Googleளில் ஹோட்டல்களைத் தேடுதல்

Googleளில் ஹோட்டல்களைத் தேடுவதன் மூலம் உங்கள் பயணத்திற்கான தங்குமிடத்தைக் கண்டறிந்து, மற்ற ஹோட்டல்களுடன் ஒப்பிட்டு முன்பதிவு செய்யலாம். நீங்கள்:

  • உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற ஹோட்டல்களைக் கண்டறியலாம். கட்டணம், இருப்பிடம், பயனர் ரேட்டிங்குகள், ஹோட்டல் வகை ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை வடிகட்டலாம்.
  • படங்கள், பயனர்களின் கருத்துகள், வசதிகள் பற்றிய விவரங்கள், இருப்பிடத் தகவல் ஆகியவற்றின் மூலம் ஹோட்டலைப் பற்றியும் அதைச் சுற்றியுள்ள பகுதியைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.
  • தங்குமிடத்திற்கான கட்டணங்களை ஒப்பிடலாம், எங்களின் முன்பதிவு பார்ட்னர்கள் மூலம் அறையை முன்பதிவு செய்யலாம்.

Googleளில் உங்கள் ஹோட்டலைத் தேடுதல்

Googleளில் இரண்டு வழிகளில் ஹோட்டல்களைத் தேடலாம்: 

  • google.com/travel/hotels தளத்திற்குச் சென்று தேடல் வார்த்தைகளையும் பயணத் தேதிகளையும் டைப் செய்யலாம். நீங்கள் சாதாரணமாக உலாவினால் பிரபலமான இடங்களில் இருந்தும் தேர்வுசெய்யலாம்.
  • google.com தளத்தில் இருந்து தேடத் தொடங்கலாம். நீங்கள் செல்ல விரும்பும் நகரம் அல்லது பிராந்தியத்தில் “உள்ள ஹோட்டல்கள்” எனத் தேடலாம், அதனுடன் “செல்லப்பிராணிக்கு அனுமதி வழங்குபவை” அல்லது “நகரப் பகுதிக்கு அருகில் இருப்பவை” போன்ற கூடுதல் தேவைகளைச் சேர்க்கலாம். தேடல் முடிவுகளிலேயே ஹோட்டல்களைத் தேடுவதற்கான பகுதி காட்டப்படும். அதில் பொதுவாக 4 ஹோட்டல்கள் வரை வரைபடத்துடன் காட்டப்படும். உங்கள் தேடலை Googleளில் தொடர விரும்பினால் அந்தத் தேடல் பகுதியைக் கிளிக் செய்யவும்.

ஹோட்டல்களை Google எப்படித் தரவரிசைப்படுத்துகிறது?

கவனத்திற்கு: தேடல் முடிவுகளில் ஹோட்டல்கள் காட்டப்படுவதற்கு அவை Googleளுக்குக் கட்டணம் செலுத்துவதில்லை. மேலும் கட்டணம் செலுத்தி ஹோட்டல்கள் தங்களுக்கான ரேங்கிங்கை மாற்றவும் முடியாது. 

தேடல் வார்த்தைகளை நீங்கள் டைப் செய்த பிறகு, ஒரு பட்டியலாக ஹோட்டல் முடிவுகள் காட்டப்படும். இதே முடிவுகளுடன் ஒரு வரைபடமும் காட்டப்படும். மொபைலில் இந்த இரண்டில் ஒன்று காட்டப்படும். இயல்பாக இந்த முடிவுகள் பொருத்தத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. பொருத்தத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்த உங்கள் தேடல் வார்த்தைகள் உட்பட, ஹோட்டல் பற்றிய கீழ்க்காணும் பல்வேறு அம்சங்களும் காரணிகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன:

  • இருப்பிடம்
  • கட்டணம்
  • பயனர்கள் வழங்கிய ரேட்டிங்குகள் மற்றும் கருத்துகள்

உங்கள் உலாவல் செயல்பாடு, Googleளில் நீங்கள் செய்த சமீபத்திய தேடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கான தேடல் முடிவுகள் பிரத்தியேகமாக்கப்படலாம். Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் உங்களின் முந்தைய முன்பதிவுகளின் அடிப்படையிலும் பிரத்தியேகமான முடிவுகள் காட்டப்படலாம். தேடல் முடிவுகளில் உங்களுக்கான பிரத்தியேக முடிவுகள் என்பதைக் குறிக்கும் செய்திகளும் காட்டப்படலாம். உதாரணமாக, "சமீபத்தில் இந்த ஹோட்டலைத் தேடியுள்ளீர்கள்" என்ற செய்தி. உங்கள் தேடலைக் கட்டுப்படுத்த இவற்றை எப்படி மாற்றுவது என அறிக:

முடிவுகளுக்கு மேல் பகுதியில் “விளம்பரம்” பேட்ஜுடன் விளம்பரதாரரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டண விளம்பரங்கள் காட்டப்படலாம். விளம்பரங்களின் ஏலத்தொகையையும் தரத்தையும் பொருத்து Google இந்த விளம்பரங்களைத் தேர்வுசெய்து தரவரிசைப்படுத்தும். உங்கள் தேடல் வினவலுடன் தொடர்புடைய நேரங்களில் மட்டுமே இந்த விளம்பரங்கள் காட்டப்படும். தேடல் முடிவுகளில் இவை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஹோட்டல் விளம்பரங்கள் பற்றி மேலும் அறிக.

ஹோட்டல் தேடலைத் துல்லியமாக்குதல்

ஒவ்வொரு ஹோட்டலுக்கான தேடல் முடிவிலும் அந்த ஹோட்டலின் ஸ்னாப்ஷாட் காட்டப்படும். பயனரின் சராசரி ரேட்டிங், முக்கிய வசதிகள் போன்ற தகவல்களும் நீங்கள் முன்பதிவு செய்யக்கூடிய தேதிகளில் எங்கள் பார்ட்னர்கள் வழங்கும் குறைவான கட்டணமும் காட்டப்படும். “டீல்” அல்லது “சிறந்த டீல்” பேட்ஜைக் காட்டுவதன் மூலம் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரே மாதிரியான ஹோட்டல்களை ஒப்பிட்டு, ஒரு ஹோட்டல் அதற்கான கட்டணத்திற்கு ஏற்ற மதிப்புடையதா எனத் தெரிவிப்போம். டீல்களை எப்படிக் கண்டறிகிறோம் என்பதைக் குறித்து மேலும் அறிக

அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் தரநிலைகளை ஹோட்டலின் நற்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் பூர்த்தி செய்கின்றனவா என்பதை “சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சான்றிதழ் பெற்றது” பேட்ஜ் மூலம் அறிந்துகொள்ளலாம். ஹோட்டல்களின் நற்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மேலும் அறிக.

நீங்கள் தேடுவதைத் துல்லியமாகக் கண்டறிய, பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள வடிப்பான்களையும் வரிசைப்படுத்தல் விருப்பங்களையும் பயன்படுத்தி முடிவுகளை மாற்றலாம். நீங்கள்: 

  • தங்கும் தேதிகளையும் தங்குவோரின் எண்ணிக்கையையும் மாற்றலாம்.
  • குறைவான கட்டணம் அல்லது பயனர்களிடம் இருந்து உயர் ரேட்டிங் பெற்றவை என முடிவுகளை வரிசைப்படுத்தலாம்.
  • கட்டணம், பயனர் ரேட்டிங், ஹோட்டல் வகை, வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில் முடிவுகளை வடிகட்டலாம்.
  • ஹோட்டல்களின் இருப்பிடத்தைக் கண்டறிய வரைபடத்தைப் பயன்படுத்தலாம் அல்லது குறிப்பிட்ட இருப்பிடத்தின் அடிப்படையில் உங்கள் தேடல் முடிவுகளை மாற்றலாம்.

உதவிக்குறிப்பு: கிடைக்கும்பட்சத்தில் இதற்குப் பதிலாகச் சுற்றுலா விடுதிகளையும் நீங்கள் தேடலாம்.

குறிப்பிட்ட ஹோட்டலைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுதல்

குறிப்பிட்ட ஹோட்டலைப் பற்றி மேலும் அறிய, விவரப் பக்கத்தில் ஏதேனும் ஓர் இடத்தில் கிளிக் செய்து ஹோட்டலின் “தகவல் பகுதி” அல்லது விவரங்கள் பிரிவிற்குச் செல்லவும். கிடைக்கும்பட்சத்தில், நீங்கள் தேர்ந்தெடுத்த தேதிகளுக்கான கட்டணப் பட்டியலை Google பார்ட்னர்களிடம் இருந்து பெற கட்டணங்களைக் காட்டு என்பதையும் கிளிக் செய்யலாம்.

தகவல் பிரிவில் உள்ள “அறிமுகம்” என்பதில் ஹோட்டலின் தொடர்புத் தகவல், அதன் இணையதள இணைப்பு, வாகன வழிகள் போன்றவற்றைப் பார்க்கலாம். ஹோட்டல் இருப்பிடம், பயனர் கருத்துகள், படங்கள், வசதிகள் ஆகியவற்றைப் பற்றிய ஸ்னாப்ஷாட்களும் காட்டப்படும். கூடுதல் தகவல்களைப் பெற, பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் தொடர்புடைய பிரிவிற்குச் செல்லவும் அல்லது வழங்கப்பட்டுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவும். Googleளின் ஹோட்டல் பார்ட்னர்கள், ஆன்லைன் பயண ஏஜென்சி மற்றும் மெட்டா தேடல் பார்ட்னர்கள் மூலம் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்வதற்கான இணைப்புகளையும் கண்டறியலாம்.

ஹோட்டல் கட்டணங்கள்

ஹோட்டல் உரிமையாளர்கள், ஆன்லைன் பயண ஏஜென்சிகள், மெட்டா தேடல் இன்ஜின்கள் மற்றும் பிற பயண நிறுவனங்கள் போன்ற Google பார்ட்னர்களிடம் இருந்து ஹோட்டல் கட்டண விவரங்கள் பெறப்படுகின்றன. பார்ட்னர்கள் Google உடன் கட்டணத்தை எப்படிப் பகிர்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக.

எங்கள் பார்ட்னர்கள் விலைத் துல்லியக் கொள்கையை ஒப்புக்கொள்கிறார்கள். இந்தக் கொள்கையின்படி பார்ட்னர்கள் Googleளுக்கு அனுப்பும் கட்டண விவரங்களில் வரிகளும் பிற கட்டணங்களும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் அவை அவர்களின் முன்பதிவுப் பக்கத்தில் நீங்கள் செலுத்தும் மொத்தத் தொகையுடன் கட்டாயம் பொருந்த வேண்டும். நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம்தான் Googleளில் பார்ட்னர்கள் காட்டும் கட்டணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்ய, அவை துல்லியமாக உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்ப்போம். இருப்பினும், ஹோட்டல் கட்டணங்கள் சட்டென்று மாறுபடலாம். எனவே, எங்கள் பார்ட்னர் ஹோட்டல்கள் ஒன்றில் நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால் அறைக்கான இறுதிக் கட்டணத்தைக் கவனமுடன் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

சில நேரங்களில் எங்கள் பார்ட்னர்கள் வழங்கும் கட்டணங்கள் பின்வரும் காரணிகளின் அடிப்படையில் மாறுபடும்:

  • உங்கள் சாதன வகை. உதாரணமாக மொபைல் அல்லது கம்ப்யூட்டர்
  • Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்துள்ளீர்களா என்பதைப் பொறுத்து
  • நீங்கள் பயனர்கள் பட்டியலில் உள்ளவரா என்பதைப் பொறுத்து

“பிரத்தியேகமான” கட்டணங்களுக்கு அடுத்து ஒரு நட்சத்திரக்குறி (*) இருக்கும்.

சில நேரங்களில் சராசரிக் கட்டணங்கள் காட்டப்படலாம். கிடைக்கும் அடுத்த 90 நாட்களின் சராசரிக் கட்டணத்தைக் கண்டறிந்து ஒவ்வொரு ஹோட்டலுக்கும் இரவு தங்குவதற்கான சராசரிக் கட்டணத்தை Google கணக்கிடுகிறது.

ஹோட்டல் கட்டணங்கள் காட்டப்படும் நாணய மதிப்பை மாற்றுதல்

நாணயத் தேர்வியைக் கண்டறிய, முடிவுகள் காட்டப்படும் பக்கத்தின் அடிப்பகுதிக்குச் செல்லவும். தேர்ந்தெடுத்த நாணயங்கள் சில பார்ட்னர் தளங்களில் கிடைக்காமல் போகலாம்.

ஹோட்டல் முன்பதிவுக்கான இணைப்புகள்

உங்கள் பயணத் தேதிகளுக்குக் கீழே, உங்கள் தேடலுடன் தொடர்புடைய, எங்கள் ஹோட்டல் பார்ட்னர்கள் வழங்கும் முன்பதிவு இணைப்புகள் காட்டப்படலாம். இந்த இணைப்புகள் உங்கள் தற்போதைய தேடல் வார்த்தைகளின் அடிப்படையில் காட்டப்படும். நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் அதன் அடிப்படையிலும் இவை காட்டப்படலாம்.

முன்பதிவு இணைப்புகளை ஹோட்டல் பார்ட்னர்கள் கட்டணம் இல்லாமலோ கட்டணம் செலுத்தியோ உருவாக்கலாம். கட்டண இணைப்புகளில் "விளம்பரங்கள்" என்ற பேட்ஜ் எப்போதும் காட்டப்படும். முன்பதிவுக்கான கட்டணமில்லா இணைப்புகளைத் தரவரிசைப்படுத்த வாடிக்கையாளர் விருப்பத்தேர்வு, முகப்புப் பக்க அனுபவம், Googleளுக்கு வழங்கப்பட்ட கட்டண விவரங்களின் துல்லியத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை Google பயன்படுத்துகிறது. ஹோட்டல் முன்பதிவுக்கான கட்டணமில்லா இணைப்புகள் குறித்து மேலும் அறிக.

கட்டண முன்பதிவு இணைப்புகளும் ஹோட்டல் விளம்பரங்களும் “விளம்பரங்கள்” என்ற பேட்ஜுடன் எப்போதும் தெளிவாக லேபிளிடப்பட்டு “சிறப்பு விருப்பங்கள்” என்பதன் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும். ஏலத் தொகை, விளம்பரத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விளம்பரங்களை விளம்பர ஏலத்தின்படி Google தரவரிசைப்படுத்துகிறது. தொடர்புத்தன்மை, கட்டணத் துல்லியம், பரிந்துரை/முகப்புப் பக்க அனுபவம் போன்ற காரணிகளை இது கருத்தில்கொள்கிறது. நீங்கள் ஹோட்டல் விளம்பரத்தைக் கிளிக் செய்தாலும், சில நேரங்களில், முன்பதிவை நிறைவுசெய்தாலும் Googleளுக்கு வருவாய் கிடைக்கக்கூடும். ஹோட்டல் விளம்பரங்கள் பற்றி மேலும் அறிக.

முன்பதிவு செய்வதற்கான இணைப்பைக் கிளிக் செய்தால், உங்கள் முன்பதிவை நிறைவுசெய்ய பார்ட்னர் இணையதளம் திறக்கப்படும். மாற்றங்கள், ரத்துசெய்தல்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதலுக்கான கோரிக்கைகள் உள்ளிட்ட வாடிக்கையாளர் சேவை தொடர்பான கேள்விகளுக்கு முன்பதிவு பார்ட்னரைத் தொடர்புகொள்ள வேண்டும்.

ஹோட்டல் டீல்கள்

ஹோட்டல் தேடலில் உங்களுக்கு உதவ பணத்துக்கு ஏற்ற மதிப்புடைய ஹோட்டல்களின் பெயர்களுக்கு அடுத்து “டீல்” அல்லது “சிறப்பான டீல்” பேட்ஜுகளை ஹைலைட் செய்து காட்டுவோம். 2 விதமான டீல்கள் உள்ளன:

  • தங்களது வழக்கமான கட்டணத்தை விடவோ அருகிலுள்ள தங்களைப் போன்ற ஹோட்டல்களின் கட்டணங்களை விடவோ குறைவான கட்டணத்தைக் கொண்ட ஹோட்டல்கள். 
    • ஒரு ஹோட்டல் பணத்திற்கு ஏற்ற மதிப்புடையதா என்பதைத் தீர்மானிக்க Google அந்தப் பகுதியில் இருக்கும் அதேபோன்ற ஹோட்டல்களின் “கட்டண விகிதத்தை” ஒப்பிட்டுத் தீர்மானிக்கும். ஹோட்டலின் தற்போதைய சராசரி கட்டணத்தைக் கடந்த ஆண்டின் சராசரி கட்டணத்துடன் ஒப்பிடுவோம். இந்த ஒப்பீடு சீசன்கள், முக்கிய நிகழ்வுகள் அல்லது விடுமுறைகளில் ஏற்படும் கட்டண மாற்றங்களைத் தெரிந்துகொள்ள உதவும். 
    • குறிப்பிட்ட ஹோட்டலுக்கும் இதே போன்று கணக்கிட்டு அந்தக் குறிப்பிட்ட ஹோட்டலின் கட்டண விகிதத்தை அருகிலிருக்கும் மற்ற ஹோட்டல்களுடன் ஒப்பிடுவோம். குறிப்பிட்ட ஹோட்டலின் விகிதம் மற்ற ஹோட்டல்களைவிடக் குறைந்தபட்சம் 15% குறைவாக இருந்தால் அதை “டீல்” என லேபிளிடுவோம். அதுவே குறைந்தபட்சம் 25% குறைவாக இருந்தால் “சிறப்பான டீல்” என லேபிளிடுவோம். 
  • ஹோட்டலுக்கான தற்போதைய சந்தைக் கட்டணத்திலிருந்து பார்ட்னர் வெளிப்படையாகத் தள்ளுபடி வழங்கும் ஹோட்டல்கள். சேமிப்புத் தொகை சதவீதத்தில் காட்டப்படும்.
ஹோட்டலின் தரங்கள்

தங்குமிட விருப்பங்களை ஒப்பிட்டுப் பார்க்க உதவுவதற்கு உள்ளூர் நிர்வாக அமைப்புகளால் ஹோட்டலுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வத் தர மதிப்பீட்டை Google காட்டும் (கிடைக்கும்பட்சத்தில்) அல்லது ஹோட்டலுக்குத் தர மதிப்பீடுகளை வழங்கும். ஒவ்வொரு ஹோட்டலுக்கும் ஒன்று முதல் ஐந்து வரை நட்சத்திர ரேட்டிங் வழங்கப்படும். 

அதிகாரப்பூர்வ ரேட்டிங்குகள் இல்லாதபோது, பல்வேறு ஆதாரங்களில் இருந்து Google தரவைச் சேகரிக்கும். மூன்றாம் தரப்புப் பார்ட்னர்கள், நேரடி ஆராய்ச்சி, ஹோட்டல் உரிமையாளர்களின் கருத்துகள் போன்றவை இந்த ஆதாரங்களில் அடங்கும். மேலும் கட்டணம், இருப்பிடம், அறைகளின் அளவு, வசதிகள் போன்ற ஹோட்டலின் விவரங்களை ஆராய்ந்து கணக்கிடும் மெஷின் லேர்னிங் ஊகிப்பும் இதில் அடங்கும். உயர்தர அலங்கரிப்பு, பிரத்தியேக உபசரிப்பு, ஆடம்பர வசதிகள் ஆகியவற்றை 4 நட்சத்திர ஹோட்டல் வழங்கலாம். அதேபோல் திருப்திகரமான அறைகளையும் மலிவான கட்டணங்களையும் 2 நட்சத்திர ஹோட்டல் வழங்கலாம். 

ஹோட்டலுக்கான ரேட்டிங் காட்டப்படவில்லை எனில், தொடர்புடைய நிர்வாகியிடம் இருந்து ஹோட்டல் அதிகாரப்பூர்வ ரேட்டிங்கைப் பெறாமலோ Google இன்னும் ஹோட்டலை மதிப்பாய்வு செய்யாமலோ இருக்கலாம். ஹோட்டலின் தரங்களைப் பற்றிய கருத்தை வழங்க எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

பயனர் கருத்துகள்

Google Search, Maps ஆகியவற்றில் உள்நுழைந்துள்ள பயனர்களிடமிருந்து ஹோட்டலைப் பற்றிய கருத்துகளை Google சேகரிக்கும். ஸ்பேமையும் தகாத வார்த்தைகளையும் அகற்ற தானியங்கு சிஸ்டங்களைப் பயன்படுத்துகிறோம். எந்தவொரு கருத்தையும் நாங்கள் போலியானது என்றோ Googleளின் மதிப்பாய்வுக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றோ நினைத்தால் அதை அகற்றிவிடுவோம். ஒரு கருத்து வெளியாகிவிட்டால், அந்தக் கருத்தை வழங்கியவர் மட்டுமே அதைத் திருத்தவோ மாற்றவோ முடியும். கருத்துகள் வழங்கப்பட்ட தங்குமிடங்களை Google காட்டும் வரை கருத்துகளும் தொடர்ந்து காட்டப்படும்.

நம்பகமான மூன்றாம் தரப்பினர்கள் வழங்கும் கருத்துகளுக்கு உரிமமும் வழங்குகிறோம். கருத்து வழங்குநர் செய்வதைத் தாண்டி ஸ்பேம் அல்லது தகாத வார்த்தைகளைக் கூடுதல் வடிப்பானைப் பயன்படுத்தி Google வடிகட்டுவதில்லை இந்தக் கருத்துகளைச் சரிபார்ப்பதுமில்லை.

பெரும்பாலான ஹோட்டல்கள் கருத்துகளின் சுருக்க விவரத்தைக் காட்டுகின்றன. 5 நட்சத்திரங்களில் Google பயனர்கள் வழங்கிய நட்சத்திரங்களின் சராசரி ரேட்டிங் அதில் காட்டப்படும். ஹோட்டலுக்கு மூன்றாம் தரப்பினர் வழங்கிய கருத்துகள் இருந்தாலும் இந்தச் சுருக்கவிவரத்தில் அவை சேர்க்கப்படாது. பயணி வகையின் அடிப்படையில் அறைகள், சேவை, இருப்பிடம், ரேட்டிங்குகள் போன்ற குறிப்பிட்ட தலைப்புகளின் சுருக்கவிவரத்தையும் காட்டுவோம். TrustYou என்ற மூன்றாம் தரப்பு இந்தச் சுருக்க விவரங்களை வழங்குகிறது.

ஹோட்டல் வசதிகள்

உங்கள் ஹோட்டல் தேடலுக்கு உதவ ஒவ்வொரு ஹோட்டலிலும் வைஃபை, நீச்சல் குளம் போன்ற சேவைகளும் வசதிகளும் உள்ளதா என Google காட்டுகிறது. பல்வேறு ஹோட்டல்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் உங்கள் தேடலைத் துல்லியமாக்கவும் இந்தத் தகவல்கள் உதவும்.

பல்வேறு ஆதாரங்களில் இருந்து ஹோட்டலில் கிடைக்கும் வசதிகள் பற்றிய தகவல்களை Google சேகரிக்கிறது. ஹோட்டல் உரிமையாளர்கள், அவர்களின் இணையதளங்கள், மூன்றாம் தரப்புப் பார்ட்னர்கள், நேரடி ஆராய்ச்சி, பயனர்களிடமிருந்து பெறும் கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களை Google சேகரிக்கிறது.

ஏதேனும் வசதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் ⁠எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

நற்சூழல் பாதுகாப்பு அம்சங்கள்

ஹோட்டலின் நற்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஹோட்டலுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சான்றிதழ்கள் (கிடைக்கும்பட்சத்தில்) பற்றிய தகவல்களை Google காட்டலாம். ஹோட்டல்களின் நற்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மேலும் அறிக.

ஹோட்டல் அறைகள்

ஹோட்டலைத் தேடுவதில் உங்களுக்கு உதவ, அதிகபட்சம் எத்தனை பேர் தங்கலாம், படுக்கை வகை போன்று ஒவ்வொரு ஹோட்டலிலும் உள்ள அறைகள் பற்றிய தகவல்களை Google காட்டலாம். பல்வேறு ஹோட்டல்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் உங்கள் தேடலைத் துல்லியமாக்கவும் இந்தத் தகவல்கள் உதவும்.

பல்வேறு ஆதாரங்களில் இருந்து ஹோட்டல் அறை பற்றிய தகவல்களை Google சேகரிக்கிறது. ஹோட்டல் உரிமையாளர்கள், அவர்களின் இணையதளங்கள், மூன்றாம் தரப்புப் பார்ட்னர்கள், நேரடி ஆராய்ச்சி, பயனர்களிடமிருந்து பெறும் கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து இந்தத் தகவல்களை Google சேகரிக்கிறது.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3748322964000434855
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
254
false
false