இந்த வீடியோவில் உள்ள இசை

YouTube Studio உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும். அணுகலைப் பெற, உங்கள் YouTube கூட்டாளர் நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

இசை உள்ள ஒரு வீடியோவை நீங்கள் பார்க்கும்போது வீடியோவின் விளக்கத்தில் “இசை” என்ற பிரிவு இருக்கக்கூடும். பாடல், கலைஞரின் பெயர்கள் போன்ற வீடியோவிலுள்ள இசை தொடர்பான தகவல்கள் இந்தப் பிரிவில் இருக்கும்.

பின்வரும் சூழல்களில் இந்தத் தகவல்களைச் சில வீடியோக்களுக்கு YouTube தானாகவே சேர்க்கும்:

“இசை” பிரிவில் இசை வீடியோக்களின் இணைப்புகளோ பிற அதிகாரப்பூர்வ உள்ளடக்கத்தின் இணைப்புகளோ காட்டப்படக்கூடும். இதன் மூலம் நீங்கள் முன்பு கேட்டறியாத பாடல்களையும் கலைஞர்களையும் கண்டறியலாம்.

பொதுவான கேள்விகள்

“இசை" பிரிவில் ஏன் சில தகவல்கள் இல்லை?

“இசை” பிரிவில் தகவல்கள் இல்லை என்றாலோ அதிலுள்ள தகவல்களில் பிழை இருந்தாலோ உங்கள் லேபிளையோ விநியோகஸ்தரையோ தொடர்புகொள்ளுங்கள். சரியான தகவல்கள் கொண்ட தரவுத்தகவல் புதுப்பிப்பை அவர்கள் அனுப்பலாம்.

எங்களிடம் உள்ள தகவல்களின் தரம் மற்றும் துல்லியத்தன்மையை மேம்படுத்தவும் கூடுதல் தகவல்களைச் சேர்க்கவும் இசைத் துறைக் கூட்டாளர்களுடன் தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

பல பாடல்களைக் கொண்ட வீடியோக்களில் முதல் பத்து பாடல்கள் பற்றிய தகவல்கள் “இசை” பிரிவின் கீழ் தோன்றும்.

வீடியோவில் எனது பாடல் இடம்பெற்று, அதுகுறித்த தகவல்கள் “இசை” பிரிவில் இல்லையெனில் என்ன செய்வது?

பின்வருபவை உட்பட பல்வேறு காரணங்களுக்காக “இசை” பிரிவு காட்டப்படாது:

  • பதிப்புரிமையாளரிடமிருந்து YouTubeக்குப் போதுமான தகவல்கள் கிடைக்காமல் இருந்தால்.
  • இதுவரை உங்கள் இசை அடையாளம் காணப்படாமல் இருந்தால்.
  • சமீபத்தில் அந்த வீடியோ உரிமைகோரப்பட்டு அதுகுறித்த தகவல்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருந்தால்.
  • வீடியோ “சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தால்.
உங்கள் சார்பாகப் பதிப்புரிமையை நிர்வகிக்கும் ரெக்கார்டு லேபிள், இசை வெளியீட்டாளர் அல்லது ராயல்டி வசூல் குழுமத்தோடு பணிபுரிகிறீர்களா? அவர்களைத் தொடர்புகொண்டு YouTubeக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் என்னென்ன என்பதை உறுதிசெய்யலாம். ISRCகள், ISWCகள், UPCகள், ISNIகள் போன்ற அடையாளங்காட்டிகள் இந்தத் தகவல்களில் இருக்க வேண்டும்.

எனது பாடல் இடம்பெற்று, அதில் பங்களித்தவர்களின் பெயர்கள் அல்லது ஆல்பம் ஆர்ட் தவறாக இருந்தால் என்ன செய்வது?

நீங்கள் இசையமைப்பாளராகவோ பாடலாசிரியராகவோ இருந்து உங்கள் பாடல் தவறான அல்லது முழுமையடையாத தகவல்களுடன் அடையாளம் காணப்பட்டால், நீங்களும் உங்கள் பாடல்களும் ISNI அங்கீகாரத்துடன் பதிவுசெய்துள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். உங்களையும் உங்கள் இசையையும் குறிப்பிட எங்களிடம் சிறந்த தகவல்கள் உள்ளனவா என்பதை உறுதிசெய்வதற்கு இதுபோன்ற பதிவுசெய்தல் உதவலாம்.

உங்கள் சார்பாகப் பதிப்புரிமையை நிர்வகிக்கும் ரெக்கார்டு லேபிள், இசை வெளியீட்டாளர் அல்லது ராயல்டி வசூல் குழுமத்தோடு பணிபுரிகிறீர்களா? அவர்களைத் தொடர்புகொண்டு YouTubeக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் என்னென்ன என்பதை உறுதிசெய்யலாம். ISRCகள், ISWCகள், UPCகள், ISNIகள் போன்ற அடையாளங்காட்டிகள் இந்தத் தகவல்களில் இருக்க வேண்டும். இசை லேபிள்களோ விநியோகஸ்தர்களோ புதுப்பிக்கப்பட்ட தரவுத்தகவலுடன் ஆர்ட்வொர்க் மீடியா ஃபைல்களை எங்களுக்கு அனுப்பலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1478258421325690880
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false