ஒரே நேரத்தில் பல கணக்குகளில் உள்நுழைதல்

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகள் இருந்தால், ஒரே நேரத்தில் அவற்றில் உள்நுழையலாம். இதன் மூலம், நீங்கள் கணக்குகளுக்கு இடையே எளிதாக மாறலாம். அத்துடன் கணக்கில் இருந்து வெளியேறி மீண்டும் உள்நுழைய வேண்டிய அவசியமும் இருக்காது.

உங்கள் கணக்குகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அமைப்புகள் இருக்கும். ஆனால் சில சமயங்களில், உங்கள் இயல்புக் கணக்கின் அமைப்புகள் பயன்படுத்தப்படலாம்.

கணக்குகளைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Googleளில் உள்நுழையவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. காட்டப்படும் மெனுவில், கணக்கைச் சேர் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கில் உள்நுழைவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

கணக்குகளுக்கு இடையே மாறுதல்

உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள சில Google ஆப்ஸிலும் கணக்குகளுக்கு இடையே மாறலாம். கணக்குகளுக்கு இடையே மாறுவதற்கான வழிமுறைகள் ஆப்ஸைப் பொறுத்து வேறுபடும். உங்கள் சாதனத்தில் கணக்குகளைச் சேர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் Google ஆப்ஸைப் பயன்படுத்தினால் எந்தக் கணக்கின் மூலம் உள்நுழைந்திருக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் எப்போது உள்நுழையலாம்?

நீங்கள் மட்டும் பயன்படுத்தும் சாதனங்களில் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் உள்நுழையுமாறு பரிந்துரைக்கிறோம்.

பலர் பயன்படுத்தும் சாதனத்தைப் பயன்படுத்தினால் Googleளில் பாதுகாப்பாக உள்நுழைவதற்கான பிற விருப்பங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

எந்தக் கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

எந்தக் கணக்கில் உள்நுழைந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள:

  1. கம்ப்யூட்டரில் Google பக்கத்திற்கு (www.google.com) செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. காட்டப்படும் மெனுவில், உங்கள் கணக்கின் பெயருக்குக் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

உங்கள் கணக்குகளுக்கு வெவ்வேறு சுயவிவரப் படங்கள் அல்லது Gmail தீம்களைப் பயன்படுத்தி அவற்றுக்கு வெவ்வேறு தோற்றத்தை வழங்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் உள்நுழையும் வசதி சில தயாரிப்புகளில் கிடைக்காது

Blogger, Google Ads, Analytics உள்ளிட்ட சில Google தயாரிப்புகளில் ஒரு கணக்கைப் பயன்படுத்தி மட்டுமே உள்நுழைய முடியும். இவற்றைப் போன்ற தயாரிப்புகளில் நீங்கள் இயல்பு கணக்கின் மூலம் உள்நுழைய முடியும்.

சில Google தயாரிப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் உள்நுழைவதற்கான வழிமுறை வித்தியாசமாக இருக்கும். Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் கணக்குகளுக்கு இடையே மாறுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் உள்நுழையும் வசதி இல்லையெனில் Chrome சுயவிவரங்கள் அல்லது மறைநிலைப் பயன்முறையைப் பயன்படுத்தலாம்.

வெளியேறுதல்

கவனத்திற்கு: வெளியேறுவதற்கு முன், நீங்கள் மாற்றுச் சரிபார்ப்பு முறைகளை அமைத்திருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். இதனால், சிரமமின்றி நீங்கள் மீண்டும் கணக்கில் உள்நுழையலாம்.

  1. சாதனத்தில் Google பக்கத்திற்கு (www.google.com) செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. காட்டப்படும் மெனுவில், வெளியேறு அல்லது எல்லா கணக்குகளிலிருந்தும் வெளியேறு என்பதைத் தேர்வுசெய்யவும்.

உள்நுழைவுப் பக்கத்தில் இருந்து கணக்கை அகற்றுதல்

  1. உங்கள் சாதனத்தில் நீங்கள் உள்நுழைந்திருக்கும் உலாவிக்கு (எ.கா. Chrome) செல்லவும்.
  2. myaccount.google.com தளத்திற்குச் செல்லவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. வெளியேறு அல்லது எல்லா கணக்குகளிலிருந்தும் வெளியேறுக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. கணக்கை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. கணக்கிற்கு அடுத்து உள்ள அகற்று அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விருப்பத்திற்குரியது: Firefox, Safari போன்ற பிற உலாவிகளில் நீங்கள் உள்நுழைந்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் இவற்றையே மீண்டும் செய்யவும்.

ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனி அமைப்புகள் உள்ளன

உங்கள் ஒவ்வொரு கணக்கின் அமைப்புகளையும் தனித்தனியாக நிர்வகிக்கலாம். நீங்கள் பல கணக்குகளில் உள்நுழையும்போது, பொதுவாக கணக்குகளுக்கு இடையே கணக்கு அமைப்புகள் பகிரப்படாது. உதாரணமாக, உங்கள் கணக்குகளுக்கு வெவ்வேறு மொழி அமைப்புகளும் உள்நுழைவு வழிமுறைகளும் இருக்கக்கூடும்.

சில சமயங்களில் கணக்கு அமைப்புகள் கணக்குகளுக்கு இடையே பகிரப்படலாம்

நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் உள்நுழைந்திருந்தால் எந்தக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை எங்களால் சில சமயங்களில் தெரிவிக்க முடியாது. உதாரணமாக, நீங்கள் இரண்டு கணக்குகளில் உள்நுழைந்திருந்து புதிய உலாவிச் சாளரத்தைத் திறந்தால், எந்தக் கணக்கைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாது. இந்தச் சூழல்களில், இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு, விளம்பரப் பிரத்தியேகமாக்கல் போன்ற உங்கள் இயல்புக் கணக்கு அமைப்புகளை Google பயன்படுத்தக்கூடும்.

இயல்புக் கணக்கு என்பது என்ன?

இயல்புக் கணக்கு என்பது பெரும்பாலும் நீங்கள் முதலில் உள்நுழைந்திருக்கும் கணக்காகும். மொபைல் சாதனங்களில், உங்கள் சாதனத்தின் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸின் அடிப்படையில் உங்கள் இயல்புக் கணக்கு வேறுபடலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14278008757305736144
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false