திட்டமிடப்பட்ட பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள் குறித்து அறிந்துகொள்ளுதல்

தங்களுடைய பதிப்புரிமை பெற்ற வீடியோ YouTubeல் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பதிப்புரிமையாளர் கண்டறிந்தால் அவர்கள் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்

இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, பதிப்புரிமை பெற்ற வீடியோவை அகற்றுவதற்குத் திட்டமிடுவதற்கான விருப்பத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். அதாவது, அகற்றுதல் கோரிக்கையை YouTube சரிபார்த்த பிறகு பதிவேற்றியவர் தனது சேனலில் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த 7 நாட்களில், பதிவேற்றியவர்கள் பின்வரும் சில செயல்களை மேற்கொள்ளலாம்:

  • அவர்களின் வீடியோவை நீக்குதல்: பதிவேற்றியவர் 7 நாட்கள் முடிவதற்கு முன்பே தனது வீடியோவை YouTubeலிருந்து நீக்கிவிட்டால் அவரது சேனல் 'பதிப்புரிமை எதிர்ப்பைப்' பெறாது.
    • 7 நாட்களுக்குப் பிறகு, வீடியோவை அகற்றினாலும் பதிப்புரிமை எதிர்ப்பு தீர்க்கப்படாது. 
  • உரிமைகோருபவரைத் தொடர்புகொள்ளுதல்: பதிவேற்றியவர்கள் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்தவரை (உரிமைகோருபவர்) தொடர்புகொண்டு அவர்களின் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைத் திரும்பப்பெறும்படி கேட்கலாம்.
  • மறுபரிசீலனையை ரத்துசெய்தல்: பதிவேற்றியவர் Content ID உரிமைகோரலை மறுபரிசீலனை செய்யக் கோரியதன் விளைவாகத் திட்டமிடப்பட்ட அகற்றுதல் கோரிக்கையைப் பெற்றிருந்தால், பதிவேற்றியவர் 7 நாட்களுக்குள் தனது மறுபரிசீலனையை ரத்துசெய்யலாம்.
  • எதுவும் செய்யாதிருத்தல்: 7 நாட்கள் முடிந்த பின்பு அகற்றுதல் கோரிக்கை செயல்படுத்தப்படும் வரை பதிவேற்றியவர்கள் காத்திருக்கலாம். அப்போது வீடியோ YouTubeலிருந்து அகற்றப்பட்டு பதிவேற்றியவரின் சேனலில் பதிப்புரிமை எதிர்ப்பும் அமல்படுத்தப்படும். அதன்பிறகு, பதிவேற்றியவர் பதிப்புரிமை எதிர்ப்பைத் தீர்க்க வேண்டுமா என்பதையும் அதை எப்படித் தீர்க்க வேண்டும் என்பதையும் தேர்வுசெய்யலாம்.
    • ஒன்றுக்கும் மேற்பட்ட Content ID உரிமைகோரல் அல்லது அகற்றுதல் கோரிக்கையால் வீடியோ பாதிக்கப்படலாம். ஆனால் ஒரு நேரத்தில் ஒரு பதிப்புரிமை எதிர்ப்பை மட்டுமே பெறும்.

இச்சமயத்தில், பதிவேற்றியவர் தனது வீடியோ தவறுதலாக அகற்றப்பட்டது என நம்பினால் அவர் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம். பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைச் செயல்முறை குறித்து மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2262425905786412501
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false