பிளேலிஸ்ட்களை இணைந்து உருவாக்குதல்

உங்கள் பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்க்க நண்பர்களை அனுமதிக்கலாம். இந்த அம்சத்தை இயக்கும்போது, உங்கள் பிளேலிஸ்ட் இணைப்பை யாருக்கெல்லாம் பகிர்கிறீர்களோ அவர்களால் உங்கள் பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்க்க முடியும்.

தொடங்குவதற்கு முன் ஒரு பிளேலிஸ்ட்டை உருவாக்கவும். உதவி தேவையெனில் பிளேலிஸ்ட்டை உருவாக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும்.

கூட்டுப்பணியாளர்களைப் பிளேலிஸ்ட்டில் சேர்த்தல்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிளேலிஸ்ட்கள் பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. கூட்டாளர்களைச் சேர்க்க விரும்பும் பிளேலிஸ்ட்டிற்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பிளேலிஸ்ட்டின் தலைப்பிற்குக் கீழ், மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இணைந்து பணியாற்றுதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. “இணைந்து பணியாற்றுபவர்கள் இந்தப் பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்க்கலாம்" என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரைக் கிளிக் செய்யவும்.
  8. “புதிய கூட்டாளர்களை அனுமதி” என்பதை ஆன் செய்யவும்.
  9. பிளேலிஸ்ட் இணைப்பை நகலெடுத்து நீங்கள் யாருடனெல்லாம் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களோ அவர்களுடன் பகிரவும்.

பிளேலிஸ்ட் மாற்றப்பட்டாலோ புதிதாக இணைந்து பணியாற்றுபவர்கள் சேர்ந்தாலோ பிளேலிஸ்ட்டின் உரிமையாளருக்கு அதுகுறித்து ஓர் அறிவிப்பு அனுப்பப்படும்.

பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்த்தல்

பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்ப்பதற்கான அழைப்பைப் பெற்ற பிறகு, வீடியோக்களைச் சேர்க்கவும் நீங்கள் முன்பு சேர்த்த வீடியோக்களை நீக்கவும் முடியும்.

வீடியோக்களைச் சேர்த்தல்
  1. பிளேலிஸ்ட் பக்கத்திற்குச் செல்ல, பிளேலிஸ்ட்டின் உரிமையாளரிடமிருந்து பெற்ற இணைப்பைப் பயன்படுத்தவும்.
  2. நீங்கள் பங்களிப்பாளராகச் சேர விரும்புவதை உறுதிசெய்ய, திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும். பிளேலிஸ்ட் தானாகச் சேமிக்கப்படும்.
  3. கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனத்திலுள்ள வீடியோக்களைச் சேர்க்க, நீங்கள் சேர்க்க விரும்பும் வீடியோவிற்குச் சென்று சேமி என்பதை அதில் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஒரு வீடியோவைச் சேர்த்த பிறகு, பிளேலிஸ்ட்டில் அந்த வீடியோவிற்கு அடுத்து உங்கள் பெயர் காட்டப்படும். பிளேலிஸ்ட்டில் புதிய வீடியோ சேர்க்கப்பட்டதும் அனைத்துக் கூட்டாளர்களும் ஓர் அறிவிப்பைப் பெறுவார்கள்.

வீடியோக்களை அகற்றுதல்
  1. பிளேலிஸ்ட் பக்கத்திற்குச் செல்ல, பிளேலிஸ்ட்டின் உரிமையாளரிடமிருந்து பெற்ற இணைப்பைப் பயன்படுத்தவும்.
  2. மேலும் '' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிளேலிஸ்ட்டிலிருந்து அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கவனத்திற்கு: நீங்கள் பிளேலிஸ்ட்டில் சேர்த்த வீடியோக்களை மட்டுமே உங்களால் அகற்ற முடியும் (இணைந்து பணியாற்றிய மற்றவர்களின் வீடியோக்களை அகற்ற முடியாது).

பங்களிப்புகளை நிர்வகித்தல்

பிளேலிஸ்ட்டில் பங்களிப்புகளை ஏற்பதை நிறுத்திக்கொள்ளுதல்

நீங்கள் பகிர்ந்த பிளேலிஸ்ட்களுக்கான பங்களிப்புகளை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிளேலிஸ்ட்கள் பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் மாற்ற விரும்பும் பிளேலிஸ்ட்டிற்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
  5. பிளேலிஸ்ட்டின் தலைப்பிற்குக் கீழ், மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இணைந்து பணியாற்றுதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. "புதிய கூட்டாளர்களை அனுமதி" என்பதை ஆஃப் செய்யவும்.
  8. “கூட்டாளர்கள் இந்தப் பிளேலிஸ்ட்டில் வீடியோக்களைச் சேர்க்கலாம்" என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5802348238716045971
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false