PlayStationனில் YouTubeஐப் பார்த்தல்

இப்போது PlayStationனில் YouTube வீடியோக்களைப் பார்க்கலாம். YouTube ஆப்ஸில் நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல்களைப் பார்க்கலாம், வீடியோக்களைத் தேடலாம். உங்கள் மொபைல், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரை ரிமோட்டாக எப்படிப் பயன்படுத்துவது என அறிந்துகொள்ளுங்கள்.

YouTube ஆப்ஸைப் பதிவிறக்குதல்

PlayStation கணக்குடன் உங்கள் Google கணக்கை இணைத்தல்

உங்கள் Google கணக்குகளையும் PlayStation கணக்குகளையும் இணைத்து கன்சோலில் இருந்து கேம்பிளேவை YouTubeல் ஒளிபரப்பலாம் பகிரலாம்.

PlayStationனில் உங்கள் கணக்கில் உள்நுழைவது எப்படி என அறிந்துகொள்ளுங்கள். தற்போது உங்களிடம் சாதனத்திற்கான அணுகல் இல்லையெனில் கணக்குகளுக்கிடையே மாறலாம் அல்லது வெளியேறலாம்.

கவனத்திற்கு: PlayStation கணக்குடன் உங்கள் Google கணக்கை இணைப்பது உங்களை YouTubeல் உள்நுழையச் செய்யாது. YouTube ஆப்ஸில் நீங்களாகவே உள்நுழைய வேண்டியிருக்கும்.
வீடியோ கட்டுப்பாடுகள்
இயக்குவதற்கு ஒரு வீடியோவைத் தேர்ந்தெடுத்தவுடன் இந்தச் செயல்களைச் செய்ய அனுமதிக்கும் பிளேயர் கட்டுப்பாடுகள் பட்டி தோன்றும்:
  • இடைநிறுத்து/தொடங்கு : வீடியோவை இடைநிறுத்த அல்லது தொடங்க, வீடியோ செயல்நிலைப் பட்டியைத் தேர்ந்தெடுத்து ரிமோட்டில் X பட்டனை அழுத்தவும்.
  • முன்செல் : வீடியோவில் முன்செல்ல, வீடியோ செயல்நிலைப் பட்டியைத் தேர்ந்தெடுத்து கன்ட்ரோலரில் வலது பக்கமாக அழுத்தவும்.
  • பின்செல் : வீடியோவில் பின்செல்ல, வீடியோ செயல்நிலைப் பட்டியைத் தேர்ந்தெடுத்து கன்ட்ரோலரில் இடது பக்கமாக அழுத்தவும்.
  • விவரிப்பு சப்டைட்டில்கள் : வீடியோவிற்கு வசனங்கள் இருந்தால் வீடியோவின் வசனங்களை ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கும் வசனத்தின் காட்சி அமைப்புகளை மாற்றுவதற்கும் ஐகானைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • கொடியிடுதல் : வீடியோவில் உள்ள தகாத உள்ளடக்கம் குறித்துப் புகாரளிக்கலாம்.

வீடியோ இயக்கப்படும்போது மேலும் செயல்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிக விருப்பங்களைக் கண்டறியலாம். இவற்றைப் பார்ப்பீர்கள்:

  • சேனலில் குழு சேர்தல்.
  • வீடியோவிற்கு ரேட்டிங் வழங்குதல்.
  • சமூக வழிகாட்டுதல்களை மீறும் வீடியோ குறித்துப் புகாரளித்தல்.
குறிப்பு: வீடியோக்களை வினாடிக்கு 60 ஃபிரேம்களில் 4K தெளிவுத்திறன் வரை இயக்கலாம்.

வீடியோக்களைத் தேடுதல்

குரல் தேடல் அம்சத்தைப் பயன்படுத்தி YouTube ஆப்ஸில் வீடியோக்களைத் தேடலாம். அதற்கான வழிமுறைகள்:

  1. DualShock® கண்ட்ரோலருடன் மைக்கை இணைக்கவும் (அல்லது உள்ளமைந்த மைக்குடன் PlayStation® கேமராவை இணைக்கவும்).
  2. YouTube ஆப்ஸைத் திறந்து தேடல் பக்கத்திற்குச் செல்லவும்.
  3. ஸ்கிரீன் கீபோர்டின் இடதுபுறத்தில் உள்ள மைக்கை தேர்ந்தெடுக்கவும் (அல்லது ஷார்ட்கட்டிற்கு, கண்ட்ரோலரில் L2 என்பதை அழுத்தவும்).
  4. நீங்கள் தேடுவதை மைக்கில் சொல்லவும்.
  5. உங்களுக்கான முடிவுகள் பாப்-அப் ஆகும்.

360 டிகிரி வீடியோக்களைப் பார்த்தல்

PlayStation 4 அல்லது 5ல் 360 டிகிரி வீடியோக்களைப் பார்க்கலாம். 360 டிகிரி வீடியோக்களைப் பார்க்கும்போது இணைக்கப்பட்ட கன்ட்ரோலரில் இடது மற்றும் வலது ஜாய்ஸ்டிக்குகள் இரண்டையும் வீடியோவை நகர்த்திச் சுற்றிப் பார்க்கப் பயன்படுத்தலாம்.

உங்கள் PlayStation உடன் இரண்டாவது சாதனத்தை இணைத்தல்

உங்கள் மொபைல், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரை ரிமோட் கன்ட்ரோலாகப் பயன்படுத்தலாம். YouTube இணையதளம் அல்லது மொபைல் ஆப்ஸ் மூலம் PlayStationனை இணைப்பது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

வீடியோவைப் பதிவேற்றுதல்

PlayStationனில் உள்ள பகிர் பட்டனைப் பயன்படுத்தி கேம்பிளே வீடியோக்களை நேரடியாக YouTubeல் பதிவேற்றலாம். அதற்கான வழிமுறைகள்:

  1. PS4 கண்ட்ரோலரில் உள்ள பகிர் பட்டனை அழுத்தி வீடியோ கிளிப்பைப் பதிவேற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. பதிவேற்ற விரும்பும் கிளிப்பைத் தேர்ந்தெடுத்து YouTube என்பதைத் தேர்வுசெய்யவும்.
  3. கிளிப்பின் தொடக்கம் மற்றும் இறுதிப்பகுதியைக் குறித்துவிட்டு தலைப்பு, விளக்கம், குறிச்சொற்கள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  4. தனியுரிமை அமைப்புகளையும் நீங்கள் சரியான சேனலில் பதிவேற்றுகிறீர்கள் என்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.
  5. பகிர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது உங்கள் கிளிப்பைப் பதிவேற்றத் தொடங்கும். உங்கள் பதிவேற்றங்களின் செயலாக்கத்தை PS4 அல்லது PS5 அறிவிப்புகள் பக்கத்தில் பார்க்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1194244896946277748
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false