வீடியோக்களில் தகவல் கார்டுகளைச் சேர்த்தல்

உங்கள் வீடியோக்களில் பார்வையாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க தகவல் கார்டுகளைப் பயன்படுத்தலாம். தகவல் கார்டுகளில் ஒரு வீடியோ, பிளேலிஸ்ட், சேனல் அல்லது இணைப்பு இடம்பெறலாம். சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என அமைக்கப்பட்ட வீடியோக்களில் கார்டுகளைச் சேர்க்க முடியாது.

வீடியோவில் கார்டுகளைச் சேர்த்தல்

வீடியோவில் கார்டுகளைச் சேர்க்க கீழுள்ள படிகளைப் பின்பற்றவும்.

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் திருத்த விரும்பும் வீடியோவைக் கிளிக் செய்யவும்.
  4. இடதுபுற மெனுவில், எடிட்டர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. தகவல் கார்டுகள்  என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் சேர்க்க விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுக்கவும். குறிப்பு: ஒரு வீடியோவில் 5 கார்டுகள் வரை சேர்க்கலாம்.
    • வீடியோ: பார்வையாளர்கள் பங்கேற்பதற்காகப் பொது YouTube வீடியோவுடன் இணைக்க இந்தத் தகவல் கார்டு அனுமதிக்கும். 
    • பிளேலிஸ்ட்: பார்வையாளர்கள் பார்ப்பதற்காகப் பொது YouTube பிளேலிஸ்ட்டுடன் இணைக்க இந்தத் தகவல் கார்டு அனுமதிக்கும்.
    • சேனல்: பார்வையாளர்கள் ஈடுபாட்டுடன் இருப்பதற்காக YouTube சேனலுடன் இணைக்க இந்தத் தகவல் கார்டு அனுமதிக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் வீடியோவுக்கு உதவிய சேனலுக்கு நன்றி தெரிவிக்கவோ பார்வையாளர்களுக்கு மற்றொரு சேனலைப் பரிந்துரைக்கவோ தகவல் கார்டைப் பயன்படுத்தலாம்.
    • இணைப்பு: நீங்கள் YouTube கூட்டாளர் திட்டத்தில் இருந்தால் உங்கள் பார்வையாளர்களுடன் பகிர்வதற்கு வெளி இணையதளத்துடன் இணைக்க இந்தத் தகவல் கார்டு அனுமதிக்கும். அத்துடன், உங்கள் வீடியோவில் இறுதித் திரைகளையும் சேர்க்கலாம். குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள வெளி இணையதளம் எங்கள் கொள்கைகளுடன் (சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை விதிமுறைகள் உட்பட) இணங்குவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். கொள்கைகளை மீறினால் கார்டு அல்லது இணைப்பு அகற்றப்படலாம், எதிர்ப்புகள் விதிக்கப்படலாம் அல்லது உங்கள் Google கணக்கு நிறுத்தப்படலாம்.
  6. வீடியோவுக்குக் கீழே கார்டுக்கான தொடக்க நேரத்தை மாற்றவும்.
  7. வீடியோ குறித்த ஏதேனும் தகவலையும் டீஸர் மெசேஜையும் (விருப்பத்திற்குட்பட்டவை) சேர்க்கவும். குறிப்பு: சேனல் கார்டுகளுக்குத் தகவலும் டீஸர் மெசேஜூம் அவசியம்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கார்டுகள் மூலம் பார்வையாளர்கள் எவ்வாறு பங்கேற்கலாம்?

தொடர்புடைய தகவல்களுடன் வீடியோக்களை முழுமைப்படுத்தவும் பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் கார்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களின் வரவேற்பு, நடவடிக்கை, அவர்கள் பயன்படுத்தும் சாதனம் ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் தொடர்புடைய டீஸர்களையும் கார்டுகளையும் காட்டுவதற்கு சிஸ்டத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

பார்வையாளர்கள் கார்டுகளை எவ்வாறு பார்க்கலாம்?

  • பார்வையாளர் உங்கள் வீடியோவைப் பார்க்கும்போது நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் டீஸரைப் பார்ப்பார்கள்.
  • டீஸர் காட்டப்படாதபோது பார்வையாளர்கள் கர்சரைப் பிளேயருக்கு மேலே கொண்டுசென்று கார்டு ஐகானைக் கிளிக் செய்யலாம். மொபைலில் பிளேயர் கட்டுப்பாடுகள் காட்டப்படும் போதெல்லாம் பார்வையாளர்கள் கார்டு ஐகானைப் பார்க்கலாம்.
  • டீஸரையோ ஐகானையோ அவர்கள் கிளிக் செய்யும்போது கார்டுகளை வீடியோவில் பார்க்கலாம்.

கார்டுகள் உங்கள் வீடியோவை எவ்வாறு மாற்றக்கூடும்?

வீடியோக்களில் கார்டுகள் எப்படிக் காட்டப்படும்?

வீடியோ விளக்கத்திற்குக் கீழே கார்டுகள் காட்டப்படும். ஒரு வீடியோவில் பல கார்டுகள் இருந்தால் வீடியோ பிளே ஆகும்போது பார்வையாளர்கள் அவற்றை ஸ்க்ரோல் செய்து பார்க்கலாம்.

கார்டுகளை யாரெல்லாம் பார்க்கலாம்?

மொபைல் சாதனங்களில் YouTube ஆப்ஸ் 10.09 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் பார்வையாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும். Adobe Flashஷில் இந்த அம்சம் கிடைக்காது.

‘சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை’ என்று அமைக்கப்பட்ட வீடியோக்களில் பார்வையாளர்களுக்குக் கார்டுகள் காட்டப்படாது.
 

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17970830979271733310
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false