கட்டண மெம்பர்ஷிப்பை ரத்துசெய்வதில் ஏற்படும் சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

YouTube Premium, YouTube Music Premium ஆகியவற்றுக்கான மெம்பர்ஷிப்களையோ சேனல் மெம்பர்ஷிப்பையோ ரத்துசெய்வதில் சிக்கல் உள்ளதா? உங்கள் மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யவோ அதை ரத்துசெய்துவிட்டதை உறுதிசெய்துகொள்ளவோ இந்தப் பரிந்துரைகளைப் பார்க்கவும்.

ரத்துசெய்வதில் சிக்கல்கள் இருந்தால் என்ன செய்வது?

மெம்பர்ஷிப்பை ரத்துசெய்வதற்கான படிகள் உதவவில்லையெனில் நீங்கள் இவற்றைச் செய்து பார்க்கலாம்:

  • ஆப்ஸை மீண்டும் தொடங்கியோ வலை உலாவியை ரெஃப்ரெஷ் செய்தோ மறுபடியும் ரத்துசெய்து பார்க்கவும்.
  • உங்கள் கம்ப்யூட்டரில் வேறு உலாவியிலோ மறைநிலைச் சாளரத்திலோ ரத்துசெய்து பார்க்கவும்.
  • வேறொரு சாதனத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து ரத்துசெய்து பார்க்கவும்.

ரத்துசெய்ததை உறுதிசெய்துகொள்வது எப்படி?

மெம்பர்ஷிப்பை ரத்துசெய்துவிட்டதை உறுதிசெய்துகொள்வதற்கான சில வழிகள் இதோ:

  • அறிவிப்பையும் மின்னஞ்சலையும் பாருங்கள்: கட்டண மெம்பர்ஷிப்பை ரத்துசெய்தவுடன் YouTube மொபைல் ஆப்ஸிலோ கம்ப்யூட்டரிலோ அதற்கான உறுதிப்படுத்தல் அறிவிப்பைப் பார்ப்பீர்கள். ரத்துசெய்தவுடன், உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் அதற்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சலையும் பெறுவீர்கள். ரத்துசெய்ததை உறுதிசெய்துகொள்ள, உங்கள் இன்பாக்ஸில் “@youtube.com” என முடிவடையும் மின்னஞ்சல்களைத் தேடவும். 
  • கட்டண மெம்பர்ஷிப்களுக்கான பக்கத்தில் பாருங்கள்: youtube.com/purchases எனும் பக்கத்திற்குச் சென்று உங்கள் மெம்பர்ஷிப்புக்கும் அதன் பலன்களுக்குமான முடிவுத் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும். அதில் காட்டப்பட்டிருக்கும் தேதியே உங்கள் பில்லிங் சுழற்சியின் கடைசி நாளாகும், அன்றே மெம்பர்ஷிப் பலன்களும் முடிவடையும். உங்கள் பலன்கள் முடிவடையும் தேதி குறிப்பிடப்படவில்லை எனில் ரத்துசெய்வதற்கான படிகளைப் பின்பற்றிவிட்டு மீண்டும் பார்க்கவும்.

ரத்துசெய்த பிறகும் கட்டணம் விதிக்கப்பட்டால் என்ன செய்வது?

ரத்துசெய்த பிறகும் இந்தக் காரணங்களுக்காகத் தொடர்ந்து உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படக்கூடும்:

  • வேறு Google சந்தா அல்லது சேவைக்கான கட்டணம் விதிக்கப்பட்டிருக்கக்கூடும்: கட்டணம் குறித்த விவரங்களை உறுதிசெய்வதற்கும் அது YouTube கட்டண மெம்பர்ஷிப்பிற்கானதா என்பதைச் சரிபார்ப்பதற்கும், Google கட்டண மையத்தில் உள்ள ‘செயல்பாடு’ பிரிவைப் பார்க்கவும்.
  • தவறுதலாக உங்கள் மெம்பர்ஷிப் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. நீங்களோ உங்கள் கணக்கிற்கான அணுகலையுடைய வேறொருவரோ youtube.com/purchases என்ற பக்கத்தில் மெம்பர்ஷிப்பைத் தற்செயலாகப் புதுப்பித்திருக்கக்கூடும். அந்தப் பக்கத்திற்குச் சென்று மெம்பர்ஷிப் செயலிலுள்ளதா என்று பார்க்கவும். செயலில் இருந்தால் ரத்துசெய்வதற்கான படிகளைப் பின்பற்றவும்.
  • YouTube கட்டண மெம்பர்ஷிப்புடனான ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் உங்களிடம் உள்ளன. நீங்களோ உங்கள் கணக்கிற்கான அணுகலையுடைய வேறொருவரோ மற்றொரு மின்னஞ்சல் முகவரி, சாதனம் அல்லது பில்லிங் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி உள்நுழைந்திருக்கக்கூடும். பிற Google கணக்குகளைச் சரிபார்க்க:
    1. உங்கள் சுயவிவரப் படத்தைக்  கிளிக் செய்யவும்.
    2. கணக்கை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. தற்போது உள்நுழைந்துள்ள கணக்கிற்கு அடுத்து ஒரு தேர்வுக்குறியைப் பார்ப்பீர்கள். உங்களுக்குச் சொந்தமான மற்றொரு கணக்கை நீங்கள் பார்த்தால் அந்தக் கணக்கிற்கு மாறத் தட்டவும்.
    4. youtube.com/purchases எனும் பக்கத்திற்குச் சென்று கட்டண மெம்பர்ஷிப்பிற்கு உங்கள் மற்றொரு கணக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும். வேறு கணக்குகள் எதுவும் காட்டப்படவில்லையெனில் உங்களுக்குச் சொந்தமான பிற Google கணக்குகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து செயலிலுள்ள மெம்பர்ஷிப்கள் உள்ளனவா என்று பார்க்கலாம்
  • உங்கள் கணக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட மெம்பர்ஷிப்கள் உள்ளன. தவறுதலாக ஒரே மெம்பர்ஷிப்புக்குப் பலமுறை பதிவுசெய்துள்ளீர்களா என்பதை அறிய, ஒரே சந்தாவைப் பலமுறை பெறக்கூடிய இந்தப் பொதுவான சூழல்களில் பாருங்கள்.
  • நீங்கள் iPhone/iPad மூலம் பதிவுசெய்திருந்தால் Apple நிறுவனம் மூலம் YouTube கட்டண மெம்பர்ஷிப்புக்கான கட்டணம் விதிக்கப்படும். Apple நிறுவனம் தனிப்பட்ட ரத்துசெய்தல் மற்றும் பில்லிங் கொள்கைகளைக் கொண்டுள்ளது. அவை YouTubeன் கொள்கைகளிலிருந்து மாறுபடக்கூடும். மெம்பர்ஷிப் விவரங்களுக்கும் ரத்துசெய்தலை உறுதிப்படுத்தவும் Apple நிறுவனத்தின் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளவும்.

ரத்துசெய்த பிறகு என்ன ஆகும்?

உங்கள் பில்லிங் சுழற்சி முடிவடையும் வரை பலன்களை அணுக முடியும். பில்லிங் சுழற்சியின்போது எந்த நேரத்தில் ரத்துசெய்தாலும், நடப்பிலுள்ள பில்லிங் சுழற்சி முடிவடையும் வரை உங்கள் கட்டண மெம்பர்ஷிப்புக்கான பலன்களை அணுக முடியும். youtube.com/paid_memberships எனும் பக்கத்திற்குச் சென்று உங்கள் மெம்பர்ஷிப் விவரங்களையும் பில்லிங் சுழற்சியின் கடைசித் தேதியையும் பார்க்கலாம்.

 

குறிப்பு: 2022ம் ஆண்டு முதல், YouTube Premium மற்றும் Music Premiumமிற்கு Android மூலம் பதிவுசெய்த புதிய சந்தாதாரர்களுக்கு Google Play மூலம் கட்டணம் விதிக்கப்படும். இந்த மாற்றம் ஏற்கெனவே உள்ள சந்தாதாரர்களைப் பாதிக்காது. payments.google.com தளத்திற்குச் சென்று சமீபத்திய கட்டணங்களையும் உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படும் முறையையும் தெரிந்துகொள்ளலாம். Google Play பர்ச்சேஸுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கேட்பதற்கு இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8216202998174099817
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false