YouTube அறிவிப்புகளை நிர்வகித்தல்

உங்களுக்குப் பிடித்த சேனல்களிலிருந்தும் பிற உள்ளடக்கங்களிலிருந்தும் புதிய வீடியோக்களும் அறிவிப்புகளும் வரும்போது YouTube அறிவிப்புகள் அவற்றைத் தெரிவிக்கும். நீங்கள் குழு சேர்ந்த சேனல்களிலிருந்து வரும் அறிவிப்புகளை அனுப்புவதோடு உங்கள் ஆர்வத்தின் அடிப்படையிலான அறிவிப்புகளையும் நாங்கள் அனுப்பக்கூடும். உங்கள் அறிவிப்புகளை மாற்றவோ அவற்றை முற்றிலுமாக முடக்கவோ கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.
கவனத்திற்கு: சாதனத்தைப் பொறுத்து அறிவிப்பு அமைப்புகள் சற்று மாறுபடலாம். ஒவ்வொரு புதிய பதிவேற்றத்தின்போதும் பார்வையாளர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படாது.

அறிவிப்புகளுக்கும் சந்தாக்கள் ஊட்டத்திற்கும் இடையிலான வேறுபாடு

நீங்கள் குழுசேர்ந்துள்ள சேனல்கள் ஏதேனும் வீடியோக்களைச் சமீபத்தில் பதிவேற்றினால், மொபைலிலும் கம்ப்யூட்டரிலும் காட்டப்படும் சந்தாக்கள் ஊட்டத்தில் அவை காட்டப்படும்.

அறிவிப்புகள் மூலம் புதிய வீடியோக்கள் பற்றியும் நீங்கள் குழுசேர்ந்துள்ள சேனல்கள் தொடர்பான அறிவிப்புகளையும் உங்களுக்குப் பிடிக்கக்கூடிய உள்ளடக்கம் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். மின்னஞ்சல்கள், பிரத்தியேக அறிவிப்புகள் ஆகியவற்றை மொபைலுக்கு அனுப்புவோம் அல்லது இன்பாக்ஸ் அறிவிப்புகளை உங்கள் கம்ப்யூட்டருக்கோ மொபைலுக்கோ அனுப்புவோம். ஒரு சேனலில் நீங்கள் குழுசேர்ந்ததும் அதன் முக்கியச் செயல்பாடுகள் தொடர்பான பிரத்தியேக அறிவிப்புகளைத் தானாகவே பெறுவீர்கள்.

இன்பாக்ஸ் அறிவிப்புகள் நேரத்தின்படி வரிசைப்படுத்தப்படும், மிகச் சமீபத்திய அறிவிப்புகள் மேலே காட்டப்படும். உங்களுக்கு மிகவும் தொடர்புடையது என நாங்கள் கருதும் அறிவிப்புகள் “முக்கியமானது” பிரிவில் புதிய அறிவிப்புகளுக்கு மேலே காட்டப்படலாம். முக்கியமான அறிவிப்புகளில், உங்கள் கருத்துக்கான பதில் வருவது அல்லது உங்கள் வீடியோக்களை மற்றவர்கள் பகிர்வது போன்றவை இருக்கலாம்.

நீங்கள் குழுசேர்ந்துள்ள சேனலில் இருந்து அனைத்து அறிவிப்புகளையும் பெற அறிவிப்புகளுக்கான பெல்  ஐகானைத் தட்டவும். அதன் பிறகு, அனைத்து அறிவிப்புகளையும் பெறத் தேர்வுசெய்துள்ளீர்கள் என்பதைக் குறிப்பிட, அந்த பெல் ஐகான் 'ஒலிக்கும் பெல் ' ஐகானாக மாறும்.

சேனலின் பார்வையாளர் அமைப்பு சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என அமைக்கப்பட்டிருந்தால் அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள். அத்துடன், அறிவிப்புகளுக்கான பெல் விருப்பம் 'எதுவுமில்லை ' என அமைக்கப்படும். இந்த அமைப்பை மாற்ற முடியாது.

சேனல் சந்தாக்களில் பெல் அறிவிப்புகளின் பங்கு என்ன?

 பிரத்தியேகமான அறிவிப்புகள் (இயல்பு)
 அறிவிப்புகள் இல்லை
 எல்லா அறிவிப்புகளும்

சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என அமைக்கப்பட்ட வீடியோ/சேனலில் நீங்கள் குழுசேர்ந்தால் உங்கள் பெல் அமைப்பு அறிவிப்புகள் இல்லை  என்று அமைக்கப்பட்டிருக்கும், அதை மாற்ற முடியாது

தொடங்குவதற்கு முன்பு: நீங்கள் சரியான கணக்கில் உள்நுழைந்துள்ளதை உறுதிசெய்துகொள்ளவும். உங்கள் YouTube கணக்கு அமைப்புகளை இங்கே கண்டறியலாம்:

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. திரையின் மேற்புறத்திலுள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பிட்ட சேனல்களில் இருந்து அறிவிப்புகளைப் பெறுதல்

ஒரு சேனலில் நீங்கள் குழு சேர்ந்ததும், அதன் முக்கியச் செயல்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளைத் தானாகவே பெறுவீர்கள். அந்தச் சேனலின் புதிய வீடியோக்கள் அனைத்தும் உங்கள் சந்தாக்கள் ஊட்டத்தில் காட்டப்படும். நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல் ஒவ்வொரு முறை உள்ளடக்கத்தை வெளியிடும்போதும் உங்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அவற்றை முற்றிலுமாக முடக்கிக்கொள்ளலாம். 

குழு சேரும் சேனலில் இருந்து அறிவிப்புகளைப் பெறுதல்:

  1. சேனல் பக்கத்திற்கோ வீடியோவின் முகப்புப் பக்கத்திற்கோ செல்லவும்.
  2. அந்தச் சேனலில் நீங்கள் குழு சேரவில்லை எனில், குழு சேர் என்பதைக் கிளிக் செய்யவும். சேனலில் குழு சேர்ந்ததும், பிரத்தியேக அறிவிப்புகளைத் தானாகவே பெறுவீர்கள்.
  3. அறிவிப்புகளுக்கான பெல்  ஐகானைக் கிளிக் செய்து 'அனைத்து அறிவிப்புகளும்' மற்றும் 'பிரத்தியேக அறிவிப்புகள்' என்பதற்கு இடையே மாறிக்கொள்ளலாம்.
    • அனைத்து அறிவிப்புகளும் - அனைத்து நீள-வடிவப் பதிவேற்றங்களுக்கும் லைவ் ஸ்ட்ரீம்களுக்கும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் சந்தாக்கள், இதுவரை பார்த்தவை ஆகியவற்றின் அடிப்படையில் Shorts வீடியோக்களுக்கான சில பிரத்தியேக அறிவிப்புகளையும் நீங்கள் பெறக்கூடும்.
    • பிரத்தியேக அறிவிப்புகள் - சில பதிவேற்றங்கள், Shorts வீடியோக்கள், லைவ் ஸ்ட்ரீம்கள் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளைப் பெறுவீர்கள். "பிரத்தியேகமானவை" என்பதன் அர்த்தம் பயனருக்கு ஏற்ப மாறுபடும். உங்களுக்கு எப்போது அறிவிப்புகளை அனுப்ப வேண்டும் என்பதைத் தீர்மானிக்க YouTube பல்வேறு சிக்னல்களைப் பயன்படுத்துகிறது. நீங்கள் இதுவரை பார்த்தவை, குறிப்பிட்ட சில சேனல்களை எத்தனை முறை பார்க்கிறீர்கள், சில வீடியோக்களின் பிரபலத்தன்மை, எத்தனை முறை அறிவிப்புகளைத் திறக்கிறீர்கள் ஆகியவை இந்தத் தகவல்களில் அடங்கும்.

ஒரு சேனலில் குழுவிலகி பிறகு மீண்டும் குழு சேர்ந்தால், அறிவிப்பு அமைப்புகள் 'பிரத்தியேகமானவை' அல்லது 'எதுவுமில்லை' என்ற நிலைக்கு மீட்டமைக்கப்படும். ஒவ்வொரு பதிவேற்றத்தின்போதும் அறிவிப்பைப் பெற விரும்பினால் 'அனைத்தும்' என்பதை இயக்கவும்.

அறிவிப்புகளைப் பார்த்தல்

இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் அறிவிப்புகளைப் பெறலாம் பார்க்கலாம்.
  1. ஏதேனும் உலாவியில் YouTubeஐத் திறக்கவும். 
  2. அறிவிப்புகளைப் பார்க்க, பக்கத்தின் மேற்புறத்தில் உள்ள 'அறிவிப்புகளுக்கான பெல் ' ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவின் அறிவிப்பையோ கருத்தின் அறிவிப்பையோ தேர்ந்தெடுக்கவும். 
உங்கள் கம்ப்யூட்டர் இன்பாக்ஸில் இருந்தும் அறிவிப்புகளை நிர்வகிக்கலாம்.
  1. அறிவிப்பிற்கு அடுத்துள்ள, மேலும்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இந்த அறிவிப்பை மறை<channel name> அனுப்பும் அனைத்து அறிவிப்புகளையும் முடக்கு[type of notification] அறிவிப்புகள் அனைத்தையும் முடக்கு ஆகிய விருப்பங்களில் ஒன்றைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் பெற விரும்பும் அறிவிப்புகளின் வகையைத் தேர்ந்தெடுத்தல்

YouTubeல் இருந்து எந்த வகையான அறிவிப்புகளைப் பெற விரும்புகிறீர்கள் என்பதையும் அவற்றை எப்படிப் பெற விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. அறிவிப்பு அமைப்புகளுக்குச் செல்லவும்.
  3. திரையிலுள்ள பல்வேறு பிரிவுகளில், நீங்கள் பெற விரும்பும் அறிவிப்புகளின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
    • சந்தாக்கள்: நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல்களின் செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளைக் காட்டும்.
    • பரிந்துரைக்கப்படும் வீடியோக்கள்: நீங்கள் பார்ப்பவற்றின் அடிப்படையில் நீங்கள் விரும்பக்கூடிய வீடியோக்கள் குறித்த அறிவிப்புகளைக் காட்டும். நீங்கள் குழு சேர்ந்த சேனல்களின் வீடியோக்கள் காட்டப்படாது.
    • எனது சேனல் செயல்பாடு: உங்கள் சேனலிலோ வீடியோக்களிலோ தெரிவிக்கப்படும் கருத்துகள் மற்றும் அவற்றின் பிற செயல்பாடுகள் பற்றிய அறிவிப்புகளைக் காட்டும்.
    • எனது கருத்துகள் மீதான செயல்பாடு: உங்கள் கருத்துகளுக்கு விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டாலோ அவை பின் செய்யப்பட்டாலோ அவற்றுக்கு இதயச் சின்னம் (<3s) வழங்கப்பட்டாலோ அது குறித்த அறிவிப்புகளைக் காட்டும்.
    • எனது கருத்துகளுக்கான பதில்கள்: யாரேனும் உங்கள் கருத்துகளுக்குப் பதில் அளிக்கும்போது அது குறித்த அறிவிப்புகளைக் காட்டும்.
    • குறிப்பிடல்கள்: உங்கள் சேனலை மற்றவர்கள் குறிப்பிடும்போது அது குறித்த அறிவிப்புகளைக் காட்டும்.
    • பகிரப்படும் உள்ளடக்கம்: பிற சேனல்களில் உங்கள் உள்ளடக்கம் பகிரப்படும்போது அது குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது காட்டும்.
  4. “மின்னஞ்சல் அறிவிப்புகள்” என்பதற்குக் கீழ், எந்த வகையான மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

 

Google Chrome அறிவிப்புகளை நிர்வகித்தல்

Google Chrome உலாவியைப் பயன்படுத்தும்போது YouTubeன் பிரத்தியேக அறிவிப்புகளைப் பெறும்படி நீங்கள் தேர்வுசெய்யலாம். அவற்றை நீங்கள் இயக்கினால், நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல்களில் இருந்து அனுப்பப்படும் பாப்-அப் அறிவிப்புகளை உங்கள் உலாவியில் பெறுவீர்கள்.

  1. YouTubeல் உள்நுழையவும்.
  2. உங்கள் அறிவிப்பு அமைப்புகளுக்குச் செல்லவும்.
  3. அறிவிப்புகளை இயக்க/முடக்க “டெஸ்க்டாப் அறிவிப்புகள்" என்பதற்குக் கீழே Chromeமிற்கு அடுத்துள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்.

"டெஸ்க்டாப் அறிவிப்புகள்" விருப்பம் உங்களுக்குக் காட்டப்படவில்லை எனில், உங்கள் Chrome உலாவியின் அறிவிப்புகள் தடுக்கப்பட்டிருக்கலாம். கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி அறிவிப்புகளுக்கான தடுப்பை நீக்கவும்.

  1. Chromeமின் தேடல் பட்டியில் உள்ள 'பூட்டுக்குறியைக்' கிளிக் செய்யவும்.
  2. வலைதள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "அனுமதிகள்" பிரிவிற்குக் கீழே உள்ள "அறிவிப்புகள்" என்பதற்குச் செல்லவும்.
  4. கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்து, அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அறிவிப்புகளுக்கும் சந்தாக்கள் ஊட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு

நீங்கள் குழுசேர்ந்துள்ள சேனல்கள் ஏதேனும் வீடியோக்களைச் சமீபத்தில் பதிவேற்றினால், மொபைலிலும் கம்ப்யூட்டரிலும் காட்டப்படும் சந்தாக்கள் ஊட்டத்தில் அவை காட்டப்படும்.

அறிவிப்புகள் மூலம் புதிய வீடியோக்கள் பற்றியும் நீங்கள் குழுசேர்ந்துள்ள சேனல்கள் தொடர்பான அறிவிப்புகளையும் உங்களுக்குப் பிடிக்கக்கூடிய உள்ளடக்கம் குறித்தும் தெரிந்துகொள்ளலாம். மின்னஞ்சல்கள், பிரத்தியேக அறிவிப்புகள் ஆகியவற்றை மொபைலுக்கு அனுப்புவோம் அல்லது இன்பாக்ஸ் அறிவிப்புகளை உங்கள் கம்ப்யூட்டருக்கோ மொபைலுக்கோ அனுப்புவோம். ஒரு சேனலில் நீங்கள் குழுசேர்ந்ததும் அதன் முக்கியச் செயல்பாடுகள் தொடர்பான பிரத்தியேக அறிவிப்புகளைத் தானாகவே பெறுவீர்கள்.

இன்பாக்ஸ் அறிவிப்புகள் நேரத்தின்படி வரிசைப்படுத்தப்படும், மிகச் சமீபத்திய அறிவிப்புகள் மேலே காட்டப்படும். உங்களுக்கு மிகவும் தொடர்புடையது என நாங்கள் கருதும் அறிவிப்புகள் “முக்கியமானது” பிரிவில் புதிய அறிவிப்புகளுக்கு மேலே காட்டப்படலாம். முக்கியமான அறிவிப்புகளில், உங்கள் கருத்துக்கான பதில் வருவது அல்லது உங்கள் வீடியோக்களை மற்றவர்கள் பகிர்வது போன்றவை இருக்கலாம்.

நீங்கள் குழுசேர்ந்துள்ள சேனலில் இருந்து அனைத்து அறிவிப்புகளையும் பெற அறிவிப்புகளுக்கான பெல்  ஐகானைத் தட்டவும். அதன் பிறகு, அனைத்து அறிவிப்புகளையும் பெறத் தேர்வுசெய்துள்ளீர்கள் என்பதைக் குறிப்பிட, அந்த பெல் ஐகான் 'ஒலிக்கும் பெல் ' ஐகானாக மாறும்.

சேனலின் பார்வையாளர் அமைப்பு சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என அமைக்கப்பட்டிருந்தால் அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள். அத்துடன், அறிவிப்புகளுக்கான பெல் விருப்பம் 'எதுவுமில்லை ' என அமைக்கப்படும். இந்த அமைப்பை மாற்ற முடியாது.

சேனல் உரிமையாளர் அறிவிப்புகள்

சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும் வீடியோ குறித்த அறிவிப்புகளுக்கு வீடியோ அளவிலான அமைப்புகளை மாற்ற:
  1. YouTube Studio அதன் பிறகு உள்ளடக்கம்  அதன் பிறகு வீடியோக்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. பட்டியலிடப்படாத வீடியோவைத் தேர்வுசெய்து அதன் பிறகு விவரங்கள் அதன் பிறகு மேலும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழே நகர்த்தி உரிமம் என்பதற்குச் செல்லவும்.
  4. சந்தாக்களுக்கான ஊட்டத்தில் வெளியிட்டு சந்தாதாரர்களுக்குத் தெரிவி எனும் செக்பாக்ஸை அந்தக் குறிப்பிட்ட வீடியோவிற்குத் தேர்வுசெய்யவும்/தேர்வுநீக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13615968010727889412
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false