Copyright Match Toolலைப் பயன்படுத்துதல்

YouTubeல் உள்ள மற்ற வீடியோக்களோடு பொருந்தும் அல்லது பொருந்தக்கூடிய சாத்தியமுள்ள வீடியோக்களை Copyright Match Tool தானாகவே அடையாளம் காண முடியும். பொருந்தும் வீடியோ அடையாளம் காணப்பட்டதும் நீங்கள் YouTube Studioவில் அதைச் சரிபார்த்து என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யலாம்.

Copyright Match Toolலைப் பயன்படுத்தும் விதம்

இது எப்படிச் செயல்படுகிறது?

சரியான பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ள எந்தவொரு YouTube பயனரும் Copyright Match Toolலைப் பயன்படுத்தலாம். உங்கள் அகற்றுதல் கோரிக்கை ஏற்கப்பட்டதும், அதில் புகாரளிக்கப்பட்டுள்ள வீடியோக்களோடு பொருந்தும் சாத்தியமுள்ள வீடியோக்களைக் கண்டறிவதற்காக YouTube பதிவேற்றங்களை Copyright Match Tool ஸ்கேன் செய்யத் தொடங்கும். அதன் பிறகு, பொருந்தும் சாத்தியமுள்ள இந்த வீடியோக்களை நீங்கள் சரிபார்த்து அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கலாம்.

YouTube கூட்டாளர் திட்டத்தில் (YPP - YouTube Partner Program) இருக்கும் கூட்டாளர்களுக்காகவும் இந்தப் படிவத்தை நிரப்பி மேம்பட்ட பதிப்புரிமை நிர்வாகக் கருவியைக் கோரும் எந்தவொரு சேனலுக்காகவும், உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மற்ற YouTube சேனல்களில் மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளனவா என்று அறிய Copyright Match Tool ஸ்கேன் செய்யும். உங்கள் வீடியோவுக்குப் பிறகு பதிவேற்றப்பட்ட வீடியோக்களையே இந்தக் கருவி ஸ்கேன் செய்யும். எனவே, நீங்களே YouTubeல் அந்த வீடியோவை முதலில் பதிவேற்றியவராக இருக்க வேண்டும்.

Copyright Match Toolலைத் தவறாகப் பயன்படுத்தினால் நீங்கள் அந்த அம்சத்திற்கான அணுகலை இழக்கக்கூடும் அல்லது உங்கள் YouTube கணக்கோ கூட்டாளர் திட்டத்திலான பங்கேற்போ முடக்கப்படக்கூடும். பதிப்புரிமை சார்ந்த அகற்றுதலைக் கோரும் செயல்முறையை உள்நோக்கத்துடனோ தொடர்ச்சியாகவோ தவறாகப் பயன்படுத்துவது, பொருத்தமறியும் சிஸ்டத்தை ஆய்வு செய்ய முயல்வது அல்லது ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்வது ஆகிய செயல்கள் தவறான பயன்பாட்டில் அடங்கும்.

பொருந்தும் வீடியோக்களைச் சரிபார்த்து அவற்றின் மீது நடவடிக்கை எடுத்தல்

பொருந்தும் வீடியோக்களை நீங்கள் சரிபார்க்கும் முன், பொருந்துகின்ற ஒரு வீடியோவை நாங்கள் அடையாளம் கண்டதால் மட்டுமே அந்த வீடியோ உங்கள் பதிப்புரிமையை மீறியதாக அர்த்தமாகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொருந்தும் ஒவ்வொரு வீடியோவையும் சரிபார்த்து அவற்றுக்கு நியாயமான உபயோகம், நியாயமாகக் கையாளுதல் அல்லது இதுபோன்ற பதிப்புரிமை விதிவிலக்கு பொருந்துமா என்று தீர்மானிப்பது உங்கள் பொறுப்பாகும்.

உங்கள் வீடியோக்களுடன் பொருந்தும் வீடியோக்களைச் சரிபார்த்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பதிப்புரிமை  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பொருந்துபவை பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. பொருந்தும் வீடியோக்களைச் சரிபார்க்கவும். பார்வைகளின் எண்ணிக்கையின் (மொத்தப் பார்வைகள்) அடிப்படையில் வீடியோக்களையோ சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் (சந்தாதாரர்கள்) அடிப்படையில் சேனல்களையோ கண்டறிய வடிப்பானைத் தேர்ந்தெடுக்கலாம்.
  5. நடவடிக்கை எடுக்க விரும்பும் வீடியோவுக்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும். மேற்கொள்ள விரும்பும் நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்:
    • காப்பிடு: பொருந்தும் வீடியோவை இந்த விருப்பம் பொருந்துபவை பிரிவிலிருந்து அகற்றும். பொருந்தும் வீடியோ நீக்கப்படாது, அதில் மாற்றமும் செய்யப்படாது. காப்பிடப்பட்ட பொருந்தும் வீடியோக்கள் காப்பகம் பிரிவில் காட்டப்படும்.
    • அகற்றக் கோரு: இந்த விருப்பம் அகற்றுதல் கோரிக்கைக்கான எங்கள் இணையப் படிவத்தைத் திறக்கும். எனவே பொருந்தும் வீடியோவுக்கு நீங்கள் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். சமர்ப்பித்த பிறகு, அகற்றுதல் கோரிக்கைகள் எனும் பிரிவில் உங்கள் அகற்றுதல் கோரிக்கைகளைக் கண்காணிக்கலாம்.
    • சேனலைத் தொடர்புகொள்க: இந்த விருப்பம் மூலம், முன்கூட்டியே எழுதப்பட்ட மின்னஞ்சலைப் பொருந்தும் வீடியோவைப் பதிவேற்றியவருக்கு அனுப்பலாம். நீங்கள் இதற்கு முன் அனுப்பிய மின்னஞ்சல்களை மெசேஜ்கள் பிரிவில் பார்க்கலாம்.

உங்கள் வீடியோக்களுடன் பொருந்தும் சாத்தியமுள்ள வீடியோக்களைச் சரிபார்த்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பதிப்புரிமை  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அகற்றுதல் கோரிக்கைகள் பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. மீண்டும் பதிவேற்றப்படுவதிலிருந்து தானாகவே தடுக்கப்படுவதற்குத் தகுதிபெறாத, பொருந்தும் சாத்தியமுள்ள வீடியோக்களைப் பொருந்தும் வீடியோக்களைக் கண்டறிதல் நெடுவரிசையில் பார்க்கலாம். ஏனெனில் அவை நகல்கள் இல்லை.
  5. ஒரு வரிசையைக் கிளிக் செய்யவும். வீடியோ குறித்த கூடுதல் விவரங்களை அந்த வரிசை விரிவாகக் காட்டும்.
  6. பொருந்துபவற்றைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும். பொருந்துபவை பிரிவு திறக்கப்பட்டு பொருந்தும் சாத்தியமுள்ள வீடியோக்களைக் காட்டுவதற்காக வடிகட்டப்படும்.
  7. நடவடிக்கை எடுக்க விரும்பும் வீடியோவுக்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும். மேற்கொள்ள விரும்பும் நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்:
    • காப்பிடு: பொருந்தும் வீடியோவை இந்த விருப்பம் பொருந்துபவை பிரிவிலிருந்து அகற்றும். பொருந்தும் வீடியோ நீக்கப்படாது, அதில் மாற்றமும் செய்யப்படாது. காப்பிடப்பட்ட பொருந்தும் வீடியோக்கள் காப்பகம் பிரிவில் காட்டப்படும்.
    • அகற்றக் கோரு: இந்த விருப்பம் அகற்றுதல் கோரிக்கைக்கான எங்கள் இணையப் படிவத்தைத் திறக்கும். எனவே பொருந்தும் வீடியோவுக்கு நீங்கள் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். சமர்ப்பித்த பிறகு, நீங்கள் அகற்றக் கோரிய வீடியோக்களை அகற்றுதல் கோரிக்கைகள் பிரிவில் பார்க்கலாம்.
    • சேனலைத் தொடர்புகொள்க: இந்த விருப்பம் மூலம், முன்கூட்டியே எழுதப்பட்ட மின்னஞ்சலைப் பொருந்தும் வீடியோவைப் பதிவேற்றியவருக்கு அனுப்பலாம். நீங்கள் இதற்கு முன் அனுப்பிய மின்னஞ்சல்களை மெசேஜ்கள் பிரிவில் பார்க்கலாம்.
Copyright Match Tool கண்டறியும் புதிய பொருந்தும் வீடியோக்கள் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள, பொருந்துபவை பிரிவை அவ்வப்போது பாருங்கள். பொருந்தும் வீடியோக்கள் கண்டறியப்படும்போது அவற்றை உங்களுக்குத் தெரிவிக்க, உங்கள் சேனல் பக்கத்தில் பெல் அறிவிப்புகள்  காட்டப்படும்.

FAQகள்

பொருந்தும் வீடியோ மீது நான் எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லையெனில் என்ன ஆகும்?
பொருந்தும் ஒவ்வொரு வீடியோ மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவசியமில்லை. பொருந்துபவை பிரிவிலிருந்து பொருந்தும் வீடியோவை அகற்ற அதைக் காப்பிடலாம். பொருந்தும் ஒவ்வொரு வீடியோவையும் ஒருமுறை மட்டுமே காட்டுவோம். எனவே, நீங்கள் அதைக் காப்பிட்டால் பொருந்துபவை பிரிவில் அது காட்டப்படாது.
எனது வீடியோவுடன் பொருந்தும் ஒரு வீடியோவை YouTubeல் பார்த்தேன். ஆனால் 'பொருந்துபவை' பிரிவில் அது காட்டப்படவில்லை. அது ஏன்?
உங்கள் வீடியோக்களுடன் முழுமையாகவோ கிட்டத்தட்ட முழுமையாகவோ பொருந்தும் வீடியோக்களையே Copyright Match Tool கண்டறியும். யாரேனும் உங்கள் வீடியோவின் ஒரு சிறிய கிளிப்பைப் பயன்படுத்தியிருந்தால் அது உங்களுக்குக் காட்டப்படாமல் இருக்கக்கூடும். உங்கள் வீடியோக்களில் ஒன்று மீண்டும் பதிவேற்றப்பட்டதை அறிந்து நீங்கள் அதை அகற்ற விரும்பினால், பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைக்கான இணையப் படிவத்தைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் அதைப் புகாரளிக்கலாம்.
எனது சில வீடியோக்கள் அவற்றுடன் பொருந்தும் வீடியோக்களைக் கண்டறியத் தகுதிபெறவில்லை. அது ஏன்?
பின்வரும் சில காரணங்களுக்காக, உங்கள் வீடியோக்களில் ஒன்றுடன் பொருந்தும் வீடியோக்களை நாங்கள் ஸ்கேன் செய்யாமல் இருக்கக்கூடும்:
  • YouTubeல் அந்த வீடியோவை முதலில் பதிவேற்றம் செய்தவர் நீங்கள் அல்ல
  • ஏற்கெனவே Content ID மூலம் வீடியோ பாதுகாக்கப்பட்டுள்ளது
  • வீடியோ மீது Content ID உரிமைகோரல் உள்ளது
நான் ஓர் இசைக் கலைஞன். எனது பாடல்களைக் கொண்ட வீடியோ பதிவேற்றங்களைக் கண்டறிய நான் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாமா?

ஆம். உங்கள் பாடல்/ஆடியோவைப் பயன்படுத்தியுள்ள வேறொருவரின் வீடியோவை அகற்ற பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைக்கான இணையப் படிவத்தை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் பாடல்/ஆடியோவுடன் பொருந்தக்கூடிய சாத்தியமுள்ள ஆடியோவை உடைய மற்ற வீடியோக்களை Copyright Match Tool காட்டும். ஆடியோ மாற்றியமைக்கப்பட்டோ டப்பிங் செய்யப்பட்டோ மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்களையும் Copyright Match Toolலால் கண்டறிய முடியும்.

யாரேனும் உங்கள் பாடல்/ஆடியோவின் ஒரு பகுதியை அவரது வீடியோவில் பயன்படுத்தியிருந்தால் Copyright Match Tool அந்த வீடியோவை உங்களுக்குக் காட்டாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனுமதியின்றி உங்கள் ஆடியோவைப் பயன்படுத்தும் வீடியோவை நீங்கள் கண்டறிந்தால் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைக்கான எங்கள் இணையப் படிவத்தைப்பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் அதைப் புகாரளிக்கலாம்.
எனது வீடியோக்களுடன் பொருந்தும் வீடியோக்கள் ஏன் தானாகவே அகற்றப்படுவதில்லை?

அங்கீகரிக்கப்படாத வகையில் தங்கள் வீடியோ பயன்படுத்தப்படுவது குறித்து பதிப்புரிமையாளர்கள் அளிக்கும் புகார்களையே YouTube சார்ந்திருக்கிறது. வீடியோவை முதலில் பதிவேற்றியவர் யார் என்பதை மட்டுமே எங்களால் தெரிவிக்க முடியும். அது யாருக்குச் சொந்தமானது அல்லது அதைப் பதிவேற்றுவதற்கான அனுமதி யாரிடம் உள்ளது என்பது குறித்த விவரங்களை எங்களால் தெரிவிக்க முடியாது.

பல கிரியேட்டர்கள் தங்கள் வீடியோவை மீண்டும் பதிவேற்றுவதற்கான அனுமதியைப் பிற சேனல்களுக்கு வழங்குவார்கள். சில சமயங்களில், மீண்டும் பதிவேற்றிய பிறகு கிரியேட்டர்கள் உரிம ஒப்பந்தம் செய்துகொள்வார்கள் அல்லது வீடியோக்களில் இணைந்து பணியாற்றி அவற்றின் நகல்களைப் பல்வேறு சேனல்களில் பதிவேற்றுவார்கள்.

அதுமட்டுமின்றி, உங்கள் வீடியோவின் ஒவ்வொரு உபயோகத்தின்போதும் உங்கள் பதிப்புரிமை மீறப்பட்டிருக்காது. நியாயமான உபயோகம், பொதுக் களம் ஆகியவை உங்கள் வீடியோ மீண்டும் பதிவேற்றப்பட்டதற்கான காரணங்கள் சரியானவையே என்பதை உணர்த்தும் சில உதாரணங்களாகும்.

அசல் பதிப்புரிமையாளர்களின் உரிமைகளுக்கும் பதிவேற்றுபவர்களின் உரிமைகளுக்கும் சமமான முறையில் மதிப்பளிக்க, Copyright Match Tool மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள் குறித்த தகவல்களைக் கிரியேட்டர்களுக்கு வழங்க முயல்கிறது. அதன்பின், பொருந்தும் வீடியோவை அவர்கள் கவனமாகச் சரிபார்த்த பிறகு என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து Copyright Match Tool மூலம் தீர்மானிக்கலாம்.

ஒரு சேனலிலுள்ள பல்வேறு வீடியோக்களை அகற்றுமாறு கோரியிருந்தேன். அந்தச் சேனல் ஏன் முடக்கப்படவில்லை?

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைச் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க நாங்கள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். முடக்கப்படுவதற்கு முன்பு, பதிப்புரிமை எதிர்ப்புகளைச் சரிசெய்ய சேனல்களுக்கு எங்கள் சிஸ்டம் வாய்ப்பளிக்கும்.

இன்னமும் செயல்பாட்டிலுள்ள ஒரு சேனலுக்கு எதிராகப் பல்வேறு அகற்றுதல் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தால், அம்முறைகளில் ஏதேனுமொன்று செயலிலுள்ளது என்று அர்த்தம். ஒரு சேனலுக்கு எதிரான அகற்றுதல் கோரிக்கைகளின் எண்ணிக்கை எங்கள் அமலாக்கக் கொள்கைகளில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் தொடர்ந்து பார்க்க நேர்ந்தால் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

முழுச் சேனலையும் புகாரளிக்கலாமா?

YouTubeல் தங்களை வேறொருவராகக் காட்டி பயனர்களை ஏமாற்றுவதற்கு மற்றொருவரின் தனிப்பட்ட தகவல்களை யாரேனும் பயன்படுத்தினால் அது ஆள்மாறாட்டமாகக் கருதப்படும்.

உங்களைப் போல் யாரேனும் ஆள்மாறாட்டம் செய்வதாகக் கருதினால் ஆள்மாறாட்டப் புகாருக்கான எங்கள் இணையப் படிவத்தைப் பயன்படுத்திப் புகாரளியுங்கள். அந்த நிபந்தனைகள் பொருந்தாதபட்சத்தில், உங்கள் பதிப்புரிமையை மீறுவதாகக் கருதும் வீடியோக்களைப் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைக்கான எங்கள் இணையப் படிவத்தைப் பயன்படுத்திப் புகாரளிக்கலாம்.

Copyright Match Tool அணுகலைப் பெறுவது எப்படி?

பதிப்புரிமை சார்ந்த சரியான அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ள எந்தவொரு YouTube பயனரும் Copyright Match Toolலைப் பயன்படுத்தலாம். உங்கள் அகற்றுதல் கோரிக்கை ஏற்கப்பட்டதும், அதில் புகாரளிக்கப்பட்டுள்ள வீடியோக்களோடு பொருந்தும் சாத்தியமுள்ள வீடியோக்களைக் கண்டறிவதற்காக YouTube பதிவேற்றங்களை Copyright Match Tool ஸ்கேன் செய்யத் தொடங்கும். பொருந்தும் சாத்தியமுள்ள இந்த வீடியோக்களை உங்களிடம் காட்டுவோம். அவற்றின் மீது அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவுசெய்யலாம்.

இந்தப் படிவத்தை நிரப்பி மேம்பட்ட பதிப்புரிமை நிர்வாகக் கருவியைக் கோரும் ஏதேனுமொரு சேனலாலும் கூட Copyright Match Toolலைப் பயன்படுத்த முடியும். YouTube கூட்டாளர் திட்டத்திலுள்ள (YPP) சேனல்கள் இந்தக் கருவியை YouTube Studioவில் பதிப்புரிமை  எனும் பக்கத்தில் கண்டறியலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4933667156709570574
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false