YouTube VRரைப் பயன்படுத்தத் தொடங்குதல்

குறிப்பிட்ட ஹெட்செட்கள் மற்றும் சாதனங்களில் 360 டிகிரி வீடியோக்களையும் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோக்களையும் எளிதாகக் கண்டறிந்து பார்க்க YouTube VR ஆப்ஸ் உதவும்.

உள்நுழைதல்

உள்நுழைதல் அனுபவத்தை ஆதரிப்பதோடு உங்கள் சந்தாக்களைப் பார்த்தல் போன்ற பல பலன்களுக்கான அணுகலை YouTube VR ஆப்ஸ் வழங்குகிறது.

உள்நுழைதல்

  1. முகப்புத் திரையில் கணக்கு மற்றும் அமைப்புகள் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. உள்நுழைக என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஒரு செயல்படுத்தல் குறியீட்டைப் பார்ப்பீர்கள்.
  4. உங்கள் கம்ப்யூட்டரிலோ மொபைல் சாதனத்திலோ https://youtube.com/activate என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
  5. செயல்படுத்தல் குறியீட்டை உள்ளிடவும்.
  6. கேட்கும்போது உள்நுழையவும். உங்களிடம் பல்வேறு Google கணக்குகள் இருந்தால் YouTubeல் பயன்படுத்தும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். ஏற்கெனவே உள்நுழைந்திருந்தால் அடுத்த படிக்குச் செல்ல இதைத் தவிர்க்கவும்.
  7. உள்நுழைந்ததும் தானாகவே உங்கள் சாதனத்தில் உள்நுழைவீர்கள்.
குறிப்பு: 3வது படியில், கிளிப்போர்டுக்குக் குறியீட்டை நகலெடுக்க சில பிளாட்ஃபார்ம்கள் உங்களை அனுமதிக்கும், அதன்பிறகு குறியீட்டை உள்ளிட பிளாட்ஃபார்ம் உலாவியைத் திறக்கவும். குறியீட்டைப் புலத்தில் ஒட்டுவதற்கான இடத்தை நீண்ட நேரம் அழுத்திப் பிடிக்கவும்.
கவனத்திற்கு: பிராண்டு கணக்குகள் தற்போது ஆதரிக்கப்படுவதில்லை.

வெளியேறு

  1. முகப்புத் திரையில் கணக்கு மற்றும் அமைப்புகள் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. நீங்கள் வெளியேற விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

வீடியோக்களை உலாவுதல்

டச்பேடில் மேலும் கீழும் நகர்த்துவதன் மூலம் முகப்புத் திரையிலோ பிளேலிஸ்ட்களிலோ நீங்கள் வீடியோக்களை உலாவலாம். YouTube லோகோவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் முகப்புத் திரைக்குச் செல்லலாம்.

வீடியோக்களைத் தேடுதல்

YouTube VRரில் வீடியோக்களை இரண்டு வழிகளில் தேடலாம்: குரல் தேடல் அல்லது கீபோர்டு மூலம் தேடுதல். பிளேயர் கட்டுப்பாடுகள் மெனுவிலோ முகப்புத் திரையிலோ 'தேடல் பிரிவு' இருக்கும்.

குரல் தேடல்

  1. தேடு தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. மைக்ரோஃபோன் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தேடல் வார்த்தையைச் சத்தமாகச் சொல்லவும்.


கீபோர்டு மூலம் தேடுதல்

  1. தேடு தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. தேட விரும்புவதைக் கீபோர்டைப் பயன்படுத்தி டைப் செய்யவும்.

இவற்றில் ஒன்றையோ அதற்கு மேலாகவோ தேர்ந்தெடுத்து தேடல் முடிவுகளை வடிகட்டலாம்: 360°, VR180, 4K, 3D மற்றும் வசனம்.

பிளேயர் கட்டுப்பாடுகள்

வீடியோ இயங்கும்போது, திரையில் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்யலாம்.

பின்வருபவவை உட்பட பல செயல்பாடுகளைச் செய்ய, பிளேயர் கட்டுப்பாடுகள் உங்களை அனுமதிக்கும்:

  • வீடியோவை இயக்குதல்/இடைநிறுத்துதல்.
  • ஒலியளவை மாற்றுதல்.
  • முந்தைய வீடியோவிற்குச் செல்லுதல்.
  • அடுத்த வீடியோவிற்குச் செல்லுதல்.
  • பார்த்தல் அமைப்புகளை மாற்றுதல்.

வசனங்களை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. வசனங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

வீடியோ தரத்தை மாற்றுதல்

  1. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. தரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விரும்பும் வீடியோ தரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

வளைந்த திரையை ஆன் அல்லது ஆஃப் செய்தல் (360 டிகிரி அல்லாத வீடியோக்களுக்கும் விளம்பரங்களுக்கும்)

  1. அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. வளைந்த திரை என்பதைத் தேர்ந்தெடுத்து ஆன் அல்லது ஆஃப் என மாற்றவும்.

பிளேயர் கட்டுப்பாடுகளை நிராகரிக்க, வீடியோவில் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்யலாம் அல்லது தானாக நிராகரிக்கப்படும் வரை காத்திருக்கலாம்.

காட்சியை மீண்டும் மையப்படுத்துதல்

கர்சரோ காட்சி நகர்வுகளோ ஏதோ ஒரு திசையில் நகர்வதை நீங்கள் பார்க்கக்கூடும். கன்ட்ரோலரைப் பயன்படுத்தி கர்சரையும் காட்சியையும் விரைவாக மீண்டும் மையப்படுத்தலாம்.
  1. கன்ட்ரோலரை முன்னோக்கிக் குறிவைக்கவும்.
  2. கண்ட்ரோலரில் இருக்கும் முகப்பு பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

தகாத வீடியோக்கள், சேனல்கள் மற்றும் பிற உள்ளடக்கம் குறித்துப் புகாரளித்தல்

நீங்கள் VR சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தகாத உள்ளடக்கம் குறித்து YouTube VR ஆப்ஸிலிருந்து நேரடியாகப் புகாரளிக்கலாம்.

வீடியோ பற்றிப் புகாரளித்தல்

புகாரளிக்கப்படும் வீடியோக்களை 24 மணிநேரமும் வாரத்தில் 7 நாட்களும் YouTube மதிப்பாய்வு செய்கிறது. ஒரு வீடியோ YouTubeல் பதிவேற்றப்பட்ட பிறகு எப்போது வேண்டுமானாலும் அதைப் புகாரளிக்கலாம். வீடியோவில் மீறல்கள் எதுவுமில்லை என்று எங்கள் மதிப்பாய்வுக் குழு கண்டறிந்தால், அது தொடர்ந்து காட்டப்படும். மேலும் இனிவரும் புகார்கள் அதன் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
வீடியோவைப் புகாரளிக்க:
  1. YouTube ஆப்ஸை  திறக்கவும்.
  2. புகாரளிக்க வேண்டிய வீடியோவுக்குச் செல்லவும்.
  3. பிளேபாரை இழுக்க டிரிகரை அழுத்தவும் (அல்லது கைகளைப் பயன்படுத்தினால் பின்ச் செய்யவும்).
  4. பிளேபாருக்கு வலதுபுறத்தில் உள்ள, அமைப்புகள்  அதன் பிறகு புகாரளி  எனபதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. வீடியோவிலுள்ள மீறலுடன் சரியாகப் பொருந்தும் காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சரி என்பதைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: கம்ப்யூட்டரில் நீங்கள் புகாரளித்த வீடியோவின் நிலையைத் தெரிந்துகொள்ள இதுவரை புகாரளிக்கப்பட்ட வீடியோக்கள் பிரிவைப் பார்க்கவும். இதுவரை புகாரளிக்கப்பட்ட வீடியோக்கள் குறித்து மேலும் அறிக.

Shorts வீடியோவைப் புகாரளித்தல்

புகாரளிக்கப்படும் வீடியோக்களை 24 மணிநேரமும் வாரத்தில் 7 நாட்களும் YouTube மதிப்பாய்வு செய்கிறது. ஒரு வீடியோ YouTubeல் பதிவேற்றப்பட்ட பிறகு எப்போது வேண்டுமானாலும் அதைப் புகாரளிக்கலாம். வீடியோவில் மீறல்கள் எதுவுமில்லை என்று எங்கள் மதிப்பாய்வுக் குழு கண்டறிந்தால், அது தொடர்ந்து காட்டப்படும். மேலும் இனிவரும் புகார்கள் அதன் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
Shorts பிளேயரிலிருந்து YouTube Shortsஸைப் புகாரளிக்கலாம்:
  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. புகாரளிக்க வேண்டிய Shorts வீடியோவுக்குச் செல்லவும்.
  3. பிளேபாரை இழுக்க டிரிகரை அழுத்தவும் (அல்லது கைகளைப் பயன்படுத்தினால் பின்ச் செய்யவும்).
  4. பிளேபாருக்கு வலதுபுறத்தில் உள்ள, அமைப்புகள்  அதன் பிறகு புகாரளி  எனபதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. வீடியோவிலுள்ள மீறலுடன் சரியாகப் பொருந்தும் காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சரி என்பதைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: கம்ப்யூட்டரில் நீங்கள் புகாரளிக்கும் வீடியோவின் நிலையைத் தெரிந்துகொள்ள இதுவரை புகாரளிக்கப்பட்ட வீடியோக்கள் பிரிவைப் பார்க்கவும். இதுவரை புகாரளிக்கப்பட்ட வீடியோக்கள் குறித்து மேலும் அறிக.

சேனலைப் புகாரளித்தல்

பயனர்களையோ தகாத பின்புலப் படங்களையோ தகாத சுயவிவரத் தோற்றப் படங்களையோ நீங்கள் புகாரளிக்கலாம். சேனலைப் புகாரளிக்க:
  1. YouTube ஆப்ஸை  திறக்கவும்.
  2. நீங்கள் புகாரளிக்க விரும்பும் சேனல் பக்கத்திற்குச் செல்லவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள, மேலும் '' அதன் பிறகு பயனரைப் புகாரளி  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேனலின் மீறலுடன் சரியாகப் பொருந்தும் காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • விருப்பத்திற்குரியது: திறக்கும் சாளரத்தில் கூடுதல் விவரங்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். நீங்கள் பகிர விரும்பும் வேறு ஏதேனும் விவரங்களை டைப் செய்யவும்.

கவனத்திற்கு: நீங்கள் ஒரு சேனலைப் புகாரளிக்கும்போது அந்தச் சேனலின் வீடியோக்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வதில்லை. புகாருடன் நீங்கள் இணைக்கக்கூடிய வீடியோக்களை அந்தச் சேனல் குறித்து கூடுதலாகத் தெரிந்துகொள்ள நாங்கள் பயன்படுத்துவோம், ஆனால் அந்த வீடியோக்களில் விதிமீறல்கள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கமாட்டோம். சேனலின் சுயவிவரப் படம், ஹேண்டில், விளக்கம் போன்ற அம்சங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், ஆனால் இவற்றை மட்டுமே அல்ல. சேனலின் குறிப்பிட்ட சில வீடியோக்கள் எங்கள் கொள்கைகளை மீறுவதாக நீங்கள் கருதினால் அந்தக் குறிப்பிட்ட வீடியோக்களைப் புகாரளியுங்கள்.

பிளேலிஸ்ட்டைப் புகாரளித்தல்

ஒரு பிளேலிஸ்ட்டின் உள்ளடக்கம், தலைப்பு, விளக்கம் அல்லது குறிச்சொற்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறினால் அதுகுறித்து நீங்கள் புகாரளிக்கலாம்:
  1. YouTube ஆப்ஸை  திறக்கவும்.
  2. புகாரளிக்க வேண்டிய பிளேலிஸ்ட்டிற்குச் செல்லவும்.
  3. “அனைத்தையும் இயக்கு” பட்டனுக்கு வலதுபுறத்தில் உள்ள, மேலும் ''  அதன் பிறகு புகாரளி     அதன் பிறகு புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

சிறுபடத்தைப் புகாரளித்தல்

எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் வீடியோ சிறுபடத்தை நீங்கள் புகாரளிக்கலாம்:
  1. YouTube ஆப்ஸை  திறக்கவும்.
  2. உங்கள் முகப்புப் பக்கம், பரிந்துரைத்த வீடியோக்கள் அல்லது தேடல் முடிவுகளில் நீங்கள் புகாரளிக்க விரும்பும் வீடியோவைக் கண்டறியவும். ஒரு வீடியோவின் முகப்புப் பக்கத்திலிருந்து அதன் சிறுபடத்தை நீங்கள் புகாரளிக்க முடியாது.
  3. சிறுபடத்தின் மேல் வலது மூலையில் உள்ள, மேலும்  '' அதன் பிறகு புகாரளி  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சிறுபடம் மீது நீங்கள் புகாரளிக்க விரும்பும் காரணத்துடன் சரியாகப் பொருந்துவதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கருத்தைப் புகாரளித்தல்

எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் கருத்தை நீங்கள் புகாரளிக்கலாம்:
  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. புகாரளிக்க வேண்டிய கருத்துக்குச் செல்லவும்.
  3. மேலும்  '' அதன் பிறகு புகாரளி  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கருத்து மீறுகின்ற கொள்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. சரி என்பதைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிப்பதை உறுதிசெய்யவும்.
    • விருப்பத்திற்குரியது: கிரியேட்டராக நீங்கள் ஒரு கருத்தைப் புகாரளித்த பிறகு, உங்கள் சேனலில் அந்தப் பயனரின் கருத்துகள் காட்டப்படுவதை நீங்கள் தடுக்கலாம். எனது சேனலில் உள்ள பயனரை மறை என்ற பெட்டிக்கு அடுத்துள்ள அதன் பிறகு சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

எனது கருத்து 'ஸ்பேம்' என தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து 'ஸ்பேம்' எனத் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கருதினால் பதிவேற்றியவரைத் தொடர்புகொண்டு உங்கள் கருத்தை மீட்டெடுக்கும்படி கேட்கலாம்.

விளம்பரத்தைப் புகாரளித்தல்

தகாத விளம்பரத்தையோ Google Ads கொள்கைகளை மீறும் விளம்பரத்தையோ கண்டறிந்தால் அதுகுறித்து நீங்கள் புகாரளிக்கலாம். இந்தப் படிவத்தை நிரப்பி புகாரைச் சமர்ப்பிக்கவும்.
வீடியோவில் காட்டப்படும் விளம்பரத்தைப் புகாரளிக்க:
  1. விளம்பரத்தின் கீழ்பகுதியில் உள்ள, 'எதற்காக இந்த விளம்பரம்?' என்பதைத் தேர்ந்தெடுக்கவும் .
  2. விளம்பரத்தைப் புகாரளி  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. படிவத்தை நிரப்பி புகாரைச் சமர்ப்பிக்கவும். உங்கள் விளம்பரப் புகாரை எங்கள் குழுவினர் மதிப்பாய்வு செய்தபிறகு அது சரியாக இருக்கும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16993401067006771543
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false