YouTube BrandConnect சேவையைப் பயன்படுத்தத் தொடங்குதல்

YouTube BrandConnect என்பது பிராண்டு விளம்பர உள்ளடக்கத் தொடர்களைப் படைக்கும் வாய்ப்புகளைக் கிரியேட்டர்களுக்கு வழங்கும் ஒரு சுய-சேவைத் தளமாகும். தங்கள் பிராண்டின் விளம்பர உள்ளடக்கத் தொடர்களைச் செயல்படுத்தவும், இணைந்து பணியாற்றுவதற்கான கிரியேட்டர்களை அடையாளம் காணவும் பிராண்டுகள் எங்களுக்குச் சொந்தமான இன்ஃப்ளூயன்சர் டாஷ்போர்டைப் பயன்படுத்தலாம்.

கிரியேட்டர்களுக்கு, YouTube BrandConnect பிளாட்ஃபார்ம் பின்வருபவற்றை வழங்குகிறது:

  • உங்கள் விருப்பத்தேர்வுகளுடன் ஒத்துப்போகின்ற பிராண்டின் விளம்பர உள்ளடக்கத் தொடர்களில் பணியாற்றுவதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள்
  • விளம்பரங்களை நிர்வகிப்பதற்கென YouTube Studioவில் உள்ள சுய-சேவைக் கருவிகள்
  • உங்கள் சேனலுக்கேற்ற வகையில் வழங்கப்படும் பார்வையாளர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ள பிரத்தியேகமாக்கக்கூடிய மீடியா கிட். இதன்மூலம், பிராண்டுகளுக்கு உங்களை நீங்களே பரிந்துரைத்து ஸ்பான்சர்ஷிப்களைப் பெறலாம். உங்கள் மீடியா கிட்டைப் பயன்படுத்துவது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.
  • உங்களுக்கு வழிகாட்ட உதவும் சிறந்த நடைமுறைகளும் ஆதாரங்களும்

YouTube BrandConnect மூலம் உங்கள் விளம்பரங்களைச் சிறப்பாக நிர்வகிக்கலாம், உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு வீடியோக்களை உருவாக்கலாம், எந்த பிராண்டுடன் பணிபுரிவது என்பதைத் தேர்வுசெய்யலாம்.

கிடைக்கும் நிலை மற்றும் தகுதிபெறுவதற்கான தேவைகள்

YouTube BrandConnect பீட்டா பதிப்பில் உள்ளதால், கிடைக்கும் நாடுகள்/பிராந்தியங்களில் ஏதேனுமொன்றில் வசிக்கும் தகுதிபெறும் கிரியேட்டர்களுக்கு மட்டுமே தற்சமயம் இது கிடைக்கிறது.

YouTube BrandConnect பிளாட்ஃபார்மில் பங்கேற்க, தகுதிபெறுவதற்கான இந்தக் குறைந்தபட்சத் தேவைகளை உங்கள் சேனல் பூர்த்திசெய்ய வேண்டும்:

பின்வருபவை உட்பட YouTubeன் வருமானம் ஈட்டுதல் கொள்கைகளையும் உங்கள் சேனல் பின்பற்ற வேண்டும்:

கிடைக்கும் நாடுகள்

பின்வரும் நாடுகள்/பிராந்தியங்களில் உள்ள தகுதிபெறும் கிரியேட்டர்களுக்கு YouTube BrandConnect கிடைக்கிறது:
  • பிரேசில்
  • இந்தியா
  • இந்தோனேசியா
  • யுனைடெட் கிங்டம்
  • அமெரிக்கா

YouTube BrandConnect சேவையை இயக்குதல்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி உங்கள் சேனலுக்கு YouTube BrandConnect சேவையை இயக்க:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் வருமானம் ஈட்டுதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. BrandConnect பிரிவைக் கிளிக் செய்யவும். உங்கள் சேனல் தகுதிபெற்றிருந்தால் மட்டுமே இந்தப் பிரிவு காட்டப்படும்.
  4. திரையின் மேற்பகுதியில் தொடங்குக என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது திரையின் கீழ்ப்பகுதியில் தொடங்குங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. YouTube BrandConnect மாடியூலைப் படித்துப் பார்த்துவிட்டு ஏற்கவும்.

மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் சேனலுக்கு YouTube BrandConnect சேவையை இயக்க:

  1. YouTube Studio மொபைல் ஆப்ஸை  திறக்கவும்.
  2. கீழுள்ள மெனுவில், வருமானம் ஈட்டுதல் என்பதைத் தட்டவும்.
  3. BrandConnect கார்டைத் தட்டவும். உங்கள் சேனல் தகுதிபெற்றிருந்தால் மட்டுமே இந்தக் கார்டு காட்டப்படும்.
  4. இயக்கு என்பதைத் தட்டவும்.
  5. YouTube BrandConnect மாடியூலைப் படித்துப் பார்த்துவிட்டு ஏற்கவும்.
கவனத்திற்கு: MCNகள் YouTube BrandConnect மாடியூலைத் தங்கள் Studio உள்ளடக்க உரிமையாளர் கணக்கில் அமைப்புகள் அதன் பிறகு ஒப்பந்தங்கள் என்பதற்குச் சென்று ஏற்கலாம்.

YouTube BrandConnect சேவையை நிர்வகித்தல்

உங்கள் விருப்பத்தேர்வுகளை அமைத்தல்

YouTube BrandConnect மாடியூலை ஏற்றுக்கொண்ட பிறகு, பிராண்டின் உள்ளடக்கம் தொடர்பான வாய்ப்புகளைப் பெற நீங்கள் தகுதிபெறுவீர்கள். பிராண்டுகளால் இப்போது உங்களைக் கண்டறிய முடியும். இருப்பினும், பதிவுசெய்வதால் பிராண்டின் உள்ளடக்கம் தொடர்பான வாய்ப்புகள் உறுதியாகக் கிடைக்குமென உத்திரவாதம் அளிக்க முடியாது.

பிராண்டுகள் வழங்கும் வாய்ப்புகள் நேரடியாக YouTube Studioவில் காட்டப்படும். அங்கு நீங்கள் அவற்றின் விவரங்களைப் பார்க்கலாம். வாய்ப்புகள் உங்களுக்குத் தொடர்புடையவையாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலும் இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் விருப்பத்தேர்வுகள் தானாக அவற்றை வடிகட்டும். உங்கள் தேவைகளுக்கேற்ப பொருத்தங்களை மேம்படுத்த உங்கள் விருப்பத்தேர்வுகளை மாற்றலாம்:

  1. YouTube Studioவின் வருமானம் ஈட்டுதல் பகுதிக்குச் செல்லவும்.
  2. BrandConnect and then விருப்பத்தேர்வுகளை அமைத்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்பான்சர்ஷிப் நிர்வாகம்

YouTube Studioவிலோ YouTube Studio மொபைல் ஆப்ஸிலோ உள்ள விவரங்களைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் டாஷ்போர்டில் உள்ள ஒவ்வொரு வாய்ப்புக்கான விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு வாய்ப்பிலும் விளம்பரத் தொடரின் டைம்லைன் குறித்த உயர்மட்ட அறிமுகம் இருக்கும். விளம்பரத் தொடரின் டைம்லைன் நீங்கள் ஸ்பான்சர்ஷிப்பின் நிலைகளைக் கடப்பதற்கும் அந்தச் செயல்முறையில் உங்கள் நிலையைப் பார்ப்பதற்கும் உதவும். விளம்பரத் தொடரின் டைம்லைனில் ஆஃபர், விளம்பரத் தொடர் வீடியோக்கள், விளம்பரத் தொடர் செயல்திறன் ஆகிய மூன்று உயர்மட்ட நிலைகள் இருக்கும்.

ஆஃபர்

“ஆஃபர்” பிரிவு உங்கள் விளம்பரத் தொடருக்கான விவரங்களை விளக்குவதோடு பிராண்டு குறித்த கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும்:

விலை

இந்த டீலுக்கு உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தொகை. ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய இறுதித் தொகை விளம்பரத் தொடரின் அளவு, கிரியேட்டருக்கான வரவேற்பு ஆகியவற்றையும் இன்ன பிற காரணிகளையும் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு வாய்ப்புக்கான கட்டணம் குறித்தும் நீங்கள் கலந்துரையாடி முடிவெடுக்கலாம்.

அறிமுகம் விளம்பரத் தொடர் மற்றும் பிராண்டின் தயாரிப்பு அல்லது சேவையின் மேலோட்டப் பார்வை. பார்வையாளர்களுடன் நீங்கள் பகிர வேண்டும் என்று பிராண்டு விரும்பும் ஏதேனும் யோசனைகள், பார்வையாளர்களை நீங்கள் செய்யத் தூண்ட வேண்டும் என்று பிராண்டு விரும்பும் செயல் ஆகியவை இந்தப் பிரிவில் இருக்கும்.
செய்ய வேண்டியவற்றின் சுருக்கவிவரம் விளம்பரத் தொடருக்காக நீங்கள் பிராண்டிற்குச் செய்ய வேண்டியவை.
தயாரிப்புத் தகவல் உங்கள் சேவைகளுக்கு ஈடாக பிராண்டால் உங்களுக்கு வழங்கப்படும் தயாரிப்பு/சேவை குறித்த விளக்கம்.

அறிமுகம் (பிராண்டு)

பிராண்டு குறித்த உயர்மட்ட அறிமுகம் மற்றும் பிராண்டின் வலைதளத்திற்கான இணைப்பு.

ஆஃபர்களுக்குப் பதிலளித்தல் 

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், ஆஃபரில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் விதிமுறைகளைப் பொறுத்தும், டீலை Google/பிராண்டு வழங்குகிறதா என்பதைப் பொறுத்தும் அமையும். 

YouTube BrandConnect மாடியூல் விதிமுறைகளில் நீங்கள் கையொப்பமிட்டிருந்து பிராண்டிடம் இருந்து நேரடியாக டீலைப் பெற்றிருந்தால், பின்வரும் செயல்களை அந்த ஆஃபரில் நீங்கள் செய்யலாம்:

  • ஆர்வம் தெரிவித்தல்: ஆர்வமுள்ளது எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் தொடர்பு விவரங்களை பிராண்டுடன் பகிர்வோம். இதன் மூலம் டீல் குறித்துக் கலந்துரையாடி முடிவெடுக்க அவர்கள் உங்களைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் ஆர்வத்தை உறுதிப்படுத்தியதும், தொடர்பு விருப்பங்கள் போன்ற விவரங்களையும் உறுதிப்படுத்துதலில் நீங்கள் சேர்க்கலாம், இது உங்களைச் சிறப்பாகத் தொடர்புகொள்வதற்கு பிராண்டிற்கு உதவும். டீலில் பேமெண்ட் விதிமுறைகள், விலை, ஒப்பந்த மொழி ஆகியவை இருக்கும். டீலை முடிவுசெய்ய, பிராண்டுடன் நேரடியாக ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவீர்கள். மேலும் பிராண்டால் உங்களுக்குப் பணம் வழங்கப்படும். பிராண்டுடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நீங்கள் புரிந்துகொண்டதை உறுதிசெய்துகொள்ளவும்; நீங்கள் ஒரு தொழில்முறை சட்ட வல்லுநரிடம் ஆலோசனை பெறலாம்.
  •  நிராகரித்தல்: நிராகரி எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், ஒப்பந்தத்தைத் தொடர உங்களுக்கு விருப்பமில்லை என்பதை பிராண்டிடம் தெரிவிப்போம்.

YouTube BrandConnect சுய-சேவைத் தள பீட்டா விதிமுறைகளில் நீங்கள் கையொப்பமிட்டிருந்தால் உங்களுக்கு Googleளிடம் இருந்து டீல்கள் வழங்கப்படக்கூடும். அதில் உங்கள் YouTubeக்கான AdSense கணக்கில் Google செலுத்த வேண்டிய கட்டணம் குறிப்பிடப்பட்டிருக்கும். அத்தகைய ஆஃபரில் பின்வரும் செயல்களைச் செய்யலாம்: 

  • ஏற்றுக்கொள்ளுதல்: நீங்கள் ஆஃபரை ஏற்றுக்கொண்டால், பிராண்டுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்படி உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் ஒப்பந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்திருந்தால், பங்கேற்பதற்காக Google மூலம் உங்களுக்குப் பணம் செலுத்தப்படும். பிராண்டுடன் கையொப்பமிடும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை நீங்கள் புரிந்துகொண்டதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • விலைமாற்றக் கேட்டல்: விலைமாற்றக் கேட்டல் விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், வாய்ப்பில் பங்கேற்பதற்கான புதிய கட்டணம் குறித்துக் கலந்துரையாடி முடிவெடுக்கலாம்.  
  • கலந்துரையாடல்: கலந்துரையாடல் விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், ஆஃபர் குறித்து மேலும் அறிந்துகொள்ள பிராண்டைத் தொடர்புகொள்ளலாம்.
  • நிராகரித்தல்: நிராகரி எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், ஒப்பந்தத்தைத் தொடர உங்களுக்கு விருப்பமில்லை என்பதை பிராண்டிடம் தெரிவிப்போம்.

விளம்பரத் தொடர் வீடியோக்கள்

பிராண்டு ஸ்பான்சர்ஷிப்பை நீங்கள் ஏற்றுக்கொண்ட பிறகு, உங்கள் விளம்பரத் தொடருக்கான உள்ளடக்கத்தை உருவாக்கலாம். உங்கள் உள்ளடக்கத்தை 'பட்டியலிடப்படாதது' எனப் பதிவேற்றி மதிப்பாய்வு மற்றும் அனுமதிக்காக பிராண்டிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடியோக்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்தடுத்த படிகளை “விளம்பரத் தொடர் வீடியோக்கள்” பிரிவு விவரிக்கிறது. பிராண்டிற்கு ஏதேனும் கருத்து இருந்தால், உங்கள் பிராண்டு கூட்டாளரின் கருத்துகளையும் சேர்த்து மின்னஞ்சலில் பெறுவீர்கள்.

பிராண்டு மதிப்பாய்வுகள் மட்டுமின்றி, உங்கள் உள்ளடக்கம் Google Ads கொள்கைகளுக்கும் சமூக வழிகாட்டுதல்களுக்கும் இணங்குவதை உறுதிசெய்ய மதிப்பாய்வு செய்யப்படுகிறது. உங்கள் உள்ளடக்கம் முழுமையாக அனுமதிக்கப்பட்டதும், அதுகுறித்த மின்னஞ்சலையும் YouTube Studioவில் அதன் நிலை தொடர்பான அறிவிப்பையும் பெறுவீர்கள். உங்கள் உள்ளடக்கத்தை உடனடியாக வெளியிடலாம் அல்லது அதை எப்போது வெளியிட விரும்புகிறீர்கள் என்பதைத் திட்டமிடலாம். பிராண்டிடம் நீங்கள் ஒப்புக்கொண்ட டைம்லைனின்படி உள்ளடக்கத்தை வெளியிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

விளம்பரத் தொடர் செயல்திறன்

“விளம்பரத் தொடர் செயல்திறன்” பிரிவு உங்கள் உள்ளடக்கத்தின் செயல்திறன் குறித்த உயர்மட்ட மேலோட்டப் பார்வையை வழங்குகிறது. அதில் இவையும் இன்ன பிறவும் அடங்கும்:

  • உங்கள் விளம்பரத் தொடரில் மீதமுள்ள நாட்கள்
  • உள்ளடக்கத்திற்கான பார்வைகள்
  • விருப்பங்கள்

உங்கள் உள்ளடக்கத்தின் செயல்திறன் குறித்த கூடுதல் விவரங்களை YouTube பகுப்பாய்வுகளில் பார்க்கலாம்.

பொதுவான கேள்விகள்

YouTube BrandConnect சேவையை நான் எப்படிப் பயன்படுத்துவது?

தற்சமயம், YouTube BrandConnect பீட்டா பதிப்பில் உள்ளதால் கிடைக்கும் நாடுகள்/பிராந்தியங்களில் வசிக்கும் ஒரு சில கிரியேட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. பீட்டா பதிப்பிற்கு நீங்கள் தகுதிபெற்றால் YouTube Studioவில் BrandConnect பிரிவு காட்டப்படும். மேலும் பல கிரியேட்டர்களுக்கும் நாடுகள்/பிராந்தியங்களுக்கும் இந்த அம்சத்தை விரைவில் வெளியிடுவோம் என நாங்கள் நம்புகிறோம்.

ஏஜெண்ட்டுகள்/நிர்வாகிகள் தங்கள் கிரியேட்டர்களுக்காக YouTube BrandConnect சேவையைப் பயன்படுத்தலாமா?

பயன்படுத்தலாம். சேனலுடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்குப் புதிய வாய்ப்புகள் குறித்த மின்னஞ்சல் அறிவிப்புகளை நாங்கள் அனுப்புவோம். இந்த மின்னஞ்சல் அறிவிப்புகளை நீங்கள் பெற வேண்டுமெனக் கிரியேட்டர் விரும்பினால், அவர் தனது சேனலுடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரியை மாற்றிக்கொள்ளலாம். உங்கள் கிரியேட்டருக்காக நீங்கள் YouTube Studioவில் நேரடியாக ஸ்பான்சர்ஷிப்களை நிர்வகிக்க, அவர் உங்களை அனுமதிக்கப்பட்ட பயனராகவும் சேர்க்கலாம்.

YouTube BrandConnect மூலம் எனக்குக் கிடைத்த வருவாயை எங்கே பார்க்கலாம்?

YouTube BrandConnect சுய-சேவைத் தள பீட்டா விதிமுறைகளுக்கு உட்படும் மற்றும் Google நேரடியாக வழங்கும் டீல்களுக்கு, YouTube பகுப்பாய்வுகளில் உங்கள் வருவாயைப் பார்க்கலாம். தொடர்புடைய கால அளவைத் தேர்வுசெய்யவும். கார்டில் “YouTube BrandConnect வருவாய்” எனும் வரிசை காட்டப்படும். உங்கள் வருவாய் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து மேலும் அறிக.
பிராண்டிடம் இருந்து நேரடியாக நீங்கள் டீலைப் பெற்றால், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் YouTube பகுப்பாய்வுகளில் காட்டப்படாது.

பிராண்டு விளம்பர உள்ளடக்கத் தொடரிலிருந்து விளம்பரதாரருக்கு வீடியோக்களை இணைக்கவா?

பிராண்டு விளம்பர உள்ளடக்கத் தொடரில் விளம்பரதாரருடன் நீங்கள் கூட்டு சேர்ந்திருந்தால், விளம்பரத் தொடரில் உள்ள உள்ளடக்கத்தைத் தங்கள் Google Ads கணக்கில் இணைப்பதற்கான கோரிக்கையை விளம்பரதாரர் உங்களுக்கு அனுப்பலாம். விளம்பரதாரரின் கோரிக்கையை ஏற்பதும் ஏற்காததும் முற்றிலும் உங்களைச் சார்ந்ததாகும். அத்துடன் சேனலைச் சிறந்ததாக மாற்றுவதற்கான செயல்களையே எப்போதும் நீங்கள் செய்ய வேண்டும்.
இணைப்புக் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், Google Adsஸில் உள்ளடக்கத்தின் இயல்பான வரவேற்பு பற்றிய அளவீடுகளை விளம்பரதாரர் பார்க்கலாம், இணைக்கப்பட்ட வீடியோக்களை அவரின் விளம்பரப்படுத்தலில் பயன்படுத்தலாம். பிராண்டின் உள்ளடக்கத்தை விளம்பரதாரருடன் எப்படி இணைப்பது என்பது குறித்து மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7989695532619725413
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false