பதிப்புரிமைக் கோரல் என்றால் என்ன?

பதிப்புரிமைக் கோரல் என்பது பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை அல்லது Content ID உரிமைகோரலைக் குறிக்கும். இந்த 2 வெவ்வேறு வழிகளில் YouTubeல் பதிப்புரிமை உரிமையை உறுதிப்படுத்தலாம்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள் மற்றும் Content ID உரிமைகோரல்கள் எப்படி வேறுபடுகின்றன?

எந்தவொரு பதிப்புரிமையாளரும் தங்களுடைய பதிப்புரிமை பெற்ற வீடியோ YouTubeல் தங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தியிருப்பதைக் கண்டறிந்தால் "வீடியோ அகற்றுதல் அறிக்கை" அல்லது "நீக்கம்" என அழைக்கப்படும் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். இது பதிப்புரிமை மீறல் காரணமாக YouTubeல் இருந்து வீடியோவை அகற்றுவதற்கான சட்டப்பூர்வக் கோரிக்கை. கீழுள்ளதைப் படித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

சில பதிப்புரிமையாளர்கள் Content IDயைப் பயன்படுத்துகிறார்கள். இது YouTubeஐத் தானாகவே ஸ்கேன் செய்து அவர்களின் பதிப்புரிமை பெற்ற வீடியோவைக் கண்டறியும் ஒரு கருவியாகும். Content ID ஏதேனும் பொருத்தத்தைக் கண்டறிந்தால் பொருந்தும் வீடியோவிற்கு Content ID உரிமைகோரல் விதிக்கப்படும். பதிப்புரிமையாளரின் Content ID அமைப்புகளின்படி பொருந்தும் வீடியோவிற்கு என்ன நடக்கும்? கீழுள்ளதைப் படித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளுக்கும் Content ID உரிமைகோரல்களுக்கும் இடையேயான வேறுபாட்டை இந்த வீடியோ கூடுதலாக விவரிக்கிறது:

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல்கள் & Content ID - YouTubeல் பதிப்புரிமை

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளை YouTube போன்ற தளங்கள் செயலாக்க வேண்டுமெனப் பதிப்புரிமைச் சட்டம் கோருகிறது. சரியானது எனத் தீர்மானிக்கப்பட்ட அனைத்துச் சட்டத் தேவைகளையும் அகற்றுதல் கோரிக்கைகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையின் காரணமாக எனது வீடியோ அகற்றப்பட்டால் என்ன நடக்கும்?

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையின் காரணமாக உங்கள் வீடியோ அகற்றப்பட்டால், உங்கள் சேனலுக்குப் பதிப்புரிமை எதிர்ப்பு விதிக்கப்படும்.

பதிப்புரிமை எதிர்ப்பிற்குத் தீர்வு காண்பது குறித்த கூடுதல் தகவல்களைப் பெறுக. உங்கள் சேனலில் இருந்து பதிப்புரிமை எதிர்ப்பை அகற்ற இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்று உதவும்.

Content ID உரிமைகோரல்கள்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகள் என்பன சட்டத்தால் வரையறுக்கப்பட்டவையாகும். Content ID என்பது YouTube உருவாக்கிய கருவியாகும். ​​Content ID ஏதேனும் பொருத்தத்தைக் கண்டறிந்தால் பொருந்துகின்ற வீடியோவில் Content ID உரிமைகோரலை விதிக்கும்.

எனது வீடியோ Content ID உரிமைகோரலைப் பெற்றால் என்ன நடக்கும்?

பதிப்புரிமையாளரின் Content ID அமைப்புகளைப் பொறுத்து Content ID உரிமைகோரல்கள் மூலம்:

  • வீடியோவைக் காட்டவிடாமல் தடுக்கலாம்.
  • விளம்பரங்களை இயக்கி வீடியோ மூலம் வருமானம் ஈட்டலாம், சில சமயங்களில் பதிவேற்றியவருடன் வருவாயைப் பகிரலாம்.
  • வீடியோவுக்குக் கிடைக்கும் பார்வையாளர்கள் குறித்த புள்ளிவிவரங்களைக் கண்காணிக்கலாம்.

இந்தச் செயல்கள் அனைத்தும் ஒவ்வொரு நாட்டைப் பொறுத்து மாறுபடலாம். உதாரணமாக, பொருந்துகின்ற ஒரு வீடியோ மூலம் ஒரு நாடு/பிராந்தியத்தில் வருமானம் ஈட்டலாம். அதே வீடியோ வேறொரு நாடு/பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது கண்காணிக்கப்படலாம்.

ஒரு வீடியோ கண்காணிக்கப்பட்டாலோ அதிலிருந்து வருமானம் ஈட்டப்பட்டாலோ செயலிலுள்ள Content ID உரிமைகோரலுடன் அது YouTubeல் பார்க்கக்கூடியதாக இருக்கும். பொதுவாக, பதிப்புரிமையாளர்கள் வீடியோக்களைக் கண்காணிக்கவோ அவற்றின் மூலம் வருமானம் ஈட்டவோ விரும்புவார்களே தவிர அவற்றைத் தடைசெய்யமாட்டார்கள்.

Content ID உரிமைகோரலுக்குப் பதிலளிப்பது எப்படி என்பது குறித்த கூடுதல் தகவல்களைப் பெறுக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14162735070263777409
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false