பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளுக்கான தேவைகள்: வீடியோ அல்லாத உள்ளடக்கம்

சேனலின் பேனர் படம் போன்ற வீடியோ அல்லாத உள்ளடக்கம் உங்கள் பதிப்புரிமையை மீறுவதாக நீங்கள் கருதினால் அதை அகற்றும்படி நீங்கள் கேட்கலாம். உள்ளடக்கம் அகற்றப்பட்டால் பதிவேற்றியவரின் சேனலுக்குப் பதிப்புரிமை எதிர்ப்பு வழங்கப்படும்.

வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்குப் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். இந்தத் தகவல்கள் இல்லாமல் உங்கள் கோரிக்கையை எங்களால் செயலாக்க முடியாது. 

இந்தத் தகவல்களை மின்னஞ்சலின் உள்ளடக்கத்தில் சேர்த்து (தனி இணைப்பாக அல்ல) copyright@youtube.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது ஃபேக்ஸ்/தபால் மூலம் அனுப்பவும்.

நினைவில் கொள்ள வேண்டியவை
  • முழுச் சேனலுக்கும் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்க முடியாது. எனினும், சேனலின் விளக்கம் போன்ற சேனலின் கூறுகள் உங்கள் பதிப்புரிமையை மீறுவதாகக் கருதினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.
  • உங்கள் பதிப்புரிமையை மீறுவதாக நினைக்கும் வீடியோவை அகற்றக் கோருவதற்கு, எங்கள் இணையப் படிவத்தைப் பயன்படுத்துவதே மிகவும் எளிய வழியாகும். வீடியோ அல்லாத உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கைகளை எங்கள் இணையப் படிவம் ஆதரிக்காது.
பொய்யான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டாம். எங்கள் செயல்முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவது உங்கள் கணக்கை முடக்குவதற்கோ பிற சட்ட விளைவுகளுக்கோ வழிவகுக்கக்கூடும் (மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது போன்றவை).

பின்வரும் தேவையான தகவல்களை மின்னஞ்சலின் உள்ளடக்கத்தில் சேர்த்து (தனி இணைப்பாக அல்ல) copyright@youtube.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது ஃபேக்ஸ்/தபால் மூலம் அனுப்பவும்:

 1. உங்கள் தொடர்புத் தகவல்கள்

நீங்கள் அகற்றக் கோரும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றியவரும் YouTubeம் கோரிக்கை குறித்து உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும். பின்வருபவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகவல்களை உங்கள் கோரிக்கையில் சேருங்கள்: 

  • உங்கள் மின்னஞ்சல் முகவரி
  • உங்கள் இருப்பிட முகவரி
  • உங்கள் தொலைபேசி எண்

2. பதிப்புரிமை பெற்ற உங்கள் உள்ளடக்கம் குறித்த விளக்கம் 

நீங்கள் பாதுகாக்க விரும்பும், பதிப்புரிமை பெற்ற வீடியோ அல்லாத உள்ளடக்கம் குறித்து உங்கள் கோரிக்கையில் தெளிவாகவும் முழுமையாகவும் விவரியுங்கள்.

பதிப்புரிமை பெற்ற, ஒன்றுக்கும் மேற்பட்ட உங்கள் உள்ளடக்கங்கள் மீறப்பட்டதாகக் கருதினால் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டியலைச் சட்டப்படி உங்கள் கோரிக்கையில் சேர்க்கலாம்.

3. சிக்கலுக்குரிய உள்ளடக்கத்தின் குறிப்பிட்ட URLகள்

உங்கள் உரிமைகளை மீறுவதாகக் கருதும் வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்கான குறிப்பிட்ட இணைப்புகளை உங்கள் கோரிக்கையில் சேர்க்க வேண்டும். இணைப்புகளைக் குறிப்பிட்ட URL வடிவத்தில் அனுப்ப வேண்டும். சேனலின் பெயர் அல்லது URL போன்ற பொதுவான தகவல்கள் போதாது.

பதிப்புரிமையை மீறியதாகக் கூறப்படும் வீடியோ அல்லாத உள்ளடக்கத்தைப் புகாரளிப்பதற்கான சரியான URL வடிவங்களைக் கீழே பார்க்கலாம்:

உள்ளடக்க வகை சரியான URL வடிவம் URLலை எங்கே கண்டறிவது?
சேனல் பேனர் படங்கள்

www.youtube.com/channel/UCxxxxxxxxxxxxxxxxxxxxx

அல்லது

www.youtube.com/user/xxxxxxxxx

சேனல் பக்கத்திற்குச் சென்று அதன் பிறகுமுகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

சேனல் விளக்கங்கள் www.youtube.com/user/xxxxxxxxx/about

சேனலின் அறிமுகம் பிரிவிற்குச் சென்று அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

கிளிப்புகள் www.youtube.com/clip/xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx கிளிப்பின் தலைப்பைக் கிளிக் செய்து அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
வீடியோ கருத்துகள் www.youtube.com/watch?v=xxxxxxxxxx&lc=xxxxxxxxxxxxxxxxxx கருத்துக்கு மேலே உள்ள இடுகையிடப்பட்ட தேதியைக் கிளிக் செய்து (பக்கம் ரெஃப்ரெஷ் செய்யப்படும்) அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
இடுகைக்கான கருத்துகள் www.youtube.com/channel/xxxxxxxxxxx/community?lc=xxxxxxxxxxxx&lb=xxxxxxxxxxxx கருத்துக்கு மேலே உள்ள இடுகையிடப்பட்ட தேதியைக் கிளிக் செய்து (பக்கம் ரெஃப்ரெஷ் செய்யப்படும்) அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
சமூக இடுகைகள் https://www.youtube.com/post/xxxxxxxxxxxxxxxxxxx சமூக இடுகை வெளியிடப்பட்ட தேதியைக் கிளிக் செய்து (பக்கம் ரெஃப்ரெஷ் செய்யப்படும்) அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
மெம்பர்ஷிப் பேட்ஜ்கள், ஈமோஜி அல்லது கிரியேட்டரின் சலுகை தொடர்பான விளக்கங்கள் yt3.ggpht.com/xxxxx எனத் தொடங்கும் URL படத்தின் மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு பட முகவரியை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்

சேனல் URLலையும் சேர்க்கவும்:

www.youtube.com/channel/UCxxxxxxxxxxxxxxxxxxxxx

அல்லது

www.youtube.com/user/xxxxxxxxx

சேனல் பக்கத்திற்குச் சென்று அதன் பிறகுமுகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
பிளேலிஸ்ட் விளக்கங்கள்

www.youtube.com/playlist?list=xxxxxxxxxxxxxxxx

பிளேலிஸ்ட்டின் தலைப்பைக் கிளிக் செய்து அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

சுயவிவரப் படங்கள்
Super Stickers lh3.googleusercontent.com/xxxxx எனத் தொடங்கும் URL நேரலை அரட்டையில் உள்ள டாலர் குறியை கிளிக் செய்து அதன் பிறகு Super Sticker அதன் பிறகு படத்தின் மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு பட முகவரியை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

சேனல் URLலையும் சேர்க்கவும்:

www.youtube.com/channel/UCxxxxxxxxxxxxxxxxxxxxx

அல்லது

www.youtube.com/user/xxxxxxxxx

சேனல் பக்கத்திற்குச் சென்று அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

4. இந்த இரண்டு அறிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றைச் சேர்க்க வேண்டும்:

“புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் இந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதைப் பதிப்புரிமையாளரோ ஏஜெண்ட்டோ சட்டமோ அங்கீகரிக்கவில்லை என்று எனக்கு நன்னம்பிக்கை உள்ளது.”

"இந்த அறிவிப்பிலுள்ள தகவல்கள் சரியானவை என்றும் உண்மையை மறைத்தற்கான தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்து, மீறப்பட்டதாகக் கூறப்படும் பிரத்தியேக உரிமைக்கு நானே உரிமையாளர் அல்லது உரிமையாளர் சார்பாகச் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட் என்றும் உறுதியளிக்கிறேன்.”

5. உங்கள் கையொப்பம்

முழுமையாக அகற்றுவதற்கான கோரிக்கைகளுக்குப் பதிப்புரிமையாளர் அல்லது அவர் சார்பாகச் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டின் நேரடிக் கையொப்பமோ மின்னணுக் கையொப்பமோ தேவை.

இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய, பதிப்புரிமையாளரோ அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டோ கோரிக்கையின் கீழ்ப்பகுதியில் அவர்களின் சட்டப்பூர்வமான முழுப் பெயரைக் கையொப்பமாக உள்ளிடலாம். சட்டப்பூர்வமான முழுப் பெயர் என்பதில் பெயரின் முற்பகுதியும் பிற்பகுதியும் இருக்க வேண்டும், அது நிறுவனத்தின் பெயராக இருக்கக்கூடாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான தகவல்கள் அனைத்தையும் மின்னஞ்சலின் உள்ளடக்கத்தில் சேர்த்து (தனி இணைப்பாக அல்ல) copyright@youtube.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது ஃபேக்ஸ்/தபால் மூலம் அனுப்பவும்.

கூடுதல் தகவல்கள்  

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17913619930240332675
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false