கருத்து வழங்குதல்

YouTube சிக்கலைப் புகாரளித்தல்

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை தேர்ந்தெடுக்கவும்.
  3. கருத்தை அனுப்புங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலை விவரிக்கவும். புகாரில் அதிகத் தகவல்களைச் சேர்க்கும்பட்சத்தில் எங்களுக்கு அவை மேலும் உதவியாக இருக்கும்.
  5. ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்க்க வேண்டுமா எனத் தேர்வுசெய்யவும். திரையில் உள்ள தகவல்களை ஹைலைட் செய்து காட்டலாம் அல்லது தனிப்பட்ட தகவல்களை அகற்றலாம்.
  6. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

ஸ்மார்ட் டிவிகள், Chromecast, கேம் கன்சோல்கள்

  1. உங்கள் சாதனத்தில் YouTube ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஏதேனுமொரு வீடியோவின் முகப்புப் பக்கத்தில் அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கருத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கருத்து தெரிவிப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. புகாரைச் சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கருத்தை எப்படிப் பயன்படுத்துவோம்?

கருத்து தெரிவிப்பதற்காக நீங்கள் நேரம் ஒதுக்கியதைப் பாராட்டுகிறோம். உங்கள் கருத்து நேரடியாக YouTubeக்கு அனுப்பப்படும். சிக்கல்களைப் பிழையறிந்து திருத்தவும், தயாரிப்புகளை மேம்படுத்தவும், சிக்கல்களைச் சரிசெய்யவும் அவற்றைப் பயன்படுத்துவோம். "கருத்தை அனுப்பு" அம்சம் வழியாக அனுப்பப்படும் கருத்துகளை வீடியோ கிரியேட்டர்களால் பார்க்க முடியாது. ஒவ்வொரு புகாருக்கும் எங்களால் பதிலளிக்க முடியாமல் போனாலும், முடிந்தவரையில் புகார்களை விரைவாக மதிப்பாய்வு செய்து சரிசெய்கிறோம்.

உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள YouTube மூலம் நேரடியாகக் கருத்தை அனுப்பும்போது முக்கியமான விவரங்களை நீங்கள் அதில் சேர்க்கலாம். ஆப்ஸ் பதிப்பு, சிஸ்டம் தரவு போன்ற விவரங்கள் சிக்கல்களைக் கண்டறிய உதவும். புகாரில் அதிகத் தகவல்களைச் சேர்க்கும்பட்சத்தில் எங்களுக்கு அவை மேலும் உதவியாக இருக்கும். உதாரணமாக, குறிப்பிட்ட வகையான சிக்கல்களைப் பிழையறிந்து திருத்தும்போது கணக்கு சார்ந்த தகவல்களும் ஸ்கிரீன்ஷாட்களும் அந்தச் சிக்கலைக் கண்டறிந்து திருத்துவதில் பெரிதும் உதவுகின்றன.

தற்சமயம் நாங்கள் சரிசெய்து கொண்டிருக்கும் சிக்கல்களைப் பார்க்க தெரிந்த சிக்கல்கள் பக்கம் என்ற பக்கத்தைப் பயன்படுத்தலாம். சிக்கல்களைச் சரிசெய்ய, YouTube உதவி மன்றம் பக்கத்தில் மற்ற YouTube பயனர்களிடம் உதவி கேட்கலாம். மேலும், நீங்கள் ஒரு YouTube கிரியேட்டர் எனில் எப்படி உதவி பெறுவது என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12785384596559425151
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false