சேனல் அமைப்புகளை நிர்வகித்தல்

YouTube Studioவில் உங்கள் சேனல் அமைப்புகளை நிர்வகிக்கலாம். உங்கள் நாடு/பிராந்தியத்தை மாற்றுவது முதல் சேனலின் தெரிவுநிலையை மாற்றுவது வரை அனைத்தையும் மாற்றலாம்.

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் அமைப்புகள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  3. இடதுபுற மெனுவில் சேனல் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. சேனல் அமைப்புகளை அமைத்து, சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அடிப்படைத் தகவல்கள்

வசிக்கும் நாடு

கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி உங்கள் YouTube சேனலுக்கான நாடு/பிராந்தியத்தைத் தேர்வுசெய்யலாம். YouTube கூட்டாளர் திட்டத்திற்கான தகுதிநிலை என்பது நீங்கள் இங்கே தேர்வுசெய்துள்ள நாடு/பிராந்திய அமைப்பைப் பொறுத்ததாகும்.

தேடல் குறிப்புகள்

உங்கள் சேனல் தொடர்பான தேடல் குறிப்புகளை இந்த அமைப்பு மூலம் சேர்க்கலாம்.

மேம்பட்ட அமைப்புகள்

உங்கள் சேனலின் பார்வையாளர்களை அமைத்தல்

சேனல் அமைப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வேலையை எளிதாக்கலாம். இந்த அமைப்பு ஏற்கெனவே உள்ள வீடியோக்களுக்கும் எதிர்காலத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கும் பயன்படுத்தப்படும். ஏதேனுமொரு அமைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை எனில் உங்கள் சேனலிலுள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வீடியோவையும் அடையாளம் காணும்படி அமைக்க வேண்டும். தனித்தனி வீடியோக்களுக்கான அமைப்புகள் சேனல் அமைப்புகளை மீறிச் செயல்படும்.
சேனலிலுள்ள சில அம்சங்களைப் பயன்படுத்துவதற்கும் உங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். உங்கள் வீடியோக்கள் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவையா என்பது உறுதியாகத் தெரியவில்லை எனில் இந்த உதவி மையக் கட்டுரையைப் பாருங்கள்.

Google Ads கணக்கை இணைத்தல்

விளம்பரங்கள் காட்டப்படுவதை அனுமதிக்க உங்கள் YouTube சேனலை Google Ads கணக்குடன் இணைக்கலாம். இந்த விளம்பரங்கள் உங்கள் சேனலின் வீடியோக்களுடனான தொடர்புகளைப் பொறுத்தது. மேலும், புள்ளிவிவரங்களுக்கான அணுகலையும் இவை தருகின்றன. மேலும் அறிக.

தானியங்கி வசனங்கள்

தகாத சொற்களுக்குப் பதிலாக திறந்த பகர அடைப்புக்குறி, இரண்டு அடிக்கோடுகள், மூடிய பகர அடைப்புக்குறியை “[ __ ]” இயல்பாகவே காட்டும்படி தானியங்கி வசனங்கள் அம்சம் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

விளம்பரங்கள்

நீங்கள் இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்தால் பார்வையாளரின் ஆர்வங்கள் அடிப்படையிலான பிரத்தியேக விளம்பரங்களோ ரீமார்க்கெட்டிங் விளம்பரங்களோ முடக்கப்படும். இந்த அமைப்பை முடக்குவது உங்கள் சேனலின் வருவாயைக் குறைக்கக்கூடும். அத்துடன், உங்கள் சேனலுக்கான 'ஈட்டிய செயல்பாடுகள்' அறிக்கைகளும் ரீமார்க்கெட்டிங் பட்டியல்களும் செயல்படாது.
சேனலுக்குத் திசைதிருப்புதல்

உங்கள் பிரத்தியேக URLலின் சுருக்கமான பதிப்பைப் பயன்படுத்தி பார்வையாளர்களை வேறு சேனலுக்குத் திசைதிருப்பலாம். உங்கள் ரீடைரெக்ட் URL எந்த இணையதளத்திற்குத் திசைதிருப்பிவிட வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்தத் தளத்தின் URLலை ரீடைரெக்ட் URL புலத்தில் உள்ளிடுங்கள்.

கவனத்திற்கு: தங்கள் கூட்டாளர் நிர்வாகியின் மூலமோ விற்பனை முகவரின் மூலமோ இந்த அம்சத்தை இயக்கத்தில் வைத்துள்ள கூட்டாளர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் ரீடைரெக்ட் URLகள் கிடைக்கின்றன.

உதாரணமாக, உங்கள் URL www.youtube.com/c/YouTubeCreators எனில், ரீடைரெக்ட் URL புலத்தில் www.youtube.com/user/youtubenation அல்லது www.youtube.com/channel/UCUD4yDVyM54QpfqGJX4S7ng என உள்ளிடுவதன் மூலம் உங்கள் சுருக்க URLலைப் பயன்படுத்தி (www.youtube.com/YouTubeCreators) பார்வையாளர்களை YouTube Nation சேனலுக்கு நீங்கள் திசைதிருப்பலாம்.

 
சேனலின் தெரிவுநிலை

இந்த விருப்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் சேனலைத் தற்காலிகமாக மறைந்திருக்கும்படி செய்யலாம். உங்கள் வீடியோக்கள், பிளேலிஸ்ட்கள், சேனல் விவரங்கள் ஆகியவை பார்வையாளர்களுக்குக் காட்டப்படாது. 

சேனல் உரிமையாளராக, நீங்கள் மட்டும் பார்க்கக்கூடியவை:

  • உங்கள் சேனல் பக்கம்
  • உங்கள் சேனல் கலை மற்றும் ஐகான்
  • உங்கள் வீடியோக்கள் மற்றும் பிளேலிஸ்ட்கள்
  • உங்கள் கருத்துகள் மற்றும் பகுப்பாய்வுகள்
  • உங்கள் சமூக இடுகைகள்

உங்கள் சேனலை மீண்டும் காட்டும்படி எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். அப்படிச் செய்தால் உங்கள் உள்ளடக்கம் பார்வையாளர்களுக்குப் பொதுவில் காட்டப்படும்.

கவனத்திற்கு: தங்கள் கூட்டாளர் நிர்வாகியின் மூலமோ விற்பனை முகவரின் மூலமோ இந்த அம்சத்தை இயக்கத்தில் வைத்துள்ள கூட்டாளர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் சேனலின் தெரிவுநிலை கிடைக்கிறது.

பிற அமைப்புகள்

YouTubeல் உங்கள் செயல்நிலையை நிர்வகிப்பதோடு இந்த அமைப்புகளின் மூலம் உங்கள் உள்ளடக்கத்தையும் நிரந்தரமாக அகற்றலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3070069960621035639
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false