ஹேக் செய்யப்பட்ட அல்லது அபகரிக்கப்பட்ட Google கணக்கைப் பாதுகாத்தல்

உங்கள் Google கணக்கு, Gmail அல்லது பிற Google தயாரிப்புகளில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைப் பார்த்தால் உங்கள் அனுமதியின்றி வேறு யாரோ அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். உங்கள் Google கணக்கு அல்லது Gmail ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நினைத்தால், சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கண்டறிவதற்கும், உங்கள் கணக்கை மீண்டும் அணுகுவதற்கும், மேலும் பாதுகாப்பாக மாற்றுவதற்கும் கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்.

படி 1: உங்கள் Google கணக்கில் உள்நுழைதல்

உள்நுழைய முடியவில்லை என்றால்

கணக்கு மீட்டெடுப்புப் பக்கத்திற்குச் சென்று உங்களால் முடிந்தவரை கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளியுங்கள். இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

பின்வரும் சூழல்களில் கணக்கு மீட்டெடுப்புப் பக்கத்தைப் பயன்படுத்தவும்:

  • உங்கள் கடவுச்சொல் அல்லது மீட்பு மொபைல் எண் போன்ற உங்கள் கணக்குத் தகவல்களை யாரேனும் மாற்றியிருந்தால்.
  • வேறொருவர் உங்கள் கணக்கை நீக்கியிருந்தால்.
  • வேறு காரணத்தால் உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாமல் இருந்தால்.

உதவிக்குறிப்பு: நீங்கள் சரியான கணக்கில்தான் உள்நுழைய முயல்கிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ள, உங்கள் பயனர்பெயரை மீட்டெடுக்க முயலவும்.

படி 2: செயல்பாடுகளைச் சரிபார்த்து, ஹேக் செய்யப்பட்ட உங்கள் கணக்கைப் பாதுகாக்க உதவுதல்

உங்கள் கணக்கின் செயல்பாடுகளைச் சரிபார்த்தல்
  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள வழிகாட்டல் பேனலில், பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. "பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய செயல்பாடுகள்" பேனலில், பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளைச் சரிபார் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் உள்ளதா என்று பார்க்கவும்:
    • அந்தச் செயல்பாட்டை நீங்கள் செய்யவில்லை என்றால்: அது நான் இல்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு, உங்கள் கணக்கைப் பாதுகாக்க திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
    • அந்தச் செயல்பாட்டை நீங்கள் செய்திருந்தால்: ஆம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இன்னமும் உங்கள் கணக்கை வேறொருவர் பயன்படுத்துவதாக நினைத்தால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவும்.
எந்தெந்தச் சாதனங்கள் உங்கள் கணக்கைப் பயன்படுத்துகின்றன என்பதைப் பார்த்தல்
  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள வழிகாட்டல் பேனலில், பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. "எனது சாதனங்கள்" பேனலில், சாதனங்களை நிர்வகித்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்களுக்குத் தெரியாத சாதனங்கள் உள்ளனவா என்பதைப் பார்க்கவும்.
    • உங்களுக்குத் தெரியாத சாதனம் இருந்தால்: சாதனத்தை அடையாளம் காண முடியவில்லையா? என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு, உங்கள் கணக்கைப் பாதுகாக்க திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
    • அனைத்து சாதனங்களும் உங்களுக்குத் தெரிந்தவையாக இருந்தாலும், உங்கள் கணக்கை வேறு யாரோ பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால்: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவும்.

படி 3: கூடுதல் பாதுகாப்பிற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுதல்

இருபடிச் சரிபார்ப்பை இயக்குதல்

ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் கணக்கைப் பாதுகாக்க இருபடிச் சரிபார்ப்பு உதவுகிறது. இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தினால் நீங்கள் இவற்றின் மூலம் உள்நுழையலாம்:

  • உங்களுக்குத் தெரிந்தது (உங்கள் கடவுச்சொல்)
  • உங்களிடம் இருப்பவை (உங்கள் மொபைல், பாதுகாப்பு விசை, அச்சிடப்பட்ட குறியீடு போன்றவை)

இதனால், உங்கள் கடவுச்சொல் திருடப்பட்டாலும் உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்கும்.

உங்கள் வங்கியையோ உள்ளூர் நிர்வாக அமைப்புகளையோ தொடர்புகொள்ளுதல்

ஒரு கணக்கைத் திறத்தல், பணத்தைப் பரிமாற்றம் செய்தல் போன்றவற்றைச் செய்ய உங்கள் பேங்க் அல்லது அரசாங்கத்திற்கு யாரோ ஒருவர் வழிகாட்டுதல்களை வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பின்வரும் சூழல்களில் இது மிகவும் முக்கியம்:

  • உங்கள் கணக்கில் பேங்க் அக்கவுண்ட் தொடர்பான தகவல்கள் இருத்தல். உதாரணமாக, Google Payயிலோ Chromeமிலோ கிரெடிட் கார்டுகள் சேமிக்கப்பட்டிருத்தல்.
  • வரி, பாஸ்போர்ட் தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்களை உங்கள் கணக்கில் வைத்திருத்தல். உதாரணமாக, Google Photos, Google Drive, Gmail போன்றவற்றில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கலாம்.
  • யாரோ ஒருவர் உங்கள் அடையாளத்தைப் பயன்படுத்துகிறார் என்றோ உங்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்கிறார் என்றோ உங்களுக்குத் தோன்றுதல்.
தீங்கிழைக்கும் மென்பொருளை அகற்றுதல்

உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடந்துள்ளதாக நினைத்தால், தீங்கிழைக்கும் மென்பொருளை நீங்கள் அகற்ற வேண்டியிருக்கலாம். உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்த, நம்பகமான வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவி இயக்கவும்.

மேலும், உங்கள் கம்ப்யூட்டரை ஆரம்பநிலை அமைப்புகளுக்கு மீட்டமைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை மீண்டும் நிறுவலாம்.

முக்கியம்: உங்களுக்குத் தேவையான ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுக்க மறக்காதீர்கள். Google Driveவில் ஃபைல்களைப் பதிவேற்றுவது எப்படி என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
மிகவும் பாதுகாப்பான உலாவியை நிறுவுதல்
சில இணைய உலாவிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கலாம். Google Chrome போன்ற மிகவும் பாதுகாப்பான உலாவியைப் பயன்படுத்துங்கள்.
கடவுச்சொல் திருடப்படுவதைத் தடுக்க, கடவுச்சொல் எச்சரிக்கை மூலம் உதவி பெறுதல்
Google அல்லாத தளத்தில் உங்கள் கடவுச்சொல்லை நீங்கள் டைப் செய்தால், கடவுச்சொல் எச்சரிக்கை அது பற்றி Google Chromeமில் உங்களுக்குத் தெரிவிக்கும். இதனால், ஏதேனும் ஒரு தளம் உங்கள் கடவுச்சொல்லைத் திருடுவதற்காக Google தளம் போன்ற தோற்றத்துடன் மோசடி செய்தால் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் ஆப்ஸையும் சாதனங்களையும் பாதுகாப்பதற்கு உதவுதல்
நீங்கள் பயன்படுத்தும் பிற Google தயாரிப்புகளைப் பாதுகாக்க உதவுதல்

உங்கள் Google கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிதல்

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைக் கவனித்தால், வேறு ஒருவர் உங்கள் Google கணக்கைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

முக்கியம்: வேறு யாரோ உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ளதாக நீங்கள் நினைத்தால் உங்கள் கடவுச்சொல்லை உடனே மாற்றவும்:

  • உங்கள் Google கணக்கு (நீங்கள் ஏற்கெனவே மாற்றாதபட்சத்தில்)
  • இவற்றுக்கு உட்பட்ட ஆப்ஸும் தளங்களும்:
    • உங்கள் Google கணக்கிற்குப் பயன்படுத்தும் அதே கடவுச்சொல்லின் மூலம் நீங்கள் உள்நுழைபவை
    • உங்கள் Google கணக்கு மின்னஞ்சல் முகவரியில் உங்களைத் தொடர்புகொள்பவை
    • உங்கள் Google கணக்கு மின்னஞ்சல் முகவரியின் மூலம் நீங்கள் உள்நுழைபவை
    • உங்கள் Google கணக்கில் நீங்கள் கடவுச்சொற்களைச் சேமித்துள்ள இடம்

பரிச்சயமற்ற சாதனங்கள் உங்கள் கணக்கில் உள்நுழைந்துள்ளனவா என்பதைப் பார்த்து அவற்றை நீங்கள் அகற்றலாம்.

கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள்

முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளில் பரிச்சயமற்ற மாற்றங்கள் செய்யப்பட்டிருத்தல்

இந்த அமைப்புகளில் பரிச்சயமற்ற மாற்றங்களைப் பார்த்தால் அமைப்பை உடனடியாகச் சரிசெய்யவும்:

அங்கீகரிக்கப்படாத நிதிச் செயல்பாடு

இந்தச் சூழல்களில் உங்கள் நிதிச் செயல்பாடுகளைச் சந்தேகத்திற்குரியவை என்று கருதலாம்:

வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள்

உதவிக்குறிப்பு: சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க, உங்கள் மீட்பு மொபைல் எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்துவோம்.

வழக்கத்திற்கு மாறான செயல்பாடு குறித்து இவற்றின் மூலம் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்:

  • உங்கள் கணக்கில் கண்டறியப்பட்ட வழக்கத்திற்கு மாறான உள்நுழைவு அல்லது புதிய சாதனம் குறித்த அறிவிப்பு.
  • உங்கள் பயனர்பெயர், கடவுச்சொல், பிற பாதுகாப்பு அமைப்புகள் போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அந்த மாற்றத்தை நீங்கள் செய்யவில்லை என்ற அறிவிப்பு.
  • உங்களுக்குத் தெரியாமல் நடந்த ஏதோ ஒரு செயல்பாட்டைப் பற்றிய அறிவிப்பு.
  • "உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கண்டறிந்துள்ளோம்" என்று உங்கள் திரையின் மேற்புறத்தில் காட்டும் சிவப்புப் பட்டி.
  • உங்கள் "சாதனச் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகள்" பக்கம்.

நீங்கள் பயன்படுத்தும் Google தயாரிப்புகளில் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள்

Gmail

Gmail அமைப்புகள்

பின்வருவனவற்றில் பரிச்சயமற்ற மாற்றங்களைப் பார்த்தால் அமைப்பை உடனடியாகச் சரிசெய்யவும்:

Gmail செயல்பாடு

இந்தச் சூழல்களில் உங்கள் Gmail செயல்பாடுகளைச் சந்தேகத்திற்குரியவை என்று கருதலாம்:

  • சில நாட்களாக உங்களுக்கு மின்னஞ்சல்கள் வராமல் இருத்தல்.
  • உங்களிடமிருந்து ஸ்பேம் அல்லது வழக்கத்திற்கு மாறான மின்னஞ்சல்கள் வந்ததாக உங்கள் நண்பர்கள் தெரிவித்தல்.
  • உங்கள் பயனர்பெயர் மாறியிருத்தல்.
  • உங்கள் இன்பாக்ஸில் இருந்து மின்னஞ்சல்கள் நீக்கப்பட்டதோடு, அவை "நீக்கியவை" ஃபோல்டரில் காட்டப்படாமலும் இருத்தல். நீங்கள் காணாத மின்னஞ்சல்கள் தொடர்பாகப் புகாரளித்து அவற்றை மீட்டெடுக்க முயலலாம்.
  • நீங்கள் எழுதாத மின்னஞ்சல் "அனுப்பிய மின்னஞ்சல்கள்" ஃபோல்டரில் இருத்தல்.
YouTube

இந்தச் சூழல்களில் உங்கள் YouTube செயல்பாடுகளைச் சந்தேகத்திற்குரியவை என்று கருதலாம்:

  • உங்கள் YouTube சேனலில், நீங்கள் பதிவேற்றாத வீடியோக்கள், நீங்கள் தெரிவிக்காத கருத்துகள் அல்லது பின்வருவனவற்றில் உங்களுக்குப் பரிச்சயமில்லாத மாற்றங்கள் காட்டப்படுதல்:
    • சேனலின் பெயர்
    • சுயவிவரப் படம்
    • விளக்கங்கள்
    • மின்னஞ்சல் அமைப்புகள்
    • அனுப்பிய மெசேஜ்கள்
Google Drive

இந்தச் சூழல்களில் உங்கள் Google Drive செயல்பாடுகளைச் சந்தேகத்திற்குரியவை என்று கருதலாம்:

Google Photos

இந்தச் சூழல்களில் உங்கள் Google Photos செயல்பாடுகளைச் சந்தேகத்திற்குரியவை என்று கருதலாம்:

Blogger

இந்தச் சூழல்களில் உங்கள் Blogger செயல்பாடுகளைச் சந்தேகத்திற்குரியவை என்று கருதலாம்:

  • நீங்கள் வெளியிடாத இடுகைகள் உங்கள் வலைப்பதிவில் காட்டப்படுதல்.
  • நீங்கள் வெளியிடாத இடுகைகளில் கருத்துகளைப் பெறுதல்.
  • நீங்கள் மாற்றாமல், மின்னஞ்சல் மூலம் Bloggerருக்கு இடுகைகளை அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி மாறியிருத்தல்.
  • உங்கள் வலைப்பதிவு காட்டப்படாதிருத்தல் அல்லது தடுக்கப்பட்டிருத்தல்.
Google Ads

பின்வரும் பரிச்சயமற்ற விஷயங்களைப் பார்த்தால் உங்கள் Google Ads செயல்பாடுகளைச் சந்தேகத்திற்குரியவை என்று கருதலாம்:

  • தெரியாத இணைப்புகள் அல்லது இலக்குகளைத் திறக்கும் விளம்பரங்கள்
  • உங்கள் விளம்பரச் செலவுகள் அதிகரித்தல்
  • கணக்கு உரிமையாளர்களோ நிர்வாகிகளோ பயனர்களோ மாறியிருத்தல்
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4798313098709010004
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false