உங்கள் YouTube மாணவர் மெம்பர்ஷிப்பை நிர்வகித்தல்

 

உங்கள் YouTube மாணவர் மெம்பர்ஷிப் தொடர்பாக ஏதேனும் கேள்வி உள்ளதா? உங்கள் மெம்பர்ஷிப்பின் சரிபார்ப்பு அல்லது மாற்றங்கள் தொடர்பாக உதவி பெற கீழே பார்க்கவும். கூடுதல் உதவி தேவைப்பட்டால் YouTube உதவி மையத்தைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் மாணவர் நிலையை மீண்டும் சரிபார்த்தல்

YouTube Music Premium அல்லது YouTube Premiumமிற்கான மாணவர் மெம்பர்ஷிப்களில் மாணவருக்கான தள்ளுபடிக் கட்டணத்தைத் தொடர்ந்து பெற, உங்கள் மாணவர் நிலையை ஆண்டுதோறும் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மெம்பர்ஷிப் ஆண்டின் இறுதியிலும் உங்கள் மாணவர் நிலையை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்பதை நினைவூட்டும் மின்னஞ்சல் மற்றும்/அல்லது ஆப்ஸ் அறிவிப்பைப் பெறுவீர்கள்.
மாணவர் நிலையை மீண்டும் சரிபார்க்க நீங்கள் தகுதிபெற்றிருந்தால் மாணவர் நிலை காலாவதியாவதற்கு முன்பு 30 நாட்களுக்குள் மெம்பர்ஷிப்பை நீங்கள் புதுப்பிக்கத் தொடங்கலாம். உங்கள் மாணவர் நிலை காலாவதியாகும் தேதியைத் தெரிந்துகொள்ள அல்லது மாணவர் மெம்பர்ஷிப்பைப் புதுப்பிக்க http://youtube.com/purchases தளத்திற்குச் செல்லவும்.
சரிபார்ப்பு தொடர்பாக உதவி தேவைப்பட்டால் customerservice@sheerid.com எனும் முகவரியில் SheerIDயைத் தொடர்புகொள்ளவும். உங்களின் மெம்பர்ஷிப் தொடர்பாக உதவி தேவைப்பட்டால் YouTube உதவி மையத்தைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் மெம்பர்ஷிப்பை ரத்துசெய்தல்

எப்போது வேண்டுமானாலும் உங்கள் YouTube கட்டண மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யலாம். ஒருவேளை நீங்கள் ரத்துசெய்தால் மாதாந்திர பில்லிங் சுழற்சி முடியும் வரை கட்டண மெம்பர்ஷிப்பின் பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

மாணவர் மெம்பர்ஷிப் முடிதல்

நீங்கள் YouTube மாணவர் மெம்பர்ஷிப்பை 4 ஆண்டுகள் வரை பெறலாம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உங்கள் தகுதி மீண்டும் சரிபார்க்கப்படும். இனி மாணவர் மெம்பர்ஷிப்பைப் பெற நீங்கள் தகுதிபெறாதிருந்தும் சந்தாதாரராகத் தொடர்ந்தால் உங்கள் மாணவர் மெம்பர்ஷிப் தானாகவே முழுக் கட்டண மெம்பர்ஷிப்பாக மாற்றப்படும் . எப்போது வேண்டுமானாலும் உங்கள் YouTube கட்டண மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
357541532638609971
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false