருவரின் கணக்கைத் தடுத்தால் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளிலும் அவரின் கணக்கு தடுக்கப்படும்.
ஒருவர் உங்கள் சேனலைக் குறிப்பிட்டாலோ இடுகை மூலமாக உங்கள் உள்ளடக்கத்தைப் பகிர்ந்தாலோ நேரலை உரையாடல் அல்லது அறிவிப்புகள் இன்பாக்ஸ் மூலம் YouTubeல் அவரைத் தடுக்கலாம்.
Google Pay India ஆப்ஸில் ஒருவரின் கணக்கைத் தடுத்தால் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளிலும் அவரின் கணக்கு தடுக்கப்படும்.
Google Pay India ஆப்ஸில் ஒருவரைத் தடுப்பது எப்படி என அறிக.
கம்ப்யூட்டரில் Google Driveவில் ஒருவரின் கணக்கைத் தடுத்தால் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளிலும் அவரின் கணக்கு தடுக்கப்படும்.
ரெக்கார்டரில் ஒருவரின் கணக்கைத் தடுத்தால் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளிலும் அவரின் கணக்கு தடுக்கப்படும்.
ரெக்கார்டரில் பயனர்களைத் தடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Meetடில் ஒருவரின் கணக்கைத் தடுத்தால், இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளிலும் அவரது கணக்கு தடுக்கப்படும்.
Meetடில் பயனர்களைத் தடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தடுக்கப்பட்ட கணக்குகளைக் கண்டறிதல் & அனுமதித்தல்
-
- உங்கள் iPhone அல்லது iPadடில் Gmail ஆப்ஸைத் திறக்கவும்.
- மேலே வலப்புறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும். நீங்கள் Gmailலைப் பயன்படுத்தவில்லை என்றால் myaccount.google.com தளத்திற்குச் செல்லவும்.
- மேற்புறத்தில் உள்ள நபர்களும் பகிர்தலும் என்பதைத் தட்டவும்.
- "தொடர்புகள்" என்பதற்குக் கீழ் உள்ள தடுக்கப்பட்டவர்கள் என்பதைத் தட்டவும்.
- Google தயாரிப்புகளில் நீங்கள் தடுத்த கணக்குகளின் பட்டியல் காட்டப்படும். தடுக்கப்பட்ட ஒருவரை அனுமதிக்க, அவரின் பெயருக்கு அடுத்துள்ள அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்பு: "தடுக்கப்பட்ட பயனர்கள்" பிரிவில் காட்டப்படாதவை:
- YouTube சேனல்கள், நேரலை அரட்டை ஆகியவை மூலம் தடுக்கப்பட்ட கணக்குகள்.
- தடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள்.
- iPhoneனின் ஃபோன் ஆப்ஸில் தடுக்கப்பட்ட ஃபோன் எண்கள்.
மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்ணைத் தடுத்தல்
பயனரின் Google கணக்கைத் தடுப்பது மட்டுமின்றி அவரின் ஃபோன் எண்/மின்னஞ்சல் முகவரியையும் தடுக்கலாம். இவ்வாறு செய்வதால் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள Google தயாரிப்புகளில் பயனரின் கணக்கு தடுக்கப்படாது. எடுத்துக்காட்டாக, நீங்கள்:
- Gmailலில் மின்னஞ்சல் முகவரிகளைத் தடுக்கலாம்
- Pixel மற்றும் Nexus மொபைல்களில் ஃபோன் எண்களைத் தடுக்கலாம்
- Google Fiயில் ஃபோன் எண்களைத் தடுக்கலாம்
- Google Voiceஸில் ஃபோன் எண்களைத் தடுத்தல்
- Google Meetடில் ஃபோன் எண்களைத் தடுத்தல்
Gmailலில் தடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளும் ஃபோன் ஆப்ஸில் தடுக்கப்பட்ட ஃபோன் எண்களும் உங்கள் கணக்கின் "தடுக்கப்பட்ட பயனர்கள்" பிரிவில் காட்டப்படாது. அவை பிற Google தயாரிப்புகளிலும் தடுக்கப்பட்டிருக்காது.
Google Fi, Google Voice அல்லது Google Meetடில் தடுக்கப்பட்ட ஃபோன் எண்கள் உங்கள் கணக்கின் “தடுக்கப்பட்டவர்கள்” பிரிவில் காட்டப்படும். இந்த எண்கள் Google Fi, Google Voice, Google Meet ஆகியவற்றில் மட்டுமே தடுக்கப்பட்டிருக்கும், பிற Google தயாரிப்புகளில் தடுக்கப்பட்டிருக்காது.