இருபடிச் சரிபார்ப்பை இயக்குதல்

இருபடிச் சரிபார்ப்பை (இருபடி அங்கீகாரம் என்றும் அழைக்கப்படுகிறது) பயன்படுத்துவதன் மூலம், கடவுச்சொல் திருடுபோகும்பட்சத்தில் உங்கள் கணக்கிற்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்கலாம். இருபடிச் சரிபார்ப்பை அமைத்த பிறகு இவற்றின் மூலம் உங்கள் கணக்கில் நீங்கள் உள்நுழையலாம்:

  • கடவுச்சொல்
  • மொபைல்

இருபடிச் சரிபார்ப்பை அனுமதித்தல்

  1. உங்கள் Google கணக்கைத் திறக்கவும்.
  2. வழிசெலுத்தல் பேனலில், பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. “Googleளில் எப்படி உள்நுழைகிறீர்கள்?” என்பதன் கீழே உள்ள இருபடிச் சரிபார்ப்பு அதன் பிறகு தொடங்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: பணி, பள்ளி, பிற குழு போன்றவற்றின் மூலம் பெற்ற கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் இந்தப் படிகள் வேலை செய்யாமல் போகலாம். இருபடிச் சரிபார்ப்பை அமைக்க முடியவில்லை என்றால் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொண்டு உதவி பெறுங்கள்.

இருபடிச் சரிபார்ப்பை இயக்கு

இரண்டாவது படி மூலம் இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்துதல்

இருபடிச் சரிபார்ப்பு அம்சத்தை இயக்கிய பிறகு உள்நுழையும்போது இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்த இரண்டாவது படியை நிறைவுசெய்ய வேண்டும். உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையில் ஒரு குறிப்பிட்ட இரண்டாவது படியை நிறைவுசெய்யும்படி Google உங்களிடம் கேட்கும்.

Google அறிவிப்புகளைப் பயன்படுத்துதல்

கவனத்திற்கு: Google அறிவிப்புகளைப் பயன்படுத்த, புதுப்பிக்கப்பட்ட Google Play சேவைகளைக் கொண்ட Android மொபைல் தேவை.

இரண்டாவது படியாக Google அறிவிப்புகளைப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம். சரிபார்ப்புக் குறியீட்டை டைப் செய்வதைவிட அறிவிப்பைத் தட்டுவது என்பது எளிதானது. அத்துடன் சிம் கார்டு மாற்றம் மற்றும் ஃபோன் எண் அடிப்படையிலான பிற ஹேக்கிங் செயல்பாடுகளில் இருந்து பாதுகாக்கவும் அறிவிப்புகள் உதவும்.

உங்கள் Google கணக்கில் Google அறிவிப்புகளைப் பெற:

  • உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ள Android மொபைல் தேவை.
  • உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ள Smart Lock , Gmail , Google Photos , YouTube YouTube, Google போன்ற ஆப்ஸ் உள்ள iPhone.

அறிவிப்பில் காட்டப்படும் சாதனம் மற்றும் இருப்பிடத் தகவலின் அடிப்படையில் நீங்கள்:

  • உள்நுழைவை அனுமதிக்க ஆம் எனத் தட்டலாம்.
  • உள்நுழைவைத் தடுக்க இல்லை என்பதைத் தட்டலாம்.

பிற சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்துதல்

பின்வரும் சந்தர்ப்பங்களில் நீங்கள் பிற சரிபார்ப்பு முறைகளை அமைக்கலாம்:

  • ஃபிஷிங்கிற்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பைப் பெற விரும்புகிறீர்கள்
  • Google அறிவிப்புகளைப் பெற முடியவில்லை
  • உங்கள் மொபைல் தொலைந்துவிட்டது
ஃபிஷிங்கிற்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்பு விசைகளைப் பயன்படுத்துதல்

பாதுகாப்பு விசைக் கருவி என்பது நீங்கள்தான் உள்நுழைகிறீர்கள் என்பதைச் சரிபார்க்க உதவும் ஒரு சிறிய சாதனம் ஆகும் (இதை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்). இது நீங்கள்தான் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டியிருக்கும்போது உங்கள் மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்றவற்றில் இந்த விசையை நீங்கள் எளிதாக இணைக்கலாம். உங்களுக்கான பாதுகாப்பு விசைகளை ஆர்டர் செய்யுங்கள்.

உதவிக்குறிப்பு: உங்கள் கடவுச்சொல்லையோ பிற பிசினஸ் தகவலையோ பெறுவதற்கு ஹேக்கர் முயற்சி செய்தால், ஃபிஷிங் தாக்குதல்களில் இருந்து உங்கள் Google கணக்கைப் பாதுகாக்க பாதுகாப்பு விசைகள் உதவும். ஃபிஷிங் தாக்குதல்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Google Authenticator அல்லது பிற சரிபார்ப்புக் குறியீட்டு ஆப்ஸைப் பயன்படுத்துதல்
முக்கியம்: உங்கள் சரிபார்ப்புக் குறியீடுகளை எவரிடமும் கொடுக்க வேண்டாம்.

உங்களிடம் இணைய இணைப்போ மொபைல் சேவையோ இல்லாதபோது Google Authenticator அல்லது ஒருமுறை நிகழும் சரிபார்ப்புக் குறியீடுகளை உருவாக்கும் மற்றொரு ஆப்ஸை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்.

நீங்கள்தான் உள்நுழைகிறீர்கள் என்பதைச் சரிபார்ப்பதில் உதவ, உள்நுழைவுத் திரையில் சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும்.

மெசேஜ் மூலமாகவோ அழைப்பு மூலமாகவோ பெறும் சரிபார்ப்புக் குறியீட்டைப் பயன்படுத்துதல்
முக்கியம்: உங்கள் சரிபார்ப்புக் குறியீடுகளை எவரிடமும் கொடுக்க வேண்டாம்.
நீங்கள் முன்பு வழங்கியுள்ள எண்ணிற்கு 6 இலக்கக் குறியீடு அனுப்பப்படலாம். நீங்கள் தேர்வுசெய்துள்ள அமைப்பைப் பொறுத்து மெசேஜ் (SMS) மூலமாகவோ குரல் அழைப்பு மூலமாகவோ குறியீடுகள் அனுப்பப்படலாம். இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்த, உள்நுழைவுத் திரையில் குறியீட்டை உள்ளிடவும்.
உதவிக்குறிப்பு: இருபடிச் சரிபார்ப்பின் எந்தவொரு வடிவமும் கணக்கிற்குப் பாதுகாப்பைச் சேர்த்தாலும் மெசேஜ்கள் மூலமாகவோ அழைப்புகள் மூலமாகவோ அனுப்பப்படும் சரிபார்ப்புக் குறியீடுகள் மொபைல் எண் அடிப்படையிலான ஹேக்கிங் நடவடிக்கைகளால் எளிதில் பாதிக்கப்படலாம்.
மாற்றுக் குறியீடுகளைப் பயன்படுத்துதல்
முக்கியம்: உங்கள் மாற்றுக் குறியீடுகளை எவரிடமும் கொடுக்க வேண்டாம்.
பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்காக 8 இலக்க மாற்றுக் குறியீடுகளை நீங்கள் அச்சிடலாம் பதிவிறக்கலாம். உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் மாற்றுக் குறியீடுகள் உதவும்.

நம்பகமான சாதனங்களில் இரண்டாவது படியைத் தவிர்த்தல்

கம்ப்யூட்டரிலோ மொபைலிலோ நீங்கள் ஒவ்வொரு முறை உள்நுழையும்போதும் இரண்டாவது சரிபார்ப்புப் படியை வழங்க விரும்பவில்லை என்றால் "இந்தக் கம்ப்யூட்டரில் மீண்டும் கேட்க வேண்டாம்" அல்லது "இந்தச் சாதனத்தில் மீண்டும் கேட்க வேண்டாம்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
முக்கியம்: நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்துகின்ற, வேறு எவருடனும் பகிராத சாதனங்களில் மட்டுமே இந்தப் பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7421663438960834304
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false