Xbox Oneனில் YouTubeஐப் பார்த்தல்

இப்போது Xbox Oneனில் நீங்கள் YouTube வீடியோக்களைப் பார்க்கலாம். YouTube ஆப்ஸில் நீங்கள் குழுசேர்ந்துள்ள சேனல்களைப் பார்க்கலாம், வீடியோக்களைத் தேடலாம், உங்கள் மொபைல் சாதனத்தை ரிமோட்டாகப் பயன்படுத்தலாம்.

YouTube ஆப்ஸைப் பதிவிறக்குதல்

YouTubeல் உள்நுழைதல் அல்லது அதிலிருந்து வெளியேறுதல்

YouTube ஆப்ஸை முதல் முறையாகத் திறக்கும்போது உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம். உள்நுழைந்தவுடன் உங்கள் பிளேலிஸ்ட்கள், சந்தாக்கள் போன்ற பல YouTube அம்சங்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.

உங்கள் Xbox Oneனில் உள்நுழைதல்:

  1. உள்நுழைவு & அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்
  2. உள்நுழை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். செயல்படுத்தல் குறியீடு ஒன்றைப் பெறுவீர்கள். 

உங்கள் கம்ப்யூட்டரில் உள்நுழைதல்:

  1. www.youtube.com/activate என்ற பக்கத்திற்குச் சென்று Xbox Oneனில் காட்டப்படும் செயல்படுத்தல் குறியீட்டை உள்ளிடவும். 
  2. அணுகலை அனுமதி என்பதைக் கிளிக் செய்து உள்நுழைவுச் செயல்முறையை நிறைவுசெய்யவும்.

Xbox Oneனில் இருந்து உங்கள் கணக்கை நீக்குவது எப்படியென அறிக.

வீடியோ கட்டுப்பாடுகள்

பிளே செய்வதற்கு ஒரு வீடியோவைத் தேர்ந்தெடுத்தவுடன் பிளேயர் கட்டுப்பாடுகள் பட்டி தோன்றும், அதில் இவற்றைச் செய்யலாம்:

  • பின்செல்  - பின்செல்வதற்கான வேகத்தை அதிகரிக்க A என்பதை அழுத்தவும்.

  • இடைநிறுத்து/தொடங்கு  - வீடியோவை இடைநிறுத்தலாம் அல்லது மீண்டும் தொடங்கலாம்.
  • வேகமாக முன்செல்  - வேகமாக முன்செல்ல A என்பதை அழுத்தவும்.
  • வசனங்கள்  - வீடியோவிற்கு வசனங்கள் இருந்தால் அவற்றைப் பார்க்க இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

மீண்டும் வீடியோக்களை உலாவ B பட்டனைப் பயன்படுத்தவும்.

குரல் மற்றும் சைகை கட்டுப்பாடுகள்

உங்கள் குரலையோ சைகைகளையோ பயன்படுத்தியும் YouTube ஆப்ஸைக் கட்டுப்படுத்தலாம்.

குரல்

குரல் கட்டுப்பாட்டை இயக்க "Xbox Select" எனக் கூறவும். திரையில் ஹைலைட் செய்யப்பட்ட சொல்லையோ சொற்றொடரையோ கூறி அதைத் திறக்கலாம்.

சைகை

சைகை கட்டுப்பாடுகளை இயக்குவதற்குக் கன்சோலுக்கு முன்னால் உங்கள் கையை அசைக்கவும், உங்கள் திரையில் ஓர் ஐகான் தோன்றும். வீடியோவைத் தேர்ந்தெடுக்க உள்ளங்கையை முன்னோக்கி நகர்த்தவும். உங்கள் உள்ளங்கையை மூடுவதன் மூலமாகவும் ஒரு வீடியோவை "அழுத்திப் பிடிக்கலாம்", பின்செல்ல இடதுபுறமாகவோ வேகமாக முன்செல்ல வலதுபுறமாகவோ நகர்த்தவும்.

உங்கள் மொபைல் சாதனத்தை இணைத்தல்

உங்கள் மொபைல் சாதனத்தை ரிமோட் கன்ட்ரோலாகப் பயன்படுத்தலாம். m.youtube.com, Android ஆப்ஸுக்கான YouTube அல்லது YouTube iOS ஆப்ஸ் மூலம் Xbox Oneனை இணைப்பது எப்படியென அறிந்துகொள்ளுங்கள்.

வீடியோவின் தரம்

Xbox One S, Xbox One X, Xbox Series S, Xbox Series X ஆகிய மாடல்களில் YouTube வீடியோக்களை 4K தெளிவுத்திறனில் பார்க்கலாம். Xbox One கன்சோலின் அதிகபட்சத் தெளிவுத்திறன் 1080p. Xbox One S, Xbox One X, Xbox Series S, Xbox Series X ஆகிய மாடல்களில் HDR வீடியோ இயக்கம் ஆதரிக்கப்படுகிறது.
Xbox One சாதனங்களில் பின்வரும் தெளிவுத்திறன்களில் YouTube வீடியோக்களைப் பார்க்கலாம்.
  • Xbox One: 1080p தெளிவுத்திறன் வரை (60 ஃபிரேம்கள்/வினாடி)
  • Xbox One S: 4K தெளிவுத்திறன் வரை (60 ஃபிரேம்கள்/வினாடி)
  • Xbox One X: 4K தெளிவுத்திறன் வரை (வினாடிக்கு 60 ஃபிரேம்கள்)

Xbox One S, Xbox One X, Xbox Series S, Xbox Series X ஆகிய மாடல்களில் HDR வீடியோ இயக்கம் ஆதரிக்கப்படுகிறது. 

Xbox பிழைச் செய்தி

“YouTube தற்போது கிடைக்கவில்லை” எனும் பிழைச் செய்தியைப் பார்த்தால் உங்கள் இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருக்கக்கூடும் என்று அர்த்தம்.

இந்தச் சிக்கலைச் சரிசெய்ய பிழையறிந்து திருத்துவதற்கான எங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14723570514831905691
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false