உள்ளடக்கச் சரிபார்ப்புக் கருவியைப் பயன்படுத்துதல்

கவனத்திற்கு: இதுவரை உங்களிடம் உள்ளடக்கச் சரிபார்ப்புத் திட்ட (CVP - Content Verification Program) கணக்கு இல்லையெனில் இந்தப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உங்கள் தகுதிநிலையைச் சரிபார்க்கலாம்.

YouTube Studio உள்ளடக்க நிர்வாகியில் உள்ளடக்கச் சரிபார்ப்புக் கருவி இருக்கும். அதைப் பயன்படுத்த உள்ளடக்க நிர்வாகிக் கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளுக்கான இணையப் படிவத்தைப் போன்றே இருக்கும் எங்கள் நிறுவன இணையப் படிவத்தைப் பயன்படுத்துவதற்கு இந்தக் கருவி உங்களை அனுமதிக்கிறது, அத்துடன் பொதுவில் கிடைக்கும் YouTube வீடியோக்களில் எவை நீங்கள் உரிமம் வைத்துள்ள உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன என்பதைத் தேடிக் கண்டறிவதற்கான அம்சத்தையும் கொண்டுள்ளது. உங்கள் உள்ளடக்கத்துடன் பொருந்தக்கூடிய வீடியோக்களை நீங்கள் கண்டறிந்தால் நிறுவன இணையப் படிவத்தின் மூலம் நேரடியாகப் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

உங்கள் உள்ளடக்கத்துடன் பொருந்தும் வீடியோக்களைக் கண்டறிக

உள்ளடக்கச் சரிபார்ப்புக் கருவியைப் பயன்படுத்தி உங்கள் உள்ளடக்கத்துடன் பொருந்தும் வீடியோக்களைத் தேட:

  1. Studio உள்ளடக்க நிர்வாகியில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் நேரடி உரிமைகோரல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வடிப்பான் பட்டியில் தேடல் வார்த்தைகள், வீடியோ ஐடிகளை உள்ளிடவும் அல்லது வடிப்பான் அதன் பிறகு பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்கள் தேடலில் இருந்து தேடல் வார்த்தைகளை நீக்க மைனஸ் குறியை "-" பயன்படுத்தவும்.
    • குறிப்பிட்ட ஒருவர் பதிவேற்றும் வீடியோக்களைக் கண்டறிய, அவரது @பயனர்பெயர் அல்லது சேனல் ஐடியை டைப் செய்தும் நீங்கள் தேடலாம்.
    • இந்த வடிப்பான்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:
      • ஏற்புப் பட்டியல் (உங்கள் ஏற்புப் பட்டியலில் இருக்கின்ற/இல்லாத வீடியோ)
      • சேனல் ஐடி
      • உரிமைகோரல் நிலை (நீங்களோ பிறரோ அதை உரிமை கோரியுள்ள/கோராத வீடியோ)
      • லைவ் ஸ்ட்ரீம் (லைவ் ஸ்ட்ரீம்/லைவ் ஸ்ட்ரீம் அல்லாத வீடியோ)
      • வெளியிடப்பட்ட தேதி
      • மதிப்பாய்வு செய்யப்பட்டவை (உரிமைகோரல் மதிப்பாய்வு செய்யப்பட்டிருந்தால்)
      • வீடியோவின் நீளம் (<4 நிமிடங்கள், 4–20 நிமிடங்கள் அல்லது >20 நிமிடங்கள்)
  4. (விருப்பத்திற்குரியது) தேடல் முடிவுகள் பட்டியலில் தொடர்புடையவை, வெளியிடப்பட்ட தேதி, மொத்தப் பார்வைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை வரிசைப்படுத்த இதன்படி வரிசைப்படுத்து என்பதைக் கிளிக் செய்யலாம்.
உதவிக்குறிப்பு: ஒரே பக்கத்தில் கூடுதல் முடிவுகளைப் பார்க்க ஒரு பக்கத்திற்கான வரிசைகள் என்பதற்கு அடுத்துள்ள எண்ணைக் கிளிக் செய்து அதை 30ல் (இயல்புநிலை) இருந்து 10, 50 அல்லது 100க்கு மாற்றி அமைக்கலாம்.
பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முன் எந்தெந்தத் தனிப்பட்ட தகவல்கள் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையின் ஒரு பகுதியாகும் என்பதை நீங்கள் புரிந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

சமர்ப்பிப்பதற்கு முன்பு, பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைக்குத் தேவைப்படும் தனிப்பட்ட தகவல் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும்.

அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

ஒரு வீடியோவுக்கு அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்க:

  1. நேரடி உரிமைகோரல் பக்கத்தில் வீடியோவின் வரிசையைக் கிளிக் செய்து அதை விரிவாக்கவும்.
  2. வரிசையின் மேற்பகுதியில் உள்ள அகற்றுதல் பிரிவைக் கிளிக் செய்யவும்.
  3. உடைமையைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேற்பகுதியில் உள்ள பிரிவுகளைப் பயன்படுத்தி, ஏற்கெனவே இருக்கும் உடைமையைத் தேர்ந்தெடுக்க உடைமையைத் தேர்ந்தெடு என்பதையோ புதிதாக உருவாக்க உடைமையை உருவாக்கு என்பதையோ தேர்வுசெய்யவும். உடைமைகளை உருவாக்குவது எப்படி என்பது பற்றி அறிக.
  5. ஏற்கெனவே இருக்கும் உடைமையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் எனில் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும். புதிய உடைமையை உருவாக்குகிறீர்கள் எனில் உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. கையொப்பம் எனும் பெட்டியில் உங்கள் பெயரின் முற்பகுதியையும் பிற்பகுதியையும் டைப் செய்யவும் (நிறுவனத்தின் பெயராக இருக்கக் கூடாது).
  7. ஒப்புதல் என்பதற்குக் கீழிருக்கும் அறிக்கையைப் படித்துவிட்டு அதை ஒப்புக்கொள்வதற்கு அடையாளமாகச் செக்பாக்ஸைக் கிளிக் செய்யவும்.
  8. அகற்றுதல் கோரிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.

பல்வேறு அகற்றுதல் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளை உங்களால் மொத்தமாகச் சமர்பிக்க முடியலாம். ஒரே உடைமையுடன் தொடர்புடைய ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை அகற்றுவதற்குக் கோர:

  1. நேரடி உரிமைகோரல் பக்கத்தில் நீங்கள் அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்க விரும்பும் வீடியோக்களுக்கு அருகே இருக்கும் செக்பாக்ஸ்களைக் கிளிக் செய்யவும்.
    • ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 100 வீடியோக்கள் வரை தேர்வுசெய்யலாம். இதைச் செய்ய, பக்கத்தின் கீழே ஒரு பக்கத்திற்கான வரிசைகள் என்பதில் 100 என்று அமைத்திருப்பதை உறுதிசெய்துக்கொண்டு, பிறகு தேடல் முடிவுகள் என்பதற்கு மேல் உள்ள செக்பாக்ஸைக் கிளிக் செய்யவும்.
  2. பக்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் அகற்றுதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உடைமையைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேற்பகுதியில் உள்ள பிரிவுகளைப் பயன்படுத்தி, ஏற்கெனவே இருக்கும் உடைமையைத் தேர்ந்தெடுக்க உடைமையைத் தேர்ந்தெடு என்பதையோ புதிதாக உருவாக்க உடைமையை உருவாக்கு என்பதையோ தேர்வுசெய்யவும். உடைமைகளை உருவாக்குவது எப்படி என்பது பற்றி அறிக.
  5. ஏற்கெனவே இருக்கும் உடைமையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் எனில் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும். புதிய உடைமையை உருவாக்குகிறீர்கள் எனில் உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. கையொப்பம் எனும் பெட்டியில் உங்கள் பெயரின் முற்பகுதியையும் பிற்பகுதியையும் டைப் செய்யவும் (நிறுவனத்தின் பெயராக இருக்கக் கூடாது).
  7. ஒப்புதல் என்பதற்குக் கீழிருக்கும் அறிக்கையைப் படித்துவிட்டு அதை ஒப்புக்கொள்வதற்கு அடையாளமாகச் செக்பாக்ஸைக் கிளிக் செய்யவும்.
  8. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளைத் திரும்பப் பெறுதல் அல்லது ரத்துசெய்தல்

அகற்றுதல் கோரிக்கை தீர்க்கப்பட்டு உள்ளடக்கம் அகற்றப்பட்டிருந்தால் அந்தக் கோரிக்கையைத் திரும்பப் பெறலாம். அகற்றுதல் கோரிக்கை இதுவரை தீர்க்கப்படாமல் இருந்தால் (உதாரணமாக, தாமதமான அகற்றுதல்கள் மற்றும் மதிப்பாய்விலுள்ள அகற்றுதல்கள்) அதனை ரத்துசெய்யலாம்.

உள்ளடக்கச் சரிபார்ப்புக் கருவியின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை திரும்பப் பெற/ரத்துசெய்ய:

  1. Studio உள்ளடக்க நிர்வாகியில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உரிமை கோரப்பட்ட வீடியோக்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் அசல் அகற்றுதல் கோரிக்கையில் சேர்க்கப்பட்ட வீடியோவைக் கண்டறியவும்.
    • வீடியோவை விரைவாகக் கண்டறிய, வடிப்பான் பட்டி  அதன் பிறகு உரிமைகோரலின் நிலை அதன் பிறகு அகற்றுதல், தாமதமான அகற்றுதல் அல்லது மதிப்பாய்விலுள்ள அகற்றுதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வீடியோவின் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
  5. வீடியோ மீதான உரிமைகோரல்கள் பிரிவில், அகற்றுதல், தாமதமான அகற்றுதல் அல்லது மதிப்பாய்விலுள்ள அகற்றுதல்  என்பதற்கு அடுத்துள்ள விவரங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இதுவரை தீர்க்கப்படாத அகற்றுதல் கோரிக்கைகளுக்கு (தாமதமான அகற்றுதல்கள் மற்றும் மதிப்பாய்விலுள்ள அகற்றுதல்கள்), 1 அகற்றுதலை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும். தீர்க்கப்பட்ட அகற்றுதல்களுக்கு 1 அகற்றுதலைத் திரும்பப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7409598177110829596
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false