எதிர்ப்புகள் பற்றிய FAQ

நான் எதிர்ப்பைப் பெற்றால் என்ன நடக்கும்?

நீங்கள் பதிப்புரிமை எதிர்ப்பையோ சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பையோ பெற்றால் மின்னஞ்சல் மூலமும் மொபைல், டெஸ்க்டாப், YouTube சேனல் ஆகியவற்றில் அறிவிப்புகள் மூலமும் அதுகுறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். நீங்கள் ஏன் எதிர்ப்பைப் பெற்றுள்ளீர்கள் என்றும் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்றும் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.

ஏன் 2 வெவ்வேறு சிஸ்டங்கள் வைக்கப்பட்டுள்ளன?

சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்புகள் மற்றும் பதிப்புரிமை எதிர்ப்புகளை வெவ்வேறு சிக்கல்களாக நாங்கள் கருதுவதால் 2 சிஸ்டங்களை வைத்துள்ளோம்.

பதிப்புரிமை, சமூக வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மீறுவது வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் என்பது கிரியேட்டர்களும் பார்வையாளர்களும் YouTube சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காகப் பின்பற்ற வேண்டியதாகும். பதிப்புரிமை விதிகள் என்பது கிரியேட்டர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும். ஒவ்வொருவரும் தங்கள் வீடியோக்களிலும் லைவ் ஸ்ட்ரீம்களிலும் கதைகளிலும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும்போது இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

பதிப்புரிமைக் கட்டுப்பாடுகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். ஆனால் நிர்வாணம் மற்றும் பாலியல் உள்ளடக்கத்தைப் பற்றிய எங்கள் கொள்கைகளை அறியாமல் இருந்திருக்கலாம். அல்லது சிறுபடங்கள் பற்றிய எங்களின் கொள்கைகளை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். ஆனால் மற்றவர்களின் பாடல்களை உங்கள் வீடியோவில் பயன்படுத்தினால் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறுவீர்கள் என்பதை உணர்ந்திருக்கமாட்டீர்கள். எங்களின் அனைத்துக் கொள்கைகளையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு அளிக்க விரும்புகிறோம்.

எத்தகைய செயல்பாடுகள் பதிப்புரிமை மீறல்களாகக் கருதப்படுகின்றன என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் இவற்றின் மூலம் தெரிந்துகொள்ளலாம்:

எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் இந்த வீடியோவைப் பார்க்கலாம் அல்லது உதவி மையத்திலுள்ள கொள்கை ஒவ்வொன்றையும் படிக்கலாம்.

ஒவ்வொரு எதிர்ப்பின் விளைவுகளும் ஏன் வெவ்வேறாக உள்ளன?

பதிப்புரிமை எதிர்ப்புகளையும் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்புகளையும் பெற்ற பயனர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் தெரிந்துகொள்ளும் வகையிலும் YouTubeல் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்கும் வகையிலும் நடவடிக்கைகளை வடிவமைத்துள்ளோம். சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்புகளைப் பொறுத்தவரை, தங்களின் உள்ளடக்கம் விதிகளை மீறியுள்ளது என்பது குறித்த எச்சரிக்கையைப் பெற்ற உடனே பயனர்களால் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள முடிகிறது என்பதையும் அவர்கள் அதுதொடர்பான கொள்கைப் பக்கத்திற்குச் செல்கின்றனர் என்பதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

இதுதான் நீங்கள் பெறும் முதல் பதிப்புரிமை எதிர்ப்பு எனில் பதிப்புரிமைப் பள்ளியை நிறைவுசெய்ய வேண்டும்.

ஏன் நீங்கள் எப்போதும் எச்சரிக்கை பெறுவதில்லை?

சமூக வழிகாட்டுதல்களை மீறுதல், பதிப்புரிமை மீறல், முதல்முறை மீறல் போன்ற சில விஷயங்களுக்கு எச்சரிக்கையைப் பெறுவீர்கள்.

தவறுகள் நடக்கின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் உங்கள் உள்ளடக்கம் முதன்முறையாக எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் ஒன்றை பின்பற்றாதபோது நாங்கள் எச்சரிக்கை வழங்குகிறோம். சமூக வழிகாட்டுதல்கள் எச்சரிக்கை 90 நாட்களுக்குப் பிறகு காலாவதியாக, நீங்கள் கொள்கைப் பயிற்சியை மேற்கொள்ளலாம். எங்கள் கொள்கைகள் குறித்து அறிந்துகொள்ளவும் மீறல்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும் இது உங்களுக்கு வாய்ப்பளிக்கும் என நாங்கள் நம்புகிறோம். பயிற்சியை நிறைவுசெய்த பிறகு நீங்கள் வேறு கொள்கையை மீறினால் மற்றொரு எச்சரிக்கையைப் பெறுவீர்கள். கொள்கைகளைத் தொடர்ச்சியாக மீறுபவர்கள் எதிர்காலத்தில் பயிற்சி எடுப்பதை நாங்கள் தடுக்கக்கூடும்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை நாங்கள் பெற்றால், முதல் முறையாக இருந்தாலும் அந்த வீடியோ அகற்றப்படுவதோடு பதிப்புரிமை எதிர்ப்பையும் பெறுவீர்கள் சட்டத்துடன் இணங்குவதற்காக நாங்கள் அதைச் செய்கிறோம். வீடியோ அகற்றப்பட, பதிப்புரிமையாளர் முழுமையான மற்றும் சரியான சட்டப்பூர்வக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு: எதிர்ப்பைப் பெறுவதற்கு Content ID உரிமைகோரல்கள் வழிவகுக்காது.

நான் எந்த வகையான எதிர்ப்பைப் பெற்றுள்ளேன் என எவ்வாறு தெரிந்துகொள்வது?

எதிர்ப்பைப் பற்றி உங்களிடம் தெரிவிக்கும்போது எந்த வகையான எதிர்ப்பைப் பெற்றுள்ளீர்கள் என்பதையும் தெரிவிப்போம். அது சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பு எனில் உங்கள் உள்ளடக்கம் எந்தக் கொள்கையை மீறியுள்ளது என்பதையும் தெரிவிப்போம்.

சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்புகளும் பதிப்புரிமை எதிர்ப்புகளும் உங்கள் Studio டாஷ்போர்டிலும் உள்ளடக்கப் பிரிவிலும் காட்டப்படும்.

நான் எதிர்ப்பைப் பெற்றால் என்ன செய்ய வேண்டும்?

தவறுகள் நடப்பது இயல்பு என்பதையும் மக்கள் தெரிந்தே எங்கள் கொள்கைகளை மீறுவதில்லை அல்லது மற்றவர்களின் பதிப்புரிமையை மீற நினைப்பதில்லை என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். எதிர்ப்பைப் பெறுவது உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் நீண்ட காலமாக உங்கள் சேனல் மீது ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன.

நீங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பைப் பெற்றால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறோம்:

  1. எங்கள் கொள்கைகளுக்கு உட்பட்டு உங்கள் உள்ளடக்கம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
  2. எங்கள் கொள்கைகளைப் படித்துப்பார்த்ததும் நாங்கள் தவறுதலாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என நீங்கள் நினைத்தால் அதுகுறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும். இந்த முடிவு குறித்து இங்கே மறுபரிசீலனை செய்யக் கோரலாம்.

நீங்கள் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெற்றால் இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

  • காலாவதியாகும் வரை காத்திருத்தல்: பதிப்புரிமை எதிர்ப்புகள் 90 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகும். இதுதான் நீங்கள் பெறும் முதல் பதிப்புரிமை எதிர்ப்பு எனில் பதிப்புரிமைப் பள்ளியை நிறைவுசெய்ய வேண்டும்.
  • திரும்பப் பெறக் கோருதல்: உங்கள் வீடியோவை உரிமை கோரிய நபரைத் தொடர்புகொண்டு பதிப்புரிமை மீறல் தொடர்பான உரிமைகோரலைத் திரும்பப் பெறுமாறு அவரிடம் கேட்கலாம்.
  • எதிர் அறிவிப்பைச் சமர்ப்பித்தல்: உங்கள் வீடியோ கொள்கைகளை மீறியுள்ளது எனத் தவறாக அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டிருந்தாலோ நியாயமான பயன்பாட்டிற்குத் தகுதிபெற்றிருந்தாலோ நீங்கள் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10277687247312966568
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false