கருத்துகளைப் பார்த்தல், ஒருங்கிணைத்தல் அல்லது நீக்குதல்

YouTubeல் கருத்துகளை இடுகையிடுவது மற்றும் அவற்றுடன் ஈடுபடுவது எப்படி?

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

வீடியோவின் உரிமையாளர் 'கருத்துகளை' இயக்கியிருந்தால், நீங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம், வீடியோவில் உள்ள மற்ற கருத்துகளுக்கு விருப்பம்/விருப்பமின்மையைத் தெரிவிக்கலாம் அல்லது அவற்றுக்குப் பதிலளிக்கலாம்

வீடியோவிலுள்ள கருத்துகளைப் பார்த்தல்

வீடியோவிலுள்ள கருத்துகளைப் பார்க்க, வீடியோவின் பக்கத்தை ஸ்க்ரோல் செய்யவும். உரையாடல்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு கருத்திற்கான பதில்கள் அதற்குக் கீழே தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்டிருக்கும். YouTube கருத்துகள் பொதுவில் இடுகையிடப்படும். எனவே நீங்கள் இடுகையிடும் கருத்துக்கு யார் வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்.

கருத்து தெரிவிக்கப்பட்டதற்கான அறிவிப்பைப் பெற்ற பிறகு அந்தக் கருத்தைப் பார்க்க முடியவில்லை எனில் ஏற்கெனவே அது அகற்றப்பட்டிருக்கக்கூடும். கருத்தை இடுகையிட்டவரோ சேனல் உரிமையாளரோ கருத்துகளை அகற்ற முடியும் அல்லது கொள்கை மீறல்கள் காரணமாக அவை அகற்றப்படலாம்.

ஒரு கருத்து தகாதது என நீங்கள் நினைத்தால் அதை ஸ்பேம் அல்லது தவறான உபயோகம் எனப் புகாரளிக்கலாம். நீங்கள் ஒரு கிரியேட்டர் எனில், உங்கள் வீடியோக்களிலுள்ள கருத்துகளை நிர்வகிக்க கருத்துத் தணிக்கைக் கருவிகளையும் பயன்படுத்தலாம்.
இதுவரை நீங்கள் இடுகையிட்ட கருத்துகளைப் பார்த்தல்

YouTubeல் பொதுவில் தெரியுமாறு நீங்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம்.

  1. உங்கள் YouTube கருத்துகள் என்பதற்குச் செல்லவும்.
  2. நீங்கள் கருத்து தெரிவித்த இடத்திற்குச் செல்ல, அந்தக் கருத்தின் மீது தட்டவும்/கிளிக் செய்யவும்.

நீங்கள் கருத்து தெரிவித்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலோ கொள்கை மீறல் காரணமாக உங்கள் கருத்தை YouTube அகற்றியிருந்தாலோ அந்தக் கருத்து 'உங்கள் YouTube கருத்துகள்' என்பதில் காட்டப்படாது.

கருத்துக்கான பகிரக்கூடிய இணைப்பைப் பெறுதல்

ஹைலைட் செய்யப்பட்ட கருத்து இணைப்பை உருவாக்க, அந்தக் கருத்தின் நேர முத்திரையின் மீது கிளிக் செய்யலாம் அல்லது தட்டலாம். இதன் மூலம், குறிப்பிட்ட கருத்துக்கும் அதுதொடர்பான உரையாடலுக்குமான பகிரக்கூடிய இணைப்பு முகவரிப் பட்டியில் வழங்கப்படும்.

எந்தெந்தக் கருத்துகள் முதலில் தெரிய வேண்டும் என்பதை நிர்வகித்தல்

இணையத்தில் பார்க்கும்போது, ஒரு வீடியோவிற்குக் கீழே கருத்துகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். இதன்படி வரிசைப்படுத்து எனும் விருப்பத்தைப் பயன்படுத்தி சிறந்த கருத்துகள் அல்லது புதியவை முதலில் என்பதைத் தேர்வுசெய்யவும்.

'ஹைலைட் செய்யப்பட்ட கருத்து' இணைப்பை உருவாக்க நேர முத்திரையைக் கிளிக் செய்யவும். இது உங்கள் கருத்து உரையாடலைத் தனிப்படுத்துவதோடு முகவரிப் பட்டியில் பகிரக்கூடிய இணைப்பையும் வழங்கும்.

கருத்துகளை நீக்குதல்
  1. உங்கள் YouTube கருத்துகள் என்பதற்குச் செல்லவும்.
  2. வீடியோ இணைப்பைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
  3. YouTubeல் கருத்துக்கு அடுத்துள்ள மேலும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    1. திருத்து  என்பதையோ நீக்கு  என்பதையோ தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் ஸ்மார்ட் டிவியில் கருத்துகள் மூலம் பங்கேற்றல்

இப்போது உங்கள் ஸ்மார்ட் டிவியிலோ கேம் கன்சோலிலோ வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கருத்துகளைப் பார்க்கலாம், அவற்றுக்குப் பதிலளிக்கலாம். ஒரு வீடியோவின் கருத்துகளைப் பார்க்க அதன் முகப்புப் பக்கத்திற்குச் சென்று வீடியோவின் தலைப்பைத் தேர்வுசெய்யவும். வீடியோவின் கருத்துகள் பேனலைக் கொண்ட 'அறிமுகம்' பிரிவு காட்டப்படும். அந்த வீடியோவிலுள்ள கருத்துகளின் (பின்வருபவை உட்பட) முழுப் பட்டியலையும் பார்க்க கருத்துகள் கட்டத்தைத் தேர்வுசெய்யவும்:

  • கிரியேட்டர் பின்(PIN) செய்த கருத்துகள்
  • விருப்பங்களின் எண்ணிக்கை
  • பதில்களின் எண்ணிக்கை 

ஒரு கருத்தைத் தேர்வுசெய்து அதை முழுமையாகப் படிக்கலாம், அதற்கான பதில்களைப் பார்க்கலாம், அதற்கு விருப்பம்/விருப்பமில்லை எனத் தெரிவிக்கலாம்.

ஒரு கருத்துக்குப் பதிலளிக்க அல்லது புதிய கருத்து தெரிவிக்க, உங்கள் ஸ்மார்ட் டிவியையோ கேம் கன்சோலையோ உங்கள் மொபைலுடன் ஒத்திசைத்து அதைப் பயன்படுத்தி கருத்து தெரிவிக்கலாம். 

கருத்தையோ பதிலையோ சேர்க்க:

  1. உங்கள் மொபைலில் YouTube ஆப்ஸைத் திறக்கவும்.
  2. இரண்டு சாதனங்களிலும் ஒரே Google கணக்கின் மூலம் உள்நுழைந்துள்ளதை உறுதிசெய்துகொள்ளவும். 
  3. உங்கள் டிவியில் YouTubeஐ இணைக்கச் சொல்லும் பாப்-அப் ஒன்று YouTube ஆப்ஸில் காட்டப்படும்.
  4. இணை என்பதைத் தட்டவும்.
  5. டிவியில் நீங்கள் பார்க்கும் வீடியோவிற்கான கருத்துகள் YouTube ஆப்ஸில் காட்டப்படும். அதன் மூலம் நீங்கள் தடையின்றிக் கருத்துகளை இடுகையிடலாம், பங்கேற்கலாம்.
கவனத்திற்கு: நீங்கள் கணக்கில் இருந்து வெளியேறிய நிலையில் இருக்கும்போது உங்களால் கருத்துகளைப் பார்க்க முடியும். ஆனால் அவற்றுக்குப் பதிலளிக்கவோ உங்கள் சொந்தக் கருத்தைத் தெரிவிக்கவோ முடியாது.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4777307931485595486
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false