வீடியோவில் ஆடியோ டிராக்கைச் சேர்த்தல்

YouTube மொபைல் ஆப்ஸிலிருந்து இனி உங்களால் வீடியோவின் ஆடியோ டிராக்கை மாற்ற முடியாது. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி YouTube Studioவில் இருந்து ஆடியோ டிராக்கை மாற்றிக் கொள்ளலாம்.

உரிமம் பெற்ற பாடல்களைக் கொண்ட லைப்ரரியில் இருந்து உங்கள் வீடியோவில் இசையைச் சேர்க்க YouTube Studio வீடியோ எடிட்டர் அனுமதிக்கிறது. இந்தப் பாடல்கள் YouTubeன் ஆடியோ லைப்ரரியில் உள்ளன. ஆடியோ லைப்ரரியில் உள்ள பாடல்களை வருமானம் ஈட்டும் வீடியோக்களில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வீடியோக்களில் பல மொழிகளில் ஆடியோ டிராக்குகளை எப்படிப் பதிவேற்றுவது என்பது குறித்து மேலும் அறிக.

குறிப்பு:
  • உங்கள் வீடியோ 1,00,000 பார்வைகளுக்கு மேல் பெற்றிருந்தால் உங்களால் அதில் மாற்றங்களைச் சேமிக்க முடியாமல் போகக்கூடும். YouTube கூட்டாளர் திட்டத்தில் உள்ள பயனர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.
  • 6 மணிநேரத்திற்கும் குறைவாக உள்ள வீடியோக்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்.

வீடியோவில் ஆடியோ டிராக்கைச் சேர்த்தல்

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் திருத்த விரும்பும் வீடியோவைக் கிளிக் செய்யவும்.
  4. இடதுபுற மெனுவில், எடிட்டர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ஆடியோவை  தேர்ந்தெடுத்து, புதிய ஆடியோ டிராக்கைக் கண்டறிய தேடல் வடிப்பான்களை பயன்படுத்தவும். டிராக்குகளைக் கேட்க, பிளே என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்களுக்கு விருப்பமான பாடலைக் கண்டறிந்த பிறகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும். எடிட்டரில் நீல நிறப் பெட்டியில் பாடல் தோன்றும்.
    • பாடல் தொடங்க வேண்டிய நேரத்தை மாற்ற பெட்டியை இழுக்கவும்.
    • பாடலின் பிளேயாகும் அளவை மாற்ற, பெட்டியின் ஓரங்களை இழுக்கவும்.
    • மிகத் துல்லியமாகச் சரிசெய்ய வேண்டுமெனில் பெரிதாக்கல் Zoom in விருப்பங்களைப் பயன்படுத்தவும்.
  7. இவற்றைச் செய்ததும் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8923408856387947942
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false