பதிப்புரிமை மீறல் தொடர்பான எதிர் அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான தேவைகள்

மின்னஞ்சல், ஃபேக்ஸ் அல்லது தபால் அஞ்சல் மூலம் பதிப்புரிமை மீறல் தொடர்பான எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கிறீர்கள் எனில், கீழே பட்டியலிடப்பட்டுள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அதில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் தகவல்கள் விடுபட்டிருந்தால் எதிர் அறிவிப்பை எங்களால் செயலாக்க முடியாது.
 

தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என நினைத்தால், பதிவேற்றியவரின் சார்பாக ஓர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (வழக்கறிஞர் போன்றோர்) எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.

தொடங்குதல்

தொடங்குவதற்கு முன், இவற்றைக் கருத்தில் கொள்ளவும்:

  • மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் எதிர் அறிவிப்புகளில், கீழுள்ள தகவல்கள் மின்னஞ்சலின் உள்ளடக்கத்திலேயே சேர்க்கப்பட்டு (தனி இணைப்பாக அல்ல) copyright@youtube.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
  • விவாதத்திற்குட்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவேற்றியவர்தான் எதிர் அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • எதிர் அறிவிப்பில் உள்ள தகவல்களை உரிமைகோருபவருடன் பகிர்வதற்கு உள்ளடக்கத்தைப் பதிவேற்றியவர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
பொய்யான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டாம். எங்கள் செயல்முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவது (மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது போன்றவை) உங்கள் கணக்கை முடக்குவதற்கோ பிற சட்ட விளைவுகளுக்கோ வழிவகுக்கக்கூடும்.

தேவையான தகவல்களை வழங்குதல்

கீழே உள்ள தேவையான தகவல்கள் அனைத்தையும் மின்னஞ்சலின் உள்ளடக்கத்தில் சேர்த்து (இணைப்பாக அல்ல) copyright@youtube.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். ஃபேக்ஸ் அல்லது தபால் மூலமும் அவற்றை அனுப்பலாம்.

உங்கள் தொடர்புத் தகவல்கள்

எதிர் அறிவிப்பு சம்பந்தமாக உங்களையோ உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியையோ தொடர்புகொள்ள பின்வரும் தொடர்புத் தகவல்கள் தேவை:

  • சட்டப்பூர்வமான முழுப் பெயர்: பெயரின் முற்பகுதி மற்றும் பிற்பகுதி, நிறுவனத்தின் பெயர் அல்ல. நீங்கள் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியெனில், பதிவேற்றியவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள தொடர்பையும் சேர்க்கவும்.
  • இருப்பிட முகவரி
  • தொலைபேசி எண்

உள்ளடக்கத்திற்கான ஃபார்மேட் செய்யப்பட்ட இணைப்புகள்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை காரணமாக அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் இணைப்புகள் எதிர் அறிவிப்புகளில் சேர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்ட வடிவத்தில் மட்டுமே இணைப்புகள் அனுப்பப்பட வேண்டும் (கீழே பார்க்கவும்). சேனல் பெயர், சேனல் URL போன்ற பொதுவான தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

  • வீடியோக்களுக்கான சரியான URL வடிவம்www.youtube.com/watch?v=xxxxxxxxxxx
  • வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்கான சரியான URL வடிவம்சரியான URL வடிவம் எனும் பிரிவில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
    • கவனத்திற்கு: சேனலின் சுயவிவரப் படங்களை Google ஹோஸ்ட் செய்வதால், அவற்றுக்கான எதிர் அறிவிப்புகள் Googleளின் இணையப் படிவம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

      சரியான URL வடிவங்கள்

      எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்க விரும்பும், பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை காரணமாக அகற்றப்பட்ட உள்ளடக்கத்திற்கான URLகளை மட்டுமே சேர்க்க வேண்டும். வெவ்வேறு சேனல்களில் இருக்கும் URLகளுக்குத் தனித்தனியாக எதிர் அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
      உள்ளடக்க வகை சரியான URL வடிவம் URLலை எங்கே கண்டறிவது?
      சேனல் பேனர் படங்கள்

      www.youtube.com/channel/UCxxxxxxxxxxxxxxxxxxxxx

      அல்லது

      www.youtube.com/user/xxxxxxxxx

      சேனல் பக்கத்திற்குச் சென்று அதன் பிறகுமுகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

      சேனல் விளக்கங்கள் www.youtube.com/user/xxxxxxxxx/about

      சேனலின் அறிமுகம் பிரிவிற்குச் சென்று அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

      கிளிப்புகள் www.youtube.com/clip/xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx கிளிப்பின் தலைப்பைக் கிளிக் செய்து அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
      வீடியோ கருத்துகள் www.youtube.com/watch?v=xxxxxxxxxx&lc=xxxxxxxxxxxxxxxxxx கருத்துக்கு மேலே உள்ள இடுகையிடப்பட்ட தேதியைக் கிளிக் செய்து (பக்கம் ரெஃப்ரெஷ் செய்யப்படும்) அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
      இடுகைக்கான கருத்துகள் www.youtube.com/channel/xxxxxxxxxxx/community?lc=xxxxxxxxxxxx&lb=xxxxxxxxxxxx கருத்துக்கு மேலே உள்ள இடுகையிடப்பட்ட தேதியைக் கிளிக் செய்து (பக்கம் ரெஃப்ரெஷ் செய்யப்படும்) அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
      சமூக இடுகைகள் https://www.youtube.com/post/xxxxxxxxxxxxxxxxxxx சமூக இடுகை வெளியிடப்பட்ட தேதியைக் கிளிக் செய்து (பக்கம் ரெஃப்ரெஷ் செய்யப்படும்) அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
      மெம்பர்ஷிப் பேட்ஜ்கள், ஈமோஜி அல்லது கிரியேட்டரின் சலுகை தொடர்பான விளக்கங்கள் yt3.ggpht.com/xxxxx எனத் தொடங்கும் URL படத்தின் மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு பட முகவரியை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்

      சேனல் URLலையும் சேர்க்கவும்:

      www.youtube.com/channel/UCxxxxxxxxxxxxxxxxxxxxx

      அல்லது

      www.youtube.com/user/xxxxxxxxx

      சேனல் பக்கத்திற்குச் சென்று அதன் பிறகுமுகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
      பிளேலிஸ்ட் விளக்கங்கள்

      www.youtube.com/playlist?list=xxxxxxxxxxxxxxxx

      பிளேலிஸ்ட்டின் தலைப்பைக் கிளிக் செய்து அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

      சுயவிவரப் படங்கள்
      Super Stickers lh3.googleusercontent.com/xxxxx எனத் தொடங்கும் URL நேரலை அரட்டையில் உள்ள டாலர் குறியை கிளிக் செய்து அதன் பிறகு Super Sticker அதன் பிறகு படத்தின் மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு பட முகவரியை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

      சேனல் URLலையும் சேர்க்கவும்:

      www.youtube.com/channel/UCxxxxxxxxxxxxxxxxxxxxx

      அல்லது

      www.youtube.com/user/xxxxxxxxx

      சேனல் பக்கத்திற்குச் சென்று அதன் பிறகு முகவரிப் பட்டி மீது வலது கிளிக் செய்து அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

       

சட்டப்பூர்வ அறிக்கைகள்:

பின்வரும் தேவையான சட்டப்பூர்வ அறிக்கைகளை ஒப்புக்கொண்டு அவற்றைச் சேர்க்க வேண்டும்:

  • "எனது முகவரி அமைந்துள்ள மாவட்டத்திற்கான ஃபெடரல் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு உடன்படுகிறேன் அல்லது எனது முகவரி அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால் YouTube நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்திற்கான நீதிமன்ற அதிகாரத்துக்கு உடன்படுகிறேன். உரிமைகோருபவரின் வழக்கு அறிக்கையை ஏற்றுக்கொள்கிறேன்."
  • "உண்மையை மறைத்தால் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டு, அகற்றப்பட வேண்டிய அல்லது முடக்கப்பட வேண்டிய ஒரு வீடியோவிற்குப் பதிலாக எனது வீடியோ தவறுதலாகவோ தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாகவோ அகற்றப்பட்டுள்ளது அல்லது முடக்கப்பட்டுள்ளது என்ற நன்னம்பிக்கை எனக்கு உள்ளது என்று உறுதியளிக்கிறேன்".

உரிமைகோருபவருக்கு அனுப்பும் அறிக்கை

விவாதத்திற்குட்பட்ட உள்ளடக்கம் தவறுதலாக அகற்றப்பட்டுள்ளது அல்லது தவறுதலாக அடையாளம் காணப்பட்டுள்ளது என நீங்கள் நம்புவதற்கான காரணத்தைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் உங்கள் சொந்த வார்த்தைகளில் விவரித்து உரிமைகோருபவருக்கு அனுப்பும் அறிக்கையில் சேர்க்க வேண்டும். நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் போன்ற பதிப்புரிமை விதிவிலக்குகளின்படி சேர்க்கப்பட்ட உள்ளடக்கம் 'தவறுதலாக அடையாளம் காணப்பட்டதில்' அடங்கும்.

உங்கள் கையொப்பம்

முழுமையான மற்றும் சரியான எதிர் அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க, பதிவேற்றியவர் அல்லது அவர் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் அசல் கையொப்பம்/மின்னணுக் கையொப்பம் தேவை.

இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய, பதிவேற்றியவரோ அவர் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியோ எதிர் அறிவிப்பின் கீழ்ப்பகுதியில் அவரது சட்டப்பூர்வமான முழுப் பெயரைக் கையொப்பமாக உள்ளிடலாம். சட்டப்பூர்வமான முழுப் பெயர் என்பதில் பெயரின் முற்பகுதியும் பிற்பகுதியும் இருக்க வேண்டும், அது நிறுவனத்தின் பெயராக இருக்கக்கூடாது.

கூடுதல் தகவல்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12941502326183968506
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false