கிரியேட்டிவ் காமன்ஸ்

Changes to video attributions: The view attributions page will be discontinued after September 2021 due to limited usage. You can still add attribution to your videos by updating your video description.

தங்கள் படைப்புகளைப் பிறர் பயன்படுத்த அனுமதிப்பதற்கான நிலையான வழியை வீடியோ கிரியேட்டர்களுக்குக் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் வழங்குகின்றன. கிரியேட்டர்கள் தங்களுடைய வீடியோக்களில் கிரியேட்டிவ் காமன்ஸ் CC BY உரிமத்தைக் குறிப்பதற்கு YouTube அனுமதிக்கிறது.

உங்கள் வீடியோவில் CC BY உரிமத்தைக் குறிப்பிட்டிருந்தால் பதிப்புரிமை உங்களிடமே இருக்கும். மற்ற கிரியேட்டர்களால் உரிமத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்கள் படைப்பை மீண்டும் பயன்படுத்த முடியும்.

 

YouTubeல் கிரியேட்டிவ் காமன்ஸ்

அனைத்துக் கிரியேட்டர்களும் தாங்கள் பதிவேற்றும் வீடியோக்களில் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தைக் குறிப்பிடலாம்.

பதிவேற்றப்படும் அனைத்து வீடியோக்களுக்கும் இயல்புநிலை அமைப்பாக ‘வழக்கமான YouTube உரிமம்’ இருக்கும். வழக்கமான YouTube உரிமத்தின் விதிமுறைகளுக்கு எங்கள் சேவை விதிமுறைகள் பக்கத்தைப் பார்க்கவும்.

100% அசல் உள்ளடக்கம் மட்டுமே கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்களைப் பயன்படுத்த முடியும். உங்கள் வீடியோவின் மீது Content ID உரிமைகோரல் இருக்கும்பட்சத்தில், வீடியோவுக்குக் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தைக் குறிப்பிட முடியாது.

உங்கள் சொந்த வீடியோவைக் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தால் குறிப்பிடுவதன் மூலம், அந்த வீடியோவை மீண்டும் பயன்படுத்துவதற்கும் எடிட் செய்வதற்குமான உரிமையை மொத்த YouTube சமூகத்திற்கும் வழங்குகிறீர்கள்.

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்திற்கான தகுதிநிலை என்ன?

நீங்கள் பதிவேற்றும் வீடியோவின் உள்ளடக்கம் முழுவதும் CC BY உரிமத்தின்கீழ் உரிமம் வழங்கத்தக்கதாக இருந்தால் மட்டுமே அதில் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தைக் குறிப்பிட முடியும். இவை அத்தகைய உரிமம் வழங்கத்தக்க வீடியோக்களுக்கான சில எடுத்துக்காட்டுகள்:

  • நீங்கள் சொந்தமாக உருவாக்கிய வீடியோ
  • CC BY உரிமம் மூலம் குறிக்கப்பட்ட பிற வீடியோக்கள்
  • பொதுக் களத்தில் உள்ள வீடியோக்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14473087554526443611
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false