உங்கள் கணக்கில் இருக்கும் மொபைல் எண்ணையும் அது பயன்படுத்தப்படும் விதத்தையும் மாற்றுதல்

உங்கள் Google கணக்கில் மொபைல் எண்களைச் சேர்க்கலாம் மாற்றலாம் அகற்றலாம். மொபைல் எண்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் எண்கள் பயன்படுத்தப்படும் விதத்தை நிர்வகிக்கும் கட்டுப்பாடுகள் உங்களிடம் இருக்கும்.

முக்கியம்: உங்கள் கடவுச்சொல்லை மாற்றுவது போன்ற முக்கியமான செயல்களின்போது, நீங்கள்தான் அதைச் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்குப் புதிய மொபைல் எண்ணைப் பயன்படுத்த ஒரு வாரம் ஆகலாம்.

மொபைல் எண்ணைச் சேர்த்தல், மாற்றுதல் அல்லது அகற்றுதல்

  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  2. மேலே உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "தொடர்புத் தகவல்" என்பதன் கீழ் உள்ள மொபைல் எண் அதன் பிறகு என்பதைத் தட்டி உங்கள் மொபைல் எண்ணைத் தட்டவும்.
  4. இனி நீங்கள்:
    • மொபைல் எண்ணைச் சேர்க்கலாம்: "உங்கள் மொபைல் எண்கள்" என்பதன் கீழ் உள்ள மீட்பு மொபைல் எண்ணைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (ஏற்கெனவே மீட்பு மொபைல் எண்ணைச் சேர்க்கவில்லை எனில் சேர்க்கும்படி பரிந்துரைக்கிறோம்.)
    • மொபைல் எண்ணை மாற்றலாம்: உங்கள் எண்ணிற்கு அடுத்துள்ள திருத்து திருத்துஅதன் பிறகு மொபைல் எண்ணை மாற்று என்பதைத் தட்டவும்.
    • மொபைல் எண்ணை நீக்கலாம்: உங்கள் எண்ணிற்கு அடுத்துள்ள நீக்கு நீக்குஅதன் பிறகு எண்ணை அகற்று என்பதைத் தட்டவும்.
  5. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

குறிப்பு: உங்கள் Google கணக்கில் உள்ள எண்ணை மாற்றுவதால் சில Google சேவைகளில் மட்டுமே எண் மாற்றப்படும். பிற Google சேவைகளில் உங்கள் எண்ணை மாற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

மொபைல் எண்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

சில Google சேவைகளின் ஒரு பகுதியாக

நீங்கள் அமைத்த அல்லது பயன்படுத்திய குறிப்பிட்ட Google சேவைகளுடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்கும்.

  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  2. மேலே உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "தொடர்புத் தகவல்" பிரிவில் உள்ள மொபைல் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் மொபைல் எண் என்பதற்குக் கீழ் உள்ள "பயன்பாடு" என்பதற்கு அருகில் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தும் சில சேவைகள் காட்டப்படும். கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ மாற்றங்களைச் செய்யவோ சேவையின் மீது தட்டவும்.

மொபைல் எண்ணைப் பயன்படுத்தும் பிற Google சேவைகள் அந்தப் பக்கத்தில் பட்டியலிடப்படாமல் இருக்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ளது போன்ற குறிப்பிட்ட சேவைகளின் அமைப்புகளில் உங்கள் மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளலாம்:

உங்கள் மொபைல் எண் பயன்படுத்தப்படும் விதத்தை மாற்றுதல்

குறிப்பிட்ட சேவைக்கான உங்கள் விருப்பங்களைப் பார்க்க அதன் அமைப்புகளுக்குச் செல்லவும். உதவி தேவைப்பட்டால் support.google.com தளத்தைப் பார்க்கவும்.

உள்நுழைதல் மற்றும் கணக்கு மீட்டெடுப்பை எளிதாக்குதல்

பின்வரும் செயல்களுக்காக நீங்கள் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தலாம்:

உங்களைத் தொடர்புகொள்ள பிறருக்கு உதவுதல்

உங்கள் மொபைல் எண்ணை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்:

  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  2. மேலே உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "பிறருக்கு என்னென்ன தகவல்கள் காட்டப்படலாம் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்" என்பதன் கீழ் உள்ள என்னைப் பற்றி என்பதற்குச் செல் என்பதைத் தட்டவும்.
  4. "தனிப்பட்ட தொடர்புத் தகவல்" என்பதன் கீழ் உங்கள் பகிர்தல் விருப்பத்தை மாற்றவும்.

Google சேவைகளில் உங்களைக் கண்டறியவும் தொடர்புகொள்ளவும் உங்கள் மொபைல் எண் எப்படி உதவுகிறது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

"சிறந்த விளம்பரங்கள் மற்றும் Google சேவைகள்" அமைப்பை இயக்குதல் அல்லது முடக்குதல்

உங்களுக்கு மிகப் பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட Google சேவைகள் முழுவதிலும் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்த இந்த அமைப்பு அனுமதிக்கும். பிரத்தியேகமான விளம்பரங்களைப் பார்க்க விரும்பவில்லை எனில் அமைப்பை முடக்கவும்.

  1. Android சாதனத்தில் அமைப்புகள் அதன் பிறகு Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "தொடர்புத் தகவல்" பிரிவில் உள்ள மொபைல் என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் மாற்றங்களைச் செய்ய விரும்பும் மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. "விருப்பத்தேர்வுகள்" என்பதன் கீழே உள்ள "சிறந்த விளம்பரங்கள் மற்றும் Google சேவைகள்" அமைப்பை இயக்கவும் அல்லது முடக்கவும்.
உதவிக்குறிப்பு: அமைப்பு இயக்கப்பட்டதும் ‘பயன்பாடு’ பிரிவின் கீழே "Google முழுவதிலும்" என்று காட்டப்படும்.

Google முழுவதிலும் உங்கள் எண் பயன்படுத்தப்படுவதை நிறுத்துதல்

  1. Android சாதனத்தில் அமைப்புகள் அதன் பிறகு Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "தொடர்புத் தகவல்" பிரிவில் உள்ள மொபைல் என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் மாற்றங்களைச் செய்ய விரும்பும் மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் எண்ணிற்கு அடுத்துள்ள நீக்கு அதன் பிறகு எண்ணை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. மேலே இடதுபுறத்தில் உள்ள பின்செல் பின்செல் என்பதைத் தட்டவும்.
  7. மேலே உள்ள பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
  8. "இது நீங்கள்தான் என்பதைச் சரிபார்க்கும் வழிகள்" என்பதற்குக் கீழேயுள்ள மீட்பு மொபைல் எண் என்பதைத் தட்டவும். உங்கள் எண்ணை மீண்டும் சேர்க்க திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Tip: To use your number in other Google services, go to those services and re-add it.
Google முழுவதிலும் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துதல்

உங்கள் “மொபைல்” பக்கத்தில் "Google முழுவதிலும்" என்பது காட்டப்பட்டால் Google சேவைகள் முழுவதிலும் இந்த எண் பயன்படுத்தப்படலாம்.

உங்கள் எண் பயன்படுத்தப்படுகிறதா என்பதை இப்படித் தெரிந்துகொள்ளலாம்

  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  2. மேலே உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "தொடர்புத் தகவல்" பிரிவில் உள்ள மொபைல் என்பதைத் தட்டவும்.
  4. "பயன்பாடு" என்பதற்கு அருகில் உள்ள "Google முழுவதிலும்" என்பதைப் பார்க்கவும்.

Google முழுவதிலும் உங்கள் எண் பயன்படுத்தப்படுவதை நிறுத்துதல்

  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  2. மேலே உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "தொடர்புத் தகவல்" பிரிவில் உள்ள மொபைல் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் எண்ணிற்கு அடுத்துள்ள நீக்கு நீக்குஅதன் பிறகு எண்ணை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மேலே இடதுபுறத்தில் உள்ள பின்செல் பின்செல் என்பதைத் தட்டவும்.
  6. மேலே உள்ள பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
  7. "இது நீங்கள்தான் என்பதைச் சரிபார்க்கும் வழிகள்" என்பதற்குக் கீழேயுள்ள மீட்பு மொபைல் எண் என்பதைத் தட்டவும். உங்கள் எண்ணை மீண்டும் சேர்க்க திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  8. பிற Google சேவைகளில் உங்கள் எண்ணைத் தொடர்ந்து பயன்படுத்த அந்தச் சேவைகளுக்குச் சென்று எண்ணை மீண்டும் சேர்க்கவும்.
உங்கள் Android மொபைலின் எண்ணைச் சரிபார்த்தல்

நீங்கள் Google கணக்கை அமைக்கும்போது உங்கள் மொபைல் எண்ணை அறிந்துகொள்ள Googleளை அனுமதிக்கலாம். அப்படிச் செய்தால் நீங்கள் சேர்க்கும் எண் உங்களுடையதுதானா என்பதை நாங்கள் சரிபார்ப்போம். மேலும் அந்த எண்ணை நீங்கள்தான் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்ய அவ்வப்போது மீண்டும் சரிபார்ப்போம். உங்கள் எண்ணைச் சரிபார்ப்பது பற்றி மேலும் அறிக.

Google உங்கள் மொபைல் எண் உட்பட உங்கள் தனிப்பட்ட தகவலை யாருக்கும் விற்பதில்லை. privacy.google.com என்ற பக்கத்தில் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18380907475286457196
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false