உங்கள் Premium மெம்பர்ஷிப்பை ரத்துசெய்தல்

YouTube Premium மற்றும் YouTube Music Premium சந்தாதாரர்கள் தங்களின் கட்டண மெம்பர்ஷிப் காலகட்டத்தின்போது எப்போது வேண்டுமானாலும் மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யலாம் இடைநிறுத்தலாம் அல்லது மீண்டும் தொடங்கலாம். அத்துடன் வருடாந்திரத் திட்டம் அல்லது குடும்பத் திட்டத்திற்கு நீங்கள் மாறிக்கொள்ளலாம்.

உங்கள் கட்டண மெம்பர்ஷிப்பைப் பார்க்கவும் நிர்வகிக்கவும் கீழுள்ள பட்டனைக் கிளிக் செய்யவும். பிறகு, இந்தக் கட்டுரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி YouTube Premium அல்லது YouTube Music Premium மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யவும்.

உங்கள் iPhone அல்லது iPad சாதனத்தைப் பயன்படுத்தி வாங்கியிருந்தாலோ Apple மூலம் YouTube கட்டண மெம்பர்ஷிப்பிற்குப் பதிவுசெய்திருந்தாலோ பணத்தைத் திரும்பப்பெறக் கோருவதற்கு நீங்கள் Apple உதவி மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். Apple நிறுவனத்தின் 'பணம் திருப்பியளித்தல் கொள்கை' பொருந்தும்.

கட்டணமற்ற உபயோகக் காலத்தின்போது உங்கள் மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யலாம். மெம்பர்ஷிப்பை ரத்துசெய்ய நீங்கள் தேர்வுசெய்தால் கட்டணமற்ற உபயோகக் காலம் முடியும்போது கட்டணச் சந்தாவாக அது மாற்றப்படாது. கட்டணமற்ற உபயோகக் காலம் முடியும் வரை மெம்பர்ஷிப் பலன்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

உங்கள் கட்டண மெம்பர்ஷிப்பை ரத்துசெய்தல்

 

  1. உங்கள் சுயவிவரப் படம் அதன் பிறகு கட்டண மெம்பர்ஷிப்கள் என்பதைத் தட்டவும்.
  2. நீங்கள் ரத்துசெய்ய விரும்பும் மெம்பர்ஷிப்பின் மீது தட்டவும்.
  3. Apple சந்தாக்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் மெம்பர்ஷிப் மீது தட்டவும்.
  5. ரத்துசெய் என்பதைத் தட்டவும்.

How to cancel your YouTube Premium or YouTube Music Premium membership

குறிப்புகள்:
  • நீங்கள் YouTube iOS ஆப்ஸ் மூலம் பதிவுசெய்திருந்தால் Apple கணக்கிலிருந்தே உங்கள் கட்டண மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யலாம்.
  • Google மூலம் பில்லிங் செய்யப்படுகின்ற iOS பயனர்கள் iOS அல்லாத சாதனத்தை (உதாரணம்: கம்ப்யூட்டர்) பயன்படுத்தி ரத்துசெய்ய வேண்டும்.
  • நீங்கள் YouTube கட்டண உறுப்பினரான பிறகு, மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யும் வரை ஒவ்வொரு புதிய பில்லிங் சுழற்சியின் தொடக்கத்திலும் உங்களுக்குத் தானாக மெம்பர்ஷிப் கட்டணம் விதிக்கப்படும்.
  • நீங்கள் மெம்பர்ஷிப்பை ரத்துசெய்ததும் மீண்டும் சந்தா பெறும் வரை உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படாது. பில்லிங் காலம் முடியும் வரை உங்கள் YouTube கட்டண உறுப்பினருக்கான பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.
  • Apple மூலம் பில்லிங் செய்த பயனர்களால் கட்டண மெம்பர்ஷிப்பை இடைநிறுத்தவும் மீண்டும் தொடங்கவும் முடியாது.

Google Play Storeரில் பணத்தைத் திரும்பப்பெறுதல்

Pixel Pass சந்தாவைப் பெற்றதன் மூலம் YouTube Premiumமிற்கான அணுகலைப் பெற்றிருந்தால் உங்கள் கணக்கை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து இங்கே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
2022ம் ஆண்டு முதல், YouTube Premium மற்றும் Music Premiumமின் புதிய சந்தாதாரர்களுக்கு (Android மூலம் பதிவுசெய்தவர்கள்) Google Play மூலம் கட்டணம் விதிக்கப்படும். ஏற்கெனவே சந்தாதாரராக இருப்பவர்களுக்குக் கட்டணம் விதிப்பதில் மாற்றம் இருக்காது. payments.google.com தளத்திற்குச் சென்று சமீபத்திய கட்டணங்களையும் உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படும் முறையையும் தெரிந்துகொள்ளலாம். Google Play பர்ச்சேஸுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருவதற்கு இங்கே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10432617815213893733
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false