பிராண்டு கணக்கின் மூலம் சேனலின் உரிமையாளர்களையும் நிர்வாகிகளையும் மாற்றுதல்

 
நம்பகமான பயனர்களுக்கு மட்டும் அணுகலை வழங்குவது சேனல் உரிமையாளரின் பொறுப்பாகும். இதனால் சேனல் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

குறிப்பிட்ட பொறுப்புகள் மூலம் உங்கள் சேனலுக்கான அணுகலை மற்ற பயனர்களுக்கு நீங்கள் வழங்குவதற்கான வாய்ப்பைச் சேனல் அனுமதிகள் வழங்குகின்றன. பொறுப்புகள் நியமிக்கப்படுவது அணுகலுக்கான சரியான நிலையைத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கிறது. பாதுகாப்பு தொடர்பான ஆபத்துகளை (கடவுச்சொல்லைப் பகிர்வது போன்றவை) தடுப்பதற்கும் பிற தனியுரிமைச் சிக்கல்களைக் குறைப்பதற்கும் சேனல் அனுமதிகளுக்குச் செல்லுங்கள்.

பிராண்டு கணக்குடன் ஒரு YouTube சேனல் இணைக்கப்பட்டிருந்தால், வெவ்வேறு பயனர்கள் தங்கள் Google கணக்குகளின் மூலம் அந்தச் சேனலை நிர்வகிக்கலாம். பிராண்டு கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள YouTube சேனல்களை நிர்வகிக்க, தனிப்பட்ட பயனர்பெயரோ கடவுச்சொல்லோ தேவையில்லை. பிராண்டு கணக்கை YouTube சேனலுடன் இணைக்க முடியும். ஆனால் பிற Google சேவைகளுடன் இணைக்க முடியாது.

முதலில் உங்கள் சேனல் ஒரு பிராண்டு கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். இல்லையெனில், நீங்கள் சேனல் நிர்வாகிகளை மாற்றலாம். ஆனால் உரிமையாளர்களை மாற்றமுடியாது. சேனல் உரிமையை மாற்ற, அனுமதிகள் அமைப்பில் அனைத்துப் பொருப்புகளையும் அகற்றி பிராண்டு கணக்கிற்கு மாற்றவும்.

பிராண்டு கணக்குகளில் பொறுப்புகளைச் சேர்ப்பது தொடர்பான பிழையறிந்து திருத்துதல்

உங்கள் சேனலுக்கான பயனர் அணுகலை நிர்வகிக்க, சேனல் அனுமதிகளைப் பயன்படுத்த வேண்டும்.

பிராண்டு கணக்கின் பொறுப்புகளை நீங்கள் பயன்படுத்த நினைத்து (பரிந்துரைக்கப்படுவதில்லை) மற்றவர்களைச் சேர்ப்பதில் சிரமம் இருந்தால், சேனல் அனுமதிகளுக்கான ஒப்புதலை நீக்கிவிட்டு பின்னர் மீண்டும் ஒப்புதல் வழங்க வேண்டியிருக்கலாம். மீண்டும் உங்கள் பிராண்டு கணக்கிற்கு மாற, அனைவரையும் பிராண்டு கணக்கிற்கு மீண்டும் அழைக்க வேண்டும்.

ஒப்புதலை நீக்க, YouTube Studioவின் அமைப்புகள் அதன் பிறகு அனுமதிகள் என்பதன் கீழ் “YouTube Studioவில் அனுமதிகளுக்கான ஒப்புதலை நீக்கு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சேனல் அனுமதிகளுக்கான ஒப்புதலை எப்படி நீக்குவது என்பது பற்றி மேலும் அறிக.

உங்கள் பிராண்டு கணக்கின் பொறுப்புகளைப் பார்த்தல் அல்லது சேர்த்தல்

தேவைப்பட்டால் மட்டுமே பிராண்டு கணக்கின் பொறுப்புகளைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்க, பொருத்தமான அணுகல் நிலையைப் பயனர்களுக்கு வழங்குவது முக்கியம். கடவுச்சொற்களைப் பகிர்ந்துகொள்வது போன்ற பாதுகாப்பற்ற நடைமுறைகளைத் தவிர்க்கவும்.  

தங்களுடைய பிராண்டு கணக்கின் உரிமை தொடர்பான விவரங்களை அறிந்து வைத்திருப்பது சேனல் உரிமையாளர்களின் பொறுப்பு. கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தொடர்ந்து பிராண்டு கணக்கின் அனுமதிகளைச் சரிபார்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் பிராண்டு கணக்கை நிர்வகிப்பது யார் என்று கண்டறிய:

  1. உங்கள் Google கணக்கின் பிராண்டு கணக்குகள் பிரிவுக்குச் செல்லவும்.
  2. "உங்கள் பிராண்டு கணக்குகள்" என்பதன்கீழ் பார்க்க விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அனுமதிகளை நிர்வகித்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உரிமையாளர்கள் உட்பட, கணக்கை நிர்வகிக்கக்கூடியவர்களின் பட்டியலைப் பார்ப்பீர்கள்.

உங்கள் பிராண்டு கணக்கிற்குப் புதியவர்களை அழைக்க:

  1. புதியவர்களை அழைக்க, புதிய பயனர்களை அழை Invite new users என்பதைத் தேர்வுசெய்யவும்.
  2. அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்.
  3. அவர்களுடைய பெயர்களுக்குக் கீழே அவர்களுக்கான பொறுப்பைத் தேர்வுசெய்யவும்:
    1. உரிமையாளர்கள் பெரும்பாலான செயல்களைச் செய்ய முடியும். கணக்கை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியும். ஒரு கணக்கிற்கு ஒரு முதன்மை உரிமையாளர் இருக்க வேண்டும்.
    2. நிர்வாகிகள் பிராண்டு கணக்குகளை ஆதரிக்கும் Google சேவைகளைப் பயன்படுத்தலாம் (எடுத்துக்காட்டாக, Google Photosஸில் படங்களைப் பகிர்தல், YouTubeல் வீடியோக்களை வெளியிடுதல் போன்றவற்றைச் செய்யலாம்).
    3. தகவல்தொடர்பு நிர்வாகிகள், நிர்வாகிகள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களையும் செய்யலாம். ஆனால் அவர்கள் YouTubeஐப் பயன்படுத்த முடியாது.
  4. அழை அதன் பிறகு முடிந்தது என்பதைத் தட்டவும்.

நீங்கள் அழைக்கும் அனைவரும் மின்னஞ்சலைப் பெறுவார்கள், அதில் அவர்கள் உங்கள் அழைப்பை ஏற்கலாம்.

உங்கள் பிராண்டு கணக்கின் முதன்மை உரிமையாளராக உங்களை அமைத்துக்கொள்ளுங்கள்

பிராண்டு கணக்கின் உரிமையாளர் எனும் முறையில், உங்களை நீங்களே பிராண்டு கணக்கின் முதன்மை உரிமையாளராக நியமித்துக்கொள்ள முடியும். அதைச் செய்ய, நீங்கள் 7 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக உரிமையாளராக இருந்திருக்க வேண்டும். இந்த நிபந்தனையைப் பூர்த்திசெய்யாவிட்டால் பிழைச் செய்தியைப் பெறுவீர்கள்.

பிராண்டு கணக்கில் ஒரு முதன்மை உரிமையாளர் இருப்பதுடன், குறைந்தபட்சம் மேலும் ஓர் உரிமையாளராவது பிராண்டு கணக்குடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

புதிய முதன்மை உரிமையாளரை நியமிக்க முடியவில்லை என்றால் சேனல் அனுமதிகளுக்கான ஒப்புதலை நீக்கிவிட்டீர்களா என்று பார்க்கவும். முதன்மை உரிமையாளர் பொறுப்பை மாற்றும் விருப்பம் நிர்வாகிகளுக்குக் கிடைக்காது.

  1. கம்ப்யூட்டரில் உங்கள் Google கணக்கின் பிராண்டு கணக்குகள் பிரிவுக்குச் செல்லவும்.
  2. "உங்கள் பிராண்டு கணக்குகள்" என்பதன்கீழ் நிர்வகிக்க விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அனுமதிகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பட்டியலில் உங்கள் பெயர் காட்டப்படும்.
    • உதவிக்குறிப்பு: உங்கள் பெயர் காட்டப்படாவிட்டால் சேனலின் வேறொரு உரிமையாளரால் நீங்கள் உரிமையாளராகச் சேர்க்கப்பட வேண்டும். அழைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு 7 நாட்கள் காத்திருந்து, 1வது படியிலிருந்து மீண்டும் முயலவும்.
  5. உங்கள் பெயருக்கு அடுத்துள்ள, கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்து அதன் பிறகு முதன்மை உரிமையாளர் அதன் பிறகு மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3494356331078276319
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false