YouTubeல் நியாயமான பயன்பாடு

நியாயமான பயன்பாடு என்பது ஒரு சில சூழ்நிலைகளில் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பதிப்புரிமை பெற்றவரின் அனுமதியைப் பெறாமல் நீங்கள் மீண்டும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கும் சட்டக் கோட்பாடு ஆகும்.

பதிப்புரிமைச் சட்டப்படி, பதிப்புரிமையை மீறும் வீடியோக்களை அகற்றுவதற்குப் பதிப்புரிமை பெற்றவர்களிடமிருந்து YouTube பல கோரிக்கைகளைப் பெறுகிறது. சில நேரங்களில் இந்தக் கோரிக்கைகள் பதிப்புரிமை விதிவிலக்குகளுக்குத் தகுதிபெறும் அல்லது நியாயமான பயன்பாட்டின் தெளிவான உதாரணங்களாகத் தோன்றும் வீடியோக்களுக்குப் பொருந்துகிறது.

பதிப்புரிமை பெற்றவர்கள் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக, பதிப்புரிமை விதிவிலக்குகள் பொருந்துமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என நீதிமன்றங்கள் முடிவு செய்துள்ளன.

ஒரு வீடியோவில் பதிப்புரிமை விதிவிலக்கிற்குத் தகுதிபெற்றுள்ள பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியிருந்தால் அந்த வீடியோ சட்டபூர்வமானதாகவும் மீறல் இல்லாததாகவும் கருதப்படும். இதனால்தான் YouTubeல் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக, பதிப்புரிமை விதிவிலக்குகள் பொருந்துமா என்பது பற்றி யோசிக்குமாறு பதிப்புரிமை பெற்றவர்களிடம் அவ்வப்போது கேட்கிறோம். விதிவிலக்கிற்கு வீடியோ தகுதிபெறவில்லை எனப் பதிப்புரிமை பெற்றவர் நம்பினால், போதுமான விளக்கத்தை அவர் எங்களுக்கு வழங்க வேண்டும். 

பதிப்புரிமை விதிவிலக்கிற்கு ஏன் வீடியோ தகுதிபெறவில்லை என்பதற்குப் போதுமான விளக்கத்தைப் பதிப்புரிமை பெற்றவர் எங்களுக்கு வழங்கவில்லை எனில் அந்த வீடியோ YouTubeலிருந்து அகற்றப்படாது. 

உலகளவில் பதிப்புரிமை விதிவிலக்குகள்

பதிப்புரிமை விதிவிலக்குகள் குறித்த சர்வதேச விதிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை வேறுபடலாம். பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பதிப்புரிமை பெற்றவரின் அனுமதியின்றி எப்போதெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்த விதிகள் நாடுகளுக்கும்/பிராந்தியங்களுக்கும் இடையே வேறுபடக்கூடும்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும்போது உள்ளூர் விதிகளைக் கவனத்தில் கொள்வோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதிப்புரிமை விதிவிலக்கிற்குத் தகுதிபெறாத வீடியோ எனப் பதிப்புரிமை பெற்றவர்கள் தெரிவிக்கும்போது எப்போதெல்லாம் அவர்களிடம் கூடுதல் விளக்கங்களைக் கேட்டிருக்கிறோம் என்பது உட்பட பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைக்கு நாங்கள் எவ்விதமாகப் பதிலளிப்போம் என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு YouTube பதிப்புரிமை சார்ந்த வெளிப்படைத்தன்மை அறிக்கையைப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் வர்ணணை, விமர்சனம், ஆய்வு, கற்பித்தல், செய்தி அறிக்கை ஆகியவை நியாயமான பயன்பாடாகக் கருதப்படக்கூடும். ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் குறிப்பிட்ட அளவிலான விதிவிலக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பயன்பாட்டில் மேற்கோள் காட்டுதல், விமர்சனம், மதிப்பாய்வு, கேலிச்சித்திரம், பகடி, வேறொரு படைப்பின் பாணியைப் பின்பற்றுதல் போன்றவை பொருந்த வேண்டும். “நியாயமாகக் கையாளுதல்” என்றழைக்கப்படும் கருத்தாக்கத்தை மற்ற நாடுகள்/பிராந்தியங்கள் கொண்டுள்ளன. இது வேறுவிதமாகச் செயல்படக்கூடும்.

இறுதியில், நியாயமான பயன்பாடு தொடர்பான வழக்குகளை ஒவ்வொரு வழக்கின் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பயன்படுத்தும் வீடியோக்களைப் பதிவேற்றுவதற்கு முன்பு, நீங்கள் ஒரு நிபுணரிடமிருந்து சட்ட ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.

நியாயமான பயன்பாட்டிற்கான நான்கு காரணிகள்

அமெரிக்காவில், எதை நியாயமான பயன்பாடாகக் கருதலாம் என்பதை நீதிபதிகள் முடிவு செய்கிறார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்கிலும் நியாயமான பயன்பாட்டிற்கான நான்கு காரணிகள் எப்படிப் பொருந்துகின்றன என்பதை நீதிபதி கருத்தில் கொள்வார். நியாயமான பயன்பாட்டிற்கான நான்கு காரணிகள்:

1. பயன்பாட்டின் நோக்கமும் தன்மையும் (வணிக ரீதியான உபயோகம், லாபநோக்கமற்ற கல்வி நோக்கங்களுக்கான உபயோகம் உள்ளிட்டவை)

பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தின் உபயோகம் ”உருமாறிய தன்மை” உடையதா என்பதை நீதிமன்றங்கள் வழக்கமாகக் கவனிக்கும். அதாவது, அசல் உள்ளடக்கத்தைப் புது விதமாக வெளிப்படுத்துகிறதா, அதில் புதிய அர்த்தத்தைச் சேர்க்கிறதா அல்லது அசல் உள்ளடக்கத்திலிருந்து வெறுமனே நகலெடுக்கிறதா என்பதைக் கவனிக்கும்.
நியாயமான பயன்பாடு எனக் கருதப்படும் உள்ளடக்கத்தையுடைய வீடியோவின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பிருந்தாலும் வணிக ரீதியிலான உபயோகங்கள் நியாயமானவை எனக் கருதப்பட வாய்ப்பு குறைவு.

2. பதிப்புரிமை பெற்ற படைப்பின் தன்மை

முழுவதும் கற்பனையான படைப்புகளை உபயோகிப்பதை விட அதிகளவில் உண்மை சார்ந்த படைப்புகளிலிருந்து உள்ளடக்கத்தை உபயோகித்தால் அது நியாயமான பயன்பாடாகக் கருதப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

3. பதிப்புரிமை பெற்ற படைப்பின் மொத்த அளவில் உபயோகிக்கப்பட்ட பகுதியின் அளவு மற்றும் முக்கியத்தன்மை

அசல் படைப்பிலிருந்து பெரிய பகுதிகளைப் பயன்படுத்துவதைவிட அதிலிருந்து சிறு பகுதிகளைப் பயன்படுத்துவது நியாயமான பயன்பாடாகக் கருதப்படக்கூடும். எனினும், அது படைப்பின் 'அதிமுக்கியப்' பகுதியாக இருந்தால், சிறிய அளவு கூட சில தருணங்களில் நியாயமான பயன்பாடாகக் கருதப்படாமல் போகக்கூடும்.

4. பதிப்புரிமை பெற்ற படைப்பிற்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு அல்லது மதிப்பின் மீது உபயோகத்தின் காரணமாக ஏற்படும் மாற்றம்

பதிப்புரிமை பெற்றவர்கள் தங்களுடைய அசல் உள்ளடக்கத்திலிருந்து வருமானம் ஈட்டுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் பயன்பாடுகள் நியாயமான பயன்பாடுகளாகக் கருதப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. பதிப்புரிமை வழக்குகளில், நகைச்சுவையாகச் சித்தரிக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கு இந்தக் காரணியின் கீழ் நீதிமன்றங்கள் சில சமயங்களில் விதிவிலக்கு வழங்கியுள்ளன.

நியாயமான பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டு

Donald Duck Meets Glenn Beck in Right Wing Radio Duck

"Donald Duck Meets Glenn Beck in Right Wing Radio Duck"

வழங்குவது: rebelliouspixels

இந்த ரீமிக்ஸில் வெவ்வேறு அசல் படைப்புகளிலிருந்து சிறுசிறு பகுதிகள் எடுக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன. பொருளாதார மந்தம் ஏற்பட்ட நேரங்களில் ஆத்திரமூட்டும் வகையில் அதுகுறித்துக் கேலியாகச் சித்தரித்ததன் விளைவு பற்றிய புதிய செய்தியை இந்த ரீமிக்ஸ் உருவாக்குகிறது. அசல் படைப்புக்குப் புதிய அர்த்தத்தை உருவாக்கும் வீடியோக்கள் நியாயமான பயன்பாடாகக் கருதப்படக்கூடும்.

YouTubeல் நியாயமான பயன்பாட்டிற்கான பாதுகாப்பு முன்னெடுப்பு

அரிதான சந்தர்ப்பங்களில், பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளிலிருந்து YouTubeல் 'நியாயமான பயன்பாட்டிற்கான' எடுத்துக்காட்டுகளைப் பாதுகாக்கும் முன்னெடுப்பில் சேருமாறு YouTube கிரியேட்டர்களை நாங்கள் கேட்டிருக்கிறோம். இந்த முன்னெடுப்பின் மூலமாக, வீடியோ அகற்றுதல் கோரிக்கைகள் நியாயமாகப் பயன்படுத்தப்பட்ட வீடியோக்களுக்கு வழங்கப்பட்டு அது பதிப்புரிமை மீறல் வழக்காக மாறும் பட்சத்தில் அந்தக் கிரியேட்டர்களுக்கு $1 மில்லியன் வரையான வழக்காடும் செலவை இழப்பீடாக YouTube வழங்கும்.

இந்தக் கிரியேட்டர்கள் தங்கள் படைப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்பதை உறுதிசெய்வது இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். நியாயமான பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும் வரம்பையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி படைப்புலகத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, வெவ்வேறு நாடுகள்/பிராந்தியங்கள் இத்தகையப் பயன்பாடுகள் குறித்த விதிகளில் வேறுபாட்டைக் கொண்டிருப்பதால், அமெரிக்காவில் வசித்துக்கொண்டு தங்கள் வீடியோக்கள் அமெரிக்காவில் மட்டும் கிடைக்குமாறு செய்வதை ஏற்கும் கிரியேட்டர்களுக்கு மட்டுமே இந்த முன்னெடுப்பை எங்களால் வழங்க முடிகிறது.

YouTubeல் நியாயமான பயன்பாட்டிற்கான பாதுகாப்பு முன்னெடுப்பில் உள்ள வீடியோக்களுக்கான உதாரணங்கள்

Fracking Next Door

குறிப்பு: நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் எனில் இந்தப் பிளேலிஸ்ட்டில் நாங்கள் பாதுகாத்துள்ள வீடியோக்களைப் பார்க்கலாம். நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே வசிப்பவர் எனில் இந்தப் பிளேலிஸ்ட்டில் உள்ள வீடியோக்களைப் பார்க்க முடியாது.

அதிகளவில் நாங்கள் பெறும் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளில் ஒரு சிறிய அளவை இந்த வீடியோக்கள் பிரதிபலிக்கின்றன. அகற்றுவதற்கு உட்படும் நியாயமான பயன்பாடாக இருக்கக்கூடிய அதிகளவிலான வீடியோக்களில் சிலவற்றை மட்டுமே இவை பிரதிபலிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், பல காரணிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் சில வீடியோக்களுக்கு மட்டுமே நியாயமான பயன்பாட்டிற்கான பாதுகாப்பை YouTube வழங்க முடியும். பொதுவாக, நியாயமான பயன்பாட்டிற்கான நான்கு காரணிகளின் அடிப்படையில் எந்தெந்த வீடியோக்கள் நியாயமான பயன்பாட்டைச் சிறந்த முறையில் பிரதிபலிக்கின்றனவோ அவற்றை நாங்கள் தேர்ந்தெடுப்போம்.

இந்த முன்னெடுப்புக்கு உங்கள் வீடியோ தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். உங்கள் வீடியோவைப் பாதுகாக்குமாறு கேட்டு எங்களைத் தொடர்புகொள்ள வேண்டிய தேவையில்லை. உங்கள் வீடியோவுக்கு இந்தப் பாதுகாப்பை வழங்க முடிந்தால் நாங்களே உங்களைத் தொடர்புகொள்வோம்.

மீட்டெடுக்கப்பட்ட நியாயமான பயன்பாட்டிற்குப் பொருந்தும் வீடியோக்கள்

YouTube எல்லோருக்கும் சட்ட உதவியை வழங்க முடியாது என்றாலும், பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள் அனைத்து YouTube கிரியேட்டர்களையும் பாதிக்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறோம்.

சில குறிப்பிடும்படியான வழக்குகளில் பதிப்புரிமை பெற்றவர்களிடம் தங்களுடைய அகற்றுதல் கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்து நியாயமாகப் பயன்படுத்தப்பட்ட வீடியோக்களை மீட்டெடுக்குமாறு நாங்கள் கோரியுள்ளதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். உதாரணத்திற்கு:

  • அதிக விமர்சனத்துக்குள்ளான விளம்பரத்தின் கிளிப்களை, அவை ஏன் பார்வையாளர்களின் மனதைப் புண்படுத்தியது எனும் உரையாடலின் பகுதியாகக் காட்டிய The Young Turks சேனலின் இந்த வீடியோ.
  • நீரிழிவு நோய்க்கு நிரூபணம் ஆகாத சிகிச்சையைப் பரிந்துரைத்ததற்காக ஓர் அரசியல்வாதியை விமர்சனம் செய்யும் Secular Talk சேனலின் இந்த வீடியோ.
  • டீன் ஏஜர்களுக்காக எடுக்கப்பட்ட வேம்ப்பையர் தொடர்பான இரு வேறு படைப்புகளில் பெண்கள் எப்படிச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்று ஒப்பிடும் Buffy vs Edward: Twilight Remixed -- [original version] எனும் ரீமிக்ஸ் வீடியோ.
  • மோசமான நடத்தைக்கு உதாரணமாக ஒரு பிரபலமானவர் தோன்றும் வீடியோவைப் பயன்படுத்திய நேஷனல் ஆர்கனைசேஷன் ஃபார் மேரேஜ் (NOM - National Organization for Marriage) பதிவேற்றிய "No offense" எனும் வீடியோ.

கூடுதல் தகவல்கள்

நியாயமான பயன்பாடு பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினால், அது தொடர்பான ஏராளமான தகவல்களை ஆன்லைனில் பெறலாம். பின்வரும் தளங்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, அவற்றை YouTube அங்கீகரிக்கவில்லை:

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2616238651290154814
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false